ஒரு கிலோ புதையல் விலை 75,000 பவுன்; சாப்பிடலாம் !! (Post No.8163)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8163

Date uploaded in London – 13 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பறவை அதிசயம்

மெக்சிகோவில் யோகத்தான் பகுதியில் ஒரு அதிசயக் காட்சி கிடைத்தது பறவைகளே பறவை உருவத்தில் சற்று நேரம் நின்றன. நாம் வானத்தை அண்ணாந்து பார்க்கிறோம். சில நேரங்களில் மேகங்கள் யானை போல், சிங்கம் போல், அரசியல் தலைவர்கள் போல், சன்யாசிகள் போல் காட்சி தருகின்றன. நம்முடைய நண்பர்களைக் கூப்பிட்டுக் காட்டுவதற்குள் அவை கலை ந்து விடுகின்றன. . இந்தப் பறவைக் காட்சி நவம்பர் 23, 2010 மெட்ரோ பத்திரிகையில் வந்தது . இவை ப்ளமிங்கோ (Flamingo)  எனப்படும் செங்கால் வண்ண நாரைகள் ஆகும்.

XXXX

ஒரு கிலோ புதையல் விலை 75 000 பவுன்; சாப்பிடலாம் !!

பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் பலர் காடு மேடுகளில் புதையல் தேடி அலைகின்றனர் . அவை நிலத்துக்கு அடியில் விளைகின்றன. அவைகளை எடுத்து சாப்பிடலாம் ; மற்ற புதையல் போல பீரோவுக்குள் அல்லது பொருட்ககாட்சியில் வைக்கப்படுவதல்ல இவை.

இவைகளை ட்ரபிள்ஸ் (Truffles)  என்று அழைப்பர்.இவை நிலத்துக்கு அடியில் வளரும் காளான் (Fungus) வகைத்  தாவரங்கள். இவற்றுக்கு தனி மனமும் குணமும் உண்டு. இதன் அபூர்வத்தன்மையும் இதன் விலையை ஏற்றிவிடுகின்றன. சிறு கிழங்குகள் போல இருக்கும் ; இவைகளைப் பல வகைகளில் சமைத்து உண்பர். சமையல் அறை வைரங்கள் (Diamonds of Kitchen)  என்றும் பெயர். ஐரோப்பாவில் அதிகமாகவும், அமெரிக்கா , ஆஸ்திரேலியாவில் குறைவாகவும் பயன்படுகிறது. நூற்றுக் கணக்கான வகைகள் இருந்தாலும் சிலவற்றுக்கு அதிக விலை மதிப்பு.

இதன் விலை சுமார் ஒரு கிலோ (950 கிராம்) 75,000 பவுன் (சுமார் 75,000 X நூறு ரூ பாய் = 7,50,0000). ஆல்பா (White Alba Truffles) வகை ட்ரபிள்களை ஹாங்காங் மனிதர் ஒருவர் இந்த விலைக்கு வாங்கினார் என்று 11-11-2013 மெட்ரோ நியூஸ் பேப்பர் செய்தி கூறுகிறது.

பன்றி நாய் முதலியன இவற்றை முகர்ந்து கண்டுபிடித்து நிலத்தைத் தோ ண்டி எடுத்து உண்கின்றன. இதனால் இவைகளை பழக்கி புதையல் வேட்டை நடத்துகின்றனர். தற்போது இந்த நிலத்தடி காளான் வகைகளை பயிர் செய்யும் உத்திகளையும் கண்டு பிடித்துவிட்டனர்

மரங்களின் வேர்களுக்கு அருகில் பூமிக்குள் வளரும் இந்த காளான் வகை, மரத்திலிருந்து கார்போ  ஹை ட்ரேட்டைப் பெற்றுக்கொண்டு சிலவகை சத்துக்களை மரங்களுக்கு அளிக்கின்றன ; இது ஒரு வினோதமான கூட்டுறவு. நாய்களும் பன்றிகளும் தோண்டி எடுக்கும் காளான் வகைகளில் டை மெத்தைல் ஸல்பைட் (Dimethyl Sulphide)  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீங்களும் நிலத்தைப் பிறாண்டுங்கள் ; புதையல் கிடைத்தாலும் கிடைக்கலாம் .

tags –புதையல், ட்ரபிள்ஸ் (Truffles) , பறவை அதிசயம்

–Subham–