சிவ பக்தர் படம் இங்கே ! பெயர் எங்கே? (Post No.8497)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8497

Date uploaded in London – 12 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிவ பக்தர் படம் இங்கே ! பெயர் எங்கே? விவரம் எங்கே ?

நாயன்மார்கள் என்போர் சிவன் அடியார்கள் . இவர்களின் எண்ணிக்கை 63. இவர்கள் அனைவரின் கதைகளும் பெரிய புராணத்தில் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரை எவரும் தொகை அடியாரில் சேர்க்கவில்லை இந்த 63 நாயன்மார்களில் சிலர் கண்ணப்ப நாயனார் போல அன்பே வடிவானவர். இன்னும் சிலர் சாக்கிய நாயனார் போல வன்முறையில் இறங்கி வழிபடுவர். குழந்தைகளையும் மனைவியரையும் தியாகம் செய்த சிவன் அடியார்களும் இந்த 63ல் உண்டு. இவர்கள் அனைவரையும் மாலையில் மணிகளைக் கோர்க்கும் நூல் போல உதவுவது சிவ பெருமானின் மீதுள்ள முரட்டுத் தனமான அன்பே ஆகும். இங்கே ஒவ்வொரு நாயன்மாரும் எதனால் புகழ் பெற்றனர் என்பது படமாக உள்ளது. பெரிய புராணத்தைப் பயிலாவிடினும் கதைகளைக் கேட்டிருப்பீர்கள். இதோ உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு சோதனை .படத்தைப் பார்த்து நாயன்மார் பெயரைச் சொல்வதோடு அவரின் சிறப்பையும் ஒரு வரியில் சொல்லுங்கள் . விடை தெரியாவிடில் கீழே விடைகளைப்   பாருங்கள்

PICTURE 1

XXX

PICTURE 2

XXXX

PICTURE 3

XXXX

PICTURE 4

XXXX

PICTURE 5

XXXX

PICTURE 6

XXX

PICTURE 7

XXX

PICTURE 8

XXXX

PICTURE 9

XXXX

PICTURE 10

ANSWERS

படம் ஒன்று –கண்ணப்ப நாயனார் தன கண்களையே சிவனுக்கு தானம் செய்து முக்தி பெற்ற வேடர் குல வேந்தன்

படம் இரண்டு – நந்தனார் அல்லது திரு நாளைப்  போவார்; கடைசி ஜாதியில் பிறந்தும் விடா முயற்சியால் சிவ தரிசனம் பெற்றவர் ; சிதம்பரம் செல்வதை ஒத்திப் போட்டுக்கொண்டே வந்ததால், இவரைத் திரு நாளைப் போவார் என்றும்  கேலி செய்வார்கள் .

படம் இரண்டு – நந்தனார் அல்லது திரு நாளைப்  போவார்; கடைசி ஜாதியில் பிறந்தும் விடா முயற்சியால் சிவ தரிசனம் பெற்றவர் ; சிதம்பரம் செல்வதை ஒத்திப் போட்டுக்கொண்டே வந்ததால், இவரைத் திரு நாளைப் போவார் என்றும்  கேலி செய்வார்கள் .

படம் 3 – சாக்கிய நாயனார் ; கல்லை சிவலிங் கம் மீது எறிந்து ‘வழிபட்டவர்

படம் 4 – மெய்ப்பொருள் நாயனார். அவரைக் கொன்றவன் முத்தநாதன்

படம் 5 – சைவ மதத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஞானச் சிறுவன் ஞான சம்பந்தர்

படம் 6- என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கோவிலில் களை எடுத்து அருந்தொண் டாற்றியவர் அப்பர்,

படம் 7 – இரண்டு மனைவி கிடைக்க சிவன் உதவி பெற்றவர், சுந்தரர்.

படம் 8 – இசையால் சிவபதவி பெற்ற ஆனாய நாயனார்  ; இவருடைய தெய்வீக இசைக்கு பிராணிகளும் வசப்பட்டன

படம் 9- இறைவனுக்கு நறுமணப் புகை போட மனைவியின் தாலியையும் விற்று குங்கிலியம் வாங்கிய குங்கிலியக் கலய நாயனார்.இவர் சாய்ந்த சிவலிங்கத்தையும் தனது தவ வலிமையால் நிமிர்த்திவைத்தார்

படம் 10- -ஞானச் சிறுவனை மதுரைக்கு அழைத்துவந்த சோழர்குல திலகம், பாண்டிய மன்னரின் மனைவி மங்கையர்க்கரசியார் ; அவரது அமைச்சர் குலச் சிறையார் ; நோய் தீர்ந்து சைவ மதம் திரும்பிய  பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறன்; மற்ற பெயர் கூன் பாண்டியன்

tags – 

  சிவ பக்தர் ,நாயனார் quiz, ,நாயன்மார்கள் quiz, , க்விஸ்