

Written by London Swaminathan
Post No.7691
Date uploaded in London – 14 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
புராணங்கள் ஏராளம் ; ஆயினும் 18 புராணங்கள் பிரதானம். அந்தப் பதினெட்டு புராணங்களும் ஒரே பாடலில் உளது. விஷ்ணுவின் அவதாரம் இருபதுக்கு மேல் இருந்தாலும் நாம் போற்றித் துதிப்பது தசாவதாரம்தான். அந்தப் பத்து அவதாரமும் ஒரே பாடலில் உளது. இப்படி நமக்குப் பாடல்களில் யாத்துத் தருபவர் அம்பலவணக் கவிராயர். 200 ஆண்டுகளுக்கு முன்னர், கொல்லிமலை சதுரகிரி சிவபிரானை அறப்பளிச்சுர சதகத்தில் 100 பாடல்களால் போற்றியவர் .



புராணப் பாடலையும் தசாவதாரப் பாடலையும் காண்போம் .
முதலில் அவர் சொல்லும் 18 புராணங்கள் :–
முதலில் உள்ளது பௌடிகம் , லிங்கம், மார்க்கண்டேயம், வாமனம் ,
சைவம், மச்சம், கூர்மம், வராஹம், ஸ்கா ந்தம் ,பிரம்மாண்டம் ஆகிய இவை பத்தும் சிவன் தொடர்புடைய புராணங்கள்;
வைணவம், கருடம், நாரதம் பாகவதம் ஆகிய நான்கு புராணங்கள் திருமாலின் புகழ் பாடும் புராணங்களாம் .
பத்ம புராணமும், பிரம்ம கைவர்த்தமும் பிரம்மதேவன் தொடர்பான புராணங்கள். இவை தவிர சூரியன் புகழ் படும் சூரிய புராணமும் அக்கினியைப் போற்றும் அக்கினி புராணமும் ஆக மொத்தம் 18 புராணங்கள் .
பவுடியம் என்றால் என்ன?
பவுடியம் , பௌழியம் என்பன ரிக் வேதத்தைக் குறிக்கும் சொற்கள். பஹு ருச என்றால் ‘நிறைய கவிதைகள்’ என்பது பொருள். ரிக் வேதம் என்ற சொல்லுக்கே ‘கவிதை வேதம்’ என்பதாகும். அப்படிப்பட்ட வேதத்தை ஏன் புராணங்களில் முதலில் வைத்தனர் என்று விளக்கப்படவில்லை ; ஆனால் ரிக் வேதத்தில் பழைய அரசர்களின் கதை , பத்துராஜா யுத்தம் முதலியன உள்ளன . ஒருவேளை அதை மனதிற்கொண்டு இப்படிச் சொன்னார்கள் போலும் . மொழி ஆராய்ச்சி நிபுணரான ஆர் சுவாமிநாத ஐயர் Dravidian Theories by R Swaminatha Ayyar ‘ட்ரவிடியன் தியரிஸ்’ என்ற நூலில் ‘பவுடியம்’ என்பது ‘பஹு ருச’ என்பதன் திரிபே என்று காட்டியுள்ளார் .
பவுடியம் , பௌழியம் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் நல்ல விளக்க உரை ஆற்றியுள்ளார் . நச்சினார்க்கினியர் , ஆழ்வார்கள் , கேரள ஓலைச்சு வடிகளில் உள்ள இந்தச் சொல் ரிக்வேதத்தின் ஒரு ஷாகையைக் குறிக்கிறது என்பதை அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
18 புராணங்கள் எவை என்ற பட்டியலில் கருத்து வேறுபாடு உண்டு . பழைய பட்டியல்களை எனது முந்திய கட்டுரைகளில் காண்க.
XXX



பத்து அவதாரங்கள் பட்டியல்
சோமுகாசுரனை வதைத்து, தேவர்களின் துயர் நீக்கி, வேதங்களை எடுத்துவந்த மச்சா வதாரம், தேவர்களுக்கு அமுது கிடைப்பதற்காக எடுத்த ஆமை /கூர்ம அவதாரம் , பெரிய பூமியைப் பாய்போல சுருட்டிச் சென்ற இரண்யாக்ஷனை அழித்தது வராஹாவதாரம் , பொல்லாத கனகன் எனும் இரணியனை வென்றது நரசிம்மாவதாரம், ஓங்கி உலகை அளந்தது புனிதமான வாமனாவதாரம் , களிப்புடன் கூத்தாடிய இராவணனை வென்றது ஸ்ரீ ராமாவதாரம் , சூர்ய குல அரசர்களை வேரறுத்த பரசுராம அவதாரம், உலகத்தின் பயம் நீக்க வந்த கண்ணனும் அவனுடன் அவதரித்த பலராமனும் இரண்டு அவதாரங்கள், இனி வரப்போகும் கல்கி அவதாரம் ஆகிய பத்தும் அவதாரங்களாம் .
ஜெயதேவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய அஷ் டபதியில் பலராமனுக்குப் பதிலாகப் புத்தரைச் சேர்த்திருந்தாலும் எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த சதகம் காட்டுகிறது
Tags– ஒரே பாடலில் ,18 புராணம், பவுடியம் , பௌழியம் ,

பத்து அவதாரங்கள்
புராணங்கள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › புராணங்கள்
5 Oct 2018 – அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. … 18 புராணங்கள் பற்றி முன்னர் வெளியான கட்டுரைகளின் குறிப்பை அடியில் காண்க. புதிய … tamilandvedas.com/tag/புராணங்கள்.
18 புராணங்கள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › 18-புராணங்க…
11 Jul 2015 – 18 புராணங்கள். வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, …
புராணங்களின் காலம் என்ன? | Tamil and …
tamilandvedas.com › 2013/08/27 › புராணங…
27 Aug 2013 – அதற்குப் பின் புராணங்களில் வரலாறு, பூகோளம், தத்துவம், கதைகள் எனப் பல நூல்கள் … இதற்குக் காரணம் 18 புராணங்கள் சுமார்…
புராணங்கள் புளுகு மூட்டைகளா …
tamilandvedas.com › 2018/10/05 › புராணங…
5 Oct 2018 – Research Article Written by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 5 October 2018. Time uploaded in London –8-47 am (British Summer Time). Post No. 5508. Pictures shown here are taken from various …
18 புராணம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › 18-புராணம்
6 Sep 2015 – இதன் பின்னர் 18 புராணங்களை எழுதினார். அவைகளில் நான்கு லட்சம் ஸ்லோகங்கள். அதாவது எட்டு லட்சம் வரிகள். சுமார் 40 லட்சம் …

‘புலவர் புராணம்’ | Tamil and Vedas
tamilandvedas.com › tag › புலவர்-புரா…
12 Sep 2018 – WRITTEN by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 12 September 2018. Time uploaded in London – 8-29 AM (British Summer Time). Post No. 5421. Pictures shown here are taken from various sources …
கல்கி புராணம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கல்கி-புரா…
4 Apr 2015 – குலிங்க பக்ஷி பற்றி கல்கி புராணம் கூறுவது முன்னர் நான் எழுதிய “மஹா பாரதத்தில் ஒரு அதிசயப் பறவை” (ஜூலை1, 2014) என்ற …
விஷ்ணு புராணம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › விஷ்ணு-புர…
வேனன் என்ற புராண புருஷன் பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது. அந்த … விஷ்ணு புராணத்தில் வேனன் என்னும் கதை வருகிறது. … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact …
பாகவத புராணம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › பாகவத-புரா…
25 Dec 2018 – Compiled by London Swaminathan swami_48@yahoo.com. Date: 25 December 2018. GMT Time uploaded in London – 7-49 am. Post No. 5830. Pictures shown here are taken from various sources including google, …
பணம் பற்றி பவிஷ்ய புராணம் (Post No …
tamilandvedas.com › 2016/07/21 › பணம்-பற…
21 Jul 2016 – பணம் பற்றி பவிஷ்ய புராணம் (Post No.2991). new currency Re1. Written by London … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). பவிஷ்ய புராணம் …
சுமேரியாவில் இந்து புராணக் கதை!
tamilandvedas.com › 2014/05/12 › சுமேரி…
12 May 2014 – நான் பார்த்த வரையில் கருட புராணக் கதை, அதர்வ வேத (பாம்பு) … கருடனைப் பற்றி ரிக்வேதம் முதல் புராணங்கள் வரை மூன்று … ஆங்கிலத்தில் இக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் Please go to swamiindology.blogsot.com or tamilandvedas.wordpress.
புராணங்கள் புளுகு மூட்டைகளா?
tamilandvedas.com › சமயம்-தமிழ் › page
T5 Oct 2018 – அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. வெளிநாட்டினரும் கூட கி.மு.850 என்று தேதி குறிக்கும் சதபத பிராமணத்தில் புராண … tamilandvedas.com/tag/புராணங்கள். Posts about …
புராண வரலாறு | Tamil and Vedas
tamilandvedas.com › tag › புராண-வரலா…
24 Oct 2019 – Written by S NAGARAJAN swami_48@yahoo.com. Date: 24 OCTOBER 2019. British Summer Time uploaded in London – 6-45 AM Post No. 7131. Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use …
கலியுக முடிவு பற்றி லிங்க …
tamilandvedas.com › 2012/12/19 › கலியுக-…
19 Dec 2012 – இவ் வரிசையில் இதோ மூன்றாவது கட்டுரை: கலியுக முடிவு பற்றி லிங்க புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்: 1.
திருவிளையாடற் புராண கதைகள் …
tamilandvedas.com › tag › திருவிளைய…
28 Dec 2016 – Written by London swaminathan. Date: 28 December 2016. Time uploaded in London:- 11-05 am. Post No.3491. Pictures are taken from different sources; thanks. contact; swami_48@yahoo.com. “அழுத பிள்ளை …
–SUBHAM—