திருமந்திரத்தில் ரிக்வேத வரிகள் ! (Post No.9956)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9956

Date uploaded in London – 9 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே

–திருமந்திரம்

திருமந்திரத்தில் பசுக்களைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறதோ அது ரிக்வேதத்தின் எதிரொலி ஆகும்.

ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திருந்து பத்தாவது மண்டலம்  வரை உள்ள

10,000 மந்திரங்களில்  பசுக்களைப் பற்றியும் குதிரைகள் பற்றியும் ஏராளமான

குறிப்புகள் உள்ளன. அதில் குதிரைகள் பற்றிய விஷயங்களில் அதிகப் புதுமை இல்லை.

வேகமாகப் போகும் குதிரைகள்  வேண்டும் , போருக்கு ஏற்ற குதிரைகள் வேண்டும்

என்று கோருகின்றனர். ஆனால் பசுக்கள் பற்றி புதுமையான விஷயங்கள் சொல்லப்படுகின்றன . குகைகளில் மறைந்திருந்த அல்லது மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை இந்திரன் மீட்டான் அல்லது வேறு ஒரு கடவுள் மீட்டார் என்று எல்லா மண்டல ரிஷிகளும் பாடுகின்றனர்.

இதைப் படிப்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழும். ஒரு முறை குகையில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டதையா அவர்கள் இப்படி அடுத்தடுத்து பாடுகின்றனர்? அல்லது ஒவ்வொரு முறையும் இப்படி எதிரிகள் மறைத்து வைத்தார்களா?

எந்த மந்திரத்துக்கும் மூன்று வகை விளக்கம் சொல்ல முடியும்.

1.மந்திரத்துக்கு இலக்கிய ரீதியில் அர்த்தம் சொல்லாதே (Don’t take it literally) . அதன் மூலம் வரும் ஒலி அலைகளால்  நல்ல விளைவுகள் ஏற்படும் அதைப் பாடிக்கொண்டே இரு. இதுதான்

பழமைவாதிகள் அணுகுமுறை . மடாதிபதிகளும் இப்படியே நம்புகின்றனர்.

2.மேலை நாட்டினரும் இந்து மத விரோதிகளும் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் பார்த்து புதிய வியாக்கியானம் செய்வார்கள். பெரும்பாலும் விஷமத்தனமான விளக்கமாகவே இருக்கும் .

‘சிஸ்ன தேவாஹா’ என்பதை காமத்தை வழிபடுவோர், செக்ஸ் (Lewd) விரும்பிகள் என்றே பல வெள்ளைக்காரர்களும் மொழிபெயர்த்தனர் . அவர்களில் விஷம் கொண்ட விஷமிகள் இது ஆண்குறியைக் குறிக்கும். ஆண் குறி என்பது சிவ லிங்கத்தைக் குறிக்கும். இது சைவர்களைத் தாக்கி ஆரியர்கள் பாடியது; சிந்து வெளி மக்களைத் தாக்கி ஆரியர்கள் பாடியது என்றெல்லாம் எழுதி அசிங்கப்படுத்தினர் .

3.மூன்றாவது அணுகுமுறை – அவர்கள் மறை பொருளில் , சிலேடைப் பொருளில் வேறு விஷயத்தைச் சொல்கிறார்கள்  என்பர்.

இதில் எதுவும் சாத்தியமே. திரைப்படப் பாடல்களில் கூட இப்படி இரு பொருள்படும்படி பாடி செக்ஸ் விஷயங்களைக் கொண்டு வருவதைக் காண்கிறோம்.

சிவவாக்கியர், திருமழிசை ஆழ்வார், திருமூலர் போன்றோர்  வெறும் எண்களை மட்டும் சொல்லி  நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். வேதங்களிலும் ஒரே ம ந்திரத்தில் ஆறுமுறை எண் மூன்று வருவதைக் காணலாம். எல்லோருக்கும் தெரிந்த கம்ப ராமாயணப் பாடலான “அஞ்சிலே ஒன்று பெற்றான்”…………. என்பதில்  எண்  5 என்பது பல பொருள்களில் வருவதை அறிவோம்.

மறை  பொருளுக்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். மதுரை ஜவுளிக்கடைகளில் பெண்கள் பயங்கரமாகப் பே ரம் பேசுகையில் கடை ஊழியர் கடை முதலாளியை ஒரு பார்வை பார்ப்பார். அவர்கள் தங்களுக்கே உரிய பரி பாஷையில் வாடிக்கையாளருக்கு இந்த விலையில் கொடு அல்லது கொடுக்காதே என்று சொல்லுவர் . அது தமிழ்ச் சொல்லாகவே இருக்கும் ஆனால் அதன் பொருள் வாடிக்கையாளருக்கு விளங்காது . இன்னொரு உதா ரணமும் சொல்லலாம் குழந்தைகளுக்குத் தெரியக்கூடாதென்பதற்காக பெற்றோர்கள் ‘க’ என்ற எழுத்தை எல்லா எழுத்துக்களுடனும் சேர்ப்பர். சாக்லேட் என்பது குழந்தைகளுக்குத் தெரியக கூடாது  என்பதற்காக கசா,  கக்  , கலே  , கட்  எங்கே இருக்கிறது ? என்பர் .

ஆகையால் வேத மந்திரத்தை இந்து மத அறிஞர்களே அணுகமுடியும். நாம் பார்ப்பதோ, வேத மந்திரங்களை நம்பாத, வேத மதத்துக்கு எதிரான, வேதங்களை செயல் முறையில் உபயோகிக்காத  ‘அஹிந்து’க்களின் பொருள் ஆகும்.

திருவள்ளுவர் ஐம்புலன்களுக்கு ஐந்து மத யானைகளை ஒப்பிடுகிறார். அவர்கள் பயன்படுத்தும் இடத்தைக்கொண்டு யானை என்பதற்கு புலன்/ இந்திரியம் என்று நாம் பொருள் கற்பிக்கிறோம். இதே போல திருமூலரும் பசுக்களை ஐம்புலன்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார். இதோ அந்தப் பாடல்-

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே

–திருமந்திரம்

இங்கு பார்ப்பான் என்பது உள்முகமாகப் பார்க்கும் அகக்கண் உடையவன் இரு பொருள் கொள்ள  வேண்டும். அவனிடமுள்ள பசுக்கள் ஐம்புலன்கள்.; அதைக் கட்டுப்படுத்தாமல் மேயவிட்டால் அது ஆசை வயப்பட்டு வெறி கொண்டு திரியும் . அதையடக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் அவை உள்ளத்திலே அமிர்த தாரையைப் பொழியும். அதாவது யோகத்தில் நிலைத்து நிற்பவர்கள் புலன் இன்பங்களைக் கைவிட்டால், அவர்கள் உள்ளத்தில் பால் போன்ற தூய்மை ஏற்படும். பால் சாப்பிட்டால் உடலுக்குக் கிடைக்கும் பலன்கள் போல இந்தப்பாலால்  உள்ளத்துக்குக் உரம் கிடைக்கும் .

இப்போது ரிக் வேத மந்திரங்களை ஒப்பிடுங்கள் :-

ரிக் வேதம் 1-6-5

 இந்திரனே, நீ காற்று தேவனான ‘மருத்’ கூடச் சேர்ந்து குகையினுள் மறக்கப்பட்டிருந்த பசுக்களைக் கண்டு பிடித்தாய் .

இதற்கு உரை எழுதியோர் இந்திரன் தன்  வஜ்ராயுதத்தால் (இடி, மின்னல்) மலையிலுள்ள மேகங்களை வெளிக்கொணர்ந்தார். (மேகங்கள் = பசுக்கள்)

1-11-5

வஜ்ராயுதத்தை ஏந்தி நிற்கும் நீ (இந்திரன்), பசுக்களை மறைத்து வைத்திருந்த வலனின் குகையைத் திறந்தாய்; அவனால் துன்பமுற்ற தேவர்கள் உன்னுடைய நட்பை பெற்றவுடன் அச்சத்தை விட்டார்கள்

இங்கேயும் பசுக்கள் என்பதற்கு மேகங்கள்  என்றே உரைகாரர்கள் எழுதியு ள்ளனர்

7-87-4

பசுவுக்கு மூவேழு நாமங்கள் உண்டு

இதற்கு உரை எழுதியோர் இங்கு பசு என்பது ‘சொல்’ WORD என்றும் 21 வகையான வேள்விகள் அல்லது 21 சந்தங்கள் என்றும் ஊகிக்கின்றனர் . தமிழ் இலக்கிய புறநானூற்றிலும் (பாடல் 166) மூவேழ் துறை, யாகம் தொடர்பான பொருளில் வருகிறது.

1-191-14

இங்கு மூவேழு பெட்டை மயில்கள் என்று விஷக்கடி மந்திரத்தில் வருகிறது. பாம்பும் மயிலும் எதிரி என்பது தெரிந்ததே.1-191-12ல் மூவேழு அக்கினிப் பொறி கள் என்றும் ரிஷி அகஸ்தியர் பாடுகிறார். இங்கெல்லாம் 3x 7=21 என்பதன் பொருள் விளங்கவில்லை சாயனர் 21 பொறிகளை 21 பறவைகள் என்கிறார். ஏன் 21 என்று எவருக்கும் சொல்ல முடியவில்லை .4-1-16 மந்திரத்திலும் பசுவுக்கு 21 பெயர்கள் என்ற வரி வருகிறது .

2-34-1

காற்று தேவதைகளான மருத் தேவர்கள் பசுக்களை புலப்படுத்தினார்கள் ; பசு= மேகம்

XXX

இவ்வாறு ரிக் வேதம் முழுதும் பசு, குகை, 21 மர்மம் வருகிறது. ஒரு சின்ன விஷயத்தை எதற்காக ரிஷிகள் மீண்டும் மீண்டும் பாடவேண்டும்? அதை எதற்காக சொல் மாறாமல் எழுத்தாக கூடாது என்று சொல்லி வாயமொழி மூலம் மட்டுமே பரப்ப வேண்டும்?

திருமூலர் எதற்கு ஐம்புலன்களையும் பசுவாக உருவகிக்கவேண்டும் ? இதனால்தான் இதை மறை= ரஹஸ்யம் என்கிறோம். மறைவான பொருள் உடைய வேதத்தை அதைப் பயிலாத, அதை இந்துக்களைப் போல மதிக்காத , இது விரோத சக்திகள் மொழிபெயர்க்கப் போய் தோல்வியே கண்டார்கள் மாக்ஸ்முல்லர் கும்பலை சேர்ந்த 20 க்கும் மேலான வெள்ளையாட்கள், மனம்போனபடி அர்த்தம் எழுதிவைத்து இருக்கிறார்கள்!

நாம் உண்மைப் பொருளை உணர வேதத்தைப் போற்றும், வேதத்தைப் பின்பற்றும் பெரியோர்களின் வாயிலாகவே கேட்கவேண்டும்/ தேவார, திருவாசக, திவ்யப்பிரபந்த வரிகள் அப்படியே ரிக் வேதத்தில் உள்ளது.

ஒரு  ஆழ்வார் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் என்று ஆடிப்பாடி கூத்தாடுகிறார் . அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ரிஷி கண்டேன் கண்டேன், கண் முன்பாக அவன் தேரைக் கண்டேன் என்கின்றனர்.!

–சுபம்–

tags-  திருமந்திரம்,  ரிக்வேத வரிகள், பசுக்கள்