மன வலியைப் போக்கவும் உடல் வலியை நீக்கவும் இசை உதவும் என்பது அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திதான். எத்தனை வலி நிவாரண மாத்திரைகளை விழுங்கினாலும் வலி குறைவதே இல்லை என்பவர்களுக்கு லாய்ட்ஸ் பார்மசி நடத்திய ஆராய்ச்சி ஊக்கமூட்டும் தகவலைத் தருகிறது.
‘பாக்’ Bach என்பவர் வடிவமைத்த மேல்நாட்டு சங்கீதம் பலருடைய நோய்களைப் போக்கியுள்ளது.. பத்து பேரைக் கேள்வி கேட்டால் அதில் நாலு பேராவது, தங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பது மனதுக்கு நிம்மதி தருவதாகவும் பதட்டத்தைத் தணிப்பதாகவும் கூறுகின்றனர்.
(ஜொஹன் செபஸ்டியான் பாக் என்பவர் கெர்மன் நாட்டு இசைக் கலைஞர். வயலின், ஆர்கன் முதலிய வாத்தியங்களை வாசித்த கலைஞர், பல பாடல்களை இயற்றியவர். வாழ்ந்த காலம் 1685—1750)
பாப் இசை, கர்நாடக இசை, மற்றும் சில பாடல்களை வாயாலேயே முனகுவது ஆகியன வலிக்கு நிவாரணம் தரும்.
1500 பேரிடம் கேள்வி கேட்ட லாயிட்ஸ் பார்மசி என்னும் மருந்துக் கடை நிறுவனம் 16 வயது முதல் 24 வயதுடையோர் தான் சங்கீதத்தில் ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறது.
ஒருவர் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கிவிட்டால் என்ன கவலை இருந்தாலும் அது சூரியனைக் கண்ட பனி போல விலகிவிடும் என்று உடா பல்கலைக்கழகத்தில் வலி நிவாரணப் பகுதி தலைவர் பேராசிரியர் டாவிட் பிராட்ஷா கூறுகிறார்.
ராக், பாப், கர்நாடக சங்கீதம் போன்ற வகைப் பாடல்கள் மக்களுக்கு உடல் வலியைக் குறைக்கும் பட்டியலில் மேலிடத்தில் நிற்கின்றன.
எந்தப் பாடல் பிடிக்கிறதோ அதைக்கேட்பதும் வாயால் முனகுவதும் பாடுவதும் மனதை உடல் வலியிலிருந்து திசை திருப்பவாவது உதவும் என்றும் அவர்கூறினார்.
ஆதாரம்: லண்டன் மெட்ரோ 23-10-2013;மொழிபெயர்ப்பு- லண்டன் சுவாமிநாதன்
ஏற்கனவே வெளியான எனது சங்கீதம் தொடர்பான கட்டுரைகள்:
1.இசைத் தமிழ் அதிசயங்கள், 2.சங்கீத ரகசியம், 3.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி, 4.முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்
You must be logged in to post a comment.