பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை ! (Post No.9930)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9930

Date uploaded in London – 3 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முன்னொரு கட்டுரையில் பரத நாட்டியம் தோன்றியது எப்படி? அதை பரத முனிவர் 6000 சம்ஸ்க்ருத ஸ்லோக ங்களில் சுருக்கி வரைந்தது எப்படி என்பனவற்றைக் கண்டோம் .அது 36 அத்தியாயங்களைக் கொண்ட  நாட்டிய சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்தில் உள்ள கதை. இப்போது 36ஆவது, அதாவது கடைசி அத்தியாயத்தில் உள்ள சுவை மிகு கதையைக்  காண்போம். இதுவும் பரத முனிவரே சொல்லும் பாணியில் அமைந்துள்ளது.

இதோ ஸ்லோகம் வாரியாக சுவையான கதை—

ஸ்லோகம் 1-15

முனிவர்கள் சொன்னார்கள்- நாட்யவேதம் பற்றி நீங்கள் சொன்னதைக் கேட்டோம். ஒரு சந்தேகம் உளது. அதைத் தெளிவு செய்யுங்கள்; உம்மைத் தவிர வேறு எவருக்கு நாட்யவேதம் பற்றிய அறிவு உளது? உமக்கு சவால் விடுக்கும் தொனியிலோ நக்கல் செயய்யும் பாணியிலோ , விரோதம் காரணமாகவோ நாங்கள் இதைக் கேட்பதாக என்ன வேண்டாம். முன்னரே நாங்கள் கேட்காததற்கு கரணம், உம்மை இடையில் தொந்தர வு செய்யக் கூடாதென்பதற்காகவே. இப்போது எங்களுக்கு இந்த ரஹஸ்யத்தைக் கூறவும் . உலக நடை முறையே நாடகம் என்று நீவீர் சொன்னீ ர் ; இதில் மறைந்துள்ள ரஹஸ்யம் ஏதேனும் உளதோ? பூர்வாரங்கத்தி ல் உள்ள து யாது? சங்கீதம் ஏன் அங்கு வந்தது? அதன் பொருள் என்ன? சூத்ரதாரனே தூய்மையானவனே ! பின்னர் எதற்காக அவர் சுத்திகரிப்பு சடங்குகளை செய்கிறார் ? சொர்க்க லோகத்திலிருந்து நாடிய நாடகம் பூமிக்கு எப்படி வந்தது/? உங்கள் சந்ததியினர் நடிகர்களை அறிந்தது எப்படி? இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடியே விளம்புங்கள்.

((சில பகுதிகளை விட்டு விட்டு நாடகம் பூமிக்கு வந்த கதையை மட்டும் பார்ப்போம்.))

ஸ்லோகம் 32-35

என்னுடைய மகன்களுக்கு செருக்கு ஏற்படவே முனிவர்களையும் ரிஷிகளையும் கிண்டல் செய்து ‘காமடி’ (Prahasana) நாடகம் நடத்தினர். ரிஷிகள் கோபப்பட்டு உங்கள் நாடகம் அழிந்து ஒழியட்டும் என்று சாபமிட்டனர். நீங்களும் உங்கள் சந்ததியினரும் பூமியில் பிறந்து கீழ் ஜாதியினர் போல நடத்தப்படுவீர்களாகுக என்று சபித்தனர்.

இந்திரன் அவர்களிடம் மன்றாடவே நாடகம் அழியாது இருக்கட்டும் ; ஏனைய சாபம் பலிக்கட்டும் என்றனர்

 என் மகன்கள் என்னிடம் வந்து முறையிட்டு கதறவே இதை அழியாது காக்க நாடகமாக நடித்துவிடுவோம் என்று  சொல்லி, ஒரு பிராயச்சித்தமாக அப்சரஸ் பெண்களுக்கு அதைக் கற்பித்தனர் .

ஸ்லோகம் 52-70

காலம் உருண்டோடியது. பூலோக மன்னனான நஹுஷன் என்பான், தனது  திறமையால் சொர்க்கலோக பதவி பெற்றான். அவன் இசையுடன் கூடிய நாட்டியத்தை அங்கே கண்டான். நாம் பூமிக்குத் திரும்புகையில் என் வீட்டிலும் இது நடைபெறவேண்டும் என்று எண்ணினான். தேவர்களைக் கேட்டபோது அப்சரஸ் பெண்கள் பூவுலக மக்களுடன் தொடர்புகொள்ள முடியாது; ஆகையால் உமது கோரிக்கையை ஏற்கமுடியாது என்று பிருஹஸ்பதி சொன்னார். அவர்கள் இந்தக் கலையின் ஆசார்யரான பரத முனிவனைக் கேட்டால் ஒரு வழி பிறக்கலாம் என்றார்  பிருஹஸ்பதி.

நஹுஷனின் பூர்வீக அரண்மனையில் ஊர்வசி தனது தோழிகளுடன் நாட்ய பயிற்சி செய்தபோது . திடீரென்று ஒருநாள் மறைந்தவுடன் அப்போது அங்கிருந்த மன்னன் ஏக்கத்தில் இறந்தான் . பின்னர் நான் பூமியில் இதை நடத்த திட்டமிட்டேன் நஹுஷனும் பல பெண்களின் நளின அபிநயத்துடன் இது அவனது அரண்மனையில் நடக்க வேண்டும் என்று கூறியதால் என்  மகன்களை அழைத்து இதை பூவுலகில் நடத்துங்கள். பிரம்மா உண்டாக்கிய கலையால் அவர் அனுமதித்து விட்டார். ஒரு அபவாதமும் ஏற்படாது. கோகல என்பவர் உங்களுக்கு மேலும் பல உதவிகளை வழங்குவார் என்றேன்.

என் மகன்களும் பூமிக்குச்சென்று நஹுஷனின் அரண்மனையில் நாட்டிய நாடகம் நடத்தி  அங்குள்ள பூலோக பெண்களை மணந்து பிள்ளைகளையும் பெண்களையும் பெற்றுக்  கொடுத்துவிட்டு விண்ணுலகம் வரவே அவர்களை பிரம்மாவும் அனுமதித்தார்.ஆகையால் சாபத்தின் ஒரு பகுதியின்படி, பூமியில் நடிகர் பரம்பரை தோன்றியது இது பிரம்மாவிடமிருந்து தோன்றிய கலை ஆதலால் சர்வ மங்களும் சுபிட்சமும் உண்டாகும்.

இதன் பின்னார் ஸ்லோகம் 71-82ல் மங்களம் கூறுவதுடன்

பரத முனிவர் எழுதிய நாட்டியசாஸ்திர நூல் நிறைவு அடைகிறது

–சுபம்–

tags- பரதநாட்டியம்,  பூமி,  கதை, பரத முனிவர்,  நாட்டியசாஸ்திரம்