உலக நாடுகளின் ஜாதகங்கள் (Post No.8613)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8613

Date uploaded in London – –2 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

    COUNTRIES AND RASIS   
 

கிரகங்கள் என்றால் சும்மாவா???
மனிதர்களை ஆட்டி படைப்பது போல.
நாடுகளையும் நாட்டியமாட வைக்கும் சக்தி படைத்தவை;
கன்னி ராசியான இந்தியாவிற்கு  சிம்மத்தில் சனி வந்ததும்
ஏழரை நாட்டு சனி இந்தியாவிற்கு பிடித்தது.அது போலவே
குரு, ராகு , கேது பெயர்ச்சிகளும்…….

உதாரணமாக, தற்சமயம் சனி தனுசில் உள்ளது
தனுசு ராசியான நமக்கு என்ன பலனோ அதே பலன்தான்
அரேபியா,ஆஸ்திரேலியா, ஹங்கேரி,ஸ்பெயின், மடகாஸ்கர்
நாடுகளுக்கும்!!!


நீங்களே அந்தந்த நாடுகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்
உங்களுக்கு இன்ட்ரஸ்ட் INTEREST இருந்தால்!!!

TAGS – நாடுகள், ராசிகள், ஜாதகங்கள்

நாடுகளும் அவை போற்றும் கொள்கைகளும் (Post No.6560)

Written by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 17 June 2019
British Summer Time uploaded in London –  13-
30

Post No. 6560

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

Napoleon Eagle
This image has an empty alt attribute; its file name is 5223a-eagle2bof2bamerica.jpg

கருடன் முத்திரை | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/கருடன்-முத்திரை/

1.      

T

பொருள்: அரண்மனையை அடைந்த தசரதன், வெற்றி வேந்தர்களை இங்கே வாருங்கள் என்று அழைக்கும் பொன்னால் அமைந்த ஓலைகளை, கருடன் …

கருடன் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/கருடன்/

1.      

2 Mar 2017 – எகிப்திலும் ரிக்வேதத்திலும் கழுகு, பருந்து, கருடன், ராஜாளி என்ற … இது கழுகு அல்லது கருடன் அல்லது பருந்து போன்ற பறவை …

அழுதால் உன்னைப் பெறலாமே – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/அழுதால்-உன்னைப்-…

1.      

28 Dec 2016 – … துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் … கருட வாஹனத்தில் ஏறி விரைந்தோடி வந்தான் விஷ்ணு பகவான்.

சுமேரியாவில் இந்து புராணக் கதை …



https://tamilandvedas.com/…/சுமேரியாவில்-இந்…

1.      

12 May 2014 – நான் பார்த்த வரையில் கருட புராணக் கதை, அதர்வ வேத (பாம்பு) …. விரும்புவோர் Please go to swamiindology.blogsot.com or tamilandvedas.wordpress.com coin.

–subham–

–subham–

கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்: கம்பன் தரும் நாடுகளின் பட்டியல் (Post No.3669)

Written by London swaminathan

 

Date: 25 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 12-33

 

Post No. 3669

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

கம்ப  ராமாயணத்திலுள்ள பூகோள (Geographical-நிலவியல்) விஷயங்களை ஆராய்வது ஒரு தனி இன்பம் தரும்; ஆழமாக ஆராய்ந்தால் டாக்டர் பட்டமும் வாங்கலாம். நாடுகளைக் கம்பன் வரிசைப்படுத்தும் அழகே தனி அழகு!

1.கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்

சிங்களாதிபர் சேரலர் தென்னவர்

அங்கராசர் குலிந்தர் அவந்திகர்

வங்கர் மாளவர் சோழர் மராடரே

 

2.மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்

ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்

சீனர் தெங்கணர் செஞ் சகர் சோமகர்

சோன சேகர் துருக்கர் குருக்களே

 

3.ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர்

சேதிராசர் தெலுங்கர் கருநடர்

ஆதிவானம் கவித்த அவனிவாழ்

சோதி நீள்முடி மன்னரும் துன்னினார்

பால காண்டம், கம்ப ராமாயணம்

உலாவியல் படலத்தில் ராமன்சீதை திருமணத்துக்கு வந்த மன்னர்கள் பட்டியல் இது.

 

பொருள்:-

1.கங்க நாடு, கொங்கு நாடுகலிங்க நாடு, குலிங்க நாடு, சிங்கள நாடு, சேர நாடு, தென்னாடான பாண்டிய நாடு, அங்க நாடு, குலிந்த நாடு, அவந்தி நாடு, வங்க நாடு, மாளவ நாடு, சோழ நாடு, மராட நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,

 

2.பெருமை மிகுந்த மகத நாடு, மச்ச நாடு, மிலேச்ச நாடு, மற்றுமுள்ள வீரம் பொருந்திய இலாடநாடு, விதர்ப்ப நாடு, சீன நாடு, தெங்கண நாடு, செம்மை வாய்ந்த சக நாடு, சோம நாடு, சோனக நாடு, துருக்கி நாடு, குரு நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,

3.ஆயுதங்கள் நிறைந்த யாதவ நாடு, ஏழு பிரிவு கொண்ட கொங்கண நாடு, சேதி நாடு, தெலுங்கு நாடு, கரு நாடு என்னும் கன்னட நாடு, ஆகிய நாடுகளின் அரசர்களும், பஞ்ச பூதங்களில் முதன்மையானதான ஆகாயத்தின் கீழே ஆழும் — ஒளிவீசும் மணிமுடி அணிந்த பிற அரசர்கள் அனைவரும் அந்த மண்டபத்தை அடைந்தனர்.

 

 

முதல் பாட்டில், அங்கராசர் என்பதற்குப் பதிலாக சில பதிப்புகளில் அங்கர் சீனர் என்று காணப்படும்; அப்படியானால் அடுத்த பாட்டில் வரும் சீனர் என்ற சொல்லுக்கு மகா சீனர் என்று பொருள் சொல்லுவர் பெரியோர்.

இதே போல சோனர் சேகர் என்பதை சோன கேசர் என்றும் எழுதுவர். விசுவாமித்திரர் சேனைகளை எதிர்ப்பதற்காக காமதேனு என்னும் தெய்வீகப் பசு மூலம் வசிட்டனால் உண்டாக்கப்பட்ட சேனை என்றும் சொல்லுவர். இது பற்றிய கதை மிதிலைக் காட்சிப் படலத்தில் உள்ளது.

 

 

கம்பன் பாட்டில் தெரிய வரும் செய்திகள்:-

 

கம்பன் காலத்தில், திராவிட நாடு என்று  ஒரு நாடு இல்லை.

 

கொங்கண நாட்டைக் குறிப்பிடும் போதெல்லாம் ஏழு பிரிவு கொண்ட கொண்க்கண நாடு என்பதை ஏன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார் என்று தெரியவில்லை.

துருக்கி, சீனம், அரேபியா (சோனகம்) என்பவை கம்பன் காலத்தில் நன்கு தெரிந்தவை.

 

மிலேச்ச நாடு (ரோம்/இதாலி, கிரீஸ் உள்ளிட்ட யவன பூமி)

 

ஏழு பிரிவுகள் கொண்ட கொங்கண நாட்டை அவன் சுந்தர காண்டத்திலும் குறிப்பிடுவான்.

 

சுந்தர காண்டத்தில் அவன் சொல்லும் பல பூகோள/நிலவியல் விஷயங்கள் இன்னும் வியப்பானவை.

 

துருக்கர் கொண்டுவந்த குதிரைகள் பற்றி உன் அமுத உத்தியன ஒண் நகர்……..என்ற பாட்டிலும் கம்பன் பேசுகிறான்.

 

 

எனது முந்தைய கட்டுரைகள்

1.புராதன இந்தியாவின் 56 தேசங்கள்! (Post No. 2686) posted on 2 April 2016

2.திராவிடர்கள் யார்? posted on July 17, 2013

3.பெண்கள் மட்டுமே ஆண்ட அதிசய நாடு! Posted on 23 March 2015

4.தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை! (Posted on 30 September 2016

 

5.தமிழ்நாட்டின் எல்லை ‘திருப்பதி’தான்! (Post No.3429) 8 December 2016

6.சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்!

1 August 2014

7.மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது? 21 March 2015

PLUS+++

 

1.முதல் திராவிட ராணி கி.மு 1320, (2).Dravidian Queen (1320 BC) in North India (3).The Biggest Brainwash in the World (4). ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் 5.தமிழன் காதுல பூ!!!! (6).மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா? கட்டுக்கதையா? (7) 3 Tamil Sangams: Myth and Reality 8. தமிழ் இனத்தின் வயது என்ன? 9. தமிழ் ஒரு கடல் 10.தமிழ்-கிரேக்க தொடர்பு

11..Indra festival in the Vedas and Tamil Epics 12.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 13.Karikal Choza and Eagle shaped Fire A tar 14.Why do British judges follow a Tamil king? 15.Flags : Indus Valley- Egypt Similarity 16.தமிழ் முனிவர் அகஸ்தியர் 17.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 18.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 19.வீரத் தாயும் வீர மாதாவும் 20.Veera Matha in the Vedas and Tamil Literature

21.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 22.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 23.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா?  24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 25. தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்)+ 3000  கட்டுரைகள்.

 

–Subahm–