பதஞ்சலி நூலில் கிஷ்கிந்தா மர்மம் !(Post No.8789)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8789

Date uploaded in London – –8 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகின் முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’. இதன் பொருள் ‘எட்டு அத்தியாயம்’. இதை ‘அஷ்டகம்’ என்றும் அழைப்பர் . இதை பாணினி எழுதியதால் ‘பாணினீயம்’ என்றும் அழைப்பர். இந்த இரண்டு உத்திகளையும் தமிழர்கள் கடைப்பிடித்தனர். ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து என்று சங்க நூல்களுக்கு ‘நம்பர்’ Numbers களை பயன்படுத்திப் பெயரிட்டனர். அஷ்டகம் போலவே எடுத்த தொகை என்ற தொகுப்பையும் உருவாக்கினார்கள் . பாணினீயம் போலவே தொல்காப்பியர் எழுதிய நூலுக்குத் தொல்காப்பியம் என்று பெயரிட்டனர்.

பாணினி எழுதியது வெறும் இலக்கண நூல்தான். அதிலுள்ள விஷயங்களையும் அதன் மீது எழுந்த வார்த்திகம் , மஹா  பாஷ்யம் , காசிகா ஆகிய உரைகளையும் படித்தால் இந்திய சரித்திரத்தையே அறியலாம். இலக்கணத்தில், மொழி இயலில், இவ்வளவு முன்னேற்றத்தை சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த மொழியிலும் காண முடியாது. பாணினி தோன்றி 2700 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பது மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த கோல்ட்ஸ்டக்கரின் (Goldstucker)  வாதம் .

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள கபிஸ்தலம் போலவே பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஒரு கபிஸ்தலம் இருப்பது பற்றி சில தினங்களுக்கு முன்னர் எழுதினேன். இப்பொழுது இன்னும் ஒரு மர்மம் பற்றி துப்பு துலக்குவோம்.

ராமாயணத்தில் கிஷ்கிந்தா பெயரில் ஒரு காண்டமே இருப்பதால் உலகம் முழுதும் கிட்கிந்தையை அறியும். இந்தப் பெயரே ஒரு வினோதமான பெயர். சம்ஸ்க்ருதத்தில் இது போன்று ஒலிக்கும் பெயர்கள் அதிகம் இல்லை. .மேலும் கிஷ்கிந்தா என்பது கர்நாடகத்தில் ஹம்பி நகரம் இருந்த பகுதி என்பதே ஆராய்ச்சியாளர்களின் துணிபு.

பதஞ்சலி முனிவர் கி.மு 150-ல் வாழ்ந்ததை உலகமே ஒப்புக்கொள்கிறது . அவர் பாணினி நூலுக்கு உரை எழுதினார். அதன் பெயர் ‘பேருரை’  சம்ஸ்க்ருதத்தில் ‘மஹா பாஷ்யம்’ . பதஞ்சலியும் இந்த விநோதப் பெயரைக் குறிப்பிடுவதும் அதை நாட்டின் வடமேற்கு மூலையில் காட்டுவதும் வியப்பை ஏற்படுத்தும்.

அவர் சொல்கிறார்.

பல வகை சூத்திரர்கள் ஆர்யவர்த்தத்துக்கு வெளியே வசித்தனர் . அவர்களில் கிஷ்கிந்த -காப்திகம் , சக-யவனம், சவுர்ய- க்ரவுஞ்சம் ஆகியோரை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.

இதை விளக்கும் அக்ரவாலா தனது புஸ்தகத்தில் சொல்கிறார் –

இவர்களில் கிஷ்கிந்தா என்பதை பாலி மொழியிலுள்ள குகுந்த்தோ என்று சொல்லலாம். அது கோரக்பூரில் உள்ளது. கோரக்பூர் என்பது தற்போதைய உத்தரபிரதேசத்தில் இருக்கிறது.அயோத்தி நகரிலிருந்து 135 கிலோமீட்டர்.

ராமாயண கிஷ்கிந்தையோ துங்கபத்ரா நதியின் வடகரையில் — கர்நாடகத்தில் இருக்கிறது. எப்படி தொ லை தூரத்தில் இப்படி அதிசய பெயர் வந்தது ? ராமாயணம், பாணினி காலத்திற்கு வெகு முன்னர் நடந்தது . பதஞ்சலியும் பிற்கால சமண சமய நூல்களும் செப்புவது போல வடக்கில் ஒரு கிஷ்கிந்தை இருந்ததா னால் அது வட-தென் நாட்டின் தொடர்பைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

சமண மத நூல்களிலும் கிஷ்கிந்தா இடம்பெறுகிறது ஒன்பதாவது தீர்த்தங்கரர் புஷ்பதந்த  ஆவார். அவர் பிறந்த ஊர் காகந்தி. ; இதன் மற்றோரு பெயர் கிஷ்கிந்தா. அவருடைய தந்தை பெயர் சுக்ரீவன் தாயார் பெயர் ராமா . இதிலும் ராமாயண கிஷ்கிந்தா தொடர்பு தெரிகிறது. சம்ஸ்க்ருதத்தில் ராம என்ற குறில் ஒலி இராம  பிரானைக் குறிக்கும்; ராமா என்று நெடில் ஒளி பெண்ணைக் குறிக்கும்.

இவையெல்லாம் ராமாயணத்துக்குப் பின்னர்தானே  ஏற்பட்டிருக்கவேண்டும்?

இதில் இன்னும் ஒரு சுவையான  விஷயமும் வருகிறது. காகந்திதான் கிஷ்கிந்தா என்று சமண நூல்கள் இயம்பும் தருணத்தில், அது பூம்புகார் நகரின் மற்றொரு பெயர் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்

இந்த மர்மத்துக்குச் சுலபமான விடை :–

மலைகள், ஆறுகள், நகரங்கள்  முதலிய பல இடங்கள் இந்தப் பெயரைக் கொண்டிருந்தன என்பதேயாம்.

Hampi

xxx

யவனர்கள் சூத்திரர்கள் !

யவனர்கள் என்பது எல்லா ‘வெள்ளைத்தோல் படைத்த’ வெளிநாட்டினரையும் குறிக்கும் என்பதை தமிழ் சம்ஸ்க்ருத இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இத்தாலி நாட்டின் தலைநர் ரோம். அங்கிருந்து கப்பலில் வந்தவர்களை சங்கத் தமிழ் இலக்கியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களை வன்சொல் யவனர் என்றும் சாடுகிறது .அவர்கள் காமதேனுவின் ஆசன வாய்ப் பகுதியிருந்து வந்த பல இன  மக்களிலில் ஒரு இனம் என்று ராமாயண மஹாபாரத இதிகாசங்கள் வருணிக்கின்றன. இது பற்றி முன்னர் எல்லாக் குறிப்புகளையும் பல கட்டுரைகளில் தந்து விட்டேன். காளிதாசரோ பாரசீக ‘தாடிவாலா’க்களை யவனர்கள் என்று கூறுகிறார். சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த தமிழ் நூல்கள் ‘யவனத் தச்சர்’ என்று இந்தியாவின் வடமேற்குப் பகுதியில்  வசித்த கலைத்திறன் வல்ல தச்சர்களைக் குறிப்பிடுகிறது. ‘யவன, தச்ச’ ஆகியன எல்லாம் சம்ஸ்க்ருதம் சொற்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

அலெக்ஸ்சாண்டர் படையெடுப்புக் காலத்திலிருந்து யவனர்கள் என்பது ‘கிரேக்கர்’களைக் குறித்தது. குதிரை விற்ற அராபியர்களை சில இடங்களில் யவன என்றும் பெரும்பாலான இடங்களில் யோன/ ஜோன என்றும் குறிப்பிட்டனர்.

பதஞ்சலி, கிஷ்கிந்தா, மர்மம்,யவனர்கள், சூத்திரர்,

—subham—

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?(Post No.8729)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8729

Date uploaded in London – – 24 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.

21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் திருமூலர் யோகம் மற்றும் பதஞ்சலி முனிவர் யோகம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இப்போது நம் முன் இருக்கும் கேள்வி : யோகம் பற்றிய கேள்வி.

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?

சுருக்கமான பதில், ஆம் ஒன்றே தான், ஆனால் அதில் சிறிய வேறுபாடும் உண்டு.

திருமூலர் பற்றி நாம் நன்கு அறிவோம். பதினெட்டு சித்தர்களில் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவர்.

திருமந்திரம் என்ற நூலை உலகிற்குத் தந்தவர். ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களை அருளியவர் அவர்.

ஒன்பது தந்திரங்களைக் கொண்ட நூல் திருமந்திரம்.

இதில் மூன்றாவது தந்திரத்தில் யோகம் பற்றிக் காணலாம்.

யோகம் என்ற சொல் மனதையும் ஆன்மாவையும் இணைப்பது என்ற பொருளைத் தருகிறது.

யோகத்திற்கு எட்டு உறுப்புகள் உண்டு. ஆகவே இதை அட்டாங்க யோகம் என்று கூறுகிறோம்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவதுமாமே (திருமந்திரம்)

என்று இந்த எட்டு உறுப்புகளைத் திருமூலர் விளக்குகிறார்.

பதஞ்சலி மாமுனிவர் யோக சூத்ரம் என்ற யோக நூலை உலகிற்கு அருளியவர்.

இதில் 194 சூத்திரங்கள் உள்ளன.

ஸ்வாமி விவேகானந்தர் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கவுரை அளித்துள்ளார். உலகம் முழுவதும் யோகா பிரபலமாக ஸ்வாமி விவேகானந்தர் முக்கிய காரணமாக அமைந்தார். தியாஸபிகல் சொஸைடியும் யோகாவில் ஆர்வம் காட்டியது.

யோக சூத்ரம் நான்கு பாகங்களைக் கொண்டது. சமாதி பாதம், சாதனா பாதம், விபூதி பாதம், கைவல்ய பாதம் என்ற நான்கு பாதங்களில் சமாதி பாதத்தில் 51 சூத்திரங்களும் சாதனா பாதத்தில் 54 சூத்திரங்களும், விபூதி பாதத்தில் 56 சூத்திரங்களும் கைவல்ய பாதத்தில் 33 சூத்திரங்களும் உள்ளன.

அத யோகானுசாஸனம் என யோக சூத்ரம் ஆரம்பிக்கிறது.

Yogashchittavrittinirodhah -யோக சித்த விருத்தி நிரோத:

Yoga is restraining the mind-stuff (Chitta) from taking various forms (Vrttis)

யோகம் என்பது மனதை சித்த விருத்திகளிலிருந்து அடக்குவது தான்

என்பதை அடுத்த சூத்திரத்தில் இப்படிக் கூறி அருள்கிறார் பதஞ்சலி மாமுனிவர்.

இயமம் பற்றி பதஞ்சலி முனிவர் கூறும் போது கொல்லாமை, வாய்மை, களவு செய்யாமை, வெஃகாமை, புலன் அடக்கம் என்ற ஐந்தைக் கூறும் போது திருமூலரோ நடுநிலைமை, பகுத்துண்ணல், மாசற்ற தன்மை, கள் உண்ணாமை, காமம் இன்மை ஆகிய ஐந்தையும் சேர்த்து பத்து இயமங்களைச் சொல்கிறார்.

ஆசனங்கள் பற்றி பதஞ்சலி முனிவர் குறிப்பாகச் சொல்கிறார்.

ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.

வியாதி, யோகத்தில் வன்மை இன்மை,

இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு,

அலட்சியம், வைராக்கியம் இல்லாமை, திரிபுணர்ச்சி

சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல், கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பதஞ்சலி கூறுகிறார்.

திருமூலரோ 134 ஆசனங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். திருமந்திரத்தில் 563வது பாடலாக மலர்வது இந்தப் பாடல்:

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி

சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்

உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்

பத்தொடு நூறு பலஆ சனமே

மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.

அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள்

இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.

எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126.

இந்த 126 ஆசனங்கள் யாவை?

  1. சுவஸ்திகாசனம்
  2. கோமுகாசனம்
  3. வீராசனம்
  4. கூர்மாசனம்
  5. குக்குடாசனம்
  6. உத்தான கூர்மாசனம்
  7. தனுராசனம்
  8. மச்சேந்திராசனம்
  9. பச்சிமதானாசனம்
  10. மயூராசனம்
  1. சவாசனம்
  2. மச்சேந்திர சித்தாசனம்
  3. சித்தாசனம்
  4. வச்சிராசனம்
  5. பதுமாசனம்
  6. மச்சேந்திர பதுமாசனம்
  7. முக்த பதுமாசனம்
  8. சிம்மாசனம்
  9. பத்திராசனம்
  • வல்லரியாசனம், இப்படிப் போகிறது பெரும் பட்டியல்.

ஆக, மொத்த ஆசனங்கள் நூற்றி இருபத்தாறையும் எட்டையும் கூட்டினால் வருவது 134.

கேசரி ஆசனம் என்றால் வானத்தில் பறப்பது. இப்படி அபூர்வமான ஆசனங்களைச் செய்வதன் மூலம் சித்திகள் பல கிடைக்கின்றன.

யோகத்தின் பயன்களாக சித்திகளை பதஞ்சலியும் விளக்குகிறார். திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் அஷ்டாங்க யோகத்துடன் அட்டமா சித்திகளையும் விளக்குகிறார்.

அணு மாதி சித்திகளானவை கூறில்

அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை

இணுகாத வேகார் பரகாய மேவல்

அணுமைத் தனையெங்குந் தானாத லென்றெட்டே (பாடல் 668)

என்று எட்டு சித்திகளை இப்படி விளக்குகிறார் திருமூலர்.

அணிமா என்பது அணுவைப் போல சிறிதான தேகத்தை அடைதல்; மகிமா என்பது பெரிய உருவத்தை அடைதல்; லகிமா என்பது காற்றைப் போல லேசாக ஆதல், கரிமா என்பது கனமாக ஆதல்; ப்ராப்தி என்பது அனைத்துப் பொருள்களையும் தன் வசப்படுத்தல், பிராகாமியம் என்பது பர காய பிரவேசம் அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்; ஈசத்துவம் என்பது தேவர்களிடம் கூட ஆணை செலுத்துதல்; வசித்துவம் என்பது அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

பதஞ்சலி, யோகத்தின் உச்ச பயனாக கைவல்ய நிலையைக் கூறுகிறார்.

திருமூலரோ யோகத்தைச் சிவயோகமாகக் கூறுகிறார். யோகத்தின் உச்ச பயன் சிவனை அடைவதேயாம்.

பதஞ்சலி, யோகத்துடன் தன்னை நிறுத்திக் கொள்கிறார். திருமூலரோ ஒன்பது தந்திரத்தில் உலகியலையும் வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகளையும் புகல்கிறார்.

பதஞ்சலி சம்ஸ்கிருதத்தில் அற்புதமான சொற்றொடர்கள் அடங்கிய 194 சூத்திரங்களைத் தரும் போது திருமூலரோ என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று தமிழுக்குப் பெருமை சேர்க்கிறார்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார், உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே, பெரியாருடன் கூடல் பேரின்பமாமே, பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின், நல்லாரைக் காலன் நணுக நில்லானே, நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை, யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என இப்படி வாழ்வின் ரகசியங்களைக் கொடுத்தருள்கிறார் திருமூலர்.

பதஞ்சலி சிதம்பர ஸ்தலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்; ஆடல் வல்லானின் ஆனந்தத் திருநடனத்தைக் கண்டு களித்தவர்.

திருமூலரோ திருவாவடுதுறையில் அரச மர நீழலில் வெகு காலம் தவம் புரிந்தவர்.

இப்படி இருவரையும் பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் உண்டு.

மிக முக்கியமான குறிப்பு ஒன்று உண்டு. இந்த யோகத்தைத் தகுந்த குரு மூலமாகவே கற்க வேண்டும். பிராணாயாமம் என்பது மூச்சுக் கலை. இதை முறையாக ஆசானிடமே கற்க வேண்டும். இல்லையேல் விபரீதமான பக்க விளைவுகள் ஏற்படும்.

இன்னொன்று, இன்றைய கால கட்டத்தில் யோகா என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்படுவது போல வேறெந்தச் சொல்லும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.

சிரிப்பு யோகா, அழுகை யோகா, நடக்கும் யோகா, ஓடும் யோகா என்று தமக்குத் தோன்றியபடி பெயரைக் கொடுத்து சுயநல நோக்குடன் பயிற்சிகளை அளிக்கின்றவரை இனம் கண்டு தவிர்த்து பாரம்பரியமாக பதஞ்சலி முனிவர், திருமூலர் ஆகியோர் கூறிய யோகத்தில் பயிற்சி அளிப்பவரையே குருவாகக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் போலிகள் கற்பிக்கும் யோகம் நம்மை சோகத்தில் ஆழ்த்தி விடும்.

ஸ்வாமி விவேகானந்தர் அருளிய பதஞ்சலி யோக சூத்ரத்தின் விளக்கவுரை, திருமூலரின் திருமந்திரம் ஆகியவை இணையதளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் – டவுன் லோட் – செய்து கொள்ளலாம்.

படிப்போம்; யோகா பயில்வோம். இரு உலகிற்கும் தேவையானதைப் பெறுவோமாக.

இந்த வாய்ப்பினை நல்கியோருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும்  உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.

tags– திருமூலர் ,யோகம், பதஞ்சலி ,

***

நிஷ்கா தங்கக் காசுகள் முதல் அலெக்சாண்டர் நாணயம் வரை (Post.7918)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7918

Date uploaded in London – 3 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உலகிலேயே முதல் முதலில் நாணயங்களை பயன்படுத்தியது இந்தியா. ஆனால்  அவை வட்ட வடிவான நாணயங்கள் அல்ல . நீளமாகவும் சதுரமாகவும், மெல்லிய பல வடிவம் கொண்ட தகடுகளாகவும் இருந்தன. வேத காலத்தில் இருந்தவை வட்ட வடிவத்தில் இருந்திருக்கலாம். ஆயினும் நமக்கு ஒரு மாதிரியும் கிடைக்காததால் ஊகிக்க மட்டுமே முடிகிறது பெண்களின் கழுத்தில் தங்கக் காசு மாலை அணிவதை இன்று வரை நாம் பார்க்கிறோம். வேதகாலத்தில் காலத்தில் நிஷ்கா (Nishka or Niska) என்பது கழுத்தில் அணியும் நெக்லசையும் நாணயங்களையும் குறிப்பதால் காசுகள் வட்டவடிவில் இருந்திருக்கும் எனத்தெரிகிறது. முந்திய கட்டுரைகளில் நிஸ்கா பற்றி கண்டோம். இதோ மேலும் சிலா சுவையான விவரங்கள்.

சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் நாணயங்கள் கிடைத்ததாக செய்திகள் இல்லை. வேத காலம் என்பது சுமேரிய பாபிலோனிய நாகரீகங்களுக்கு முன்னர் என்பது பலரின் கருத்து. அப்படிப் பார்த்தோமானால் நாம்தான் உலகிற்கு கணிதத்தைக் கற்பித்தது போல நாணய முறையையும் கற்பித்தோம் என்று சொன்னால் தவறில்லை.

உலக நாணய என்சைக்ளோபீடியாக்களை எடுத்துக் படித்தால் அவை அனைத்தும் லிடியர்கள் அல்லது பைர்ஜியர்கள் (Lydians and Phyrgians) தான் முதலில் நாணயங்களை புழக்கத்திற்குக் கொண்டு வந்ததாகப் பகரும். ஏனெனில் அற்புதமான, அழாகான , ஏராளமான நாணயங்கள் துருக்கி (லிடியர் ), கிரேக்க தேசங்களிலிருந்து கிடைத்திருக்கின்றன. அவைகளின் வடிவங்கள் வியப்பூட்டும்! நம் நாட்டில் கிடைத்த வெள்ளி, தாமிரத் தகடுகள்  அவைகளை விட பழமையானது என்றாலும் கவர்ச்சி கிடையாது.

நாம் நாட்டு நாணயங்களில் பல வடிவ முத்திரைகள் குத்தப்பட்டதால் இவர்களை முத்திரைக் காசுகள் (Punch marked coins) என்று அழைக்கிறோம். இவைகளில் 564 வகையான முத்திரைகள் இருப்பதை 1934ம் ஆண்டிலேயே துர்கா பிரசாத் என்பவர் கட்டுரையாக எழுதியுள்ளார்.

***

இன்னொரு முக்கிய விஷயம் தமிழில் உள்ள நாணயம் தொடர்பான எல்லா சொற்களும் இன்று ஸம்ஸ்க்ருத சொற்களாகவே இருக்கின்றன. இது, வடக்கில் இருந்து இங்கே நாணய முறை வந்ததைக் காட்டுகிறது.

கார்ஷா பணம் என்பது காசு-பணம் ஆகியது. நாணயம் என்பதும் சம் ஸ்கிருத சொல்லே. சங்க இலக்கியத்தில் ‘காசு’ என்ற சொல் வட்ட வடிவ  பொற்காசுகளைக் குறித்ததை பல பாடலகளில் காணலாம். புலவர்களுக்கு  பொற்காசுகள் கொடுத்த செய்திகளையும் காணலாம். ஆயினும் இவைகள் நாணயம் என்பதற்கான சான்று இல்லை. மேலும் பண்ட மாற்று (barter trade)  வணிகம் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன.

***

இந்துப் பெண்களுக்கு ஒரு பெரிய வியாதி உண்டு. இன்று வரை அது நீடிக்கிறது . தங்கத்தின் மீது பேராசை. அதில்கூட தவறில்லை. அதை மீண்டும் மீண்டும் உருக்கி புதுப்புது டிசைன்களில் அணியும் வியாதி இன்றுவரை தொடர்கிறது. இது பொற்கொல்லர்கள் தங்கத்தைத் திருடவும் (கூலி சேதாரம்) செய்கூலி வசூலிக்கவும் வகை செய்தது. இதனால் நம்முடைய தங்க நாணயங்கள் அனைத்தும் உருக்கப்பட்டு அழி க்கப்பட்டன.

வெளிநாட்டினர் கொள்ளை அடித்த அல்லது வெளிநாட்டுக்கு நம்மவர்களால் கடத்தப்பட்ட நாணயங்கள் — ஏராளமான தங்க நாணயங்கள் — இன்று பிரிட்டிஷ் மியூசியத்திலும் உலகின் ஏனைய கண்காட்சி சாலைகளிலும் தனியார் பொக்கிஷ அறைகளிலும் உள்ளன.

திருவனந்தபுரம் கோவிலில் கிடைத்த உலக மஹா பொக்கிஷம் பற்றி மேலும் தகவல் கிடைத்தால் புதிய நாணய செய்திகள் கிடைக்கலாம். தற்போது சிவபெருமான் உருவத்துடன் குஷாணர் வெளியிட்ட தங்கக் காசுகளும், குப்தர்கள் லெட்சுமி முதலிய படங்களுடன் வெளியிட்ட தங்க நாணயங்களும் காட்சியில் உள்ளன.

***

நிஷ்கா நாணய அதிசயம்

வேதங்கள், பிராஹ்மண நூல்களுக்குப் பின்னர் நமக்குக் கிடைக்கும் நாணயச் செய்திகள் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயீ’ என்ற இலக்கண நூலில் கிடைக்கிறது. 5-1-19 முதல் 5-1-37 வரையுள்ள சூத்திரங்களில் இவர் நிறைய விஷயங்களை சொல்கிறார். இதையும் உரைகாரர் தரும் விஷயங்களையும் நாடு முழுதும் கிடைத்த நாணயங்களையும் வைத்து ஒரு என்சைக்ளோபீடியா தயாரிக்கலாம். அவ்வளவு விஷயங்கள் .

கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் இல்லாத நாணயங்களை பாணினி குறிப்பிடுவதால் இவர் கி.மு 700 அல்லது அதற்கு முந்தியவர் என்பது உறுதியாகிறது. இவர் முதற்கொண்டு பதஞ்சலி வரையான கால கட்டத்தில் வாழ்ந்த 64 இலக்கண ஆசிரியர் பெயர்களை — அதாவது 2200 ஆண்டுகளுக்கு முந்திய 64 ஆசிரியர் பட்டியலை மாக்ஸ்முல்லர் வெளியிட்டதால் நமக்கு நாணய வரலாறும் கிடைக்கிறது. இவர்கள் காலத்தையும் நிர்ணயிக்க முடிகிறது.

ஏனெனில் பாணினி முதல் பதஞ்சலி வரையுள்ள கால கட்டத்தில் நந்தர்கள் புதிய நாணயக் காட்டுப்பாடுகளை விதித்தது, மௌரியர்கள் அதை மாற்றியது, பதஞ்சலி காலத்தில் புதிய நாணயங்கள் புழங்கியது— என்பதை எல்லாம் வைத்து கால வரிசைப்படுத்த முடிகிறது.

‘பண’, ‘பாத’, ‘மாஷ’ , ‘மாண’  என்பதை எல்லாம் விளக்குகையில் எத்தனை நிஸ்காக்களுக்கு ஒரு பொருள் விலைக்கு வாங்கப்பட்டது  என்பதை பாணினி விளக்குகிறார்.

‘த்வி நிஷ்கம் , த்ரி  நிஷ்கம்’ என்பார் .

5-1-20, 5-1-30

சத சஹராந்தாச்ச நிஷ்காத் – 5-2-119

நிஷ்க சஹஸ்ரிகா  என்பவர் – ஆயிரம் பொற்காசுகள் உடையவர் . இன்று நாம் லட்சாதிபதி , கோடீஸ்வரர் என்று சொல்லுவது போல அந்தக் காலத்தில் இது ஒரு செல்வந்தரைக் குறித்தது போலும். .மஹாபாரதம், பதஞ்சலியின் மஹா பாஷ்யம், காசிகா விருத்தி உரை முதலியன இதை உறுதி செய்கின்றன. உத்தாலக ஆருணி என்பவர் ஸ்வைதாயன என்பவருக்கு நிஷ்க அளித்ததை 3000 ஆண்டுப் பழமையுடைய சதபத பிராஹ்மணம் பகரும் .

புத்த ஜாதகக்  கதைகளிலும் நிறைய குறிப்புகள் உண்டு .

ஜனக மாமன்னன் நடத்திய அகில இந்திய தத்துவ  மாநாட்டிற்கு வந்தவர்களில் யார் மிகவும் கற்றறிந்த பிராஹ்மணனோ அவருக்கு 20,000 ‘பாத’ அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . இது நிஷ்கா தங்க நாணயம் என்று டாக்டர் தி.ஆர். பண்டார்கர் எழுதுகிறார். பாணினி சூத்ரம் 5-1-34 காட்டும் ‘பண – பாத – மாஷா- சதாத்யாத்’ இதற்கு சான்று என்பார் ‘.பண’ என்பதுடன் வருவதால் இது வெறும் தங்கக் காசு அல்ல, நாணய வழக்கில் பயன்படுத்தப்பட்டது என்கிறார். சிலர் இதை வெள்ளிக்காசு என்றும் விளக்குவார்.

மனு ஸ்மிருதியில் 8-137 நிஸ்கா என்பது 4 சுவர்ணம் அல்லது 320 ரத்தி எடை உடையது என்று விளக்கப்படுகிறது . இதிலிருந்து ‘பாத’, ‘நிஷ்கா’ என்பது ஒரு ‘சுவர்ண’ என்று ஊகிக்கப்படுகிறது .

சுவர்ண

சுவர்ண என்பதை பாணினி நேரடியாகக் குறிப்பிடவில்லை. ‘ஹிரண்ய பரிமாணம் தனே’ 6-2-55 சூத்திரத்தில் மறைமுகமாக வருகிறது

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ‘சுவர்ண’ என்பது ‘கார்சா பணம்’ எடை உடையது = 80 குஞ்ச= 140 தானியம் என்பார் . ஆனால் உலகம் முழுதும் இன்றும்  கூட நாணயத்தின் எடையும், அளவும், அதிலுள்ள உலோக மதிப்பும் மாறிக்கொண்டே வருவதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குஷானர் காலத்தில் ‘கேதார’, ‘தினாரியஸ்’  என்ற பெயர்களில் தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன. . ‘கேதார’ என்ற சொல் 5-2-120ல் வருகிறது.

முத்திரை குத்தப்பட்ட பாணினி கால நாணயம் கிடைக்கவில்லையாயினும் ஏராளமான குறிப்புகள் வருவதால் உண்மையென்றே நம்புகிறோம்.

உறுதியான சான்றுகள் நம்மிடம் இல்லாததால் வெளிநாட்டினர் இதை ஏற்பது இல்லை. கிரேக்க, லிடிய நாணயங்கள் அவர்களுக்கு நல்ல சான்றுகளைத் தருகின்றன .

பதஞ்சலி எழுதிய மஹா பாஷ்யத்தில் தங்கம் கொடுத்து தானியம் வாங்கியது ,குதிரை வாங்கியது பற்றி உதாரணங்கள் தருகிறார். இது கரன்சி எனப்படும் நாணயங்களாக இருக்கலாம்

***

சுவர்ண மாஷக

இவை பற்றியும் இலக்கியத்தில், ஜாதகக் கதைகளில் மட்டும் தகவல் கிடைக்கிறது. தங்கம் வெள்ளி, தாமிரத்தில் இவை இருந்ததை அறிகிறோம்.

***

சதமான

சதமான எனப்படும் வெள்ளி நாணயம் 5-1-27 சூத்திரத்தில் வருகிறது.

‘சதமான விம்சதிக  சஹஸ்ர வசனாத்’

சதபத ப்ராஹ்மணத்தில் சதமானம் என்னும் தங்க நாணயம் பற்றியும் பேசப்படுகிறது.

சதமானம் என்பது 100 ரத்தி எடை கொண்டது.

ஒரு மனிதன் 100 ஆண்டுகள் வாழ்வதால் அவனுக்கு சதமானம்  வெள்ளி, தங்கம் தக்ஷிணை தரவேண்டும் என்று சதபத ப்ராஹ்மணம் கூறும் —

ரஜதம் ஹிரண்யம் தக்ஷிணா நானா ரூப தயா சதமானம் பவது

ஸதாயுர் வை புருஷாஹா  -13-4-2-10

இது 100 யூனிட் கொண்ட வெள்ளி . மனுவும் சதமான என்பது 10 தாரண அல்லது 320 ரத்தி எடை கொண்டது. என்பார்.

***

அலெக்ஸ்சாண்டர் நாணயம்

1953-ம் ஆண்டு புஸ்தகத்தில் டாக்டர் அக்ரவாலா எழுதுகிறார் –

தட்சசீலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயப் புதையலில்  2 அலெக்ஸ்சாண்டர் , ஒரு பிலிப் அரிதேயஸ் காசுடன் வெள்ளி முத்திரை நாணயமும் கிடைத்தன அதன் எடை 177 தானியம் என்று சார் ஜான் மார்ஷல் கூறுகிறார் . .

அங்கு கிடைத்த ‘சலாகா’ நாணயங்கள் வெள்ளி சதமான காசுகள் எனலாம். அவை 100 மான அல்லது குன்றிமணி எடையுடையவை. காத்யாயனர் காலம் வரை இது புழக்கத்தில் இருந்தது அவருடைய வார்த்திகா மூலமும் தெரிகிறது.

***

சாண

‘சாண’ வகை நாணயங்களையும் 5-1-35 எடுத்துக் காட்டாக தருகிறார் .

சரகரும் மருத்துவ நூலில் இதன் எடை  சுவர்ண அல்லது கார்ஷாவில் நாலில் ஒரு பகுதி , அதாவது 20 ரத்தி என்று காட்டுகிறார்.

வெள்ளி சதமானத்தில் எட்டில் ஒரு பகுதி என்று மஹாபாரத அரண்யக / வன பர்வத்தில் வருகிறது.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் போட்ட வரிகளில் ‘சாண’ காசு வருவதை பிற்கால காசிகா உரை குறிப்பிடுகிறது .

***

கார்சா பண

சூத்திரம் 5-1-29ல் இதைக் காண்கிறோம். இது வேத காலத்தில் இல்லை.. ஜாதகக் கதைகளில் நிறைய அடிபடும் நாணயம் இது. ‘பிரதி’ என்ற புதிய பெயரில் மஹா பாரதம் குறிப்பிடும் .

இது பற்றிய முழு விவரங்களையும் எடை முதலியவற்றுடன் அக்ரவாலா ,’ பாணினி கால இந்தியா’ (INDIA AT THE TIME OF PANINI)  என்ற தனது நூலில் வெளியிட்டுள்ளார்.

***

மாஷா என்ற நாணயம் வெள்ளி, தாமிர நாணயம். வரிசைக் கிரமத்தில் ‘பண’, ‘பாத’ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இது வரும்..

காத்யாயனர் குறிப்பிடும் காக்கணி , அர்த்த காக்கணி  ஆகியவற்றை கௌடில்யரும் குறிப்பிடுவதால் அவர்கள் காலம் நமக்கு தெரிகிறது . பாணினி காலத்தில் இவை இல்லை. ஆகையால் பாணினி மிகவும் முற்காலத்தில் வாழ்ந்ததும் அவருக்கும் காத்யாயனர்க்கும்

நல்ல கால இடைவெளி உண்டு என்பதும் தெளிவாகிறது.

ஒருவருடைய காலத்தைக் கணக்கிட எவ்வளவோ சான்றுகள் இருந்தும் நாணயங்கள்தான் மிகவும் துல்லியமாக காலத்தைக் காட்டுகின்றன.அவை காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றால் மிகையாகாது .

tags — பாணினி, நாணயம், நிஷ்கா, சதமான , காசு, கார்சா பண , பதஞ்சலி

–சுபம்–

காக்கா குளியல்; மாணவர்கள் பற்றி பதஞ்சலி நக்கல்! (Post No.7662)

Written by LONDON SWAMINATHAN

Post No.7662

Date uploaded in London – 7 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உலகமே வியக்கத்தக்க அளவுக்கு முதல் இலக்கண நூலை யாத்தவர் பாணினி. ‘நம்பரும் திறல்’ என்று பாரதியார் பாடலில் புகழப்பட்டவர். சுருக்கம் என்றால் அப்படிச் சுருக்கமாக, வான் புகழ் வள்ளுவனை விழுங்கிச்  சாப்பிடும் அளவுக்குச் சுருக்கமாக 4000 சூத்திரங்களைக்  கொண்டு சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கற்பித்தார். அவர் எழுதிய நூலுக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர். அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார். அவருக்கு அடுத்த படியாக காத்யாயனர் என்பவர் விளக்க உரை எழுதினார்.  இவ்வளவு சுருக்கமாக இருந்தால் எதிர்கால சந்ததியினருக்குப் புரியாமல் போய்விடுமே என்று எண்ணி, 500 ஆண்டுகளுக்குப் பின்னர், பதஞ்சலி முனிவர் ‘மஹாபாஷ்யம்’ இயற்றினார். மஹா பாஷ்யம் என்றால் பேருரை என்று பொருள். உண்மையிலேயே அது அளவிலும் சரி, பொருளடக்கத்திலும் சரி, பேருரைதான். அதிலுள்ள சில நயங்களை ஒருவர் ஆங்கிலக் கட்டுரையில் தந்தார். அதன் மொழிபெயர்ப்பு இதோ-

ப்ராயேன ஸம்க்ஷேப ருசினான் அல்பவித்யா பரிக்ரஹான்

ஸம்ப்ராப்ய வையாகராணான் ஸங்க்ரஹே சமுபாகதே

க்ருதே ச பதஞ்சலினா குருணா தீர்த்த தரிசினா

ஸர்வேஷாம் ந்யாய பீஜானாம் மஹாபாஷ்யே நிபந்தனே

–பர்த்ருஹரி

“பெரும்பாலும் காணப்படும் குறைவான அறிவுடையவர்களால், வியாடி எழுதிய ஸங்க்ராஹானை விளங்கிக் கொள்ள முடியாததால் நலிவடைந்து போன இலக்கணத்தை மிகப்பெரிய தீர்க்கதரிசியான பதஞ்சலி முனிவர், எல்லா விதமான மூலச்  சொற்களையும் மஹாபாஷ்ய உரையில் விளக்கினார்” – என்று பர்த்ருஹரி புகழ்மாலை சூட்டினார் 

பதஞ்சலி முனிவர் கொடுக்கும் பல எடுத்துக்காட்டுகள் அக்கால பாரத சமுதாயத்தை விளங்கிக்கொள்வதற்கு வகை செய்கிறது. விவசாயம், கிராமீ யக்  காட்சிகள்  , நகர்ப்புற வாழ்வு, பெண்களின் உயர்ந்த கல்வி அறிவு, வரலாறு, பூகோளம் என்று அவர் தொடாத விஷயங்களே இல்லை.

காகங்களும் டேக்கா கொடுக்கும் மாணவர்களும்

யதா தீர்த்த காகாஹா ந சிரம் ஸ்தாதாரோ பவந்தி

ஏவம் யோ குருகுலானி கதவை ந சிரம் திஷ்டதி ச தீர்த்த காக்காஹா

காகங்கள் தலையை மட்டும் முக்கிக் குளிப்பது போல , குருகுலத்தில் நீண்ட காலம் இல்லாத மாணவர்கள் காக்கைக் குளியல்  குளித்தவர்களே .

அதாவது பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் வகுப்புகளைக் ‘கட்’ அடிக்கும் மாணவர்கள் காக்கை குளிப்பது போல அரைகுறைகளே .

நாம் எல்லோரும் காகங்கள் குளிப்பதை பார்த்திருப்போம் ஆயினும் அதை பதஞ்சலி பயன்படுத்தும் அழகு தனி அழகுதான்.

xxx

ஒரு சொல்லை விளக்கப் போகையில் மாணவர்- ஆசிரியர் உறவு முறை பற்றி  ஒரு உதாரணம் தருகிறார்

சிஷ்யாஹா சத்ரவத் சாத்யாஹா

 சிஷ்யேன குரூஹு பரிபாலயஸ் ச

‘அரசாட்சியில் காண்பதை போல மாணவர்களைக் குருவும் குருவை மாணவர்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்’

Xxx

கெட்ட மாணவர்களால் ஏற்படும் விளைவுகளை விளக்குகையில் ஆரோக்கியக் குறிப்புகளும் கிடைக்கின்றன-

நத்வலோதகம் பாதரோகாஹா ததித்ரபுசம் ப்ரத்யக்ஷ ஜ்வராஹா

கெட்ட தண்ணீரில்  காலை நனைத்தால் நோய் வரும்; கெட்டுப்போன தயிரைப் பயன்படுத்தினால் ஜுரம் வரும் என்பது போல

2200 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களிடையே இருந்த சுகாதார அறிவையும் மருத்துவ அறிவையும் இதன் மூலம் அறிகிறோம்.

Xxx

ஒருமையில் சொன்னால் போதும்; எல்லாவற்றுக்கும் இலக்கண சுத்தமாகப் பன்மையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் விளக்குகிறார்

இதம் மே அக்ஷி பஸ்யதி அயம் மே கர்ணஹ சுஸ்து ஸ்ருனோதி

கண் பார்க்கிறது ; காது கேட்கிறது என்று ஒருமையில் சொல்வர். இருமை/ பன்மை அவசியமில்லை.

Xxxx

ஒருவருடன் உரையாடு கையில் சொற்களைப்  பயன்படுத்தும் திறமையை அழகாக விளக்குகிறார். ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய’ – என்ற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்துவதாக இது உள்ளது

ஆம்ரஸ்ச சிக்தா ஹா பிதரஸ் ச ப்ரிநீதாஹா (மாமரத்துக்கும் தண்ணீர் விட்டாச்சு; பித்ருக்களையும் திருப்தி செய்தாச்சு.)

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது’ என்று தமிழில் சொல்லுவோம். ஒருவர் நீத்தார்க்கு நீர்க்கடன் செய்ய நினைத்தார். அட, மாமரத்தின் அடியில் செய்தால் மாமரத்துக்குத் தண்ணீர் விட்ட பயனும் கிட்டும் நீத்தார்க் கடனையும் முடித்ததாக இருக்கும் என்று மாமரத்துக்கு அடியில் தர்ப்பணம் செய்தாராம்;

Xxxx

இரு பொருள் தரும் சொற்களை இவ்வாறு விளக்குகிறார்

ஸ்வேதா (White)  தாவதி

நாய் ஓடியது ; வெள்ளை ஓடியது .

Xxx

உரிச் சொற்களைப் பயன்படுத்துவதிலும் அ ல்பம் என்ற இடத்தில் ஹ்ரஸ்வம் வரா து என்று காட்டுகிறார்–

அல்பம் க்ருதம் அல்பம் தைலம் இத்யுச்சதே ந புனஹ

ஹ்ரஸ்வம் க் ருதம்ஹ்ரஸ்வம் தைலம்

அல்பம் என்றால் குறைவான என்று பொருள் நெய் குறைவு , எண்ணெய் குறைவு என்று சொல்லலாம் ஆனால்  குள்ளமான / ஹ்ரஸ்வம் என்ற சொல்லை அங்கே பயன்படுத்த மாட்டோம்.

தமிழிலும் கூட கன்றுக் குட்டி, அணில் பிள்ளை , பன்றிப் போத்து, கோழிக் கு ஞ்சு  என்று சொல்கிறோம்.

Xxxx

சம்ஸ்கிருதத்தில் வர்ணங்களைப்  பயன்படுத்துவதிலும் கூட சில விதி முறைகள் உண்டு—

சமானே ரக்தே கௌஹு லோஹித அஸ்வ சோனஹ

சமானே  காளார்த்தே கௌஹு  க்ருஷ்ண அஸ்வ ஹேமஹ

சமே தவளார்த்தே கௌஹு  ஸ்வேதஹ  அஸ்வ கர்கஹ

சிவப்பு நிறப்  பசுவை ‘ரத்த’ வர்ணம் எனலாம் ; சிவப்பு நிற குதிரையை சோனக என்போம் .

கருப்பு நிறப் பசுவை க்ருஷ்ண  வர்ணம் எனலாம் ; கருப்பு நிற குதிரையை ஹேம வர்ணம்  என்போம்.

வெள்ளை  நிறப்பசுவை ஸ்வேத  வர்ணம் எனலாம் ; வெள்ளை  நிற குதிரையை  கர்கஹ  என்போம்.

அதாவது வர்ணம் ஒரே வர்ணம்தான்; ஆனால் பசு, குதிரைகளின் நிறத்தைக் குறிப்பிடுகையில் வெவ்வேறு வர்ண சொற்கள் பயன்படுத்துவது மரபு..

xxxx

உலக நடைமுறை

ஏவம் ஹி த்ருஷ்யதே லோகே பிக்ஷுகோயம் த்விதீயாம் பிக்க்ஷஆம் சமாசாத்ய பூர்வம் ந ஜஹாதி  ஸஞ்சயாயைவ ப்ரவர்த்ததே

உலகத்தில் நாம்  காண்பது என்ன ? இரண்டாவது பிச்சை கிடைத்தாலும் முதலில் கிடைத்த  பிச்சையைத் தூக்கி எறிவதில்லை. அவன் எல்லாவற்றையும் சேர்த்து வை த்துக் கொள்வான் ; இதை அவர் உரிச் சொற்களின் தேவையை விளக்குகையில் எடுத்துக் காட் டாகத் தருகிறார் . சாதாரணமாக  நாம் காணும் காட்சியை க்  கொண்டு இலக்கண விதிகளை அவர் விளக்கும் பாங்கு மிகப்பெரிய, அரிய  பாணினி இலக்கணத்தை எவரும் புரிந்துகொள்ள உதவுகிறது. பாணினி ‘உயிர்’  என்றால், பதஞ்சலி எழுதியதை ‘உடல்’ என்று சொல்லலாம்.

xxxx

வெவ்வேறு உடைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் சொல்லப்படும்

அன்யேன சுத்தம் தவுத்கம்

அன்யேன சேபாலிகம்

அன்யேன மாத்யமிகம்

Xxx

ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆகிவிடாது

‘காப்பி’ அடிப்பதில் (Imitating)  பயனில்லை என்று ஓரிடத்தில் விளக்குகையில்

ந கல்வன்யத் ப்ராக்ருதமனு வர்த்தநாத் அஞ்ஞாத நஹி கோதாஹா ஸர்பந்தி ஸர்பனாதஹிர்  பவதி .(பாம்பு போல வளைந்து நெளிந்து உருண்டாலும் கீரி , பாம்பு ஆகிவிடாது) .

அதாவது பிறரைப் பார்த்து அவர் போல நடித்தாலும் குணம் வேறுபடாது . 

ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆகிவிடாது என்ற தமிழ்ப் பழமொழியை ஒப்பிடலாம்

Xxx

மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம்

சைசா மஹ தி  வம்ச ஸ்தம்பா லாதவானுக்கிருஷ்யதே

சின்ன பலனுக்காக பெரிய வேலையை, கஷ்டமான பணியைச் செய்பவனை பதஞ்சலி ‘மூங்கில் காட்டில் பறவை பிடிக்கப்போனவனை’ ஒப்பிடுகிறார் .

தமிழிலும் மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம் என்ற பழமொழி உளது .

மூக்கைத்  தொடுவதற்கு கையைக் கழுத்துக்குப் பின்னால் வளைத்துத் தொடுவதற்கு முயற்சிப்பது போன்றது இது.

Xxx

சூடு =சுறுசுறுப்பு, குளிர்= சோம்பேறித்தனம், மந்தம்

ய ஆசு கர்தவ்யான அசிரேன   கரோதி  ச சீதகஹ  

ய ஆசு கர்தவ்யாநாஸ்வேன கரோதி  ச உஷ்ணகஹ  

எவன் ஒருவன் உடனடியாகச் செய்யவேண்டியதை தாமதமாகச் செய்கிறானோ அவன் குளிர்ந்தவன்

எவன் ஒருவன் உடனடியாகச் செய்யவேண்டியதை உடனே  செய்கிறானோ அவன் வெப்பமானவன்

வெப்பம், குளிர் என்பதையும் குணங்களுக்குப் பயன்படுத்துவதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.

மேலை நாடுகள் குளிர்ப் பிரதேச நாடுகள் ; ஆகவே இங்கு வெப்பம் போற்றப்படும். ஒருவருக்கு உற்சாக வரவேற்பு என்பதை இளம் சூட்டு – warm welcome வார்ம் வெல்கம் — வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பர்.

வெப்ப நாடான இந்தியாவில் அவர்கள் பேசும் மொழிகளில் இது எதிர்மறையான பொருளைத் தரும்

xxx

காஸுக்ருஸ்தா ப்ராஹ்மணி என்ற சொல் அக்காலத்தில் மீமாம்ச சாஸ்திரத்தில் வல்ல பெண்கள் இருந்ததைக் காட்டும்; பெண்கள் கல்வி உயர் நிலையில் இருந்தது.

Source (with my inputs from Tamil literature)

Article written by P .Narayanan Namputiri in

New Horizons of Indological Research , Edited by Dharmaraj Adat , KAIR, 2013

Tags — பதஞ்சலி , மஹா பாஷ்யம், பாணினி காகம் , குளியல், கீரி, வர்ணம்

–subham–