Written BY S NAGARAJAN
Date: 30 April 2016
Post No. 2768
Time uploaded in London :– 5-23 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சமஸ்கிருத செல்வம்
ச.நாகராஜன்
சபையிலாகட்டும் தனியாகவே படிப்பதாகட்டும் எப்படிப் படிப்பது.? அதற்கு 6 குறைகளை அகற்றிப் படிக்க வேண்டும் என்று பாணிணீய சிக்ஷா கூறுகிறது.
- ஏற்றியும் இறக்கியும் கண்டபடி உச்சரிக்கக் கூடாது
- வேக வேகமாகப் படிக்கக் கூடாது
- படிக்கும் போது தலையை ஆட்டிப் படிக்கக் கூடாது
- எழுதியபடி படிக்கக் கூடாது (இலக்கணப் பிழைகளுடன்)
- எதைப் படிக்கிறோமோ அதை நன்கு புரிந்து கொள்ளாமல் படிக்கக் கூடாது
- தாழ்ந்த குரலில் படிககக் கூடாது (கணீரென்ற குரலில் அனைவரையும் கவரும் வண்ணம்) படிக்க வேண்டும்
செய்யுளைப் பார்ப்போம்:-
கீதோ ஷீக்ரீ சிரக்கம்போ ததா லிகித பாடக: |
அனர்த்தக்ஞோல்ப கண்டச்ச ஷடதே பாடகாதமா: ||
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அழகாக எஸ்.பி. நாயர் (S B Nair) செய்துள்ளார் இப்படி:-
One who reads in a sing-song manner, reads too quickly, shakes his head while reading, reads as written (without correcting scribal errors), does not understand the sense, and has a faint voice – all these six are inferior reciters (readers)
பழைய கால குருகுல முறையில் இந்த ஆறு பிழைகளையும் ஆரம்பத்திலேயே திருத்தி விடுவார்கள்.
ஆக படிப்பதிலும் சரியான முறை ஒன்று உண்டு; அதைச் செய்க என்கிறது பாணிணி சிக்ஷா!
–subham–
**************