பறவைகள் நிம்மதியை கெடுக்க ஒரு ‘கல்’ ! மனிதர் நிம்மதியை கெடுக்க ஒரு ‘சொல்’ (Post 9107)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9107

Date uploaded in London – – 5 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 15

Kattukutty

வாழ்க்கையில் உயரும்வரை காதை பொத்திக் கொள்!!!

உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்…. !!!

XXXX

ஒவ்வொரு வெற்றியும் ஒரு பரிசு!!!

ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்!!!

ஒவ்வொரு விடியலும் ஒரு வாய்ப்பு!!!

XXX

THERE IS NOTHING CALLED “PROBLEM”

THERE IS JUST ABSENCE OF AN IDEA TO FIND A SOLUTION…….

XXX

பறவைகளின் நிம்மதியை கெடுக்க

ஒரு *கல்* போதும்…..

மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு *”சொல்”* போதும்……!

XXX

எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத் தான்…

தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் பிரகாசமாக தான் தெரியும்…

அருகில் சென்று பார்த்தால் தான் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது

தெரியும்… !

XXX

ஒரு ஆள் முதுகுல தட்னா இரண்டு பேருக்கும் சந்தோஷம்!!!

தலேல தட்னா ஒருத்தருக்கு மட்டும் சந்தோஷம்……..

XXX

வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றி பெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை….

பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.. !!

XXX

ALWAYS WRONG PERSONS TEACH “RIGHT”

SOLUTIONS IN LIFE!!!

XXXX

வாழ்வில் நல்லது, நடந்தால் அதற்கு நானே காரணம் என்பதும்..

கெட்டது நடந்தால் அது மற்றவர்களால் என்றும் பிதற்றாதீர்கள்..

அனைத்திற்கும் நாம் தான் காரணமென பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் …

எதையாவது கொடுத்து நல்ல பெயர் தொடர்ந்து வாங்க நினைத்தால் … அதை கொடுக்கும் வரை தான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்….

ஆறுதல் என்பது பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு…

மாறுதல் என்பதே என்றும் நிரந்தர தீர்வு…

*நல்லதே நினை, நல்லதே நடக்கும்.*

XXXXX

எப்போதும் நோட்டு எண்ணிக்கொண்டிருப்பவர் பணக்காராக

இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை………

பேங்க் கேஷியராக இருக்கலாமல்லவா???

நிறைய புத்தகங்கள் வைத்திருப்பவரை மதிக்க, பீரோ, பீரோவாக

புத்தகங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை……..

ஏன்….. லைப்ரெரியனாக கூட இருக்கலாம்???

XXXXX

திருடனுக்கு பிடித்த ராகம்……………”சுருட்டி”!!!

உடுத்திக்கொள்ள முடியாத டிரஸ்……..”அட்ரஸ்”

உண்ண முடியாத பன் …………….”ரிப்பன்”

சாப்பிடக்கூடிய கட்டை………….”கொழுக்கட்டை”

பேச முடியாத வாய் …………… “செவ்வாய்”

XXXX

ஞான முத்து

காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்,

ஆனால் பூக்களைப் பார்க்க முடியாது…..அவை என்னன்ன???

அரச மரம், அத்தி மரம், ஆல மரம்

இவ்வாறு பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்களுக்கு

வனஸ்பதி” என்று பெயர்!!!

இவைகள் மிகவும் புனிதமானவை !!!

அம்மரங்களின் அடியில் செய்யப்படும் எந்த காரியங்களும்

ஆயிரம் மடங்கு பலனுண்டகும்

XXXXXXX

திருமண அகராதி………

கல்யாண அழைப்பிதழ் –பெண்வீட்டுக்காரர் இந்த மஞ்சள்

கடிதத்தை அச்சடித்தவுடன் மஞ்சள் கடுதாசி கொடுக்கும்

நிலைமைக்கு வரலாம்.

மாமனார் –கல்யாணம் முடியும் வரை மாமனார், பிறகு வெறும் நார்!!!

நாத்தனார் – நாத்தனாராக்கும் நாத்தனார் உண்டு என்பதை மறந்து

பெண்ணை கதி கலங்க வைப்பவர்!!!

மைத்துனர் – மாப்பிள்ளை பர்ஸை காலி செய்யும் அதிகாரி!!!

அம்மி மிதித்தல்நலுங்கு – கணவன் மனைவியின் காலை பிடிக்கும்

அத்தியாயத்தின் முதல் அத்தியாயம்…….

கல்யாண சத்திரம் – உலகத்திலேயே கிராக்கி மிகுந்தது.

மாப்பிள்ளை கிடைத்தாலும் மண்டபம் கிடைத்தால் நீங்கள்

நிஜமாகவே அதிர்ஷ்டசாலி !!!

போட்டோ கிராபரும்வீடியோகாரரும் – அய்யரை விட அதிகாரம்

மிகுந்தவர். எல்லா சடங்குகளும் இவருக்காக இரண்டுமுறை

செய்யப் படும் “ஸ்லோ மோஷனில்”!!!

புரோகிதர் – எல்லா போட்டோக்களிலிலும் தவறாமல் இருப்பவர்!!!

கேட்டரிங் கான்ட்ராக்டர் – எதைக்கேட்டாலும் செய்து கொடுக்கும்

தெய்வம்!!!

XXX

வடக்கே உள்ள ஒரு ஊருக்கு “வாடி” என்று பெயர் வைத்தால்,

தெற்கே உள்ள ஊருக்கு நாங்கள் “போடி” என்றுபெயர் வைப்போம்!!!!

XXX

உடல் நிலை

நேற்று நியூ இயர் கேக் NEW YEAR CAKE, இன்று ஸ்டமக் ஏக் STOMACH ACHE!!!

XXX

பதில் சொல்ல முடியாத அப்பா…….

பையன்- அப்பா,  இந்த பிள்ளையார் ஏன் “கோன்” ஐஸை

கையில் வைத்திருக்கிறார்???.

****

tags – நவீன ஞான மொழிகள் – 15,