Compiled by London Swaminathan
Date: 29 October 2016
Time uploaded in London: 15-28
Post No.3301
Pictures are taken from various sources; thanks
நவம்பர் 2016 காலண்டர் (துன்முகி, ஐப்பசி-கார்த்திகை)
திருவிழா நாட்கள்:- நவம்பர் 5-கந்த சஷ்டி விரதம்,சூர சம்ஹாரம்; நவம்பர் 14 குருநானக் ஜயந்தி, குழந்தைகள் தினம்; 15 கடைமுக ஸ்நானம்’ ;16 கார்த்திகை மாதப் பிறப்பு, முடவன் முழக்கு, சபரிமலை மாலை அணியும் நாள்; நவம்பர் 22 கால பைரவ அஷ்டமி; நவம்பர் 23 சத்ய சாய்பாபா பிறந்த தினம்
அமாவாசை- நவம்பர் 29 , பௌர்ணமி- நவம்பர் 14, ஏகாதசி-11, 25, நவம்பர் முகூர்த்த நாட்கள்-2, 4, 6, 7, 9, 11, 20, 27
நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை
ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒரு வழிப்புகுந்தது ஆம் என(18 மொழிகளில் தேர்ச்சி பெறாதோர் ஆரவாரம் செய்வது போல பறவைகள் ஒலித்தன)
Xxx
நவம்பர் 2 புதன்கிழமை
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன
கவ்வு மீனொடு முழுகின எழுவன காரண்டம் ( ஜனன-மரண சுழற்சியை மீனுடன் முழுகி எழுந்த காகங்கள் காட்டின)
Xxx
நவம்பர் 3 வியாழக்கிழமை
ஒண்ணும் என்னின் அஃதுதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ (தம்மால் முடியுமானால் ஒரு பொருளை உதவாமல் கருகிமியாக இருப்போர், உயர்ந்தோர் ஆவரோ!)
Xxx
நவம்பர் 4 வெள்ளிக்கிழமை
ஒளிப்பாரோடும் உறவுண்டோ (ஒன்றை வைத்துக் கொண்டு, இல்லை என்பாருடன் உறவு உண்டோ)
Xxx
நவம்பர் 5 சனிக்கிழமை
அன்பெனும் ஆர் அணி பூண்ட தம்பி (அன்பு எனும் பெறுவதற்கு அரிய ஆபரணத்தை அணிந்த தம்பி- இலக்குவன்)
Xxx
நவம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை
அன்பினுக்கு அவதி இல்லை (அன்புக்கு ஓர் எல்லை இல்லை)
Xxx
நவம்பர் 7 திங்கட்கிழமை
கவ்வை இன்றாக நுங்கள் வரவு ( உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக)
xxx
நவம்பர் 8 செவ்வாய்க்கிழமை
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன் (கற்காத கலைகள் இல்லை, கடல் போலப் பரந்த வேதங்கள் அறிவு, இவன் பேச்சில் தெரிகிறது இனிய சொற்களைச் செல்வமாகப் பெற்ற இவன் (இந்த அனுமன்) யார்?)
Xxx
நவம்பர் 9 புதன்கிழமை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ (தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வதைக் காட்டிலும் மேம்பட்ட அறமும் உண்டோ)
Xxx
நவம்பர் 10 வியாழக்கிழமை
உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது என் காதல்
சுற்றம் உன்சுற்றம் நீ என் உயிர்த் துணைவன் என்றான் (சுக்ரீவ ன் – ராமன் நட்புறவு ஒப்பந்தம்)
Xxxx
நவம்பர் 11 வெள்ளிக்கிழமை
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் (உன் பெண்மை இயல்பால் நீ இங்கனம் தவறு செய்துவிட்டாய் (வாலி, தன் மனைவியிடம் சொன்னது.)
Xxx
நவம்பர் 12 சனிக்கிழமை
எய்தவர் பெறுவர் என்றால் இணையடி இறைஞ்சி ஏவல்
செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைது ஆமோ (ராமா! உன் அம்பு பட்டு இறந்தவர்களும் வீடு பேறு அடைவர் என்றால் உனக்கு குற்றேவல் செய்வர் வீடு பேறு அடைவதை சொல்லவும் வேண்டுமா– வாலி சொன்னது)
Xxxxx
நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை
பெற்றாருழைப் பெற்றபயன் பெறும் பெற்றி அல்லால்
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்கொல் என்றான்
(குற்றமில்லாதவர் என்று யாரைச் சொல்லமுடியும்? நண்பர்களிடத்தில் பொருந்திய நற்பயனை எடுத்துக்கொள வேண்டும்- லெட்சுமணனிடம் ராமன்)
Xxx
நவம்பர் 14 திங்கட்கிழமை
மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்
xxx
நவம்பர் 15 செவ்வாய்க்கிழமை
தீமைதான் பிறரைக் காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ (மற்றவர்களைத் தீய செயலிலிருந்து தவிர்த்துவிட்டு, தானே தீமை செய்தால் அது குற்றமற்றதாகிவிடுமோ?)
Xxxx
நவம்பர் 16 புதன்கிழமை
மெலியவர் பாலதேயோ ஒழுக்கமும் விருப்பம்தானும்
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ (ஒழுக்கமும், சிறப்பும் மெலியவரிடத்தில் மட்டுமா?வலியவர் இழிசெயல் செய்தாலும் புகழ்தானோ? ராமன் பற்றி வாலியின் கிண்டல்)
Xxx
நவம்பர் 17 வியாழக்கிழமை
ஏதிலாறும் எளியர் என்றால் அவர் தீது தீர்ப்பது என் சிந்தைக்கு கருத்து அரோ (எளியவரைக் காப்பது என் கருத்து; வாலிக்கு ராமன் பதில்)
Xxx
நவம்பர் 18 வெள்ளிக்கிழமை
தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள
மக்களும் விலங்கே மனுவின் நெறி
புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே (எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம்)
Xxxx
நவம்பர் 19 சனிக்கிழமை
எக்குலத்து யாவர்க்கும் வினையால் வரும் மேன்மையும் கீழ்மையும்
(எந்த ஜாதிக்காரன் ஆனாலும் அவன் செய்யும் செயலால்தான்
உயர்வும் தாழ்வும் வரும் என்பதே மனு நீதி)
Xxxx
நவம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை
நாய் என் நின்ற எம்பால் நவை அற உணரலாமே
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான் (நாய் போன்ற என்னைப் போன்றவர்களின் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று சிறிய எண்ணம் இல்லாத வாலி, ராமனிடம் வேண்டினான்)
Xxxxx
நவம்பர் 21 திங்கட்கிழமை
அறைகழல் இராமன் ஆகி அறநெறி நிறுத்த வந்தது (தர்மத்தை நிலைநாட்டவே இந்த இராமாவதாரம் வந்தது– வாலி சொன்னது)
Xxxxx
நவம்பர் 22 செவ்வாய்க்கிழமை
சிறியாரோ உபகாரம் சிந்தியார் ( நீ செய்த பேருதவியை எண்ணிப் பார்க்காத சிறியவனா?)
xxx
நவம்பர் 23 புதன்கிழமை
தர்மம் பற்றிய தக்கவர்க்கு எலாம்
கருமம் கட்டளை என்றல் கட்டதோ (அறவழியில் செல்வோருக்கு அவரவர் செயல்தான் உரைகல் என்பது கட்டுக்கதை ஆகிவிட்டதா– தாரை புலம்பல்)
Xxxx
நவம்பர் 24 வியாழக்கிழமை
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனலங்கு ( புகை இருந்தால் தீ இருக்கும்)
Xxxx
நவம்பர் 25 வெள்ளிக்கிழமை
நகையுடை முகத்தை ஆகி இன்னுரை நல்கு நாவால் (முக மலர்ச்சியுடன் இரு; இனிய சொற்களைப் பேசு – சுக்ரீவனுக்கு இராமன் அறிவுரை)
xxx
நவம்பர் 26 சனிக்கிழமை
செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை
வைவன வந்த போதும் வசையில் இனிய கூறல் (செய்ய வேண்டியதை செய்; எப்போதும் தப்பானவைகளை நினைக்காதே; மற்றவர்கள் திட்டினாலும் இனிய சொற்களைச் சொல்- சுக்ரீவனுக்கு இராமன் அறிவுரை)
Xxxxx
நவம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை
சிறியர் என்றிகழ்ந்து நோவு செய்வன செய்யல் (வலிமை குன்றியவர் இடத்தில், வருத்தம் தரும் செயலைச் செய்யாதே)
Xxxx
நவம்பர் 28 திங்கட்கிழமை
மங்கை பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் (பெண்கள் பிரச்சனைகளில் மரணம் கூட ஏற்படும்)
xxxx
நவம்பர் 29 செவ்வாய்க்கிழமை
தீயன வந்தபோது சுடுதியால் தீமையோரை ( தீயவரைத் தண்டிக்கும்போது எல்லை மீறாதபடி தண்டிக்கவேண்டும்)
Xxxx
நவம்பர் 30 புதன்கிழமை
பாக்கியம் அன்றி என்றும் பாவத்தைப் பற்றலாமோ (செல்வத்துக்குக் காரணமான நல்லவற்றைச் செய்யாமல் வறுமைக்குக் காரணமான தீயவற்றைச் செய்யலாமோ!)
—SUBHAM–
You must be logged in to post a comment.