சுற்றுப்புறச் சூழலைக் காக்கச் சில வழிகள்! – 2 (Post No 2682)

bucket

Written by S NAGARAJAN (for AIR talk)
Date: 1 April 2016

 

Post No. 2682

 

Time uploaded in London :–  8-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சுற்றுப்புறச் சூழலைக் காக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். இதைக் காக்க எளிய வழிகள் பல உள்ளன. நீரைத் தூய்மையாக வைத்திருக்கப் பரிந்துரைக்கப்படும் சில வழிகள் இதோ:

 

நீரை பக்கெட்டுகளில் பிடித்து வைத்துப் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவு நீரைச் சேமிக்க முடியும். திறந்து வைத்துள்ள குழாய் நீரைப் பயன்படுத்தும் போது நிறைய நீர் வீணாக ஏதுவாகிறது.   

 

boy_tap

வாஷிங் மெஷின்களைப் பயன்படுத்தும் போது அதன் முழு கொள்ளளவிலான துணிகள் சேர்ந்த பின்னரே பயன்படுத்தல் வேண்டும். ஓரிரு துணிகளை சுத்தம் செய்ய மட்டுமே அவற்றைப் பயன்படுத்தினால் மின்சக்தியும் நீரும் அனாவசியமாகப் பயன்படுத்த நேரிடும்.    

வீட்டு தோட்டத்தில் மிகக் குறைவான உரங்களைத் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்தல் வேண்டும்.    

 

கழிவாக உள்ள எண்ணெயை ஒரு போதும் கழிவு நீருடன் கலக்கக் கூடாது.    டிஷ் வாஷர்களைப் பயன்படுத்துவோர் அதன் முழுப் பயன்பாட்டிற்கான பாத்திரங்கள் சேர்ந்த பின்னரே அதைப் பயன் படுத்தல் வேண்டும். மின் ஆற்றலும் நீரும் இதனால் சரியான பொருத்தமான பயன்பாட்டிற்கு உள்ளாகும்.              பல் துலக்கும் போதோ, குளிக்கும் போதோ குழாயைத் திறந்து விடக் கூடாது. மாறாக தேவைப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்தல் வேண்டும்.                           ஒழுகும் குழாய்களை உடனடியாகச் சரி செய்யல் வேண்டும்.                    சிறு துளி பெரு வெள்ளம் என்பதோடு சீரைத் தேடின் நீரைத் தேடு என்பதை மறக்க வேண்டாம்.

 

 

மேல்நிலைத் தொட்டி மற்றும் கீழ் நிலைத் தொட்டிகளை உரிய முறையில் அவ்வப்பொழுது சுத்தப்படுத்தல் மிகவும் அவசியம். இதனால் நமது ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படும். நீரும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக அமையும்.

 

மழைநீர் சேகரிப்புக்கான அரசு குறிப்பிட்ட ஆலோசனைப் படி மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒவ்வொரு வீட்டிலும் அமுல் படுத்தல் இன்றியமையாதது. தொடர்ந்த பயன்பாட்டிற்கான நீர் உறுதி செய்யப்படுவதோடு நிலத்தடி நீர் மட்டமும் இதனால் உயரும்.

தேங்கிய சாக்கடை நீர் கொசுக்களை உற்பத்தியாக்கும். கழிவு நீர் உரிய  முறையில் அகற்றப்படுகிறதா என்பதை அவ்வப்பொழுது கண்காணித்தல் வேண்டும்.

–Subham–