WRITTEN by London swaminathan
Date: 21 August 2018
Time uploaded in London – 6-54 AM (British Summer Time)
Post No. 5346
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
மொகலாய மன்னர்களில் பாபர் (1483-1530) முதலாமவர். அவர் காலத்தில் துருக்கி இனத்தவர்கள் பழைய கால பழக்க வழக்ககங்களை அப்படியே பின்பற்றி வந்தனர். அவை எல்லாம் இஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னமே இருந்தவை. பாபர், முஸ்லீமாக இருந்த போதும் அந்த வழக்கங்களைப் பின்பற்றியது அவர் பற்றிய பாபர் நாமா புஸ்தகத்தில் உள்ளது.
பாபர் தனது சுயசரிதையை அவரது சாகதாய் மொழியில் எழுதினார். அவர் தைமூரின் கொள்ளுப்பேரன். அக்பரின் தாத்தா. இதனால் அக்பர் காலத்தில் பாபர் நாமாவை ஓவியமாக வரைந்து தர அக்பர் ஆணையிட்டார். அவை இப்பொழுது டில்லியில் தேசீய மியூஸியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் இந்துக்களின் புனித தெய்வமான பசுவைப் பற்றிய ஒரு அதிசயப் படம் உள்ளது. துருக்கி-இராக் பகுதிகள், வேத கால அரசர்களின் கீழ் இருந்ததால் இந்த வழக்கம் வேத கால வழக்கமாகவும் இருக்கலாம். கி.மு 1400 வாக்கில் துருக்கி வரை இந்துக்களின் ஆட்சி பரவி இருந்தது.
பாபர் நாமாவில் நாலாவது படத்திலுள்ள காட்சி இதோ:
“மன்னர் குதிரையிலிருந்து இறங்கினார். அவருக்கு முன்னால் ஒன்பது அலங்காரச் சின்னங்கள் இருந்தன. ஒரு மொகலாய வீரன் பசுவின் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டி அதன் மறு முனையை தன் கையில் பிடித்திருந்தான். மேலும் மூன்று வெள்ளைத் துணிகள் ஒன்பது அலங்காரக் கம்பங்களில் மூன்றில் கட்டப்பட்டன. அவைகளில் ஒரு வெள்ளைத் துணியின் மீது பாபர் நின்றார். அப்பொழுது பசுவில் கால் துணியைப் பிடித்திருந்தவன், ஏதோ சில உச்சாடனங்களை அவனது பாஷையில் மொழிந்தான். அப்பொழுது அவன் அந்த ஒன்பது அலங்காரக் கம்பங்களைப் பார்த்து ஏதோ முத்திரைகளைக் காட்டினான். மன்னனும் மற்ற பெரியோர்களும் குதிரையின் பாலை அந்தச் சின்னங்கள் மீது ப்ரோக்ஷனம் செய்தனர் (தெளித்தனர்). உடனே பின்னால் நின்ற படை வீரர்கள் போர்க்கால வெற்றி முழக்கமிட்டனர். இதை அவர்கள் மூன்று முறை செய்தார்கள். அப்பொழுது வாத்தியக் காரர்கள் முரசுகளை அடித்து எக்காளமிட்டனர். இந்த வாத்ய கோஷத்துக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் கோஷமிட்டவாறே அந்தச் சின்னங்களைச் சுற்றி ஓடி வந்தார்கள்.”
இந்த சடங்கு புதிய மன்னர்களை வரவேற்று அங்கீகாரம் அளிக்கும் சடங்கு ஆகும்.
இந்த வழக்கம் செங்கிஸ்கான் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டதற்கான சான்று உளது.
எவ்வாறு கிறிஸ்தவ மதம் பரவிய நாடுகளில் எல்லாம் பழங்கால வழக்கங்கள் அந்த மதத்தில் இணக்கப்பட்டனவோ அவ்வாறே இன்றும் இஸ்லாமிய நாடுகளில் குறிப்பாக வேத கால மன்னர் ஆட்சி நடந்த துருக்கி-இராக்-ஈரான் பகுதிகளில் உள்ளன. முஸ்லீம் மதத் தலைவர்கள் கண்டிப்பதனால் மறைவாக அவைகளைச் செய்கின்றனர். அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.
கிருஷ்ணனின் யாதவ குலத்தில் 12-ஆவது மன்னனான கஜன் என்ற மன்னன் ஸ்தாபித்த நகர்தான் ஆப்கனிஸ்தானத்திலுள்ள கஜினி. அங்கிருந்து முகமது என்ற மன்னன் குஜராத் மீது 17 முறை படையெடுத்து சோமநாத சிவலிங்கத்தை உடைத்து அதன் கீழேயிருந்த தங்கம் வைரம் எல்லாவற்றையும் கொள்ளை அடித்ததை நாம் அறிவோம். அந்த கஜினி நகரம் யாதவ குல மன்னர்களின் கீழ் 101 தலைமுறைக்கு மேல் இருந்தது. அதன் 74ஆவது மன்னன் கஜ சிங். அவனது காலத்தில் அவர்கள் கஜினியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள ஜ்வாலாமுகிக்கு வந்தனர். அதில் ஒருவன் சாலிவாஹனன் என்ற மன்னன். அவன் சாலிவாஹனபுரத்தை ஸ்தாபித்தான். அதன் பெயர் சாலாபுரம் என்றும் சியால் கோட் என்றும் மருவின; இப்பொழுது சால்கோட் (டை) பாகிஸ்தானில் உள்ளது. சாலிவாஹனனனுக்கு பத்து மகன்கள். அவர்களில் ஒருவன் பட்டி. அந்த பட்டி என்போன் மீண்டும் கஜினியை வென்று 101 தலைமுறை ஆட்சியைக் கொண்டாட ஹரோத் என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினான்.
எவ்வாறு புத்த மதத்தினர், இலங்கையிலுள்ள ராமாயண சின்னங்களை மறைத்தனரோ அவ்வாறே முஸ்லீம்கள் ஆட்சி ஏற்பட்ட ஈரான் முதல்- இந்தோநேஷியா வரை இந்துச் சின்னங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவை அந்த நாடுகளின் மியூஸியங்களில் இன்றும் உள. அவைகளை அறவே ஒழித்தால் அந்த நாடுகளின் வரலாறு எல்லாம் முகமது நபிக்குப் பின்னர் என்று ஆகிவிடுமே என்று அஞ்சி, இன்னும் மியூஸியங்களில் பழம்பொருட்களை வைத்துள்ளனர். பாமியன் புத்தர் சிலைகளையும் இராக்கில் உள்ள புனிதச் சின்னங்களையும் சமீப காலங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அழித்ததை நாம் பத்திரிக்கைகளில் படித்தோம். எஞ்சியுள்ளவைகளை விரைவில் புகைப்படம் எடுத்து அவற்றின் வரலாற்றை எழுதுவது இந்துக்களின் கடமை.
-சுபம்–
You must be logged in to post a comment.