ஹிந்தி படப் பாடல்கள் – 6 – உணவும் வீடும்! (Post no.7826)

Roti

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7826

Date uploaded in London – – 14 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 6 – உணவும் வீடும்!

R.Nanjappa

உணவும் வீடும்!

ஒரு சராசரி மனிதனுக்கு என்ன தேவை? 

chapati

உணவு, உடை, இருப்பிடம். இவற்றை அத்தியாவசியத் தேவைகள் என்போம். Basic or essential needs. ஆனால் நம் பொருளாதார “அறிஞர்கள்இத்துடன் திருப்தி அடைவதில்லை. அவர்கள் தேவை–  Need பற்றிப் பேசுவதில்லை. “விருப்பம்”  Want பற்றியே பேசுகிறார்கள்விருப்பம் திருப்திப் படுத்த முடியாதது, அவை திரும்பத் திரும்ப வரும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று பாடம் எடுப்பார்கள்ஒரு மனிதனோ, சமுதாயமோ எளிதில் திருப்தியடைந்தால் அதை Primitive என்பார்கள். பொருளாதார வளர்ச்சி என்பது இன்றைய நிலையில் விருப்பங்களின் கட்டற்ற தன்மையே!

மனிதனுக்கு எத்தனை நிலம் தேவை” (How Much Land Does a Man Need)  என்று லியோ டால்ஸ்டாய் 1886ல் ஒரு கதை எழுதினார். இதில் கடைசியில் ஒரு மனிதனுக்கு இறுதியில் தேவைப்படுவது 6 அடி மண் தான்அவன் சமாதிக்கு என்று காட்டினார். ஆனால் இதுகூட சிலருக்குக் கிடைப்பதில்லை!

பஹதூர் ஷா ஃஜஃபர் இந்திய முகலாயர்களின் கடைசி அரசர். 1857 முதல் இந்திய சுதந்திரப்போருக்கு ஆதரவாக இருந்தார் என்று சொல்லி இவரை நாடுகடத்தி பர்மாவில் ரங்கூனில் சிறைவைத்தனர்

ஆங்கிலேயர்.  இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் கொள்ள விடவில்லை. இந்த பஹதூர் ஷா “ஃஜஃபர்” ஒரு கவிஞர். சிறையின் சுவரில் கரித்துண்டு கொண்டு ஒரு கவிதை எழுதினார்.

Bahadur Shah

कितना है बदनसीबज़फ़रदफ़्न के लिए 
दो गज़ ज़मीन भी मिली कूयार [3] में   

கித்னாஹை பத்னஸீப்ஜஃபர்தஃப்ன் கே லியே

தோ கஜ் ஃஜமீன் பீ மிலீ குயேயார் மே

 இந்த ஃஜஃபர் தான் எவ்வளவு  துரதிருஷ்டம் பிடித்தவன்

அவனை அடக்கம் செய்ய அவனுக்கு இஷ்டமான நாட்டில்

இரண்டு கஜ இடம் கூடக் கிடைக்கவில்லையே! 

இவரை ரங்கூனிலேயே 1862ல் புதைத்துவிட்டனர். இவருடைய சமாதி இருந்த இடம் கூடத் தெரியாமலிருந்தது. 1891ல் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, அரசனாக இருந்தாலும் என்ன நடக்கும் எது கிடைக்கும் எனச் சொல்லமுடியாது!

அன்ன விசாரம்அதுவே விசாரம்!

ஓரு சாண் வயிறே இல்லாட்டா

உலகத்தில் ஏது கலாட்டா

என்று ஒரு பழைய தமிழ்படப் பாட்டு உண்டு.

வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் தேடுவதிலேயே சராசரி மனிதனின் காலத்தின் பெரும்பகுதி செலவாகிறதுஎன்ன உணவு வேண்டும்? இதுவே பலருக்கும் தெரிவதில்லை!

Under The Greenwood Tree

Who doth ambition shun

And loves to live i’ the sun,

Seeking the food he eats,

And pleased with what he gets,

Come hither, come hither, come hither:

            Here shall he see

            No enemy

But winter and rough weather.

[Shakespeare; As You Like It.]

இது ஷேக்ஸ்பியர்  கவிதை. 

William Shakespeare

பேராசையை விட்டு, இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்ந்து, தனக்கு இயல்பான உணவைத் தேடி, கிடைப்பதில் திருப்திப்பட்டு இருப்பவனுக்கு எங்கும் இயற்கை உத்பாதங்களைத் தவிற பிற எதிரிகளே இருக்கமாட்டார்கள்  (இன்னல்களே இருக்காது) என்கிறார். ஆனாலும் இது எல்லோருக்கும் சாத்தியமாக அமைவதில்லையே!

படியளக்கும் பரமன்

दाने दाने पे लिखा है खाने वाले का नाम
लेने वाले करोड़ देने वाला एक राम  

தானே தானே பே லிக்காஹை கானே வாலே கா நாம்

லேனே வாலே கரோட் தேனே வாலா ஏக் ராம்

தானியத்தின் ஒவ்வொரு மணியிலும் அதைச் சாப்பிடுபவனின் பெயர் எழுதப் பட்டிருக்கிறது.

சாப்பிடுபவர்கள் கோடிக்கணக்கில் என்றாலும் படி அளப்பவன் ஆண்டவன் ஒருவன் தானே!

कोई कितना अमीर हो या कितना गरीब
खाये उतना ही जीतना है उस का नसीब
आगे मालिक के चलता नहीं कोई दाम  

கோயீ கித்னா அமீர் ஹோ யா கித்னா கரீப்

காயே உத்னா ஹீ ஜித்னா ஹை உஸ் கா நஸீப்

ஆகே மாலிக் கே சல்தா நஹீ கோயீ தாம்

ஒருவன் எவ்வளவுதான் பணக்காரனாக இருக்கட்டுமே, ஏழையாகத்தான் இருக்கட்டுமே– 

அவன் தலையில் எந்த அளவு எழுதியிருக்கிறதோ அத்தனைதான் சாப்பிடமுடியம்!

அந்த ஆண்டவனை எந்த லஞ்சம் கொடுத்தும் வசப்படுத்த முடியாது!

तेरी किसमत की लिखी हुई है किताब
तेरे एक एक दिन का है उस में हिसाब  

तेरे बस में ना सुबह है ना तेरी शाम  

தேரீ கிஸ்மத் கீ லிக்கீ ஹுயீ ஹை கிதாப்

தேரே ஏக் ஏக் தின் கா ஹை ச் மே ஹிஸாப்

தேரே பஸ் மே நா சுபஹ் ஹை நா தேரீ ஷாம்

உன்னுடைய தலைவிதியானது எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறதே

அதிலே உன்னுடைய ஒவ்வொரு நாளின் கணக்கும் இருக்கிறது!

உன்னுடைய காலையோ மாலையோ உன் வசத்தில் இல்லை!

कभी गर्मी की मौज कभी बारिश का रंग
ऐसे चक्कर को देख सारी दुनिया है दांग
चाँद सूरज ज़मीन सब उसके गुलाम  

கபீ கர்மீ கீ மௌஜ் கபீ பாரிஷ்  கா ரங்க்

ஐஸே சக்கர் கோ தேக் சாரி துனியா ஹை தாங்க்

சாந்த் ஸூரஜ்  ஃஜமீன்  ஸப் உஸ்கே குலாம்

மகிழ்ச்சி  நிறைந்த வெப்பமான நாட்கள் , மழைக்காலத்தின் வண்ணங்கள்

இப்படி வரும் காலச் சக்கரத்தைக் கண்டு  பூரா உலகமும் கலங்கி இருக்கிறது!

சந்திரன், சூர்யன், இந்த பூமிஅனைத்தும் அந்த ஆண்டவனுக்கு அடிமைப் பட்டது தானே!

தானே தானே பே லிக்கா ஹை கானே வாலே கா நாம்

கானே வாலே கரோட் தேனே வாலா ஏக் ராம்

Song: Daane daane pe likha hai Film: Baarish 1957 Lyricist: Rajinder Krishan

Music: C. Ramchandra Singer: C.Ramchandra. 

எத்தனை சீரிய கருத்துக்கள்! உடனே நமக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வரும்:

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!

உணவு கிடைப்பது, அதை புசித்து அனுபவிப்பதுஇது தெய்வ அருளால் நிகழ்வது. அதனால்தான் நமது வேதத்தில் ஸ்ரீ ருத்ரத்தில் பகவானை 300 நாமங்களால் துதித்தபின். “வாஜஸ்ச மேஎன்று உணவைப் பிரார்த்திக்கிறோம். ஏசு நாதர் சொல்லிக்கொடுத்த பிரார்த்தனையிலும்  “இன்று தேவையான உணவைத் தாரும்என்று பிரார்த்திக்கச் சொன்னார். [ Give us this day our daily bread” – The Lord’s Prayer.]

 உணவு அருந்தும் போதும் தெய்வ நினைவு வேண்டும்.

அருணகிரி நாதர் சொல்கிறார்:

பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
 
தரு பிடி காவல் சண்முகவா எனச் சாற்றி நித்தம்
 
இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இருவினையோம் இறந்தால்
 
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே.  

ஒருபிடி வாயில் இடுவதற்கு முன்பும் அந்தப் படியளப்பவனை நினைக்கவேண்டும்.

வீட்டைக் கட்டித் / தேடிப் பார்

உணவின்  நிலை இவ்வாறாக , இருக்க இடம் பற்றி என்ன செய்வது?

இது இன்னும் பெரிய பாடாக இருக்கிறது. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஆண்டவன் ஒரு வழி செய்திருக்கிறான். மனிதன் மட்டும் கெட்டுக் கிடக்கிறான்

காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் பராசக்தியை வேண்டினார்அது லட்சியக் கனவு. பாவம், பாரதியாருக்கே அது அமையவில்லை!

இங்கே வசதி படைத்தவர்கள் எல்லா இடங்களையும் வளைத்துப் போட்டு விட்டார்கள். நாம் எங்கிருந்தால் என்ன? வானமே கூரை, பூமியே பாய் என்றிருந்தால் நமக்கு யாதும் ஊர் தானே! உலகமே நமது தானே! பாடுகிறார் கவிஞர் ஸாஹிர் லுதியான்வி:

चीन अरब हमारा हिन्दोस्ताँ हमारा
रहने को घर नहीं है सारा जहाँ हमारा

சீன் அரப் ஹமாரா ஹிந்துஸ்தான் ஹமாரா

ரஹனே கோ கர் நஹீ ஹை  ஸாரா ஜஹா(ன்) ஹமாரா

சீனாவும் அரேபியாவும் நமதாக இருக்கலாம், ஹிந்துஸ்தானமும் நமதாக இருக்கலாம்

நமக்கோ இருக்க வீடில்லைஇந்த உலகம் முழுவதுமே நமதுதான்!

खोली भी छिन गयी है बैंचें भी छिन गयी हैं
सड़कों पे घूमता है  अब कारवां हमारा

கோலீ பி சின் கயீ ஹைபெஞ்சே பீ சின் கயீ ஹை

சட்கோ மே கூம்தா ஹை அப் கார்வா() ஹமாரா

எங்கள் சேரிப்பகுதியிலிருந்து தள்ளப்பட்டோம்இங்கிருந்த பெஞ்சைக்கூட எடுத்துக்கொண்டு விட்டார்கள்

இப்போது எங்கள் கூட்டம் வீதியில் திரிகிறது!


जेबें हैं अपनी खाली क्यों देता वर्ना गाली
वो संतरी हमारा वो पासबां हमारा 

ஜேபே ஹை அப்னீ காலி க்யோ தேதா வர்னா காலீ

வோ ஸந்தரீ ஹமாரா வோ பாஸ்பா ஹமாரா

எங்கள் பாக்கெட்டெல்லாம் காலிஇல்லையெனில் இங்கிருக்கும்  எங்கள் சொந்த காவல்காரன் எங்களை ஏன் வெளியே தள்ளூவான்?


जितनी भी बिल्डिंगें थीं सेठों ने बाँट ली हैं
फुटपाथ बम्बई के हैं आशियाँ हमारा

ஜித்னீ பீ பில்டிங்கே தீ ஸேட்டோனே பா(ன்)ட் லீ ஹை

ஃபுட்பாத் பம்பயீ கா  ஹை ஆஷியா(ன்) ஹமாரா
இங்கிருந்த பில்டிங்க் அனைத்தையும் வசதி உள்ளவர்கள்  வாங்கி வளைத்துப்

போட்டுக்கொண்டார்கள்.

இப்போது பம்பாயின் நடைபாதைகளே எங்களுக்கு இருப்பிடமாகிவிட்டது!


सोने को हम क़लन्दर आते हैं बोरी बन्दर
हर एक कुली यहाँ का है राज़दाँ हमारा

ஸோனே கோ ஹம் கலந்தர் ஆதே ஹை போரி பந்தர்

ஹர ஏக் குலீ யஹா(ன்) கா ஹை ராஃஜ்தா ஹமாரா

ஊர்சுற்றும் பரதேசிகள் போல் நாங்கள் தூங்குவதற்கு போரிபந்தர் (ஸ்டேஷனுக்கு) வருகிறோம்.

இங்கிருக்கும் ஒவ்வொரு கூலியும் எமக்கு அத்யந்தம்.

तालीम है अधूरी मिलती नहीं मजूरी
मालूम क्या किसी कोदर्दे निहाँ हमारा

தாலீம் ஹை அதூரி மில்தா நஹீ மஜூரி

மாலூம் க்யா கிஸீ கா தர்தே நிஹா(ன்) ஹமாரா

படிப்பு பாதியில் நின்றுவிட்டது; வேலை கிடைப்பதில்லை

எங்கள் மனதில் ஆழ்ந்து இருக்கும் துயரை யார் புரிந்துகொள்வார்கள்?

पतला है हाल अपना  लेकिन लहू है गाढ़ा
फौलाद से बना है हर नौजवां हमारा

பத்லா ஹை ஹால் அப்னா லேகின் லஹீ ஹை காடா

ஃபௌலாத் ஸே பனா ஹை ஹர் நௌஜவா(ன்) ஹமாரா

எங்கள் உடல் நலிந்துதான் இருக்கிறது; ஆனால் எங்கள்  ரத்தம்  கெட்டியானது!

இங்கிருக்கும் ஒவ்வொரு இளைஞன் உடலும் பட்டறையில்  உருவாக்கப்பட்டது!

मिल जुल के इस वतन को ऐसा सजायेंगे हम
हैरत से मुंह तकेगा सारा जहां हमारा

மில்ஜுல் கே ஹம் இஸ் வதன் கோ ஐஸா சஜாயேங்கே ஹம்

ஹைரத் ஸே முஹ் தகேகா ஸாரா ஜஹா() ஹமாரா

நாங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசத்தை உன்னதமாக்குவோம்

இதை இந்த உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும்!

Song: Cheen O arab hamara Film: Phir Shubah  Hogi  1958 Lyricist: Sahir Ludhianvi

MUsic: Khayyam  Singer: Mukesh Stunning song. Induces reflection

இந்தப் படத்தை நேருவின் சோஷலிச அரசு தடை செய்ய நினைத்தது.]

இது 1958ல் எழுதப்பட்ட பாடல். இப்போது நிலை  நல்லவிதமாக மாறியிருக்கிறதா?

அப்போது பம்பாயில் மட்டும் இருந்த நிலை இன்று ஒவ்வொரு ஊரிலும்வீட்டு நிலங்கள் எல்லாம் பில்டர்கள் கைவசம் வந்துவிட்டது! அரசினரும் இதற்கு உடந்தை! விலை ஆகாயத்தைத் தொடுகிறது!

அன்று படிப்பைப் பாதியில் விட்டவர்களுக்கு வேலை கிடைகவில்லை; இன்று படித்து முடித்தவர்களூக்கும் வேலையில்லை. மேலும் பட்டதாரிகள் கூட எந்த வேலைக்கும் தகுதியானவர்களாக  இல்லை. படிப்பு வேலைக்கான தகுதியைத் தருவதில்லை

According to surveys, more than 50% of the graduates, including engineering graduates, are considered “unemployable”.

சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் ஆகியும் அனைவருக்கும் வீட்டுவசதி கூட செய்துகொடுக்க இயலாத அரசுகள் அரசுகளா?

கீதையில் பகவான் சொல்கிறார்:

அநிகேத: ஸ்திரமதி: பக்திமான் மே ப்ரியோ நர:  12.19

வீடில்லாமல். ஸ்திர புத்தியுடன் உள்ள பக்தன் எனக்குப் பிரியமானவன்!

நம் அரசு நம்மையெல்லாம் வீடில்லாமல் செய்து பகவானுக்கு பிரியமானவர்களாக்குகிறது போலும்!

அல்லது யாதும் ஊரே என எண்ணவைக்கிறதோ!

மேற்கத்தியமுறை பொருளாதாரம் பரவிய இடங்களிலெல்லாம்அது முதலாளித்துவ மானாலும், கம்யூனிசசோஷலிச மானாலும்இப்படி மக்கள் அவதிக்குள்ளாயினர். நிலங்கள் எப்படி மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டன் என்பதை கோல்ட்ஸ்மித் எழுதுகிறார்:

The man of wealth and pride

Takes up a space that many poor supplied;

Space for his lake, his park’s extended bounds,

Space for his horses, equipage, and hounds:

The robe that wraps his limbs in silken sloth,

Has robbed the neighbouring fields of half their growth;

His seat, where solitary sports are seen,

Indignant spurns the cottage from the green:

Around the world each needful product flies,

For all the luxuries the world supplies.

While thus the land adorned for pleasure, all

In barren splendour feebly waits the fall.

[Oliver Goldsmith: The Deserted Village, 1770]

 200 ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தில் நடந்த கோரம் இன்று சுதந்திர இந்தியாவில் நடக்கிறது! Those who fail to learn from history are condemned to repeat it என்றார்  George Santayana. இதுதான் நடக்கிறது!

 கற்பனையில் வீடு!

நிஜ உலகில் வீடு கிடைக்காதவர்கள் என்ன செய்யவேண்டும்? கல்கி எழுதிய மாதிரி கற்பனை ஓடத்தில் ஏற வேண்டியதுதான்! இதையும் செய்கிறார் கவிஞர் ஷைலேந்த்ரா!

छोटा सा घर होगा बादलों की छाँव में आशा दीवानी मन में बंसुरी बजाये हम ही हम चमकेंगे तारो के उस गाँव में आँखों की रोशनी हर दम ये समझाये

சோடா ஸா கர் ஹோகா பாதலோ(ன்) கீ சாவ்(ன்) மே

ஆஷா தீவானீ மன் மே பன்ஸுரீ பஜாய்

ஹம் ஹீ ஹம் சம்கேங்கே தாரோ கே உஸ் காவ்(ன்) மே

ஆங்கோ கீ ரோஷ்னீ ஹர்தம் யே ஸம் ஜாய்

மேகங்களின் நிழலிலே நமக்கென்று ஒரு சிறிய வீடு இருக்கும்!

நம்பிக்கை அப்படித்தான் இந்த பித்து மனதில் பன்ஸூரி வாசிக்கிறது!

அந்த நட்சத்திர கிராமத்தில் நாமும் மின்னுவோம்

கண்ணின் ஒளி இதை நமக்கு உணர்த்துகிறது!

[ அந்த வீட்டில் என்ன நடக்கிறது? இதைச் சொல்கிறார் கவிஞர்]

चाँदी की कुर्सी पे बैठे मेरी छोटी बहना सोने के सिंहासन पे बैठे मेरी प्यारी माँ मेरा क्या मैं पड़ा रहूँगा अम्मी जी के पाँव में मेरा क्या मैं पड़ा रहूँगा अम्मी जी के पाँव में

சாந்தீ கீ குர்ஸீ பே பைடே மேரீ சோடீ பஹனா

ஸோனே கே ஸிம் ஹாஸன் பே பைடேமேரீ ப்யாரீ மா

மேரா க்யா மை படா ரஹூங்கா அம்மீ ஜீ கே பாவ் மே

என் தங்கைஅவள் வெள்ளி நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள்

என் அருமை அம்மாவோ தங்கச் சிம்ஹாஸனத்தில் அமர்ந்திருக்கிறார்

எனக்கென்னநான் அம்மாவின் காலடியில் விழுந்து கிடப்பேன்!

मेरी छोटी बहना नाज़ों की पाली शहज़ादी जितनी भी जळी हो मैं कर दूँगा इसकी शादी अच्छा है ये बला हमारी जाये दूजे गाँव में अच्छा है ये बला हमारी जाये दूजे गाँव में

மேரீ சோடீ பஹனா நாஜோ கீ பாலீ ஷஹ்ஜாதீ

ஜித்னீ பீ ஜல்தீ ஹோ மை கர் தூங்கி உஸ்கீ ஷாதீ

அச்சா ஹை யே பலா ஹமாரீ ஜாயே தூஜே காவ்(ன்) மே

என் தங்கைஅவள் ராஜகுமாரிபோல் அருமையாக வ்ளர்ந்தாள்

எவ்வளவு விரைவில் முடியுமோ அவளுக்கு மணம் முடித்து வைப்பேன்

நம் வீட்டு செல்லப்பெண் வேறொரு கிராமத்திற்குப் போவது நல்லது (புண்ணியம்)தானே

[ தங்கை மணமாகிப் போனதும் வீடு வெறிச்சோடிப்போகிறது. பையனுக்கு மணமாகி வீட்டிற்கு மருமகள் வரவேண்டுமே? கவிஞர் அடுத்து இதைச் சொல்கிறார்]

(different tune -) कहेगी माँ दुल्हन ला बेटा घर सूना सूना है मन में झूम कहूँगा मैं माँ इतनी जळी क्या है? गली गली में तेरे राज्दुलारे की चर्चा है आखिर कोई तो आयेगा इन नैनों की गाँव में आखिर कोई तो आयेगा इन नैनों की गाँव में

கஹேகீ மா துல் ஹன்லா பேடா கர் ஸூனா ஸூனா ஹை

மன் மே ஜூம் கஹூங்கா மை மா இத்னீ ஜல்தீ க்யா ஹை?

ஆகிர் கோயீ தோ ஆயேகா இன் நைனோ(ன்) கீ காவ்(ன்) மே

அம்மா சொல்லுவாள்: என் செல்லமே, வீடு வெறிச்சென்று இருக்கிறதே!

( விரைவில் மணம் செய்துகொள்)

மனதில் மகிழ்ச்சி பொங்க நான் சொல்வேன்: அம்மா, ஏன் இவ்வளவு அவசரம்?

ஆனால் கடைசியில் கண்ணின் மணியாக யாரோ வந்துதானே ஆகவேண்டும்!

என்ன கற்பனை பாருங்கள்! வீடு என்பது இன்றைய பில்டர்கள் காட்டுவதுபோல் நான்கு சுவர்களும் , ஃபர்னிசரும் பள பளக்கும் பாத்ரூம் ஃபிட்டிங்குகளும் அல்ல! எவ்வளவு இயற்கையான ஒரு நடுத்தரக் குடும்பத்தையும் அதன் ஆசை-லட்சியங்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். எல்லாம் உணர்ச்சி பொங்கும் எளிய சொற்கள்,

Song: Chhota sa ghar hoga Film: Naukri 1954 Lyricist: Shailendra

Music : Salil Chaudhury Singer: Happy version: Kishore KUmar { Sad version: Hemant Kumar] Sensitive movie, nice music.

இதன் பின்னணியில் ஒரு வரலாறு. கிஷோர் குமார் முறைப்படி சங்கீதம் பயிlலவில்லை.. அதனால் அவருக்கு சான்ஸ் தர ஸலில் சவுத்ரிக்கும் டைரக்டர் பிமல் ராய்க்கும் விருப்பமில்லை. இந்தப் படத்தில் கிஷோர்குமாரே நடித்தார் .ஆனாலும் அவரைப் பாடவைக்க ஸலில் சவுத்ரி இசையவில்லை. கிஷோர் யார்யாரிடமோ கெஞ்சிக் கூத்தாடி, கடைசியில் டைரக்டர் பிமல் ராயும் சலில் சவுத்ரியும் கிஷோரைப் பாடவைக்க அரை மனதுடன் இசைந்தனர்.இந்தப் பாட்டு கிடைத்தது. பெரிய ஹிட் ஆயிற்று. இது கிஷோரின் Iconic பாடல்களில் ஒன்றாக ஆனது. இந்தப் படத்தில் வேறு ஹிட் பாடல்களும் கிஷோர் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் சோக வடிவத்தை ஹேமன்த் குமார் பாடினார். இரண்டையும் யூட்யூபில் கேட்டு மகிழலாம்..

[ஆனால் கடைசிவரை பழம்பெரும் இசையமைப்பாளர் நௌஷத் கிஷோர்குமாரைப் பாடவைக்கவில்லை. ஒரே ஒரு பாட்டு ரிகார்ட் செய்து அதையும் பயன்படுத்தவில்லை. கிஷோர் குமார் பிரபலமான போது நௌஷதிற்கு மார்க்கெட்டே இல்லை!]

tags – ஹிந்தி  பாடல்கள் – 6 ,  உணவு, வீடு, R Nanjappa, Naukri, Baarish, பஹதூர்ஷாஃஜஃபர்

*********