
Written by London swaminathan
Post No.7638
Date uploaded in London – 1 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பழமொழிக் கதைகள்
ஒரு ஊரில் ஒரு ஏமாந்த சோணகிரி இருந்தான்; அவனைப் பார்த்ததாலேயே அசல் கூமுட்டை என்பது தெரியும். அவனைப் பார்த்தால் எருதும் கூட மச்சான் முறை கொண்டாடும். tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்’ என்பது பழமொழி அல்லவா?
ஒரு நாள் அவனுக்கு சூடான வடை சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது. அந்தக் கிராமத்திலோ உடுப்பி ஹோட்டல், ஐயர் மெஸ் உணவு விடுதி, சரவண பவன் எதுவும் கிடையாது. அந்த ஊரில் வடை சுட்டு விற்கும் ஒரு கிழவி இருந்தாள் ; அவளுக்கு இப்போதெல்லாம் (Business) ‘பிஸினஸ் கொஞ்சம (Dull) டல் . ஆகையால் பண முடை ; அந்த நேரத்தில் இந்த இளிச்சவாயன் போய், பாட்டி வடை சுட்டுத் தருவாயா ? உனக்கு என்ன கூலி ? என்று கேட்டான்.
“அட மவனே! உன்னைப் பார்த்து எவனாவது கூலி கேட்பானா? 15 வடைக்கு இவ்வளவு மாவு, எண்ணை , மற்றும் தேவையான மளிகை சாமான்களைக் கொண்டுவா , அதுவே போதும்” என்றாள்.
கெட்டிக்கார துஷ்ட! அவனும் மறு நாள் காலையில் அப்படியே கொணர்ந்தான் ; அதை வாங்கிக் கொண்ட கிழப் “பாட்டி மவனே! மத்தியானம் வாடா” – என்றாள் .
அவன் நாக்கில் ஜலம் ஊற மத்தியானம் திரும்பி வந்தான் ஒரு இலையில் அவனுக்கு பாட்டி, ஒரு வடையை வைத்து “சாப்பிடடா மவனே! “ என்று சொன்னாள் .
“ஏ கிழவி! என்ன, ஒன்னு தான் இருக்கு? மீதி வடை எல்லாம் எங்கே?” என்று சத்தம் போட்டான் .
“மவனே ; உப்பு போதுமா உரைப்பு போதுமா என்று ருசி பார்க்க நான்தாண்டா மிச்சத்தை எல்லாம் தின்னேன்” என்று கூசாமல் மொழிந்தாள் .
“அடிப் பாவி! கிழவி! எப்படி அவ்வளவையும் சில மணி நேரத்துக்குள் சாப்பிட்டாய் ? இது என்ன அக்கிரமம் ! அநியாயம்<” என்று திட்டிக்கொண்டே இருந்தான்.
அந்தக் கிழவி. இருந்த ஒரு வடையையும் வாயில் போட்டுக்கொண்டே “இப்படித்தான்டா சாப்பிட்டேன் என் அருமை மவனே !” என்று ஏப்பம் விட்டாள் .
Xxx

ஆமைக்கு இறக்கை உண்டா ?
ஒரு ஊரில் ஒரு ராஜா ; அவனுக்கு ஒரு பெண்ணரசி பிறந்தாள் ; பேரழகி ; வயதும் வந்தது . ராஜாவும் நல்ல இளவரசனைத் தேடினார் .
அப்பா, எனக்கு புத்திசாலியாகவும் அழகாகவும் உள்ள ஆண்மகன் வந்தால்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லிவிட்டாள் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
செய்தி பரவியது. பலரும் வந்தனர். இளவரசி கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டனர் ஒரு நாள் ஒரு ஆண் அழகன் வந்தான் . அட இவன் நமக்கு வாய்த்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தாள் .
அந்த நேரத்தில் பல்லி சொல் கேட்டது .
அந்த அழகன் கேட்டான் – “இது என்ன க்ளிக் க்ளிக் (Click, click) சப்தம்?
அவள் சொன்னாள் – ஓ அதுவா , வேறு ஒன்றும் இல்லை, சுவற்றில் உள்ள பல்லி போட்ட சப்தம் .
அப்படியா , உடனே போய் எனக்கு ஒரு இறக்கையை பிய்த்துக் கொண்டு வா என்றான் .
அவன் சரியான முட்டாள் பயல் என்று தெரிந்தது. போய் வா மகனே போய் வா என்று வெளியே தள்ளி கதவை சாத்தினாள்
இன்னும் கொஞ்சம் நாட்கள் உருண்டோடின . இன்னும் ஒரு ஆண்மகன் வந்தான் . நம் நேரத்தை வீண் அடிக்காமல் இந்த ஆளுக்கு முதலிலேயே டெஸ்ட் (Test) வைத்து விடுவோம் என்று நினைத்து சம்பாஷணையைத் துவக்கினாள் .
கொஞ்ச நாளுக்கு முன்னாலே ஒரு ஆள் வந்தான். பார்க்க நல்ல அழகு . ஆனால் பல்லி சொல் கேட்டும் அவனுக்கு பழக்கமில்லை. நான் பல்லி சப்தம் அது என்று சொன்னவுடன் , அப்படியா , அதிலிருந்து ஒரு இறக்கை கொண்டு வா என்றான் முட்டாள்- என்றாள்
இதை அவள் சொல்லி முடிப்பதற்குள் புதிதாக வந்த ஆண்மகன் வெடிச் சிரிப்பு சிரித்து விட்டு , tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஓ , அந்த முட்டாள் , அதை ஆமை என்று நினைத்து விட்டான் போல இருக்கு. அதான் ரெக்கை கேட்டிருக்கான் என்று சொல்லி மேலும் சிரித்தான்.
அவளும் போய் வா மகனே !போய் வா ! என்று பாடிக்கொண்டே அவனை வெளியே தள்ளி கதவை சாத்தினாள்.
‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழி சரிதான் என்று முனுமுனு த்தாள் .

Xxx subham xxxx
tags ஆமைக்கு இறக்கை, பாட்டி சுட்ட வடை