

Post No. 9964
Date uploaded in London – 11 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘த பவுண்டைன் ஹெட்’ THE FOUNTAINHEAD மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் ATLAS SHRUGGED நாவல்களை எழுதிப் புகழ் பெற்ற பெண்மணி அய்ன் ராண்ட் AYN RAND ஆவார் . கம்யூனிசத்தின் பரம எதிரி; முதலாளித்துவத்தின் பெரிய ஆதரவாளர். ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர்.
அய்ன் ராண்ட் AYN RAND எழுதிய நூல்களும் அவருடைய கொள்கைகளும் 1950, 1960ம் ஆண்டுகளில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன தனி மனித உரிமையே பெரிது; தனிப்பட்டவர் சுதந்திரம், தன் முயற்சி முக்கியம் வாய்ந்தது என்று பொருள்படும்படி அவர் நாவல்களை எழுதினார். அமெரிக்க ஜனாதிபதி ரீகன் ஆட்சிக் காலத்தில் அவரது நூல்கள் பெரிதும் பேசப்பட்டன. பின்னர் அவை திரைப்படங்களாகவும் உருவாயின.
ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அவர் பிறந்தார். அவருக்கு 12 வயதானபோது ரஷ்யப் புரட்சி வெடித்தது. ஜார் (CZAR) மன்னர் ஆட்சி ஒழிந்து கம்யூனிஸ ஆட்சி ஏற்பட்டது. அய்ன் ராண்ட் அதன் பின்னரும் ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் படித்தார். 18 வயதில் ரஷ்யாவை விட்டு வெளியேறினார் அவருக்கு கம்யூனிஸ்ட் ஆட்சி வெறுப்பை உண்டாக்கியது.
அமெரிக்காவில் குடியேறி 1931-ல் அமெரிக்க பிரஜை ஆனார். ஹாலிவுட்டில் திரைப்பட வசனங்களை எழுதும் பணியில் அமர்ந்தார். அமெரிக்காவுக்குப் போனவுடன் தீவிர கம்யூனிச எதிர்ப்பும், முதலாளித்துவ ஆதரவும் அதிகரித்தது மனிதர்கள் சுயமாகச் சிந்தித்து அவர்களுடைய சொந்த நலனுக்குப் பாடுபடுவதே முக்கியம். சமூகம் என்பது அதற்குப் பின்னரே என்று எழுதினார். இந்தக் கொளகைகளை அடிப்படையாக வைத்து ராண்ட் 4 நாவல்களை எழுதினார் அவருக்கு 31 வயதாகும்போதே அவருடைய முதல் நாவல் WE THE LIVING வீ த லிவிங் பதிப்பாகியது. அவர் படைத்த கதாநாயகன் சமூக நலன்களை ஒதுக்கிவிட்டு தனது ஆசைகள் பூர்த்தியாக உழை த்து அதில் வெற்றியும் அடைகிறான்.
அவர் எழுதிய மூன்றாவது நாவலான பவுண்டைன்ஹெட்டில் THE FOUNTAINHED கதாநாயகன் ஒரு கட்டிடக் கலைஞன். அவன் தனது உரிமைகளே பெரிது என்று எண்ணு வன் . இது திரைப்படம் ஆக்கப்பட்டபோது அதில், காரி கூ ப்பர் GARY COOPER முதலியோர் நடித்தனர். படமும் வெற்றிநடைபோட்டது.
பல்கலைக்கழக மாணவரிடையே அய்ன் ராண்டின் நாவல்கள் பிரபலமாகின. சுயநலத்துடன் செயல்படுவதே சரி என்று நினைத்தனர் அக்கால மக்கள். இப்போது அந்த தத்துவம் மாறிவிட்டது .

பிறந்த தேதி -பிப்ரவரி 2, 1905
இறந்த தேதி – மார்ச் 5, 1982
வாழ்ந்த ஆண்டுகள் -77
எழுதிய நூல்கள்…..
1936- WE THE LIVING
1938- ANTHEM
1943- THE FOUNTAINHEAD
1957- ATLAS SHRUGGED
1961- FOR THE NEW INTELLECTUAL
1965- THE VIRTUE OF SELFISHNESS
1969- THE ROMANTIC MANIFESTO
1971- THE NEW LEFT: THE NEW ANTI INDUSTRIAL REVOLUTION
1982- PHILOSOPHY: WHO NEEDS IT?
–SUBHAM–



tags- அட்லஸ் ஷ்ரக்ட், நாவல் ஆசிரியை, அய்ன் ராண்ட் , Ayn Rand, Atlas Shrugged