Himalaya pictures from Radhika Balakrishnan
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 21 November 2018
GMT Time uploaded in London –10-34 am
Post No. 5685
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
பர்த்ருஹரி இந்த ஸ்லோகங்களில் சொல்லும் அறிவியல் துளிகள்
1.மலைகள் பறந்தன;
2.சூரிய காந்தக் கல் நெருப்பைக் கக்கும்;
3.பூமியைப் பாம்பு தாங்குகிறது-
பர்த்ருஹரி நீதி சதகம் தொடர்ச்சி
ஸ்லோகங்கள் 31,32,33
‘பெருந்தன்மை கொண்டபெரியோர்கள், கொடையாளிகளின் சக்திக்கும் பெருமைக்கும் அளவே இல்லை. இந்த பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தாங்குகிறான். அந்த சேஷ நாகத்தை ஆமை தன் முதுகில் தாங்குகிறது. அநத ஆமையை கடல் தனது அடித்தளத்தில் தாங்கி நிற்கிறது’.—1-31
காளிதாஸன் போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்களும் பூமியைப் பாம்பு தாங்குவதாகக் கருதினர். இதன் விஞ்ஞான விளக்கம் தெரியவில்லை. இதை அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளாமல் அதன் தாத்பர்யத்தை அறிய வேண்டும். உலகில் ஒவ்வொரு பழைய கலாசாரத்திலும் இப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தது. கிரேக்கர்கள அட்லஸ் (Atlas) என்பவன் தனது தோளில் பூமியைச் சுமப்பதாக நம்பினர். இதனால் தேசப்பட புத்தகத்துக்கு அட்லஸ் என்று பெயர் சொல்லுவர்.
வஹதி புவனேஸ்ரேணிம் சேஷஹ பணாபலகஸ்திதாம்
கமடபதினா மத்யே ப்ருஷ்டம் ஸதச தார்யதே
தமபி குருதே க்ரோடாதீனம் பயோதிரநாதராத்
தஹஹ மஹதாம் நிஸ்ஸீமாநஸ்சரித்ர விபூதயஹ – 31
वहति भुवनश्रेणिं शेषः फणाफलकस्थितां
कमठपतिना मध्येपृष्ठं सदा स च धार्यते ।
तम् अपि कुरुते क्रोडाधीनं पयोधिरनादराद्
अहह महतां निःसीमानश्चरित्रविभूतयः ॥ 1.31 ॥
XXX
‘தேவர்களின் தலைவனான இந்திரன் இமயமலை மீது தன் வஜ்ராயுதத்தை வீசித் தாக்கினான். அப்போது இமயத்தின் மகனான மைநாக பர்வதம் தந்தையை விட்டு ஓடிப்போய் கடலில் அடைக்கலம் புகுந்தது. இது சரியான செயலன்று. மகன் என்னும் பெயருக்கு ஏற்ற செயலுமன்று’ – 1-32
மலைகள் ஆதிகாலத்தில் பறந்தததாகவும் ,இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டியதாகவும் புராணங்கள் புகலும்.இந்த நிகழ்ச்சியை உவமையாகப் பயன்படுத்துவர் புலவர் பெருமக்கள்.
இதில் பெரிய அறிவியல் உண்மை இருப்பதாக நான் கருதுகிறேன். டைனோஸரஸ் போன்ற ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து அழிய பெரிய விண்கற்களே காரணம் என்று விஞ்ஞானிகள் இப்போது பகர்வர். பூமியின் துவக்க கால சரிதத்தில் இத் தாக்குதல்கள் அதிகம் இருந்தன. இன்றும் ஒவ்வொரு நொடியும் பூமியில் விண்கற்கள் விழுந்தபோதும் அவை காற்றில் பஸ்மம் ஆகி சாம்பல மட்டுமே பூமியில் விழும். இரவு நேரத்தில் வானத்தை உற்று நோக்குவோர் நட்சத்திரங்கள் விழுவது போலக் காண்பது எல்லாம் இந்த விண்கற்களே. ஆயினும் துவக்க காலத்திலிவை அதிகம் இருந்தது.
இதை பாமர மக்களுக்கு விளக்க எழுந்த கதைதான் மலைகள் பறந்ததும் அதை இந்திரன் வெட்டி வீழ்த்தியதும்.
இந்த பர்த்ருஹரி ஸ்லோகத்தில் சொல்லவரும் நீதி ஒருவருக்கு ஆபத்து ,, வருகையில் — குறிப்பாக தந்தைக்கு ஆபத்து வருகையில் — மகன் ஓடிப்போவது — உதவாமல் பயந்து ஒளிவது — முறையன்று– வீரமும் அன்று என்பதாகும்.
நீதியைப் புரிந்து கொண்டு விட்டோம். இதிலுள்ள அறிவியல் விஷயங்களை நுணுகி ஆராய்வோம்:
1.பூமியின் ஆரம்பகட்டத்தில் விண்கற்கள் (Meteorites) , நுண்கிரஹங்களின் (asteroids) தாக்குதல் அதிகம் இருந்ததை இந்துக்கள் அறிவர்.
- உலகில் கடலுக்கு அடியிலும் மலைகள் இருப்பது (Submarine mountains) இந்துக்களுக்கு நன்கு தெரியும். (சக்ரவாள மலை பற்றியஎனது கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன்)
3.பிற்காலத்தில் இந்த விண்கல், நுண் கிரஹவீ ழ்ச்சி அறவே நின்றதையும் இந்துக்கள் அறிவர். ஆகையால்தான் இந்திரன் பறக்கும் மலைகளின் சிறகுகளை வெட்டி அவற்றை கடலுக்குள் அனுப்பிய கதைகள் எழுந்தன.
கடலியலும் (Oceanography), பூகர்ப்ப இயலும் (Geology) வளந்த இந்த நாட்களில் நாம் படிப்பதை புராணங்கள் கதை ரூபத்தில் நமக்குக் கற்பித்தன.
அது மட்டுமல்ல; இந்திரன்தான் உலகின் முதல் சிவில் எஞ்சினீயர். அவன் மலைப் பாறைகளை அகற்றி தண்ணீரை விடுவித்த கதை உலகின் பழமையான் நூலான ரிக் வேதத்திலேயே உளது.
இதை அறியாத சிலர் இந்திரன் அரக்கனை வெட்டி வீழ்த்தியதாகவும் அவர்கள் பழங்குடி மக்கள் என்றும் பிதற்றினர். இந்திரன் என்பது தலைவன், மன்னன், முழுமுதற் சக்தி போன்ற பல பொருட்களில் ரிக் வேதத்தில் வருகிறது. ஆயிரத்துக்கும் மேலான இடங்களில் இந்திரன் பெயர் வநததை ‘ஒரு ஆள்’ என்று நினைத்து வெள்ளைக்காரர்கள் குழம்பிப் போய் நம்மவர்களையும் குழப்பிவிட்டனர்.
வரம் பக்ஷச்சேதஹ ஸமதம கவன்முக்தகுலிஸ
ப்ரஹாரைருத்ரச் சதூபஹலதஹனோத்ரார குரூபிஹி
துஷாரத்ரேஹ்ஹே ! பிதரி க்லேசவிவசே
ந சாசௌ ஸம்பாதஹ பயஸி பயஸாம் பத்யூருசிதஹ -32
वरं पक्षच्छेदः समदमघवन्मुक्तकुलिशप्रहारैर्
उद्गच्छद्बहुलदहनोद्गारगुरुभिः ।
तुषाराद्रेः सूनोरहह पितरि क्लेशविवशे
न चासौ सम्पातः पयसि पयसां पत्युरुचितः ॥ 1.32 ॥
XXX
சூர்யகாந்தக் கல், சூரிய ஒளியை நெருப்பாக கக்குவதை காளிதாஸன், தமிழில் திருமூலர் போன்ற ஏராளமான புலவர்கள் பயன்படுத்துவதால், லென்ஸ் (Lens), உருப்பெருக்கு ஆடி (Magnifying glass) பற்றி இந்துக்களுக்கு முன்னரே தெரிந்ததை நாம் அறிய முடிகிறது.
இதோ பாட்டின் பொருள்
சூரிய ஒளிபட்டவுடன் உயிரே இல்லாத ஜடப்பொருளான சூர்ய காந்த மணி கூடப் பிரகாஸிக்கிறது; நெருப்பை உமிழ்கிறது. அப்படி இருக்கையில் பெரியோர்களை யாரேனும் அவமதித்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? 1-33
ஆக, பல விஞ்ஞான உண்மைகளை உவமையாகப் பயன்படுத்துவதால் இவைகளைப் பாமர மக்களும் அறிந்தது புலனாகிறது. நம்மில் பலர் எப்படி டெலிவிஷன், ரேடியோ, மொபைல் போன் பற்றிய விஞ்ஞான விஷயங்களை அறியாமலேயே அதை பயன்படுத்த மட்டுமே தெரிந்து கொண்டது போல பாமர மக்களுக்கு உவமை மட்டுமே தெரியும். அதன் பின்னுள்ள விஞ்ஞான விஷயங்கள் தெரியாது.
பூமியின் சலனம் பற்றி முழுதும் அறியாவிட்டால் இந்துக்கள் கிரஹணத்தைக் கணக்கிட்டும் இருக்க முடியாது. ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கி இருக்கவும் முடியாது. சனிக் கிரஹம் குருக் கிரஹம் போன்றவற்றுக்கு விஞ்ஞானப் பெயர்களை சூட்டி இருக்கவும் முடியாது.
சனிக் கிரஹம் (சனை= மந்தம், மெதுவாக) சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆவதை அறிந்து சனைச் சரன் (மந்த கதியில் செல்வோன்) என்று பெயரிட்டனர்.
குரு என்றால் கனமான என்று பெயர்; கிரஹங்களில் பெரியது குரு (வியாழன்)) என்பதாலும், குருவைப் போல ஒருவரை உயர்த்தி, உந்தி விடுவதாலும் (Slingshot Gravity effect) அந்த கிரஹத்துக்கு குரு என்று பெயரிட்டனர், இந்த ‘ஸ்லிங் ஷாட் எப்பெக்ட்’ இப்பொதுதான் விஞ்ஞானிகளுக்குத் தெரியும். இனி வரப் போகும் எதிர்காலக் கண்டு பிடிப்புகளை இந்துக்கள் முன்னரே அறிவித்துவிட்டதை எனது முந்தைய கட்டுரைகளில் பட்டியலிட்டு விட்டேன்.
யதசேதனோபி பாதைஹி ஸ்ப்ருஷ்டஹ ப்ரஜ்வலதி ஸவிதுரினகாந்தஹ
தேஜ்ஸ்வீ புருஷஹ பரக்ருதநிக்ருதிம் கதம் ஸஹதே – 33
Tags- நீதி சதகம், பர்த்ருஹரி, சூர்யகாந்த மணி, பறக்கும் மலைகள், பூமி பாம்பு, சேஷ நாகம்
–சுபம்—
You must be logged in to post a comment.