WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,625
Date uploaded in London – – 4 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சம்ஸ்கிருதச் செல்வம்
கேளீக்ருஹத்தில் நடக்கும் அந்தரங்கக் காட்சிகளைக் காட்டும் கவிதை!
ச.நாகராஜன்
கேளீக்ருஹம், அது தான் அந்தரங்கமாக கணவனும் மனைவியும் விளையாடும் இடமான படுக்கை அறை, அது அருமையாக இருக்கிறது.
அங்கே இளமை வாய்ந்த பேரழகி சற்று வளைந்து இருக்கிறாள். ஏன்? அவளது மார்பகங்களின் பாரம் அவளை அழுத்த அதனால் அவள் சற்றே ஒயிலாக வளைந்து இருக்கிறாள்.
அந்த அழகியின் ப்ராணேஸ்வரன் அதாவது அவளது உயிராக அமையும் அவள் கணவன் அவளோடு ஒன்றி விடுகிறான். அங்கே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தழுவி ஈருடல் என்பது போய் ஓருடலாக மாறி விட்ட காட்சி தோன்றுகிறது. இப்படி அந்த ஆலிங்கனத்தில் ஒருவருக்குள் இன்னொருவர் மறைந்து விடும் அந்த வேளையில் யாரானாலும் அவர்களது தனி அடையாளத்தைக் காணவே முடியாது.
இருவர் ஒருவரான உன்னதமான காட்சி அது.
அதை புலவர் இப்படி வர்ணிக்கிறார்.
ஹரிகவியின் சுபாஷித ரத்னாவளியில் வரும் காட்சி இது.
வஸந்த திலகா சந்தத்தில் அமைந்துள்ள கவிதை இது.
கேளீக்ருஹே வஸ்தனௌ ஷிஷுதா நதாங்கி
ப்ராணேஷ்வரஸ்தருணிமா ச பரஸ்பரேண |
ஆலிங்கச்ச காடமிதரேதரலோனதேஹௌ
கஸ்யாபி நைகதரநிரஸ்யமாதகாதே ||
In the pleasure-house, there is the young girl with her frame slightly stooping (due to the weight of her bosom), and there is the lord of her life (husband) united with youth; these two mutually embracing warmly have entered into the body of each other and are thus concealed and to no one is their separate identity clearly discernible. (Translation by A.A.R)
இன்னொரு கவிதை.
இதுவும் கேளிக்ருஹக் காட்சி தான்!
காதலன் காதலி இருவரும் இணையும் படுக்கை அறைக் காட்சி. அவளது லீலா விளையாட்டில் அவளது வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசி சண்டை இடுகின்றன. அவள் அணிந்துள்ள முத்து மாலை ஓசையை ஏற்படுத்துகிறது. அவள் அப்படியும் இப்படியும் அசைவதால் அவள் இடுப்பில் அணிந்துள்ள ஒட்டியாணமோ கல கல என இனிய ஒலியை எழுப்புகிறது. அவள் கால்களில் அணிந்துள்ள கொலுசோ ஜல ஜல எனச் சத்தம் எழுப்புகிறது.
அழகிய நீண்ட கூந்தல் கலைந்து, கூந்தலானது அவள் உடலில் நிற்க அவள் உடல் வேர்த்து நீர் சொட்டுகிறது. அவளது அலங்காரத்தில் எஞ்சி நிற்பது அவள் திலகம் மட்டும் தான்! அது மட்டுமே நெற்றியில் இட்டது இட்டபடி அப்படியே இருக்கிறது.
கவிஞர் கடைசியில் அவள் பத்தினி என்பதை அவள் திலகம் அப்படியே இருக்கிறது என்பதன் மூலம் முத்தாய்ப்பாகச் சொல்கிறார்; அதே சமயம் அவள் கேளி கிருஹத்தில் என்னென்ன பாடு படுகிறாள் அல்லது படுத்துகிறாள் என்பதையும் அவள் அணிந்திருக்கும் ஆபரணங்கள் படும் பாடை வைத்துச் சொல்கிறார்.
இப்படி விவரிக்கும் போதே அங்கு நடக்கும் காட்சிகளை இதைக் கேட்பவர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறார்.
கவிதையைப் பாருங்கள் :
கேலௌபி: கலஹாயமானவலயம் சாராவஹாராவலி
ப்ரேங்கஸ்சகலமேகலாகலகலம் ஷிஞ்ஞாநமஞ்சிரகம் |
வ்யாலோலாலகமவ்யலீகபுலகம் ஸ்வேதாம்பஸாம் ஜாலகைர்
ஆமோலத்திலகம் கலேவரமலங்காராயதே கேவலம் ||
சார்தூல விக்ரிதா சந்தத்தில் அமைந்துள்ள கவிதை இது.
During her sports the bracelets are quarrelling with one another, the pearl- necklace is noisy, there is the confusing kala kala sound produced by the swinging girdle, the anklets jingle, the tresses are disheveled, and the hairs on the body stand on ends with drops of sweat; only the visible tilaka-mark on the fore-head adorns her body. (Translation by A.A.R)
இப்படிப்பட்ட காதல் காட்சிகளைக் காட்டும் கவிதைகள் ஆயிரமாயிரம் சம்ஸ்கிருதத்தில் உள்ளது என்பதை சிருங்கார ரஸிக ப்ரியர்கள் அறிவார்களா?
***
tags- அந்தரங்கக் காட்சி, கேளீக்ருஹம் , படுக்கை அறை