
Post No. 8839
Date uploaded in London – – 22 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் – 3
Compiled by Kattukutty
அம்மாவின் அன்பு தோசை மாதிரி
அப்பாவின் அன்பு தோசைக் கல் மாதிரி,
தோசையின் ருசி தெரியும்
தோசைக்கல்லின் தியாகம் தெரியாது.
xxx
ஒருபொண்ணைப பிடிக்கல்லைன்னா அவ, சானியா மிர்சாவாக இருந்தாலும் தொடமாட்டோம்
அந்த பொண்ண பிடிச்சுப் போச்சுன்னா அவ, சாணி அள்ளறவளா இருந்தாலும் விடமாட்டோம்!!!
xxx
ரேஷனுக்கும், பேஷனுக்கும், என்ன வித்தியாசம்???
ரேஷன்லே எடை குறையும் !!!
பேஷன்லே உடை குறையும்!!!
xxx
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்,
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் உன்னை மிதிக்கும்……
xxx
எல்லா துன்பங்களுக்கும் மருந்து இரண்டு உண்டு
ஒன்று காலம் , இன்னொன்று மவுனம்
Xxx
கோபம் மனதில் இருக்கக கூடாது,வார்த்தையில்தான் இருக்க வேண்டும்.
அன்பு என்பது வார்ததையில் மட்டுமே இருக்கக் கூடாது, மனதிலும் இருக்க வேண்டும்
Xxx
கடவுள்கிட்டையும் டாக்டர் கிட்டையும் கோபமா பேசக்கூடாது.

கடவுள் டென்ஷ tension னானா நோயை வரவழைச்சு டாக்டர் கிட்ட அனுப்பிச்சுடுவார்…….
டாக்டர் டென்ஷனானா tension கடவுள் கிட்ட அனுப்பிச்சுடுவார்!!!
xxxx
பணம் நிம்மதி தராதுன்னு எந்த ஏழையும் சொன்னதில்லை,
நிம்மதி இல்லாத பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாரில்லை !!!.
Xxxx
உலகத்தில மிக முக்கியமான விஷயம்……
தினசரி அசிங்கப்படுத்தப்பட்டு, ஒதுக்கிவைக்கப் பட்டு
இருந்தும், தினம் தினம் உபயோகப்படுத்தப்படுவது TOILET !!!
Xxx
நேற்று என்பது பழைய பேப்பர், இன்று என்பது நியூஸ் பேப்பர்
நாளை என்பது கொஸ்டின் பேப்பர், வாழ்க்கை என்பது ஆன்ஸர் பேப்பர்……கவனமாக எழுது, வெற்றி உனக்கே!!!!
xxxx
ரோட்ல போற பொண்ணப் பாத்தா, ,பொறுக்கி,ன்னு சொல்றாங்க
வீட்ல போய் பொண்ணப் பாத்தா வாங்க மாப்ளேன்னு கும்பிடறாங்க………
xxx
ஆணுக்குப் பெண் சமம்னு அறிவு மூலமா காட்டணும்,
அவுத்து காட்டக்கூடாது………
Xxx
தோல்வி என்று ஒண ணு இல்லவே இல்லை,
அனுபவத்தின் மறு பெயர்தான் தோல்வி
அதனால் வெற்றியைப் பெற்றுக்கொள், தோல்வியில் கற்றுக்கொள்!!!!
xxxx
வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழாதே
உன் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை உனக்கு துணை வரும்…..
யார் கண்ணீரையும் நீ துடைக்க வேண்டாம்,
யார்கண்ணீருக்கும் நீ காரணமில்லாமல் இருந்தால் போதும்…….
xxx
உன் தாய் உனக்குப் பெயர் வைத்தது உன் கல்லறையில்
எழதுவதற்கல்ல, சரித்திரத்தில் எழுதுவதற்கு!!!
தவறே செய்யாத மனிதனேஇல்லை,
தவறைத் திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை!!!
xxxx
மொட்டை

இருக்கும் வரை தந்தையின் தலையை,
இறந்த பின் தந்தைக்காக தன் தலையை……
Xxx
xxx
ஆண்களின. உயிரை ஒரே சமயத்தில் எடுத்தால் யமன்,
தினம் தினம் எடுத்தால் WOMEN !!!
xxx
உன்னை மதிப்பவருக்கு மலராய் இரு,
உன்னை மிதிப்பவருக்கு முள்ளாய் இரு.
xxx
மயில் – நான் இந்தியாவிற்கே தேசீயப் பறவை

கிளி – போடா போ, நான் இந்தியாவிற்கே ஜோசீயப் பறவை!!!
xxx
உன் மனைவி எடுக்கும் முடிவுகளைப் பார்த்து நீ சிரிக்காதே!!!
உன்னை உன் மனைவி தான் தேர்ந்தெடுத்தாள் என்பதை மறவாதே!!!
xxx
எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தேன், நிறைய சட்டைகள்,
என் சட்டையைப் பார்த்தேன் நிறைய ஜன்னல்கள்!!!
xxxx
என் தேசத்தில் படித்தால் வேலை கிடைக்காது,
நடித்தால் நாடே கிடைக்கும்!!!
xxxx
எதையும் சிந்தித்துச் செயல்பட்டால் நமக்கு கிடைப்பது வெற்றி!!!
எதையுயும் செய்துவிட்டு சிந்தித்தால் நமக்கு கிடைப்பதுஅனுபவம்!!!
xxx
கை, கால்கள், எல்லாம் நல்லாதானே இருக்கு,
உழைச்சு வாழ வேண்டியதுதானே என்று பிச்சைகாரனிடம் கேட்கும்
இதே வார்த்தையை கோவிலில் இருக்கும் சாமி
நம்மிடம் சொன்னால்???.
tags- நவீன ஞானமொழிகள் – 3
—subham—