வெற்றிக்கு வழி! (Post No.2871)

Success-Motivate

Article written by S.NAGARAJAN

 

Date: 6 June 2016

 

Post No. 2871

 

Time uploaded in London :–  4-50 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

 

சமஸ்கிருதச் செல்வம்

 

வெற்றிக்கு வழி!

 

ச.நாகராஜன்BusinessFunnel

நான் யார்?

 

இப்போதுள்ள கால தேச (வர்த்தமானம்) என்ன?  நல்லவை அல்லது கெட்டவை எவை உள்ளன?

எனது எதிரிகள் யார்? எனது நண்பர்கள் யார்?

 

என்னிடம் உள்ள வலிமை எவ்வளவு?

 

பயனுள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு உள்ள வழிகள் எவை?

எனக்கு காலம் எப்படி இருக்கிறது? (அதிர்ஷ்ட காலம் தானா?)

எனக்கு வளம் சேரும் தொடர்ச்சி எப்படி உள்ளது?

எனது சொற்கள் நிராகரிக்கப்பட்டால் எனது பதில் என்னவாக இருக்க வேண்டும்?

 

வெற்றியை விரும்பும் நல்ல மனிதர்கள் வெற்றி பெறும் வழியை உறுதியாக இப்படிச் சிந்திப்பார்களேயானால் அவர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்!

 

 

Who am I?

What are the present time and place and what good or evil qualities in evidence?

Who are my enemies, and who are my allies?

What power have I?

 

What means of carrying out a useful plan?

What store of good fortune have I?

What continuance of prosperity?

And what should be my reply if my words are rejected?

Good men, who fix their minds thus steadfastly on success, are not disappointed.

( Translation by F.Edgerton)

 

ஒரு மானேஜ்மெண்ட் (மேலாண்மை) கோர்ஸில் கொடுக்கப்படும் அறிவுரை போல அல்லவா இருக்கிறது என்று நினைத்தால் அது சரியல்ல.

 

இது நமது பழைய கால பஞ்சதந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம்.

வெற்றி பெற எப்படி சிந்திக்க வேண்டும், எதை எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கும் அறிவுரை.

 

சம்ஸ்கிருத கவிதையைப் பார்ப்போம்:

 

கோஹம் கோ தேச காலோ சம விஷம குணா: கே த்விஷ: கே சஹாயா:

 

கா சக்தி: கோப்யுபாயோ ஹித காரண வித்யௌ கா ச மே தைவ சம்பத் I

 

சம்பத்தே: கோ அனுபந்த:  ப்ரதிஹதவசனஸ்யோத்தரம் கிம் ச  மே ஸ்யாத்

 

இத்யேவம் கார்யசித்தாவவஹிதமனஸோ நாவசீதந்தி சந்த  II:

வெற்றிக்கான அருமையான உத்திகளை வகுத்துத் தருவது பஞ்சதந்திரம். டேல் கார்னீகியின் சுய முன்னேற்றக் கருத்துக்கள் எல்லாம் பழைய ‘கள்’; ஆனால் புதிய மொந்தையில் தரப்பட்டது.

 

உலகமும் அதை ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டது.

 

ஆனால் ஹிந்து சிந்தனைகள் காலத்தால் முற்பட்டவை; காலத்தை வென்றவை. என்றும் பொருந்துபவை!

******************

 

எட்டு லட்சம் வரிகள் எழுதிய பின்னர் வியாசர் கண்டுபிடித்த பெரிய உண்மை!

Lift-someone-up

Compiled by London swaminathan

Date : 6 September  2015

Post No. 2130

Time uploaded in London : – 16-16

வியாசர் என்னும் மகரிஷி நான்கு வேதங்களைத் தொகுத்தார். உலகிலேயே நீண்ட இதிஹாசமான மஹாபாரதத்தை ஒரு லட்சம் ஸ்லோகங்களில் (இரண்டு லட்சம் வரிகள், பத்து லட்சம் சொற்கள்) எழுதினார். இதன் பின்னர் 18 புராணங்களை எழுதினார். அவைகளில் நான்கு லட்சம் ஸ்லோகங்கள். அதாவது எட்டு லட்சம் வரிகள். சுமார் 40 லட்சம் சொற்கள். இவைகளை எல்லாம் செய்ததற்காக அவரை சாதனைப் புத்தகத்தில் பதிவிடலாம். இனி எவரும் இத்தகைய சாதனையைச் செய்ய இயலாது! அதுவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. இது ஒன்றே போதும்- இந்தியாதான் உலகில் முதலில் நாகரீகம் பெற்ற நாடாக இருந்தது என்று நிரூபிக்க!

இந்த எட்டு லட்சம் வரிகளையும் படித்தார் பஞ்சதந்திரக் கதைகளை எழுதிய பிராமணன் விஷ்ணுசர்மா. கடைசியில் இவ்வளவையும் எல்லோரும் படிக்கமுடியாதே என்று எண்ணி, அவர் எட்டு லட்சம் வரிகளில் சொல்ல வந்தது என்ன என்று நானே சொல்லிவிடுகிறேன் என்று பஞ்சதந்திரக் கதைகளில் ஒரு புதிர் போட்டார். அவரே விடையும் சொன்னார்:

“பரோபகாராய புண்யாய, பாபாய பரபீடணம்”

பொருள்: பிறருக்கு உதவி செய்வது புண்ணியம்; பிறருக்கு தீங்கிழைப்பது பாபம்.

இதைப் புரிந்து கொண்டால் உலகம் அமைதியுடன், ஆனந்தமாக வாழும்!

helping-others-quotes

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் விஷ்ணு சர்மன் எழுதிய பாட்டு இதுதான்:–
அஷ்டாடச புராணேஷு வியாசாய வசனத்வயம்

பரோபகாராய புண்யாய, பாபாய பரபீடணம் – பஞ்சதந்திரம்

18 புராணங்களில் வியாசர் சொன்ன விஷயம் இரண்டே இரண்டுதான்; பிறருக்கு உதவி செய்வது புண்ணியம்; பிறருக்கு தீங்கிழைப்பது பாபம்.

தமிழ் திரைப் படக் கதைகள் எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்லச் சொன்னால் என்ன சொல்வோம்? ஒரு கதா நாயகன், ஒரு வில்லன்; இறுதியில் நல்லது செய்யும் கதா நாயகன் வெற்றி பெறுவார். இதைத்தான் நமது புராண, இதிஹாசங்கள் சொல்லுகின்றன. வேதத்தில் சத்தியம் (உண்மை) ருதம் (ஓழுங்குமுறை) என்ற இரண்டுதான் திரும்பத் திரும்ப வருகிறது. இவை இரண்டும் உலகில் இருந்துவிட்டால் சண்டை ஏது? சச்சரவு ஏது?

எங்கும் பேரானந்தம், பிரம்மானந்தம், நித்தியானந்தம், சச்சிதாநந்தம் நிலவுமல்லவா?

18 புராணங்களும் அவைகளில் உள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கையும்:–

Following are the 18 Puranas with the number of Slokas (couplets) they contain:

Agni   அக்னி                     16,000

Bhagavata      பாகவத        18,000

Bhavisya      பவிஷ்ய           14,500

Brahma        பிரம்ம          10,000

Brahmanda    பிரம்மாண்ட        12,000

Brahmavaivavarta பிரம்மவைவஸ்வத 18,000

Garuda     கருட               18,000

Kurma    கூர்ம                18,000

Linga     லிங்க                  11,000

Markandeya   மார்கண்டேய       9000

Matsya         மத்ஸ்ய          14,000

Naradiya   நாரதீய             25,000

Padma      பத்ம              55,000

Skanda           ஸ்கந்த        81,000

Vaman          வாமன          10,000

Varaha          வராஹ          24,000

Vayu        வாயு               24,000

Vishnu        விஷ்ணு            23,000

மொத்தம் = 800000 வரிகள் X ஒரு வரிக்கு 5 சொற்கள் வீதம்= 40 லட்சம் சொற்கள்!

மிகப் பெரிய புராணம் : கந்த புராணம்  Skanda Purana

மிகச் சிறிய புராணம் : மார்க்கண்டேய புராணம் Makandya Purana

மிகவும் பழைய புராணம் : விஷ்ணு புராணம் ( கி.பி.300)

lifting-up

சுவாமி விவேகாநந்தரும் இதையே செப்பினார்:

“எவனொருவன் பிறருக்காக வாழ்கிறானோ அவனே உயிர் வாழப்வன் மற்றவர் எல்லோரும் இருந்தும், இறந்தோருக்குச் சமம்

 “They alone live who live for others, the rest are more dead than alive”.

 

 

வள்ளுவரும் இதையே சொன்னார்

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும் – குறள் 214

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் பொன்மொழித் தொகுப்பு நூலும் இதையே பகர்கிறது:

பரம் பரோபாகாரார்த்தம் யோ ஜீவதி ச ஜீவதி : எவன் பிறருக்கு உதவி செய்யும் வாழ்க்கை உடையவனோ அவனே வாழ்பவன்.

பெரியோர்கள் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பர்!

heart-quotes

— சுபம் —