
Written by LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 26 NOVEMBER 2019
Time in London – 13-45
Post No. 7265
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பாதரசம் பற்றிய நேற்றைய கட்டுரையில் மெர்குரி எனப்படும் பாதரசத்தால் விஷம் (Mercury Poisoning) ஏறுவது ஏன் என்று விளக்கியிருந்தேன். அது எங்கெங்கு நிகழக்கூடும், அதன் அறிகுறிகள் என்ன, விளைவுகள் என்ன என்பதை மேலும் காண்போம். பாதரச
உலோகத்தின் மூலம் விஷம் ஏறுகிறதா அல்லது பாதரச உப்புக்கள் மூலம் விஷம் ஏறுகிறதா என்பதைப் பொறுத்து உடலின் பாதிப்பு இருக்கும். நுரையீரல், தோல், ஜீரண உறுப்புகள் மூலம் விஷம் உடலில் பரவும்.
விளைவுகள்
வாயில் உலோகத்தைச் சுவைத்தது (metallic taste) போலத் தோன்றும். தலைவலி, வாந்தி, வயிற்று வலியும் ஏற்படும். சில நாட்களுக்குப் பின்னர் உமிழ்ழ்நீர் (salivary glands) சுரப்பிகள் வீங்கும்; ஆதலால் நிறைய எச்சில் சுரக்கும். பின்னர் பற்கள் ஆட்டம் காணும்.
தொழிற்சாலைகளில் ஏறும் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட காலத்துக்கு ஏறுவதால் வேறு விதமான விளைவுகளைக் காணலாம். இது களைப்பு, தூக்கமின்மை, பலவீனம், ஞாபக சக்திக் குறைவினை உண்டாக்கும். மனத்தொய்வு, பிறர் மீது சந்தேகப் படுதல் (Paranoia) முதலியன ஏற்படும்; கை நடுக்கத்தினால் எழுத்துக்கள் கோணும்.
1810-ம் ஆண்டு விபத்து
1810-ல் ஸ்பெயின் நாட்டிலிருந்து லண்டனுக்கு, சிறிய கப்பலில் பாதரச பிளாஸ்குகளை கொண்டு வந்தனர். புயல் வீசியதால் அதில் ஒன்று உடைந்தது. இதன் மூலம் பரவிய விஷத்தால் மூவர் இறந்தனர். 200 பேர் பாதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்த ஆடு மாடுகள் அனைத்தும் இறந்துபோயின.
குற்றம் நடந்த இடங்களில் தடயங்களை ஆராயும் குற்றவியல் நிபுணர்களுக்கும் இது ஆபத்தாக விளங்குகிறது. ஏனெனில் அங்கு பயன்படுத்தும் (Dusting) பொடியில் பாதரசம் இருக்கிறது.
ஆங்கிலத்தில் ஒரு மரபுச் சொற்றொடர் ‘தொப்பிக்காரன் போல பைத்தியம்’ (Mad as a hatter) என்பதாம். அதாவது தொப்பித் தொழிலில் ஈடுபட்டவர்கள் பாதரச உப்புக்களைப் பயன்படுத்தியதால் பைத்தியக்காரான் போல நடந்து கொண்டனர். இது அவர்களின் உடலில் பாதரசம் ஏறியதால் ஏற்பட்ட விளைவு. அதிகமான பாதரசத்தை சிறுநீர், மலம் மூலம் உடல் வெளியேற்றும். பாதரச விஷம் ஏறியவர்களுக்கு விஷத்தை முறிக்க மருந்துகள் கிடைக்கின்றன.
வரலாறு
பாதரசம் 118 மூலகங்களில் ஒன்று.
30,000 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆதி மனிதர்கள் ஸ்பெயின் குகைகளில் சின்ன பார் எனப்படும் மெர்குரி சல்பைடை (Mercury sulphide) வண்ணம் ஏற்றப் பயன்படுத்தினர். குர்னா (Kurna) என்னும் எகிப்திய நகரில் 3,600 ஆண்டுகளுக்கு முன்னர் பாதரசம் பயன்படுத்தப்பட்டது. அதை தேங்காய் வடிவக் குடுவையில் வைத்து இருந்தனர்.
சின்னபார் (Mercury sulphide) என்னும் சிவப்பு நிற உப்பை உருக்கி பாதரசம் எடுத்ததை சீன ரசவாதி கு ஹோங் (281-361) எழுதிவைத்துள்ளார். அரிஸ்டாடில், ப்ளினி ஆகியோரும் இதை அறிந்திருந்தனர். ரோம் ஆண்டுதோறும் 4 டன் பாதரசத்தை வாங்கியதாக ப்ளினி கூறுகிறார்.
ஸ்பெயின் நாட்டிலுள்ள அல்மேடன் சின்னபார் சுரங்கம் 2500 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது.. தென் அமெரிக்காவின் இன்கா (Incas) நகரீகம் இதை அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தியது.

பொருளாதார உபயோகம்
சின்னபார் (cinnabar) என்னும் பாதரச உப்பை உருக்கினால் பாதரசம் கிடைக்கும். இது ஸ்பெயின், ரஷ்யா, சீனா, இதாலி, ஸ்லோவீனியவில் அதிகம் கிடைக்கிறது; பாதரசத்தை குடுவைக் (Flask) கணக்கில் விற்கிறார்கள். ஒரு குடுவையில் 34-5 கிலோ அல்லது 76 பவுண்டு எடை உள்ள பாதரசம் இருக்கும்.
சோளப் பயிரைப் பாதுகாக்க இது பயன்பட்டது. ஆனால் இதில் 280 பேர் இறந்ததால் கைவிடப்பட்டது. காளான் வகை (Fungal disease) நோய், பயிரைத் தாக்காமாலிருக்க பாதரச உப்புக் கரைசல் தெளிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் முதலியவற்றில் இதைப் பயன்படுத்துவது குறைந்து விட்டது மின்சார கியர், சுவிட்சுகள், மின் விளக்குகள், பாட்டரிகளில் இப்போது பயன்படுகிறது.
கில்டிங் (gilding) எனப்படும் முலாம் பூசும் தொழிலில் இது பயன்படுகிறது ஆயினும் அதனால் விஷம் பரவியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ் பர்க் நகர மாதாகோவிலுக்கு 100 கிலோ தங்க முலாம் பூசியபோது 60 தொழிலாளர்கள் பாதரச விஷம் ஏறி இறந்தனர்.
கழிவுப்பொருள்களில் இருந்து டன் கணக்கில் பாதரசம் கிடைக்கிறது. மனிதர்கள் பயன்படுத்திய பாட்டரிகள், பல் செட்டுகள் ஆகியவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான டன் பாதரசம் கிடைக்கிறது.
ஜப்பானில் நடந்த மீனமாட்டா குடா விபத்து (Minamata Bay Disaster) எல்லோரும் அறிந்ததே. ஒரு தொழிற்சாலைக் கழிவுகள் கடலுக்குள் விடப்பட்டு அதை உண்ட மீன்கள் மூலம் மனிதர்களும் பாதிக்கப்பட்டனர். 10,000 பேருக்கு மினமாட்டா நோய் ஏற்பட்டது (மெர்குரி விஷ ஏற்றம்). பின்னர் அப்பகுதியில் மீன் பிடிப்பதை தடை செய்தனர்.
tamilandvedas.com › 2019/11/25 › பாதரசம்-…
பாதரசம் என்னும் அற்புத உலோகம் …
23 hours ago – பாதரசம் என்னும் அற்புத உலோகம்; விண்ணில் பறக்க உதவுமாம்- 1! … தலை முடியில் | Tamil and Vedas. 5 Sep 2018 … tamilandvedas.com › 2019/11/06 › பாதரச-ம…
tamilandvedas.com › tag › தலை-முடிய…
தலை முடியில் | Tamil and Vedas
5 Sep 2018 – நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396). Written by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 5 September 2018. Time uploaded in …
tamilandvedas.com › 2018/09/07 › பைத்தி…

பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post …
7 Sep 2018 – பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post No.5401). written by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 7 September 2018. Time uploaded in London – 6-47 am (British Summer Time). Post No.
tamilandvedas.com › 2019/11/06 › பாதரச-ம…
6 Nov 2019 – பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்! … this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
–subham–

