
Post No. 8569
Date uploaded in London – 25 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(கத்துக்குட்டியின் சொந்த அனுபவம்)
சுமார் 40 வருடங்களுக்கு முன் நான் தொழிற்சாலையில்
வேலை செய்து கொண்டிருந்த போது எனது நெருங்கிய
நண்பர் என் வீட்டிற்கு வருகை தந்தார்.வரவேற்று காப்பி
கொடுத்து உபசாரம் எல்லாம் ஆன பிறகு நண்பர் சொன்னார்
அடுத்த ஞாயிறு எங்கேயும் அப்பாயிட்மெண்ட் (appointment) வைத்துக்
கொள்ளாதே…… ஒரு முக்கிய இடத்திற்கு போகிறோம்
என்ன இடம் ….எங்கே…..எதற்கு????
கவலைப்படதே சார், விருது நகர் பக்கத்தில் கவலூர்
என்றொரு கிராம ம் இருக்கிறது. அங்கே ஒருவர் நாடி
ஜோதிடம் பார்க்கிறாராம்.இன்னும் மூன்று பேரையும்
“செட்டப்”பண்ணியிருக்கிறேன்…….வா, ஜாலி ஆகப் போய்
வருவோம்.
நண்பர் சொல்லும் போது மறுப்பேது????
ஞாயிறு காலை 7 மணிக்கெல்லாம் மதுரை சென்ட்ரல்
பஸ் ஸாண்டில் அசெம்பிள் (assemble)ஆனோம். முதலில் டிபன்,காப்பி
பிறகு பயணம்…..மொத்தம் ஐந்து பேர்கள்.பஸ்ஸில் கூட்டமே இல்லை.
கண்டக்டரிடம் “ஐந்து கவலூர்”……கண்டக்டர்
எங்களைப் பார்த்து “எங்கே நாடி ஜோஸ்யர் வீட்டுக்கா???.”
நாங்கள் போவது இவருக்கு எப்படி தெரியும்???
அவரே பதில்சொன்னார் இன்னும் அடுத்த பஸ்ஸில் பாருங்கள்
இன்னும் கூட்டம் ஏறும் கவலூருக்கு……
கண்டக்டரே இறக்கி விட்டு வழியும் சொன்னார்……
ஹோ ,இவர் பிரபலமான ஜோதிடர் போலும்!!!!
நல்ல பெரிய வீடு. வாசலில் பெரிய பந்தல். உள்ளே 10
பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 60 வந்து மதிக்கத்குந்த
ஆசாமி நடுவில் . பக்கத்தில் ஒருவர் சாய்வு மேஜை கையில்
பேனா 10 நாற்பது பக்கம் நோட்டுகளுடன் ஒருவர்.
முதலில் வந்தது யாரு??? கணீரென்ற குரல்!!! கையில் உள்ள
ஏட்டைப் புரட்டினார்,கட்டை விரலைப் பார்தது ரேகை பெயரை
சொல்ல கட கட வென பாட்டு வடிவத்தில் சர மாரி
பாட , அருகில் உள்ளவர் அதை எழுதிக் கொண்டே இருந்தார்
4 பேரைப்பார்ததும் கூட்டம் 20 பேராகி விட்டது………
.அங்குள்ள அனைவர் பெயர்களை தனித்தனி சீட்டில் எழுதச்
எழுதச் சொன்னார். யார் மகேந்திரன்??? கையை தூக்கினார்
அவர்……இன்று உங்கள் முறை . நீங்களதான் இன்று
எல்லோருக்கும் ஆமை வடை வாங்கித்தர வேண்டும்…….
மறுப்பே கிடையாது எனென்றால் நாடி பார்க்க வேண்டுமே??
( பிறகு தான் தெரிந்தது இது அவர் “சைடு” பிஸினஸ் என்று!!!! )
5 பேர்களை பார்த்த பின் என்முறை வந்தது. கட்டை விரல்
ரேகையைப் பார்த்து” கும்ப வெள்ளி முச்சுடர் ரேகை”……
உங்கள் பெயர்… கலியுகத்தோனின் நாமம்..சரி
உனக்கு இரண்டு கிரகம் உச்சம்….சரி
வாய்க்கப் போகும் மனைவியின் பெயரோ தாமரையின் வாசத்தாள்.
So far so good!
இதற்குப் பிறகு எல்லாம்…..flop……
கடைசியில் சொன்னாரே ஒரு வார்த்தை!!!! உனக்கு கூடிய
சீக்கிரம் “நாலு கால் ஊர்தி” கிடைக்கப் போகிறது!!!!
என் கூட வந்த ஓவ்வொருவரும் சிரித்து விட்டனர் அவ்வளவு
தான் தட்சிணையை கொடுத்து விட்டு வெளியே வந்து
சிரிப்பாய் சிரித்தோம் . ஏய் , எங்களையும் உன் காரில்
ஏற்றி கொள்ளப்பா….. சிரிப்பு!!!!
வீட்டுக்கு வந்த 3 மாதம் ஆயிற்று. ஆபீஸில் என்னைப் பார்க்கும்
போதெல்லாம் நாலு கால் ஊர்தியில் எப்பொது எங்களை கூட்டிக்
கொண்டு போகப் போகிறாய்????
ஒரு ஞாயிற்றுக் கிழமை பாத்ரூமில் வழுக்கினது தான் தெரியும்
நான் கண்விழித்த போது ஆஸ்பத்திரியில் இருந்தேன். காலில்
துடை வரைக்கும் பெரிய மாவுக் கட்டு…….ஒரு மாதம் ரெஸ்ட்
என்று விட்டார் டாக்டர்……டிஸ்சார்ஜ் ஆகப்போகும் நான்எப்படி
வீட்டுக்கு போகப் போகிறேன் எப்படி வெளியில் வந்து பார்ப்பேன்??
என்றெல்லாம் மன ஓட்டம்…..ஆஸ்பத்திரி ரூம் வாசலில்
ஒரு “வீல் சேர்”. அன்று என்னுடன் வந்த 4 பேரும் சொந்த
பணத்தைப் போட்டு வாங்கி எனக்கு கொடுத்த” present”!,.,
அன்று சிரித்த அவர்கள் இன்றும் விட்டுக் கொடுக்க வில்லை.
அன்று நாடி ஜோஸ்யர் சொன்ன மாதிரியே உனக்கு நாலு கால்
ஊர்தி. உனக்கு வந்திருக்கிறது பார்!!,!
நாலு சக்கரமும் என்னைப் பார்த்து சிரித்தன!!!!
XXXXX

லண்டனில் நாடி ஜோதிடம் (Post No.8570)
Post No. 8570
Date uploaded in London – 25 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனில் நாடி ஜோதிடம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நானும் என் மகனும் வாரம் தோறும் வேதம் கற்க ‘சிந்தி மந்திரு’ (Sindhi Mandir) க்குப் போவோம். அங்கு திருச்சி கல்யாண சுந்தர குருக்கள் எங்களுக்கு ருத்ரம், சமகம், சூக்தம் எல்லாம் சொல்லிக் கொடுப்பார். ஏர் இந்தியா Air India வெங்கடராமன் அல்லது இந்தியன் ரயில்வே India Railways ஏஜெண்ட் Mr.தண்ட பாணி எனக்கும் என் மகனுக்கும் காரில் லிப்ட் (Lift) கொடுப்பார்கள். ஒரு நாள் Mr.வெங்கட்ராமன் என்னிடம், ஒரு உதவி கேட்டார். அவருடைய நண்பருக்கு தமிழ் செய்யுள் சிலவற்றை மொழிபெயர்க்க வேண்டும் என்றார் . எனக்கோ தமிழ் என்றால் நெய் ஒழுகும் கோதுமை ஹல்வா சாப்பிட்டது போல. உடனே தயங்கமால் யெஸ் YES என்று சொன்னேன்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. வீட்டு வாசலில் கார் நின்றது. காரில் செல்லுகையில் வெங்கடராமனிடம் எங்கு போகிறோம், யாரைப் பார்க்கப் போகிறோம், என்ன செய்யுள்? அவர் இயற்றியதா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன்.
திரு வெங்கடராமன் சொன்னார்: நாம் பார்க்கப்போகும் மனிதர் லண்டனில் ஹிந்தி பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். அவர் இராமாயண உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா என்றார் . அவர் மகனைப்பற்றி ஒரு நாடி ஜோதிடர் எழுதிக் கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்க்கத்தான் உங்களை அழைத்தார்.
இதைக் கேட்டவுடன் எனக்கும் மகிழ்ச்சி. அட ஒருவர் தன் குடும்ப ரஹசியங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறாரே என்று நினைத்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரது வீட்டில் அமர்ந்து நாடி ஜோதிடர் 40 பக்க நோட்டில் அழகான கையெழுத்தில் எழுதிக்கொடுத்த செய்யுட்களை மொழி பெயர்த்து முடித்தேன். அவர் காதால் கேட்டாரே தவிர ஒன்றும் குறித்துக் கொள்ளவில்லை. எனக்கும் வியப்பு.! என்னடா இது. இவ்வளவு கஷ்டப்பட்டு மொழி பெயர்க்கிறோம்; கவனமாகக் கேட்கிறார். ஆனால் ஒன்றும் எழுதிக் கொள்ளவில்லையே என்று நினைத்தேன்.
செய்யுட்களை மொழிபெயர்த்து முடித்ததுதான் தாமதம்.
EXACTLY SAME ! எக்ஸ்சாக்ட்லி சேம் ; ‘பில்குல் டீக் ஹை’ என்றார்
என்ன பொருள் என்று வினவினேன்.
ஏற்கனவே ஒருவர் அவ்வளவு செய்யுட்களையும் மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டார் என்றும் நான் அப்படியே அதை மொழி பெயர்த்தேன் என்றும் பாராட்டி நன்றி சொன்னார்.
மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
அட! பாவி மனுஷா! இதை முன் கூட்டியே சொல்லி இருக்கக் கூடாதா ? நான் இன்னும் கவனமாக பயந்து கொண்டே — பய பக்தியுடன் — மொழி பெயர்த்து இருப்பேனே! என்று மனதில் பொருமினேன் .
போகட்டும்; அவரிடம் போனபோது ஒரு புதிய விஷயம் கிடைத்தது. காஞ்சிபுரத்தில் ஒரு பிரபல நாடி ஜோதிடர் இருக்கிறார். நிறைய வெளி நாட்டுக்காரர்கள் அவரை மொய்ப்பதால் அப்பாயிண்ட்மெண்ட் APPOINTMENT இல்லாமல் பார்க்க முடியாது ; இந்த ஹிந்திவாலாவும் ஒவ்வொரு முறையும் அவரைப் பார்த்து ஜோதிடம் கேட்பது வழக்கம். அவர் துல்லியமாக சொல்லுவார். அருகிலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதிக் கொடுப்பார்கள் என்று.
நானும் நினைப்பேன்; அடுத்த முறை காஞ்சி செல்லும்போது இவரைப் பார்த்துவிடவேண்டும் என்று. ஆ னால் நான் ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும்போதும். காஞ்சி மடத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவே நேரம் சரியாகப் போய்விடுகிறது.
2018ல் இந்தியாவுக்குச் சென்ற போது நிறைய நேரம் மரத்துக்கு அடியில் காரை நிறுத்தி 5 மணி நேரம் வீணடித்தேன் . காலை ரவுண்டு கோவில்களை ஒன்னரை மணிக்கு (1-30 PM) முடித்தோம். அடுத்த ரவுண்டு 5 PM அல்லது 6 PM மணிக்குத்தான் கோவில்கள் திறக்கும் என்றார்கள் . சகுந்தலா நினைவு மியூசியத்தைச் சுற்றிப்பார்த்தேன்; சமண காஞ்சிக்குப் போய் கொதிக்கும் வெயிலில் பாதி மலை ஏறி வி ட்டு குரங்குகள் மட்டும் இருப்பதைப் பார்த்து பயந்து திரும்பிவிட்டேன்; ஜன நடமாட்டமே இல்லை. அப்போது கூட இந்த நாடி ஜோதிடர் நினைவுக்கு வரவில்லை.
உண்மைதான் ; நாடி ஜோதிடரைப் பார்க்கப்போவதும் விதிப்படிதான் நடக்குமாம். நாம் போகும் போது நம்மைப் பற்றிய நாடி அவர் தொகுப்பில் இருக்குமாம். அவரிடம் அந்த நாடி ஓலைகள் இல்லாவிடில் அவரிடம் செல்லாமல் நம்மை விதியே தடுக்குமாம்.
வாழ்க “நல்ல” நாடி ஜோதிடர்கள் !
TAGS — நாடி ஜோதிடம், பலித்தது, லண்டன், காஞ்சிபுரம்



–SUBHAM–
You must be logged in to post a comment.