
Written by S Nagarajan
Date: 10 February 2016
Post No. 2525
Time uploaded in London :– 6-10 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
swami_48@yahoo.com)
அதீத உளவியல் ஆற்றல்
ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (1)
ச.நாகராஜன்

சித்திகளைக் கண்டு மயங்காதே!
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கை நெடுக தனது அற்புதமான தவ ஆற்றலால் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் உண்டு. அதீத உளவியல் சம்பந்தமாக அவர் அடைந்த அனுபவங்களும் ஏராளம் உண்டு. தனியே பெரிய நூலாகத் தொகுக்க வேண்டியவை இவை.
இந்த சிறு கட்டுரைத் தொடரில், ஒரு அறிமுகமாக, அவரது ஆற்றல்களையும அவர் அடைந்த அனுபவங்களையும் காணலாம். இதைப் படித்ததன் மூலம் அவரைப் பற்றி இன்னும் முற்றிலுமாக அறிய உத்வேகம் ஏற்பட்டால் அதுவே இந்த கட்டுரைத் தொடரின் பயனாக அமையும்.
முதலில் சித்திகள் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறியதை இங்கு நினைவு படுத்திக் கொள்வது நல்லது.
பரமஹம்ஸர் சித்திகளைக் கண்டு மயங்காதே என்று தெளிவாகப் பலமுறை கூறியுள்ளார். அதற்கு மதிப்புக் கொடுக்காதே; அதையும் தாண்டி உள்ள மஹாசக்தியை நாடு என்பதே அவரது அருளுரை.
இதையே ஸ்வாமிஜியும் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார்.
ஆனால் பெரும் அவதாரங்கள் தோன்றும் போது அளப்பரிய ஏராளமான ஆற்றல்கள் அவர்களுடன் இயல்பாகவே தோன்றும். இப்படி அற்புதங்களைத் தாம் ஆற்றியதாகவே அவர்கள் கூற மாட்டார்கள்; அவர்கள் இதை அறிவதும் இல்லை, போலும். மற்றவர்கள் கூறும் போது, அப்படியா என்று வியப்பது வழக்கம்!
இந்தக் கருத்தை பகவான் ரமண மஹரிஷியும் அழுத்தம் திருத்தமாக அடிக்கடி கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் உரை ; நினைத்ததைச் சொல்பவர்!
ஸ்வாமிஜி கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் 1900ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி மனத்தின் சக்திகள் (The Powers of the Mind : Complete Works of Swami Vivekananda Volume II) என்று அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
அதில், “இயற்கைக்கு மீறிய நிகழ்வுகள் காலம் காலமாக நடந்து வருகின்றன. அதீதமான நிகழ்வுகளைப் பற்றி நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். சிலருக்கு சொந்த அனுபவங்களும் இதில் உண்டு. எனது சொந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் இந்த விஷயத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்று அந்த உரையை அவர் ஆரம்பிக்கிறார்.
ஒரு சமயம் அவர் எந்தக் கேள்வியை மனதில் நினைத்தாலும் அதை அறிந்து கொண்டு அதற்கு உடனே விடை தரும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டார். எதிர்காலத்தில் இனி நடக்கப் போகும் சம்பவங்களையும் கூற வல்லவர் அவர். ஆர்வம் உந்தவே, சில நண்பர்களுடன் அவரைச் சந்திக்க ஸ்வாமிஜி கிளம்பினார். ஒவ்வொருவரும் தன் மனதில் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டனர். தவறு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் நினைத்தது என்ன என்பதை ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி அதைத் தங்கள் பாக்கட்டில் போட்டுக் கொண்டனர். அந்த குழுவினரைப் பார்த்தவுடனேயே அந்த மனிதர் ஒவ்வொருவரும் என்ன கேள்வியை நினைத்திருக்கிறோம் என்பதைக் கூறி அதற்கான பதிலையும் கூறி விட்டார்.
பிறகு அவர் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை மடித்து அதில் ஸ்வாமிஜையைக் கையெழுத்திடுமாறு கூறி. “இதைப் பார்க்காதீர்கள். உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
பின்னர், “நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ, அது எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்! , நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த மனிதருக்குத் தெரியாத சம்ஸ்கிருத மொழியில் ஒரு பெரிய வாக்கியத்தை ஸ்வாமிஜி நினைத்துக் கொண்டார்.
பின்னர் அந்த மனிதர், “இப்போது உங்கள் பையில் இருக்கும் பேப்பரை எடுத்துப் பாருங்கள்” என்றார். ஸ்வாமிஜி நினைத்த சம்ஸ்கிருத வாக்கியம் அந்தப் பேப்பரில் அப்படியே இருந்தது.

ஒரு மணி நேரம் முன்னர் அந்தப் பேப்பரில் அவர் எழுதியபோது, “நான் எழுதியதை உறுதி செய்து இவர் அதே வாக்கியத்தை நினைப்பார்” என்று சொல்லி இருந்தார். அது முற்றிலும் சரியாக ஆனது.
இதே போல இன்னொரு நண்பர் அந்த மனிதருக்குத் தெரிந்திருக்க சற்றும் வாய்ப்பே இல்லாத அராபிய மொழியில், குர் ஆனில் வரும் ஒரு பகுதியை எழுதி இருந்தார். அது அப்படியே அவர் முன்னரே வைத்த பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.
இன்னொரு நண்பரோ ஒரு வைத்தியர். அவர் ஜெர்மானிய மருத்துவ புத்தகத்தில் வரும் ஒரு வரியை நினைத்தார். அதுவும் அப்படியே பேப்பரில் எழுதப் பட்டிருந்தது.
சில நாட்கள் கழித்து முந்தைய முறை எப்படியோ தான் மயக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்தவாறே ஸ்வாமிஜி மீண்டும் அந்த மனிதரிடம் சென்றார். ஆனால் என்ன ஆச்சரியம், இந்த முறையும் அவர் அப்படியே அந்த நிகழ்ச்சியை அதிசயமாக நடத்திக் காட்டினார்.
ஸ்வாமிஜியின் அனுபவங்கள் … தொடரும்
இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்களுக்காக ஸ்வாமிஜியின் மூலச் சொற்பொழிவுப் பகுதிகள் கீழே அப்படியே தரப்பட்டுள்ளன.
All over the world there has been the belief in the supernatural throughout the ages. All of us have heard of extraordinary happenings, and many of us have had some personal experience of them. I would rather introduce the subject by telling you certain facts which have come within my own experience.
I once heard of a man who, if any one went to him with questions in his mind, would answer them immediately; and I was also informed that he foretold events. I was curious and went to see him with a few friends. We each had something in our minds to ask, and, to avoid mistakes, we wrote down our questions and put them in our pockets. As soon as the man saw one of us, he repeated our questions and gave the answers to them. Then he wrote something on paper, which he folded up, asked me to sign on the back, and said, “Don’t look at it; put it in your pocket and keep it there till I ask for it again.” And so on to each one of us. He next told us about some events that would happen to us in the future. Then he said, “Now, think of a word or a sentence, from any language you like.” I thought of a long sentence from Sanskrit, a language of which he was entirely ignorant. “Now, take out the paper from your pocket,” he said. The Sanskrit sentence was written there! He had written it an hour before with the remark, “In confirmation of what I have written, this man will think of this sentence.” It was correct. Another of us who had been given a similar paper which he had signed and placed in his pocket, was also asked to think of a sentence. He thought of a sentence in Arabic, which it was still less possible for the man to know; it was some passage from the Koran. And my friend found this written down on the paper.
Another of us was a physician. He thought of a sentence from a German medical book. It was written on his paper.
Several days later I went to this man again, thinking possibly I had been deluded somehow before. I took other friends, and on this occasion also he came out wonderfully triumphant.
(To be Continued)
You must be logged in to post a comment.