COMPILED BY LONDON SWAMINATHAN
Date: 10 January 2016
Post No. 2476
Time uploaded in London :– 11-44 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(விநோத விகட சிந்தாமணி என்ற பழைய நகைச்சுவை புத்தகத்திலிருந்து; உதவியவர் சென்னை சந்தானம் சீனிவாசன்)
நிரட்சரக்குக்ஷி நீலகண்டமய்யன்
ஒருநாள் ஒரு கோர்ட்டு விசாரணையில் கக்ஷிக்காரராகிய நீலகண்ட ஐயரை வக்கீல் பார்த்து, விவாத வேலி எத்தனை அடி நீளமிருக்கும், என்றார்.
கக்ஷிக்காரரகிய ஐயர் சொன்னதாவது,
“ஐயா! என் வீட்டுக் குட்டிச் சுவரிலிருந்து பாழுங்கிணறு வரையிருக்கும்” என்றார். இங்கே அந்தத் தூரத்தை அளந்து காட்டும் பார்ப்போம் என்று வக்கீல் கேட்க அவர் நீதிபதியைக் காண்பித்து “எசமான்கள்தான் பாழுங்கிணறு என்றால் வக்கீலய்யர்தான் குட்டிச் சுவரு” என்றார். சகலரும் புன்னகையோடிருந்தனர்கள்
Xxx
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)
ஸ்ரீதேவி x மூதேவி
ஒரு காலத்தில் ஸ்ரீதேவியும் மூதேவியும் “நான்தான் பெரியவள், நான் தான் பெரியவள்”- என்று சச்சரவு செய்துகொண்டு இதைப்பற்றி பூலோகத்தில் யாரிடத்திலாவது விசாரித்துத் தெரிந்துகொள்ளுவோம் என்று ஊரூராய்ச் சுற்றிவருகையில் வழியில் ஒரு செட்டியைக் கண்டு, “ஓய், வணிகரே! உலகத்தில் ஸ்ரீதேவியகிய நான் பெரியவளா, மூதேவியாகிய என் அக்காள் பெரியவளா? என்று கேட்க, செட்டி நகைத்துப் பின்வருவதறியாமல் மூதேவிதான் நல்லவள் என்றான்.
காரணம் என்னவென்று இருவரும் கேட்க செட்டியானவள், “ஸ்ரீதேவி வஞ்சகக்காரி.எங்கும் நிலயாதிருப்பதில்லை. அவள் மோசக்காரி ஒருவனைச் சீமானாகவும், மற்றொருவனைப் பேதையாகவும் செய்கிறாள். மூதேவியானவள் அப்படியில்லை. உலகத்திலுள்ள ஜீவராசிகள் யாவற்றிலும் வியாபகமாயிருக்கிறாள்” என்று சொல்லக்கேட்டு ஸ்ரீதேவி சினமுற்று, “சீ, போ! இன்று முதல் நான் உன்னிடத்திருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டுச் செல்ல, மூதேவி, செட்டியாரைத் தொத்திக்கொண்டாள். செல்வம் முழுதும் தொலைந்து அவன் ஏழையானான்.
அதன்பின் இருவரும் தர்க்கித்துக்கொண்டு, மற்றொரு கிராமத்தில் புகுந்த தருணம் ஒரு பிச்சையெடுக்கும் பிராமணன் எதிர்வர இருவரும் பிராமணரையழைத்து, “ஐயா, வேதியரே! உலகத்தில் சீதேவி, மூதேவி- ஆகிய இருவரில் யார் வந்தால் உலகத்தார் சந்தோஷப்படுகிறார்கள்?” என்று கேட்டனர். அதைக்கேட்ட பிராமணன் யோசித்து, சீதேவியைச் சிலாக்கியமாகச் சொன்னாள் அவள் நம்மை அணுகுவாள், மூதேவியைச் சிலாக்கியமாகச் சொன்னாலோ, சீதேவி போய்விடுவாள் என்று நினைத்து, “அம்மா! இவ்வுலகில் சீதேவியின் வருகையைப் பற்றி சந்தோஷிக்கிறார்கள்; மூதேவி போதலைப் பற்றிச் சந்தோஷிக்கிறார்கள், ஆகையால் இருவர் விஷயத்திலும் மக்கள் சந்தோஷம் சமமே என்றார். அதைக்கேட்டு இருவரும் பிராமணனின் வாக்கு சாதுர்யத்தை மெச்சிச் சென்றுவிட்டனர்.
Compiled by London swaminathan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com
-சுபம்-
You must be logged in to post a comment.