


Post No. 10,057
Date uploaded in London – 5 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அயர்லாந்து நாட்டின் தலைசிறந்த, புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் Oliver Goldsmith . அவர் எழுதிய Vicar of Wakefield ‘விகார் ஆப் வேக்பீல்ட்’ நாவலும் ‘ஷீ ஸ்டூப்ஸ் டு கான்கர்’ She Stoops to Conquer நகைச் சுவை நாடகமும் இன்றுவரை விரும்பிப் படிக்கப்படுகின்றன. அவர் முக்கியமான ஆங்கில நாடக ஆசிரியராகக் கருதப்படுகிறார்.
அயர்லாந்து நாட்டில் பாலிமஹோன் (Ballymahon)என்னும் ஊரில் கிறிஸ்தவ மதப்பிரசாரகரின் (Clergyman) மகனாகப் பிறந்தார். தந்தை போலவே தானும் கிறிஸ்தவ குருவாக எண்ணினார். ஆனால் சர்ச் இவரை ஏற்றுக் கொள்ள வில்லை.அதற்கு முன் அவர் 1755ம் ஆண்டில் டப்ளின் நகர ‘ட்ரீனிட்டி காலேஜில்’ (Trinity College, Dublin) படித்துப் பட்டமும் பெற்றார்.
பின்னர் ஸ்காட்லாந்தில் எடின்பரோ நகரில் மருத்துவப் படிப்பிற்காகச் சென்றார். ஆனால் அதைத் தொடர முடியாமல் பாதியில் விட்டார். 25 வயது வாக்கில் ஓராண்டுக்கு காலத்துக்கு ஐரோப்பிய நாடுகளை சுற்றிப் பார்த்தார் .பாதிப்பயணத்தில் பண முடை ஏற்பட்டது. தன்னுடைய சங்கீத ஞானத்தைப் பயன்படுத்தி வாத்தியங்களை வாசித்து, தெருவில் துண்டு விரித்து(Busker) பாட்டுப்பாடி பணம் சேர்த்தார்; தன்னுடைய நகைச் சுவை ஞானத்தையும் பயன்படுத்தி பேசிக்காட்டி காசு வாங்கிப் பிழைத்தார்.
கையில் கால் காசு இல்லாமல் 1756-ம் ஆண்டில் லண்டன் மாநகருக்கு வந்து சேர்ந்தார். டாக்டர் தொழில் நடத்தி பணம் சம்பாதிக்க முயன்றார். அதிக வெற்றி கிடைக்காததால் பத்திரிக்கையாளர் ஆனார்.புஸ்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவதோடு பல பத்திரிகைகளுக்கு கட்டுரைகளையும் எழுதினார்.
1760-களில் ‘அகராதி புகழ்’ டாக்டர் ஜான்சனைச் சந்தித்தார். அவர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்த்தின் திறமையை அறிந்து பாராட்டினார். 34 வயதில் அவர் எழுதிய ‘ட்ராவலர் / பயணி’ Traveller என்ற கவிதை அவருக்குப் புகழ் சேர்த்தது.அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவருடைய ஒரே நாவலான ‘விகார் ஆப் வேக்பீல்ட்’ அச்சானது ஒரு சமயப் பிரசாகரின் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்ப, துன்பங்களை விவரிக்கும் நாவல் இது.
கோல்ட்ஸ்மித்துக்கு 43 வயதானபோது அவர் எழுதிய நாடகம்தான் (She Stoops to Conquer) அவரை புகழேணியின் உச்சத்திற்குக் கொண்டுசென்றது .
ஒரு பணக்கார நிலச்சசுவாந்தார் தனது மகளுக்கு நல்ல கணவன் கிடைக்க, படித்த பையனுடன் ஒரு சந்திப்பை ஏற்பட்டு செய்கிறார். அந்த மாப்பிள்ளை மாமனாரின் மாளிகையை, மதுபான விடுதி என்று நினைக்கிறார். எதிர்கால மணப்பெண்ணும் மதுபான விடுதி வேலைக்காரி போல நடந்து கொள்கிறாள். தன் கணவன் தன்னை பணத்துக்காக அன்றி, உண்மைக் காதலின்பேரில் ஏற்றுக்கொள்கிறானா என்று அவள் சோதிக்கிறாள். இதில் நிறைய ‘காமெடி’ வருகிறது. ஏனெனில் பெண்ணின் தாயார் அவளை பணக்கார உறவினனுக்கு கல்யாணம் கட்ட முயற்சி செய்கிறாள். இந்த நாடகம் அந்தக் காலத்திலேயே லண்டனில் மேடை ஏறி வெற்றி நடை போட்டது.
ஆலிவர் கோல்ட்ஸ்மித்
பிறந்த தேதி – நவம்பர் 10, 1728 ( 1730??)
இறந்த தேதி – ஏப்ரல் 4, 1774
வாழ்ந்த ஆண்டுகள் – 45 (43??)
எழுதிய நூல்கள்:-
1764 – The Traveller
1766 – The Vicar of Wakefield
1768 – The Good Natured Man
1770- The Deserted Village
1773 – She Stoops to Conquer
1774 – Retaliation (unfinished work)




-subham-
tags- ஐரிஷ், நாடக ஆசிரியர், ஆலிவர் கோல்ட்ஸ்மித், Oliver Goldsmith