பஞ்சபூத தலங்களை நினைவில் வைக்க ஒரு பாடல் (Post No.3105)

southindiacitiesbig

Compiled by London Swaminathan

 

Date: 30 August 2016

 

Time uploaded in London: 20-36

 

Post No.3105

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

சிவனுடைய ஐந்து தலங்கள் பஞ்ச பூதத்தலங்கள் என்று அழைக்கப்படும். அதாவது அங்கே சிவன் பஞ்ச பூதங்களின் வடிவாக இருக்கிறார். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூத தத்துவத்தை உலகிற்குக் கற்பித்தது பாரதம். பின்னர் இது கிரேக்க நாடு வழியாக பிற இடங்களுக்குப் பரவியது. இதற்கு என்ன சான்று?

 

வடக்கில் சம்ஸ்கிருதத்திலும், தமிழில் புறநானூற்றிலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பஞ்சபூதம் காணப்படுகிறது. அந்தக் காலத்தில் இவ்வளவு பரப்புடைய நாடு உலகில் எதுவும் இல்லை. அப்படியே அலெக்ஸாண்டர் போல ஒருவர் ஒரு பிரதேசத்தை உருவாக்கினாலும் அது ஒரே பண்பாடுடைய “தேசம்” இல்லை. ஆக இவ்வளவு பரந்த ஒரு நிலப்பரப்பில் ஒரே பண்பாடு நிலவியதே நாம்தான் இதை பரப்பினோம் என்பதைக் காட்டும்.

 

“தில்லைக் கலம்பகம்” என்னும் நூல் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டையர் என்று அழைக்கப்பட்ட புலவர்களால் பாடப்பட்டது. அதிலுள்ள ஒரு பாடல், அழகாக ஐந்து தலங்களையும் வரிசைப் படுத்துகிறது. இதோ அந்த பாடல்:-

 

 

கடல்விடம் நுகர்ந்த காசினி லிங்கம்

காஞ்சிமா நகருறை லிங்கம்;

காவிரி வடபால் வருதிரு ஆனைக்

காவினில் அப்புலிங்  கமதாம்

வடதிசை அண்ணா   மலையினில் லிங்கம்

வன்னியின் வடிவு; காளத்தி

வாயுலிங்   கமதாம்; சிதம்பர லிங்கம்

மாசில்  காயலிங்   கமதாம்.

–தில்லைக் கலம்பகம்

 

காஞ்சீபுரம் – நிலம் (ப்ருத்வீ)

திருவானைக்கா – நீர் (அப்பு)

திருவண்ணாமலை – தீ (தேயு, வன்னி )

திருக்காளத்தி — காற்று (வாயு)

சிதம்பரம் – வானம் (ஆகாசம்)

 

–Subham-