
Post No. 9859
Date uploaded in London – 17 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்பு மொழி பத்து : பொன்னொளிர் பாரதம்!
ச.நாகராஜன்
01) உலகின் ஆதி நூல் பிறந்த இடம் பாரதம் தான். இவை வேதங்கள் எனப் படுகின்றன. ஆச்சரியமான விஷயம், இவை அனைத்தும் என்று பிறந்ததோ அதே வடிவில், அதே உச்சரிப்புடன் , வாய் மொழியாகவே பரம்பரை பரம்பரையாக வந்து இன்றளவும் காக்கப்பட்டு வருகின்றன!
02) உலகின் மாபெரும் இதிஹாஸங்கள் பாரதத்திலேயே தோன்றியுள்ளன. அவையாவன: 1) மஹாபாரதம் 2) ராமாயணம்.
கிரேக்க இதிஹாஸங்களான இலியட் மற்றும் ஒடிஸியை விடப் பெரியது மஹாபாரதம்!
03) தேசம் என்ற கருத்தை மிகச் சாதாரணமாக நமது முன்னோர்கள் கூறி விட்டனர். “மாதா பூமிஹி, புத்ரோஹம் ப்ருதிவ்யாஹ” – “இந்த பூமியே நமது அன்னை; நான் இதன் புதல்வன்” – இந்தக் கருத்தை பன்னெடுங்காலம் முன்பே கூறிய பூமி பாரதமே!
04) நமது பழம் பெரும் புராணமான பாகவதம் கூறுகிறது : “கோடிக்கணக்கான ஆண்டுகள் சுவர்க்கத்தில் வாழ்வதை விட ஒரு சில கணங்கள் பாரதத்தில் வாழ்வது சாலச் சிறந்தது”
05) பல தத்துவங்கள், பல மொழிகளைப் பேசுவோர் இணக்கமாக வாழும் நம ஒருமைப் பாட்டை பழம் பெரும் வேதமான அதர்வண வேதம் கூறி இருக்கிறது :”நமது இந்த அன்னை பூமி பல மொழிகளைப் பேசுவோருக்கும், பல தத்துவங்களைப் பின்பற்றுவோருக்கும் சமமான புகலிடத்தைத் தருகிறது.”
ஜானம் பிப்ரத பஹுதா விவாசஸ்ம்
நானா தர்மாணம் ப்ரித்வி ய்தோகுசம்
06) உலக அன்னை இந்தியா
நம் இனத்தின் தாயகம் பாரதம். ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் தாய் சம்ஸ்கிருதம். நம் தத்துவ சாஸ்திரத்தின் தாய் இந்தியா. கிறிஸ்துவ சமய லட்சியங்களுக்கெல்லாம், புத்தரின் மூலம் உதவிய தாய் இந்தியா. சுய ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும், கிராம சமுதாயத்தின் மூலம் வழிகாட்டிய தாய் இந்தியா. இந்திய மாதா நம் அனைவருக்கும் அநேக வழிகளில் தாய்.
-வில் டியூரண்ட், தத்துவ சாஸ்திர அறிஞர்
07)இந்தியாவின் காரியம் உலகத்தின் காரியம்; இறைவனின் காரியம். இறைவனே நம் மாலுமி. நம் லட்சியத்தை நோக்கி நம்மை அவன் இட்டுச் செல்வான்.
– மஹரிஷி அரவிந்தர்
07) இந்தப் பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொன்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால், பூவுலக ஆன்மாக்கள் தம் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால், இறைவழியை நோக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனிதகுலம் அன்பின் சிகரத்தை, பரந்த உள்ளத்தின் உச்ச நிலையை, தூய்மையின் உயரத்தை, அமைதியின் எல்லையை, எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் – அது தான் பாரதமாகும்.
08)
– ஸ்வாமி விவேகானந்தர் (எழுமின், விழிமின் நூலிலிருந்து தொகுப்பு திரு ஏகாநாத்ஜி ரானடே தமிழில் ஆர். கோபாலன்)
09) புராதன இந்தியா அசாதாரணமான சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
– தார்ன்டன் (Mr Thornton)
10) எல்லா எழுத்தாளர்களின் ஒருமித்த கருத்துப்படி இந்தியா உலகில் அனைவரும் ஏற்கும் வசிப்பிடமாகும். உலகின் மிக இன்பமான ஒரு பகுதியாகும். அதன் புழுதி காற்றை விட சுத்தமானது. அதன் காற்றோ தூய்மையைக் காட்டிலும் தூய்மையானது
அப்துல்லா வஸாஃப் – 14ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த வரலாற்று ஆசிரியர் ( Abdulla Wassaf – 14th Century Historian)
***
INDEX
பாரதம், ஆதிநூல் வேதம், இன்றும் இருப்பவை;மஹாபாரதம், இராமாயணம்,
சுவர்க்க வாழ்வை விட பாரத வாழ்வு சிறந்தது, பல தத்துவங்களுக்கும் சமமான இடம்,சம்ஸ்கிருதம், புத்தர், அனைவருக்கும் தாய், இந்தியாவின் காரியம் உலகத்தின் காரியம், அரவிந்தர், ஆன்மாவின் இறுதி வீடு, புனித புண்ணிய பூமி, விவேகானந்தர், எழுமின் விழிமின் நூல், ஏக்நாத்ஜி ரானடே, R. கோபாலன், தார்ன்டன், பாரத புழுதி காற்றை விட தூய்மை; காற்று தூய்மையை விட தூய்மை, அப்துல்லா வஸாஃப்
tags – பொன்னொளிர் ,பாரதம்,

You must be logged in to post a comment.