இந்துக்களைப் புகழ்ந்த பிரெஞ்சு நாவல் ஆசிரியர் ரோமைன் ரோலண்ட் (Post. 9982)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9982

Date uploaded in London – 16 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நோபல் பரிசு வென்றவர். பிரெஞ்ச் மொழி எழுத்தாளர். நாவல்களையும், நாடகங்களையும்  கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர். காந்திஜியின் நண்பர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சரைப் போற்றி புஸ்தகம் எழுதியவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோமைன் ரோலண்ட் ROMAIN ROLLAND (பிரெஞ்ச் மொழியில் இதை உச்சரிக்கும் போது ரொமான் ரோலான்  என்ற ஒலியே வரும்); பிரான்ஸ் நாட்டின் அறிஞர்; ரஷ்யாவின் நண்பர் .

1915ம் ஆண்டில் ரொமான் லோனாவுக்கு / ரோமைன் ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இவர் பலருடைய வாழ்க்கைச் சரிதங்களையும் இயற்றினார். அவருடைய நாவல்களின் தனிச் சிறப்பு என்னவென்றால் கதாநாயகனை பிறப்பு முதல் இறப்பு வரை — தொட்டில் முதல் சுடுகாடு வரை – காட்டுவதாகும்

பிரான்சில், க்ளமெசி CLAMECY  என்ற ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். பாரிசிலும் ரோம் நகரிலும் பயின்ற அவருக்கு 1895ல் டாக்டர் பட்டம் Ph.D. கிடைத்தது. பாரிஸ் நகரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் ECOLE NORMALE 29 வயதிலேயே கலைகளின் வரலாறு கற்பிக்கும் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புகழ்பெற்ற சார்போன் SORBONNE பல்கலைக் கழகத்தில் வேலை கிடைத்தது.

வேலையில் இருக்கும்போதே நாடகங்களை எழுதத்  துவங்கினார் . பிரெஞ்சுப் புரட்சி பற்றி அவரெழுதிய நாடகங்கள் 1930ம் ஆண்டுகளில் புகழ்க் கொடி நாட்டின.

ரோமைன் ரோலண்ட் எழுதிய புகழ்பெற்ற புஸ்தகம் பல தொகுதிகளாக வெளிவந்த ஷான் கிறிஸ்டோப் JEAN CHRISTOPHE  ஆகும். அவர் ஷான் JEAN என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கினார். அந்த கதாபாத்திரம் ஒரு இசை மேதை மட்டும் அல்ல; அறநெறி வாழ்க்கை வாழும் ஒரு புனிதரும் கூட. அந்த நாவலுக்கு வரவேற்பும் எதிர்தரப்பு விமர்சனங்களும் வந்தன . அதே நேரத்தில் அவர் புகழ்பெற்ற இசை உலக மேதை பீதோவன் BEETHOVEN போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதி பதிப்பித்ததார்.

‘புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்’ என்ற கருத்துப்பட ABOVE THE BATTLE ‘அபவ் தி பேட்டில்’ என்ற நூலை எழுதினார். இதற்கு முதல் உலகப் போர் காலத்தில் நல்ல ஆதரவு கிடைத்தது. ரோமைன் ரோலண்டை சமாதான தூதுவராக அனைவரும் கண்டனர். ஆனால் சொந்த நாடான பிரான்சில் அது எதிர்ப்புப் புயலையும் தோற்றுவித்தது.

பின்னர் மீண்டும் பல தொகுதிகளாக வெளிவரும் THE ENCHANTED SOUL ‘தி என்சான்டட் சோல்’ என்ற நாவலை எழுதினார். இது கம்யூனிச சித்ததந்தத்தின் மீது அதிக ஆர்வம்/ கவர்ச்சி  ஏற்படுவது பற்றிய நாவல். கதையில் ஒரு கதாநாயகி சுதந்திர சிந்தனை படைத்த பெண்மணி. அவருக்கு சொத்து உடைமைகளை வைத்துக் கொள்வதன் மீது வெறுப்பு வருகிறது.

இதற்குப் பின்னர் அவர் ஹிட்லர் தலைமையில் உருவான பாசிஸ கொள்கைகளை எதிர்த்தார். இரண்டாவது யுத்த காலத்தில் பாசிசத்தை எதிர்த்து எழுதினார். இவ்வாறு சமாதான ஆதரவு, பாசிஸ எதிர்ப்பு, ஆன்மீகத்துக்கு ஆதரவு என்ற பலவகை முகங்கள் அவருக்கு இருந்தன. இந்து  மதத்தின் பேரில் பெரு மதிப்பு கொண்டிருந்த அவர் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் , அவருடைய சீடரான சுவாமி விவேகானந்தர்  மற்றும் மஹாத்மா காந்தி பற்றி நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். இதனால் அவருடைய பெயரும் புகழும் இந்தியாவிலும் பரவியது .

பிறந்த தேதி – ஜனவரி 29, 1866

இறந்த தேதி–டிசம்பர் 30, 1944

வாழ்ந்த ஆண்டுகள் – 78

எழுதிய நூல்கள் (நாவல் , நாடகம், வாழ்க்கை வரலாறு)

1900- DANTON

1902 – THE FORTEENTH OF JULY

1902 – LIFE OF BEETHOVEN

1904 – LIFE OF MICHELANGELO

1904- 1912 – JEAN CHRISTOPHE ; 10 VOLS

1910- HANDEL

1911 – LIFE OF TOLSTOY

1914-1919 – JOURNAL OF THE WAR YEARS

1915- ABOVE THE BATTLE

1922- 1933 – THE ENCHANTED SOUL; 6 VOLS

1924 – MAHATMA GANDHI

1929 – LIFE OF  RAMAKRISHNA; ESSAYS

1930-  LIFE OF VIVEKANANDA; ESSAYS

–SUBHAM–

 tags -இந்து, பிரெஞ்சு, நாவல் ஆசிரியர் , ரோமைன் ரோலண்ட் , Romain Rolland,

ஜேம்ஸ் பாண்ட் புகழ் நாவல் ஆசிரியர் இயன் பிளெமிங் (Post No.9967)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9967

Date uploaded in London – 12 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜேம்ஸ் பாண்ட் JAMES BOND திரைப் ப்டங்களைப் பார்க்காதோர் இருக்கலாம். ஆனால் அதுபற்றி அறியாதோரும் இல்லை; கேள்விப்படாதோரும் இல்லை. பிரிட்டிஷ் ரகசிய ஏஜண்ட் SECRET AGENT 007 JAMES BOND ஜேம்ஸ் பாண்டை உருவாக்கியவர் இயன் பிளெமிங் IAN FLEMING என்ற ஆசிரியர் ஆவார். அவர் எழுதிய  அத்தனை ஜேம்ஸ் பாண்ட் நாவல் களும்  திரைப்படங்கள் ஆகி வெற்றி நடையும் போட்டன. அடுத்த திரைப்படம் எப்போது வரும் என்று ரசிகர்களைக் காக்கவைக்கும் அளவுக்கு ருசிகரமானவை. இவற்றின் மூலம் புகழ்க்கொடி நாட்டிய நடிகர்கள் பலர் ஆவர்.

இதே ஆசிரியர் சிறுவர் சிறுமியருக்காக எழுதிய ‘சிட்டி சிட்டி பாங் பாங்’  CHITTY CHITTY BANG BANG  என்ற நவீன கால தேவதைக் கதையும் திரையுலகில் வெற்றி பெற்றது .

தென் கிழக்கு இங்கிலாந்திலுள்ள கான்டர்பரி CANTERBURY என்னும் ஊரில் பிளெமிங் பிறந்தார் . அவருடைய தந்தை,  முதல் உலகப் போரில் காலமானார். பிளெமிங் , பணக்காரப் பிரபுக்கள் பயின்ற ஈடன் ETON கல்லூரியில் படித்தார். அங்கு அவர் படிப்பு சுமார்தான். ஆயினும் விளையாட்டு விஷயங்களில் முதல் வரிசையில் நின்றார். பின்னர் புகழ் மிகு சாந்தர்ஸ்ட் ராணுவப் பள்ளியில் SANDHURST MILITARY ACADEMY படித்துவிட்டு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பல மொழிகளைக்  கற்றார் .

அவர் எடுத்துக் கொண்ட முதல் வேலை ராய்ட்டர்ஸ் REUTERS  செய்தி நிறுவனத்தின் மாஸ்கோ நிருபர் வேலை ஆகும். அங்கு தான் பிளெமிங்கிற்கு உளவாளிகளின்  ரகசிய உலகம் பற்றி பரிச்சயம் ஏற்பட்டது; இந்தத் தொடர்புகள் பிற்காலத்தில் அவருக்கு ரகசிய ஏஜண்டுகள் பற்றி எழுத உதவியது. லண்டனுக்குத் திரும்பி வந்தவுடன் பாங்குகளில் பணியாற்றினார். ஸ்டாக்ப்ரோக்கராகவும் STOCKBROKER இருந்தார். இரண்டாவது உலகப்போர் காலத்தில் கடற்படை உளவு அதிகாரியாக SENIOR NAVAL INTELLIGENCE OFFICER வேலை செய்தார். அப்போது  உளவு வேலைகளின் சூட்சுமம் முழுதையும் அறிந்தார். இவைகளை வைத்து ஏன் ஒரு நாவல் எழுத க் கூடாது என்ற எண்ணம் உதித்தது. இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்து 9 ஆண்டுகள் ஆன தருவாயில், ‘காஸினோ ராயல்’ என்ற முதல் நாவலை எழுதினார் . அப்போது அவருக்கு வயது 46.

பிரிட்டிஷ் ரகசிய ஏஜெண்ட் தோன்றும் 12 நாவல்களையும், 7 சிறுகதைகளையும் படைத்தார். அவை அனைத்தும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றன. ‘டாக்டர் நோ’ என்ற திரைப்படம் 1963-ல் வெளியானவுடன் ஜேம்ஸ்பாண்டின் புகழும் அவரை உருவாக்கிய இயன் பிளெமிங் புகழும் உலகம் முழுதும் பரவின.

இந்தக் கதைகளும் திரைப்படங்களும் பெரிய வெற்றி அடைய க் காரணங்கள் – ஜேம்ஸ்பாண்டின் சாகசச் செயல்கள்; இக்கட்டான நிலையில் தப்பிக்கக் கையாளும் சாதுர்ய வழிகள் , அவருடன் தொடர்பு கொள்ளும் அழகிகள், ஜேம்ஸ்பாண்ட் கையாளும் அதி நவீன உளவு சாதனங்கள்,  மற்றும் அந்தச் செயல்கள் நடைபெறும் கவர்ச்சியான இடங்கள்.

பிளெமிங் இறந்த பின்னரும் அவர் புகழைப் பரப்பிக்கொண்டிருக்கிறார் கற்பனைக் கதாநாயகன் ஜேம்ஸ் பாண்ட் .

பிறந்த தேதி  – மே 28, 1908

இறந்த தேதி –  ஆகஸ்ட் 12, 1964

வாழ்ந்த ஆண்டுகள் – 56

எழுதிய நாவல்கள், கதைகள் :–

1954 – CASINO ROYALE

1954 – LIVE AND LET DIE

1955 – MOONRAKER

1956 – DIAMONDS ARE FOR EVER

1957- FROM RUSSIA WITH LOVE

1958 – DR NO

1959 – GOLDFINGER

1961- THUNDERBALL

1964 – YOU ONLY LIVE TWICE

1964 – CHITTY CHITTY BANG BANG

சுபம்

TAGS- ஜேம்ஸ் பாண்ட் , நாவல் ஆசிரியர், இயன் பிளெமிங், IAN FLEMING, 007

ஸ்காட்லாந்து நாவல் ஆசிரியர் சர் வால்டர் ஸ்காட் (Post No.9896)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9896

Date uploaded in London –26 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great

ஸ்காட்லாந்து  நாவல் ஆசிரியர் SIR WALTER SCOTT சர் வால்டர் ஸ்காட்

பிரிட்டனிலுள்ள ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நாவல் ஆசிரியர், கவிஞர் வால்டர் ஸ்காட் SIR WALTER SCOTT ஆவார்  பல காதல் கதைகளையும், துணிகர, சாகசக் கதைகளையும் எழுதியவர். இவருடைய எழுத்துக்கள் இவருக்குப் பின்னர் வந்த அலெக்சாண்டர் துமா,  அலெக்சாண்டர்  புஷ்கின், கூப்பர் முதலியோர் எழுதிய வரலாற்றுப் புதினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.

ஸ்காட் , எடின்பர்க் EDINBURG நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். தாயார் ஒரு டாக்டரின் மகள். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 26 வயதில் திருமணம் செய்துகொண்டு ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையும் ஆனார்.

இரு நுறு ஆண்டுகளுக்கு முன்னர்,  ஸ்காட் லாந்தின் நாட்டுப்புற மக்கள் பாடிய நாடோடிப் பாடல்களையும்  (BALADS) கதைகளையும் அவர் ஒய்வு நேரத்தில் சேகரித்தார். வக்கீல் தொழில் போக எஞ்சியுள்ள நேரத்தில் கிராப்புறங்களுக்குச் சென்றுவிடுவார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இதில் ஒரு ஈடுபாடு இருந்தது. இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்த்துக்கும் எல்லையாகவுள்ள பகுதியில் அவர் அதிகம் உலாவினார்.

அவருக்கு 31 வயதாகும் போதே அவர் தொகுத்த பாடல்கள் மூன்று தொகுதிகளாக  வெளிவந்தன. பின்னர் தனது சொந்தக் கவிதையையும் வெளியிட்டார். இது எல்லைப்புற மனிதனின் வரலாற்றுக் கதையாகும். நீண்ட கவிதை வடிவில் எழுதினார். 40 வயதில் மேலும் இரண்டு வரலாற்றுக் கவிதைகளை எழுதியவுடன் அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது.

இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் எல்லையாகவுள்ள பகுதியில் கொஞ்சம் நிலத்தை வாங்கி ஒரு மாளிகையும் கட்டினார். அது ட்வீட் TWEED என்னும் நதிக்கரையில் அமைந்த இடம்.

அவர் எழுதிய 27 நாவல்களில் முதல் நாவல் WAVERLY வேவர்லி ஆகும்.அந்த நாவலின் கதை என்னவென்றால் ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தை பிரிட்டிஷ் சிம்மாசனத்தில்  அமரவைக்க நடந்த புரட்சி பற்றியதாகும். ஒரு வீரன் எந்த ஆட்சிக்கு விசுவாசம் செலுத்துவது என்று திண்டாடும் நிலையை இந்த நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது.  அவருடைய மற்ற நாவல்களிலும் இதே போல இரட்டை விசுவாசம் உடைய கதாநாயகர்களைக் காண முடியும்.

காணாமற்போன ராஜாங்க ரத்தினை க்ரீடங்கள் (CROWN JEWELS) நகைகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை பிரின்ஸ் ரீஜெண்ட் (பின்னர் நாலாம் ஜார்ஜ் என்று அழைக்கப்பட்ட மன்னர்) இவருக்குத் தந்தார். இவர் 100 ஆண்டுக்கு காலம் மறைந்திருந்த அந்த பொக்கிஷத்தைத் தேடிக்கண்டுபிடித்தார். பின்னர் இவர் ஒரு பிரபு அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். லண்டனிலும் பிரபுக்கள் சபையில் இடம்பெற்று ‘ஸர்’ பட்டம் பெற்றார்.

இவர் நாடகங்களையும் எழுதியுள்ளார்.

அவர் சம்பந்தப்பட்ட வெளியீட்டு நிறுவனம்  பெரிய கடனில்  சிக்கிக் கொண்டது. அதைத் திரும்பிச் செலுத்துவதில் முனைப்பு காட்டியதில் அவர் உடல் நலம் குன்றினார்.

பிறந்த தேதி – ஆகஸ்ட்  15, 1771

இறந்த தேதி – செப்டம்பர் 21, 1832

வாழ்ந்த ஆண்டுகள் – 61

அவர் எழுதிய நூல்கள்

1802- MINSTRELSY OF THE SCOTTISH BORDER

1805- THE LAY OF THE LAST MINSTREL

1808 – MARMION

1810- THE LADY OF THE LAKE

1814- WAVERLY

1815- GUY MANNERING

1816- OLD MORTALITY

1817 – ROB ROY

1818- THE HEART OF MIDLOTHIAN

1819- IVANHOE

–SUBHAM–

TAGS- ஸ்காட்லாந்து,  நாவல் ஆசிரியர், சர் வால்டர் ஸ்காட் , SIR WALTER SCOTT

40 வயதுக்குள் 50 புஸ்தகம் எழுதிய நாவல் ஆசிரியர் ஜாக் லண்டன் (Post No.9848)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9848

Date uploaded in London –13 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your

40 வயதுக்குள் 50 புஸ்தகம் எழுதிய அமெரிக்க நாவல் ஆசிரியர் ஜாக் லண்டன்

இயற்கையின் கோர தாண்டவத்தையும் எதிர்த்து நின்று மனிதர்களும் மிருகங்களும் எவ்வாறு வெற்றிபெறுகின்றன என்பதை கதைகளில் சித்தரித்தவர் JACK LONDON ஜாக் லண்டன். இவர் வெள்ளைக்காரர்கள்தான்  உயர்ந்தவர்கள் என்றும் , கடவுள் இல்லை என்றும் நம்பியவர் .  ஆயினும் இவை இரண்டும் இவரது புகழுக்குத் தடைக் கற்களாக நிற்கவில்லை. 40 வயதுதான் வாழ்ந்தார். அதற்குள் 50 புஸ்தகங்களை வெளியிட்டு புகழுடன் மறைந்தார் .

பிறந்த தேதி – ஜனவரி 12, 1876

இறந்த தேதி – நவம்பர் 22, 1916

வாழ்ந்த ஆண்டுகள் – 40

பனி மூடிய அலாஸ்கா ALASKA போன்ற இடங்களிலும் மனிதர்களும் ஓநாய் போன்ற பயங்கர  நாய்களும் குன்றாத உற்சாகத்துடன் எப்படி முன்னேறுகின்றன என்று தி கால் ஆப் தி வைல்ட் THE CALL OF THE WILD முதலிய நாவல்களில் காட்டுகிறார்.

எவருக்கு உடலிலும் உள்ளத்திலும் பலம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வாழ வேண்டும் FITTEST SHOULD SURVIVE , வெள்ளை நிற தோல் உடையோர் WHITE PEOPLE ARE SUPERIOR மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற கொள்கையுடையவர். அமெரிக்காவில் குடியேறிய சீனர்களை மஞ்சள்  ஆபத்து YELLOW PERIL என்று வருணித்தார்.

சான்பிரான்சிஸ்கோ SFC நகரில் பிறந்தார். கலிபோர்னியாவில் ஓக்லாந்தில் OAKLAND வளர்ந்தார்.அவருடைய தாய் முறையான திருமணம் இன்றி இவரை ஈன்றெடுத்தார் ; தந்தை வீட்டைவிட்டு ஓடிப்போனார். உள்ளத்தில் கதைகள் ஊற்றெடுத்தாற் போல வரவே 50 புஸ்தகங்களை எழுதித் தள்ளினார்,

ஓக்லாண்ட்டில் துறைமுக தொழிலாளர் கும்பலில் சேர்ந்து பணிபுரிந்து 17 வயதில் கப்பல் ஏறினார். இந்த கடல் பயண அனுபவம் இரண்டு நாவல்களுக்கு அடித்தளமாக அமைந்தது. வீடற்றோர் போல HOBO பொது இடங்களில் தூங்கும் நாடோடி போலவும் வாழ்ந்தார். இதனால் அடிக்கடி சிறை செல்ல நேரிட்டது. இறந்த சிறைவாசங்கள் , தன் வாழ்க்கையில் முன்னேற உதவுவதாவும் எழுதினார் .

பள்ளிக்கல்வி முடிப்பதற்குள் உணவுப் பொருள்களை டின்களில் அடைக்கும் ஆலைகளிலும் CANNERIES , லாண்டரிகளிலும் LAUNDERIES வேலைசெய்தார். 24 வயதான போது , முதல் கதைத்தொகுப்பை வெளியிட்டார்

1897-98-ம் ஆண்டுகளில் தங்கம் கிடைக்கும் இடங்களை நோக்கி மக்கள் கூட்டம் வெறி பிடித்தார் GOLD RUSH போல ஓடியது. அந்த தங்க வேட்டைக்காக இவரும் கனடாவுக்குச் சென்றார். மக்கள் எளிதில் வசிக்கமுடியாத இடங்களில் போராட்ட வாழ்வு நடத்தியது,  பின்னர் இரண்டு புகழ் மிகு படைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது . உடல் வலு உள்ளோரே வாழத் தகுதி உடையோர் மற்றவர்கள் செத்து மடியட்டும் என்ற கொள்கை உடையவர் என்றாலும் ஏழைகள் படும் துன்பத்தினையும் ஒரு (PEOPLE OF THE ABYSS) சில நாவல்களில் வடித்தார். சமூகத்தில் தீண்ட தகாதவர்கள் போல ஒதுக்கப்பட்டவர்களைப் பற்றி இவர் எழுதி வெற்றி பெற்றது பிற்கால எழுத்தாளர்களுக்கு கருப் பொருளாக அமைந்தது. கடலோடியாக இவர் நடத்திய வாழ்வு SEA WOLF ஸீ வுல்ப் என்ற நாவலுக்கு  வழிவகுத்தது. எழுத்து மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்த எழுத்தாளர் என்று பெயர் எடுத்த போதிலும் அற்பாயுசில் உயிர் நீத்தார்; ஜான் லண்டன், கவிதைகளையும், கட்டுரைகளையும்  எழுதினார்.

அவரது படைப்புகள்:

1900 – THE SON OF THE WOLF

1902 – CRUISE OF THE DAZZLER

1903 – CALL OF THE WILD

1903- PEOPLE OF THE ABYSS

1904- SEA WOLF

1906 WHITE FANG

190 – THE ROAD

1908 – IRON HEEL

1909 – MARTI EDEN

1910- BURNING DAY LIGHT

இவரது நாவல்களையும், கதைகளையும் வைத்து பல திரைப்படங்கள் , டெலிவிஷன் தொடர்கள் வந்துள்ளன. கானகத்தின் குரல் என்ற தலைப்பில் ஜாக் லண் டனின்   கால் ஆஃப் தி வைல்ட் நாவலும் வெளியிடப்பட்டுள்ளது.

–SUBHAM-

tags -40 வயது, 50 புஸ்தகம், நாவல் ஆசிரியர், ஜாக் லண்டன் ,Jack London,