

பாம்புச் செடி உண்மையா ? (Post No.7580)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7580
Date uploaded in London – 16 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஞாயிறு தோறும் நான் நடத்தும் SKYPE ஸ்கைப் கிளாஸ்ஸில் கம்பராமாயணம் முடித்து அகநாநூற்றுக்கு வந்துள்ளோம் . அகனானூற்றுப் பாடலில் பாம்புச் செடி பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அதுபற்றி எங்களிடையேயே விவாதம் எழுந்தது. உடனே நான் காளிதாசனும் தனது காவியத்தில் ஒளிவிடும் ஜோதிர்லதா மரம் பற்றி இரண்டு இடங்களில் கூறுகிறான். தமிழ் இலக்கியத்திலும் அது இருக்கிறது. பி.பி.சி. டீ.வி. யில் (David Attenborough) டேவிட் அட்டன்பரோவின் இயற்கை (Nature) பற்றிய டாகுமெண்டரிகளை பார்த்தபோது அதற்கு விளக்கம் கிடைத்தது. அவர் காட்டிய படம் இன்றுவரை மனதைவிட்டு அகலவில்லை tamilandvedas.com, swamiindology.blogspot.com
..

அதாவது நியூஜிலாந்தின் குகைகளில் பல லட்சம் மின்மினிப் பூச்சிகள் (Fire Flies) வசிக்கின்றன. அவை ஒளிவிடும் போது அந்தக் குகைகள் முழுதும் ஜகஜ்ஜோதியாகக் காட்சி தரும். அடுத்த நிமிடம் இருள் சூழும் . அதாவது நாம் திருவிழாக் காலங்களில் போடும் அலங்ககார விளக்குகள் போல எரிந்தும் (on and Off) அணைந்தும் மாறி மாறி வரும். இது போல அந்தக் காலத்தில் நம் இந்தியக் காடுகளிலும் சில இடங்களில் மரம் முழுதும் மின்மினிகள் வசித்து இருக்கலாம். அதைத்தான் காளிதாசன் ஜோதிர்லதா என்றும் தமிழ் இலக்கியம் ஒளிவிடும் மரங்கள் என்றும் சொல்லுகின்றன போலும் அந்தக் கோணத்தில் இந்த அகநானுற்றுப் பாடலையும் காண்போம் என்றேன். tamilandvedas.com, swamiindology.blogspot.com
உடனே ஸ்கைப் (Skype) மாணவர்கள் புஸ்தகங்களில் இருந்து இரண்டு விளக்கங்களைப் படித்தார்கள். ஆனால் நேற்று பிரிட்டிஷ் லைப்ரரியில் உட்கார்ந்து பழங்கால புஸ்தகங்களைப் படித்தபோது ஒரு அதிசயச் செய்தி கிடைத்தது.
முதலில் அகநாநூற்றுப் பாடல்
அன்னாய் ! வாழி , வேண்டு அன்னை! நம் படப்பைத்
……………………
……………………
வெண்கோட்டு யானை விளிபடத்துழ வும்
அகல்வாய்ப் பாந்தட் படா அர் ப்
பகலும் அஞ்சும் பனி க்கு கடுஞ் சுரனே
—அகநானூறு பாடல் 68
– என்று 21 வரிப் பாடல் முடிகிறது.
பாடியவர் ஊட்டியார் , திணை – குறிஞ்சி
இதில் ‘அகல்வாய் பாந்தள்’ என்பது யானையை விழுங்கும் மலைப் பாம்பா அல்லது பாம்புச் செடியா ? (Python or Snake plant?) என்பதை யே ஆராய வேண்டியிருந்தது. tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாடலின் மொத்தக்க கருத்தும் மிகவும் சுவையானது. இரவு நேரத்தில் காதலியை ரகசியமாக சந்திப்பதற்கு காதலன் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறான். அப்போது தோழி போய், காதலியின் அம்மா அசந்து தூங்குகிறாளா அல்லது பாசாங்கு செய்கிறாளா என்பதற்கு மூன்று கேள்விகள் கேட்கிறாள். இறுதியில் அதற்கு அம்மா பதில் சொல்லாததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள்; கஷ்டமான வழியைக் கடந்து வந்த காதலனை சந்திக்கலாம் என்று காதலிக்கு ‘க்ரீன் சிக்னல்’ Green Signal கொடுப்பது பாடலின் பொருள்.
காதலன் கடந்து வந்த கஷ்டமான பாதையை வருணிக்கும் போது ,
“யானைக் குட்டிகளை வெள்ளம் அடித்துச் செல்கிறது. அதைக் காப்பாற்ற வெண்மையான தந்தம் உடைய ஆண் யானையும் பெண் யானையும் ஆரவாரம் செய்கின்றன. . மேலும் அங்கே இடம் அகன்ற பாம்புச் செடிகள் வேறு உள்ளன . இவைகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறான் உன் காதலன் என்கிறாள் தோழி.
‘ஸ்கைப்’ கிளாஸ் முடிந்தவுடன் பழைய உரைகளைத் தேடித் படித்தேன். அதில் ‘அகல் வாய்ப் பாந்தள்’ என்பதற்கு அகன்ற வாய் உடைய பாம்புச் செடிகள் என்று சொல்லிவிட்டு அகன்ற வாயுடன் யானையை விழுங்கும் மலைப் பாம்பு என்றும் சொல்லுவர் என்று கண்டேன் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.

முன்னரே யானையை விழுங்கும் மலைப் பாம்புகள் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களை இதே ‘பிளாக்’கில் எழுதியுள்ளதாலும், நானே பி.எஸ்சி. பாட்டனி (தாவரவியல்) படித்ததாலும் பாம்புச் செடி தவறென நினைத்தேன்.
ஆனால்………………………………
ஆனால் வாரத்துக்கு மூன்று முறை லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி போய் 100 ஆண்டுப் பழமையான புஸ்தகங்களை ஆராயும் ஒரு பகுதியாக நேற்று ஒரு புஸ் தகத்தை போட்டோ காப்பி எடுத்தேன் . புஸ்தகத்தின் தலைப்பு –
கொடைக்கானல் அருகில் பண்ணைக்காட்டில் கன்னியநாதசுவாமிகள் என்ற மாம வுன தேசிகர் பற்றிய புஸ்தகம் 1924ல் வெளியிடப்பட்டது. இதை பெரியகுளம் கற்பூர திருவேங்கட சுவாமிகள் இயற்றியிருக்கிறார். இதில் பழனிக்கும் கொடைக்கானலுக்கும் இடையே உள்ள காட்டுப் பகுதி பற்றி வருணிக்கும் பகுதியில் ‘நாகதாளி’ என்னும் செடி பாம்புபோலச் சீறி தீப்பொறி கக்கும் என்கிறார். பின்னர் மலையில் எழும் வினோத ஒலிகளை வருணிக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com




xxxx
எனது கருத்து
நாகதாளி என்பதற்கு ஒரு வகை மரம், சப்பாத்திக்கு கள்ளிச் செடி என்று ஆனந்த விகடனின் பழைய அகராதி கூறுகிறது . தாவரவியல் விலங்கியல் படித்த நான் (Phosphorescent) ஒளி உமிழும் மீன் வகைகள், கடல் பிராணிகள், பிளாங்க்டன் (Planktons) என்னும் நுண்ணுயிர்கள் , சில வகை (Glow worms)புழுக்கள், மின்மினி பூச்சிகள் முதலியவற்றை அறிவேன். ஆ னால் பாம்பு போல சீறும் செடி வகைகளை அறியேன்; சில காலத்துக்கு முன்னர் மனிதர்களைக் கண்டால் நிலத்துக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் ஒரு செடியின் வீ டியோவைக் கண்டேன். ஆயினும் இதில் 99 சதவிகிதம் மோசடி வீடியோக்கள் தான் அதிகம். . யாரும் எதையும் எடிட் செய்து என்ன அற்புதத்தை வேண்டுமானாலும் யூ டியூ ப்பில் காட் டமுடியும் . ஆயினும் 1920களிலேயே இப்படி பழனி மலைக்காடுகளில் நாகதாளி என்னும் பாம்புச் செடி இருந்ததாக மக்கள் நம்பியது தெரிகிறது. ஆகையால் அகநாநூறு பாடல் விளக்கத்தில் நாகதாளி செடி என்றும் கொள்ளலாம் .
ஒரு வேளை உண்மையில் இப்படி பாம்புச் செடிகள் இருந்து அழிந்தும் போயிருக்கலாம். சங்க இலக்கியத்தில் சர்வ சாதாரணமாக வருணிக்கப்படும் நீர் நாய்களை (Otter) நாம் இப்போது எல்லா நதிகளிலும் காண முடியவில்லை. திருவள்ளுவர், கபிலர் வருணிக்கும் முகர்ந்தால் வாட்டும் அனிச்சம் பூவையும் காணமுடியவில்லை. அதுபோல நாகதாளி என்னும் பாம்புச் செடியும் அழிந்து இருக்கலாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxxx
Snake Flowers of Himalayas and North America
ஆனால் பாம்பு போலத் தோன்றும் பலவகை பூக்கள் உடைய செடி கொடிகள் உண்டு. கூகுள் (Google) செய்தால் நிறைய செடிகளைப் பார்க்கலாம். நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் நாகலிங்கப் பூக்கள் முதல் இமயமலை பாம்புப் பூ வரை பல செடி கொ டிகள் இருக்கின்றன.
xxxx
From Wikipedia
டார்லிங்டோனியா என்பது ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றில் ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது; இதனை அமெரிக்க சாடிச் செடி அல்லது கலிபோர்னிய சாடிச் செடி எனவும் அழைப்பார்கள். இது ஈரமான மண் சேறு நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் வளரும் ஒரு செடி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறை இதில் புதிய இலைகள் வளர்கின்றன. இது தரையில் வளரும் மிகச்சிறிய மட்டத்தண்டு கிழங்கைக் கொண்ட செடியாகும். மண்ணின் மேல் இலைகள் ரோஜாப்பூ இதழடுக்கு போல அமைந்திருக்கும். இந்த இலை போன்ற அமைப்பு குழாய்வடிவ ஜாடிகளாக நேராக நிமிர்ந்து செங்குத்தாக நிமிர்ந்து இருக்கும். சில நேரங்களில் இந்த இலை போன்ற அமைப்பு நுனியில் முறுக்கிக் கொண்டு, இரண்டாகப் பிளவுபட்டுக் காணப்படும். இது பாம்பு படமெடுத்து ஆடுவது போல தோற்றமளிக்கும் எனவே இதனை பாம்புச் செடி எனவும் கூறுவர்.(Wikipdia)

TAGS — பாம்புச் செடி, நாகதாளி, சப்பாத்திக்கு கள்ளி, சங்க இலக்கியம்
–subham–