Article No. 2075
Written by London swaminathan
Date : 16 August 2015
Time uploaded in London :– 7-31 am
நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் மாபெரும் வீரன். இறுதியில் ஆங்கிலேயர்களிடம் தோற்று, சிறையில் வஞ்சனையாகக் கொல்லப்பட்டார். அதாவது ரத்தத்தில் மெதுவாகக் கலக்கும் விஷத்தை உணவில் சேர்த்துக் கொடுத்து அவரை ஆங்கிலேயர்கள் கொன்றதை, பிற்காலத்தில் அவரது சடலத்திலுள்ள தலை முடிகளை ஆராய்ந்ததில் தெரிய வந்தது. நிற்க.
நெபோலியன், தனது படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட பல தந்திரங்களைக் கையாள்வார். அவர் வழி … தனி வழி! படை வீரர்களைச் சந்திக்கும் முன்பு தனது மெய்க் காப்பாளர்களைக் கூப்பிட்டு, இந்தப் பட்டாளத்தில் உள்ள முக்கிய வீரர்களின் முழு விவரங்களையும் அறிந்து வா என்று சொல்லி அனுப்புவார். அவரிடம் கேட்ட விஷயங்களை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு பட்டாள அணிவகுப்பு மரியாதையை ஏற்கச் செல்வார்.
திடீரென்று ஒரு குறிப்பிட்ட படை வீரர் முன்பு நின்று, அவனது பெயரைச் சொல்லி அன்புடனும், அதிகாரத்துடனும் அழைத்து, “ ஆஹா, நீ இந்தப் பட்டாளத்தில் இருக்கிறாயா? நீ அந்த xxxxx போரில் போரிட்ட முறையை நான் மறக்கவே இல்லை. நீ பெரிய வீரன்தான். அது சரி, ஊருக்குப் போய் வந்தாயா? உனது தந்தை எப்படி இருக்கிறார்? —– இப்படி அன்பு மழை பொழிவார்.
திடீரென்று என்ன இது? உனக்கு இதுவரை ஒரு மெடல், விருது கூட கிடைக்கவில்லையா? இதோ இப்போதே உத்தரவு போடுகிறேன் – என்று சொல்லி அவருக்கு ஒரு விருதும் கொடுப்பார் (ராணுவ வீரர்கள் சிறப்பாகப் போர் புரிந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்து முதலியன அவர்கள் உடையிலேயே குத்தப் பட்டிருக்கும்/ பொருத்தப்பட்டிருக்கும்)
இப்படிச் சொல்லிவிட்டு அந்தப் படை வீரனுக்கு ஒரு பட்டம் கொடுக்கப்பட்டவுடன் பட்டாளம் முழுதும் ஒரே பரபரப்பு ஏற்பட்டு விடும். எல்லோரும், “ கடவுளே! நம் தலைவருக்குத் தெரியாத விஷயமே உலகில் இல்லை போலும்!! நம்முடைய ஊர், குடும்பம், நாம் போரிட்ட முறை எல்லாவற்றையும் தலைவர் அறிந்திருக்கிறார். நமக்கும் விரைவில் பட்டங்கள், விருதுகள், மெடல்கள் ஏதேனும் கிடைக்கலாம்” என்று பேசிக் கொள்வர். அது மட்டுமல்ல. இது மற்ற பட்டாளங்களுக்கும் காட்டுத் தீ போல பரவிவிடும். படை வீரர்கள் முன்னைவிட பன் மடங்கு உற்சாகமாகப் போரிடுவர்.
ஒரு தலைவனுக்குரிய அததனை குணநலன்களையும் பெற்றவர் நெப்போலியன்!
You must be logged in to post a comment.