நாராயணனின் 4 கவிதைகள் (Post No.9989)

WRITTEN BY LONDON POET A NARAYANAN

Post No. 9989

Date uploaded in London – 17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டன் கவிஞர் ஏ .நாராயணன், ஆகஸ்ட்  2021ல் எழுதிய 4 கவிதைகள் :

(ரசாயன பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அத்திபள்ளி நாராயணன் சமீபகாலமாக கவிதை மழை பொழிந்து வருகிறார்.அவருடைய கவிதைகள் இந்த ‘பிளாக்’கில் முன்னரே வெளியாகியுள்ளன- SWAMINATHAN.)

xxx

தாமரையோ மறையோ

குவித்த கரமொத்த தாமரை மொட்டு

குட்டை நீரில் நெட்டாய் நிற்கத் தொட்

டதோ காலை இளங்கதிரோன்  விரிந்ததோ

இதழ்கள் முத்துப் பனித்துளிகள் ஒத்தணம்

கொடுக்க அடுக்கடுக்காய் இதழ்கள்

நடுவே மகரந்தமே மந்தகாசமாக

நறுமணம் வீசிய நல் வரவேற்பில்

தேனீக்களிதழ் இதழாய்த் தாவித்தாவிய

ரீங்காரமோ! தாமரையிலமர்ந்த பிரம்மன்

ஓதிய வேதம் பதிந்த இதழ்கள் துடிப்பு?

இதழ் பதிந்த வேதத்தை மொட்டு நிலை

யிலிரவெலா மோதிப் பயின்றுக் காலை

யிலே கதிரோன் தட்டி எழுப்ப விரித்த

இதழ்களில் மொய்த்த வண்டுகள் வேதம்

பயில வேதமே இனிய நாதமாய் ஒலித்த

வாணியின் வீணை இசையோ! இவ்வண்டு

களின் ரீங்காரமாயின் வேதமும் நாதமும்

கமலக்கண்ணனிடம் சங்கமமான சாம

வேதமாய் வேய் குழலொலித்த கானம்

தாமரை தன்னுள்ளடக்கிய மறையே

— நாராயணன்

xxxx

எது வழி?

உருவமும் அருவமும் அவரவர் அறி வழி

தருவதும் பெருவதும் அவரவர் தவ நெறி

நிற்பதும் நடப்பது மவன் விதித்த வழி

நிர்க்குணமும் சகுணமும் நிழலும்

நிசமும் போன்ற மொழி

சமத்துவமும் தத்துவமும்

சம நிலை மனமொழி

அரியும் அயனும் அவரவர் அறியும் வழி

— நாராயணன்

xxxx

மாலனோ மாயனோ

ஒன்றோ பலவோ

ஒன்றினின்று பலவோ

பலகூடி ஒன்றோ

படைப்பில் பலவும்

ஒன்றுமாய் நின்று

மாயையில் மக்களை

மேய்ப்பவன் மாலனே

–நாராயணன்

xxx

                           அறுபடும் அறம்

அவரவர் அறம் அவரவர் நிலைக்கேற்ப

அதனினு மினிதோ இருப்பதைப் பகிர்வது

வழிந்தோடும் ஏரி வாய்க்காலாய்ப் பாய்வது போலோ

வரம்புக்கு விஞ்சிய செல்வன் வாரிக் கொடுப்பது

வறுமையிலு மிருந்ததைப் பகிர்ந்தின்புறுவோனையோ 

வானவரும் வையகத்தோருமென்றும் வாழ்த்துவர்

நாராயணன் 

–subham—

tags-  நாராயணன், கவிதைகள், எது வழி , தாமரை, அறுபடும் அறம் ,மாலனோ ,மாயனோ 

ஆங்கிலத்தில் ‘பெயில்’ ஆன புகழ்பெற்ற கதாசிரியர் ஆர்.கே நாராய(ண)ன் (Post.9857)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9857

Date uploaded in London –16 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கிலத்தில் ‘பெயில்’ ஆன உலகப் புகழ்பெற்ற இந்திய கதாசிரியர் ஆர்.கே நாராய(ண)ன்

மால்குடி டேய்ஸ் MALGUDI DAYS  , ஸ்வாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ் SWAMI AND FRIENDS கதைகள் மூலம் உலகப் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண சுவாமி ஐயர்  ஒரு முறை ஆங்கிலப் பரீட்சசையில் தோல்வி அடைந்தார் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா !

தமிழ், கன்னடம் போன்ற இந்திய மொழிகளில் சிந்திப்பதை அப்படியே ஆங்கிலத்தில் அழகு குன்றாமல் நகைச் சுவை ததும்ப எழுதுவதில் மன்னன் ஆர்.கே நாராயண் . உலகப் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர்களை கவர்ந்திழுத்தவர் இவர். கிரஹாம் க்ரீனின்  GRAHAM GREENE ஆப்த நண்பர்.

பிறந்த தேதி – அக்டோபர் 1, 1906

இறந்த தேதி – மே 13, 2001

வாழ்ந்த ஆண்டுகள் – 94

சென்னையில் பிறந்த ஆர்.கே.என்.,  பாட்டியின் கவனிப்பில் வளர்ந்தார். பாட்டியின் கதைகளைக் கேட்டு பிற்காலத்தில் அதே பாணியில் , எளிய நடையில் எழுதினார். சென்னையிலும் மைசூரில் மஹாராஜா கல்லூரியிலும் பயின்றார். பின்னர் ஆசிரியராகப் பணியாற்றினார்.அதற்குப்பின்னர் முழு நேர எழுத்தாளர் ஆனார்.

ராஜம் என்பவரை  காதல் திருமணம் செய்துகொண்டார் ; அவர்  ஐந்தே ஆண்டுகளில் இறந்தது பெரிய அடியாக விழுந்தது. மறுமணம் செய்துகொள்ள மறுத்தார்.1994-ல் ஹேமா என்ற புதல்வியை இழந்தது இரண்டாவது அடியாக விழுந்தது. பரீட்சைகளில் இரு முறை தோல்வி. அதில் ஓர் முறை ஆங்கிலத்தில்!!

இவருடைய 11 நாவல்கள், மால்குடி என்னும் கற்பனைக் கிராமத்தை தளமாகக் கொண்டது.  ஒரு இந்துவுக்கு எவையெல்லாம் மதிப்பும் மரியாதைக்கும் உரியனவோ  அவற்றையெல்லாம் மாற்றாரும் மதிக்கும் வகையில் எழுதிய மஹா புருஷன். ஏனைய இந்திய எழுத்தாளர்கள் இந்தியாவைக் கிண்டலும் கேலியும் செய்யும் ஆணவம் மிக்க ஆங்கில அடிவருடிகள்.

வாழ்க்கையின் நிதர்சன உண்மைகள், தார்மீகப் பிரச்சனைகள்/கேள்விகள், மனித நேயம், பழ மைக்கும் புதுமைக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் ஆகியவற்றை இவருடைய படைப்புகள் பிரதிபலித்தன.

இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுடைய இவர் , மறுபிறப்பு, புனர் ஜென்மத்தில் நமிக்கை உடையவர். அவைகளைக் கதைகளிலும் பயன்படுத்தினார். ஒருகாலத்தில் ஆவியுலகத் தொடர்புகளிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

 கட்டுரைகள், தன்னுடைய சுய நினைவலைகள், குழந்தைகளுக்கான கதைகள், ஆகியவற்றையும் சிறு கதைகளையும், புதினங்களையும் எழுதி இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக்  கொண்டார்.

தி கைடு  THE GUIDE என்னும் இவருடைய நாவல் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் நகைச்சுவையும் உண்டு; சோகமும் உண்டு. ஒரு மோசடிக்காரன் எப்படி புனிதன் ஆகிறான் என்ற கதை இது.

இவருடைய மால்குடி டேய்ஸ் MALGUDI DAYS கதை டெலிவிஷனில் காட்டப்பட்டவுடன் அதுவரை இவரை அறியாதோரும் இவரை அறிய வாய்ப்புக்கிட்டியது.

ஆர்.கே.என். கதைகளில் அப்பாவி மக்களை சந்திக்கும் அதே நேரத்தில் ஆழமான இந்திய தத்துவத்தையும் அறிய முடியும். அவர் எழுதிய 15 நாவல்களில் மூன்று நாவல்கள் அவரது ஆற்றலின் உச்சத்தை எடுத்துக் காட்டுகின்றன.அவை The Financial Expert (1952), The Guide (1958), and The Man-Eater of Malgudi (1961).

ஏழு சகோதர சகோதரிகளுடன் பிறந்த இவருடைய தம்பி ஆர் கே லக்ஷ்மணன் RK LAXMAN  இந்தியாவின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.என். தந்தை ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர். அங்குள்ள புஸ்தகங்களும் , ஆங்கில பத்திரிக்கைகளும் இவருடையய ஆங்கில அறிவை மேம்படுத்தின. வீட்டில் ஆங்கிலம் பேசினால் அதைத் தவறின்றி பேச வேண்டும் என்பது தந்தையின் கண்டிப்பான உத்தரவு .

1930ம் ஆண்டில் பட்டம் பெற்றார். ஆசிரியராக பணியாற்றப்போன ஆர்.கே.என். நாளே நாட்களில் வேலையை விட்டுவிட்டு ஓடிவந்தார்.

1930ம் ஆண்டில் அவர் பாட்டி தேர்ந்தெடுத்த ஒரு நல்ல நாளில் நோட்டுப் புஸ்க த்தைத் திறந்து வைத்துக்கொண்டு மனக் கண் முன்னர் என்ன வருகிறது என்று காத்துக் கொண்டிருந்த நேரத்தில் மால்குடி என்ற போர்டுடன் ஒரு ரயில்வே ஸ்டேஷன் தோன்றியது. அன்று முதல் அதை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டார்.

முதலில் இவர் நண்பர் மூலம் லண்டனில் நாவல்களை வெளியிட பலரை நாடினார் . ஒருவரும் முன்வரவில்லை. அந்த எழுத்துக் காகிதங்களை ஒரு கல்லோடு கட்டி தேம்ஸ் நதியில் மூழ்கடித்து விடுங்கள் என்று நண்பருக்கு எழுதினார். அவரோ கிரஹாம் க்ரீன் GRAHAM GREENE  என்ற புகழ்பெற்ற எழுத்தாளரிடம் கொடுக்கவே அவர் ஒரு வெளியீட்டாளர் மூலம் முதல் நாவலை வெளியிட்டார். அப்போது முதல் கிரஹாம் க்ரீன் இவரது குரு  ஆனார். எல்லா நாவல்களையும் அவருக்கு அனுப்பி, அவருடைய ஆலோசனைப்படி திருத்தினார். பெயரைக் கூட ஆர். கே. நாராயண் என்று சுருக்கிவைத்தது அவருடைய ஆலோசனையின் பேரில்தான்.

சில முறை இவரது பெயர்  நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அது எட்டாக்  கனியானபோதும் உலகப் புகழ் பெற்ற பல இலக்கிய விருதுகளை வென்றார். உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்த நாட்களில் உலகப் புகழ் பெற்ற அத்தனை எழுத்தாளர்களையும் சந்தித்தார். இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்த புகழ்மிகு எழுத்தாளர் ஆர்.கே.நாராயண்

இவருடைய படைப்புகள் –

1935 –  SWAMI AND FRIENDS

1937 – THE BACHELOR OF ARTS

1938- THE DARK ROOM

1945 – GRATEFUL TO LOVE AND DEATH

1949- THE PRINTER OF MALGUDI

1958- THE GUIDE

1961- THE MAN EATER OF MALGUDI

1967- THE VENDOR OF SWEETS

1977- THE PAINTER OF SIGHNS

1982- MALGUDI DAYS

1985- THE BANYAN TREE AND OTHER STORIES

1986- THE TALKATIVE MAN

1990- THE WORLD OF NAGARAJ

1992- GRANDMOTHER’S TALES

இந்தியாவின் சாஹித்ய அகாடமி விருது, பத்மபூஷன் விருதுகளால் கவுரவிக்கப்பட்டார். ராஜ்ய சபை மூலம் எம்.பி பதவியும் கிடைத்தது.

-SUBHAM-

tags –ஆர். கே நாராயண் , நாராயணன், மால்குடி, கிரஹாம் க்ரீன்