அழுக்காறு என ஒரு  பாவி – அதர்வண வேதமும் வள்ளுவனும் (Post 10,408)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,408

Date uploaded in London – –   4 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பொறாமை பற்றி ஒரு அதிசய விஷயம் தொல்காப்பியர் ‘நிம்பிரி’ என்னும் சொல்லை பயன்படுத்துகிறார். இது ஸம்ஸ்க்ருதத்திலும் இல்லை; தமிழிலும் வேறு எங்கும் இல்லை!

வள்ளுவன் ஒருவன்தான் பொறாமை பற்றி பத்துக் குறள்கள் பாடி முதலிடம் பிடித்தான் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கும் முன்னதாக, அதர்வண வேதப் புலவன் பாடிவிட்டான்

அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் மேலும் இரண்டு சுவையான விஷயங்களைச் சொன்ன பிறகு அதர்வண  வேதத்துக்குள் நுழைவோம்.

வள்ளுவன் அதி மேதாவி; சம்ஸ்க்ருத மொழியைக் கரைத்துக்குடித்தவன். அதி தீவிர ஹிந்து. ஆகையால் இங்கே ‘பாவி’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் (செய்யவள்/லக்ஷ்மி அக்காள்) மூதேவியையும் குறிப்பிடுகிறான்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168

பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.

இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.

 பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

‘’அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும் – குறள் எண் 167

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.

இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

XXXX

அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191

தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்

1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று  எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்

2.பொறாமை மனம் படைத்தவனின் மது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .

3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்

மூன்றாவது மந்திரத்தில் உள்ள உவமை பொறாமைக்குப் பொருத்தமான உவமை. சம்ஸ்க்ருதத்தில் பொறாமையை இருதயக் கனல் (HEART BURN) என்று வருணித்தார் புலவர். தமிழில் இருதயம் என்ற உறுப்புக்கு சொல்லே கிடையாது; என் நண்பன் HEART OPERATION  ஹார்ட் ஆபரேஷன் செய்து கொண்டான் என்பதை தமிழில் சொல்லவே முடியாது; ஆகையால் வயிற்று எரிச்சல் STOMACH BURN என்போம். அதற்கேற்ற உவமை கொல்லன் துருத்தி (த்ருதி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தது ) அதிலிருந்து எப்பாடி சூடான காற்று வெளியேறுமோ அப்படி உன் பொறாமைத் தீயை வெளியேற்று(வேன் ) என்கிறது மந்திரம்.

அதர்வண வேதம் தொடாத SUBJECT சப்ஜெக்ட்டே  இல்லை.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்து மத அறிஞர்கள்  மகாநாடு கூட்டி மந்திரங்களை தலைப்பு/ விஷயம்/ சப்ஜெக்ட்/ டாபிக் வாரியாக பகுத்து ஆராய்ந்தால் மிக நல்ல விஷயங்கள் கிடைக்கும்.

TWO STORIES ON JEALOUSY

வள்ளுவன் கதை: அழுக்காறு என ஒரு பாவி (Post No …

https://tamilandvedas.com › வள்…

15 Feb 2018 — அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்துவிடும் – குறள் 168.

எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும் – Tamil …

https://tamilandvedas.com › எனக்…

5 Sept 2015 — ஒரு வேண்டுகோள்: எனது கட்டுரைகளை உடனே “ரீபிளாக்: – செய்யாதீர்கள்.

–SUBHAM—

TAGS-  அதர்வண வேதம் , நிம்பிரி, பொறாமை, அழுக்காறு, அவ்வியம் , பாவி, மூ தேவி