பெண்ணே! கேலிச் சித்திரம் வேண்டவே வேண்டாம்! பிரபல ஓவியர் புத்திமதி! (6277)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 18 April 2019


British Summer Time uploaded in London – 8-28 am

Post No. 6277

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

‘பாரதிதாசன் பாடலுக்கு இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு!’ (Post No.3865)

Written by London swaminathan

Date: 30 APRIL 2017

Time uploaded in London:-6-51  am

Post No. 3865

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று “துன்பம் நேர்கையில்…………..” என்ற பாடல். இது திரைப்படத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு இசை அமைத்தவர் திக்கெட்டும் தமிழ் இசை மணம் கமழ வைத்த M M தண்டபாணி தேசிகர் ஆவார். இதற்கு இசை அமைக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆயிற்றாம். இது அவரே சொன்ன செய்தி. இதற்கு மிகவும் பொருத்தமான ராகம் ‘தேஷ்’ என்னும் ராகம்தான் என்கிறார் தேசிகர்.

 

ஒரு பாட்டின் பொருளுக்கேற்ற ராகத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் என்கிறார். யார் ஒருவர் பாட்டு எழுதினாரோ, அவருக்கு சங்கீத ஞானம் இருந்தால் அவரே அந்த பாட்டுக்கு ராகமும் போட்டுவிடுவார். பாரதி பாடல்களுக்கு அவரே அமைத்த ராகங்களை பழைய பதிப்புகளில் காணலாம்.

தண்டபாணி தேசிகர் சொல்கிறார்:

“இந்த பாட்டுக்கு சரியான ராகத்தைக் கண்டுபிடித்து இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு. இதற்கு தேஷ் ராகம்தான் பொருத்தம். பாருங்கள்! நான் இதையே அடானா ராகத்தில் பாடுகிறேன் (தேசிகர் பாடியும் காட்டுகிறார்). இப்படி அடானா ராகத்தில் பாடினால், வருத்தமுற்ற பெண் ‘அம்மா, அப்பா’ என்று அழுதுகொண்டு ஓடிப் போய்விடும். பொருளுக்கேற்ற ராகம் இருக்க வேண்டும். இதை வள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்தார்:-

 

பண் என்னாம் பாடற்கு

பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண் — குறள் 573

 

பொருள்:-

பாடலின் பொருளோடு இயைந்து வராத பண்ணால் (ராகத்தால்) என்ன பயன்?  அதைப்போல கண்ணோட்டத்துடன் (இரக்கம், அருள்) பொருந்தாத கண்ணால் என்ன பயனுண்டாகும் ?”

 

இதிலிருந்து வள்ளுவனுக்குள்ள சங்கீத ஞானமும் புலப்படும்

 

இதோ பாரதிதாசனின் முழுப்பாடல்:–

 

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? — எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? — நல்
லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்கமாட் டாயா? — கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா?     …… துன்பம்…

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க — எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க — நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? — கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா?   — துன்பம்…

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது — யாம்
அறிகி லாத போது — தமிழ்
இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? — நீ
இயம்பிக் காட்டமாட் டாயா?       —துன்பம்…

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் — தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் — நல்
திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? — தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா?   துன்பம்…

——-பாவேந்தர் பாரதிதாசன் (Poem is taken from Project Madurai website)

xxx

 

 

திரு எம் எம் தண்டபாணி தேசிகரின் வெண்கல குரலில் அவர் இயற்றிய பிரபல பாடலை தேஷ் ராகத்தில் கேளுங்கள் இங்கே

https://www.4shared.com/…/o…/Thunbam_nergaiyil_Desh_MMD.html

 

–Subahm–

பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி

bharatidasan
April 29 is the birth day of Poet Bharatidasan (1891—1964)

By London Swaminathan
Post No.1009; Date:29 April 2014.

கேள்விகள் எனது கற்பனையில் பிறந்தவை; பதில்கள் பாரதிதாசனின் பாடல்களில் ஏற்கனவே இருப்பவை!!

கேள்வி: பாரதிதாசன் அவர்களே, குரு பக்தியில் யாருக்கும் சளைக்காத நீவீர் உங்கள் குரு தேசிய கவி சுப்பிரமணிய பாரதி பற்றி……….

பாரதிதாசன் பதில்:

“ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை !
குவிக்கும் கவிதைக் குயில் ! இந் நாட்டினரைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு !
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா !
காடு கமழும் கற்பூரச் சொற்கோ !
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் !
திறம் பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்: நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து !
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் !
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் !
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் !
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”

கே: அருமையான பதில்; பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர் நீங்கள்; நினைவில் நின்ற ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாமே!

பதிள்: ஒரு நாள் நம் பாரதியார் நண்பரோடும்
உட்கார்ந்து நாடகம் பார்திருந்தார், அங்கே
ஒரு மன்னன் விஷமருந்தி மயக்கத்தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்
இருந்த இடந்தனிலிருந்தே எழுந்துலாவி
‘’என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே
வருகுதையோ’’ என்ற பாட்டைப் பாடலானான்;
வாய்பதைத்துப் பாரதியார் கூவுகின்றார்;
மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ளுவதுதானே
வசங்கெட்ட மனிதனுக்கு பாட்டா என்றார்!
தயங்கிப் பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம்
சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை!

கே: அது சரி, உங்களுக்கு பிடித்த ஒரே பார்ப்பனர் பாரதியார். பிடிக்காத பார்ப்பனர்கள் யார், யார்?

ப: குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்
குருநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
கொல்வித்த தமிழர் நெஞ்சும்
படியேறும் சமண் கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலைப் புரிந்திட்ட பல்லாயிரங்கொண்ட
பண்புசேர் தமிழர் நெஞ்சும்

Bharatidasa Uni

கே: போதும், போதும்! அடுத்த கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தீபாவளிப் பண்டிகை பிடிக்காதாமே?
ப:- நரகனைக் கொன்ற நாள் நல்விழா நாளா?

நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
இப் பெயரெல்லாம் யாரைக் குறிப்பன?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச் சிலர்
பன்னுகின்றனர் என்பது பொய்யா?

கே: ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்” என்று பிங்கலந்தை நிகண்டு கூறுகிறது. அழகிய இள மகளிரை “தமிழ் தழீய சாயலவர்” என்று திருத்தக்க தேவர் சிந்தாமணியில் புகழ்கிறார். உங்கள் கருத்து என்னவோ?

ப: தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தில் விளைவுக்கு நீர்!

கே: அற்புதமான பாடல்; நீங்கள் ஏதோ போர் இல்லாத உலகம் பற்றி எல்லாம் கனவு காண்பதாகக் கேள்வி?
ப:- புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்.

கே: தமிழ் சினிமா பற்றி உங்கள் கருத்து?

ப: என் தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக
ஒன்றேனும் தமிழர் நடையுடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை; உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

கே: நீங்கள் நிறைய காதல் பாட்டுக்கள் பாடி இருக்கிறீர்கள். சில வரிகளைக் கேட்க ஆசை……………….

ப: பாழாய்ப் போன என் மனம் ஒரு நாய்க்குட்டி- அதைப்
பறித்துக்கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
உன் மேனி ஒரு பூந்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி
***
ஆவணி வந்தது செந்தேனே – ஒரு
தாவணியும் வாங்கி வந்தேனே – எனைப்
போவென்று சொன்னாய் நொந்தேனே – செத்துப்
போகவும் மனம் துணிந்தேனே!

கே: நீங்கள் தமிழ் இளைஞருக்கு விடுக்கும் செய்தி…………………..
ப: தமிழன் எலி அன்று
தாவும் புலி என்று – நீ
தாரணி அறியச் செய் இன்று.

barathidasan_(sega_graphi_) (1)

கே: நீங்கள் எழுதிய விடுகதைக் கவிதையில் ஒரு சில வரிகள் சொல்லுங்கள்;
ப: ஆமை, அருமை, பெருமை, சிறுமை
அடிமை, கடுமை, மடமையே
ஊமை, உண்மை, இன்மை, இளமை
உரிமை, திறமை, இவைகளில்,
தீமை செய்து பாரதத்தைச் சீரழிப்பது எது சொல்வாய்?
நாமடைய வேண்டுவதையும் நன்கு பார்த்துக் கூறுவாய்.
(விடைகள்:- சீரழிப்பது- அடிமை; அடைய வேண்டியது: உரிமை)

கே: இறுதியாக உங்களின் இயற்பெயர்?
பதில்:–என் பெயர் சுப்புரத்தினம், என் தாய் பெயர் லெட்சுமி அம்மாள், என் தந்தை பெயர் கனகசபை முதலியார்.
நன்றி கவிஞரே. 60 நொடிகளுக்குள் புதுமைக் கருத்துக்களச் சொல்லி சிந்திக்கவைத்தீர். உம் புகழ் தமிழ் போல் வாழ்க!!!

இதே வரிசையில் ஏற்கனவே நான் எழுதிய கற்பனைப் பேட்டிகளையும் படியுங்கள். இதோ பட்டியல்:
இதுவரை வெளியான 60 வினாடி பேட்டிகள்
அருணகிரிநாதர் (posted 17-1-12), அப்பர், ஆண்டாள்(20-1-2012), பாரதியார், கண்ணதாசன், கம்பன் (posted 17-1-12), கிருஷ்ணன், சாக்ரடீஸ் (Eng & Tam), மாணிக்கவாசகர் (posted 15-1-12), ராமலிங்க சுவாமிகள், தாயுமானவர், பட்டினத்தார், , சிவ வாக்கியர் (posted 22-1-12), திருவள்ளுவர், திருமூலர், திருஞான சம்பந்தர், திரிகூட ராசப்ப கவிராயர், இளங்கோ, ஒரு நிமிட பகவத் கீதை, சீத்தலைச் சாத்தனார், தியாகராஜர், சுந்தரர் ( posted 21-2-12),
bharathidasan

In English:—
60 Second Interviews with Swami Vivekananda15-1-12, Sathya Sai Baba, Adi Shankara posted on 16-1-12,Buddha, Socrates, ONE MINUTE BHAGAVAD GITA (Eng and Tam)

contact swami_ 48@ yahoo.com
*******

‘இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு’

 

Pictures are drawn by Maniam Selvam for another book.Thanks.

வணக்கம். என் பெயர் நக்கீரன். சென்ற 4 வாரங்களில் ‘சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை’,  ‘மன்னிக்க வேண்டுகிறேன்”,  “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”,  ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்புகளில் பேசினீர்கள். இன்று நாம் அலசும் விஷயம் ‘’இன்பம் எங்கே?’’ யார் வேண்டுமானாலும் விவாதத்தைத் துவக்கி வைக்கலாம்.

 

திருமூலர்:

நான் பாடியதை முதலில் படியுங்கள், இன்பம் என்ன என்று விளங்கும்:

“முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்” (திருமந்திரம்)

“யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உயர் திருமந்திரம்தான்

தான் பற்றப் பற்ற தலைப்படும்தானே”  (திருமந்திரம்)

(இறை வழிபாடே இன்பம் தரும்)

‘’ஆசை விடவிட ஆனந்தம் ஆகுமே’’

 

வள்ளுவர்:

என்னுடைய குறளில் 29 இடங்களில் இன்பம், இன்புறுவது என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்.

‘’அறத்தான் வருவதே இன்பம்’’ (குறள் 39) (தருமத்தைப் பின்பற்றினால் இன்பம் கிடைக்கும்)

‘’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’ (குறள் 65) (குழந்தைகள் இன்பம் தருவர்)

‘’இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்’’ (98) (இன்சொல் இன்பம் தரும்)

‘’இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்’’ (ஆசையை ஒழித்தால் இன்பம்)

‘’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப்பெறின்’’ (1330) (கணவன் –மனைவி ஊடல் பின்னர் சமாதானத்தில் முடியும்போது கூடுதல் இன்பம் தரும்)

 

அப்பர்=திருநாவுக்கரசர்

நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்

ஏமாப்போம் பிணி அறியோம் இடர்வோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை. . . . .

 

மாணிக்கவாசகர்

‘’ இன்ப ஊர்தி ‘’ (சிவ பெருமான்)

‘’பால் நினைந்தூட்டும் தாயினும்

சாலப் பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து

புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே’’

 

’ஆராத இன்பம் அருளும் மலை போற்றி’’

 

நம்மாழ்வார்

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதுஇல தந்திடும்

என் வள்ளலேயோ (திவ்யப் பிரபந்தம் 3298)

தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே (திவ்யப் பிரபந்தம் 3834)

 

தாயுமானவர்

‘’எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி

யாமொன்றும் அறியோம் பராபரமே’’

 

பாரதிதாசன்

அட நான் கூடத்தான் இன்பத் தமிழ் பற்றிப் பாடிய பாடலில்

தமிழுக்கும் அமுதென்று பேர்—அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று ஒரே பாடலில் ‘’இன்பத் தமிழ்’’ என்ற சொல்லை எட்டு முறை பயன்படுத்தி தமிழ்தான் இன்பம் என்று நிரூபித்திவிட்டேன்.

பாரதி

என் சீடன் பாரதிதாசன் கூறியது முற்றிலும் உண்மையே. அத்தோடு சுதந்திரமும் ஆனந்தம் தரும். உலகே ஒரு இன்பக் கேணி என்று வேதம் சொல்லுவதையும் கணக்கிற் கொள்ள வேண்டும். இதோ கேளுங்கள்;

‘’செந்தமிழ் நாடெனும் போதினிலே—இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே’’

‘’ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’’

‘’ஒன்று பரம் பொருள்- நாம் அதன் மக்கள்

உலகு இன்பக் கேணி என்றே- மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை’’

‘’தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா

உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையா நந்தலாலா’’

‘’தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்’’

 

அருணகிரி

‘’என் பிறப்பு பங்கம் சிறைப்பங்கம் சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே’’ (முருகன் திரு அடியே இன்பம்)

‘’சுரர்ச் சங்கம் துதித்து அந்தஞ்சு எழுத்து இன்பம் களித்து உன்பண் சுகத்த உய்ந்து இன்பு அலர்’’ (ஐந்தெழுத்தே இன்பம்)

தொல்காப்பியர்:

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (தொல்காப்பியம்)

சினிமா பாட்டு

மருதகாசி: ஐயா, என் பெயர் மருத காசி. நான் எழுதிய பாடலில் இன்பம் என்றால் என்ன என்று சினிமா பாட்டு வடிவிலேயே சொல்லிவிட்டேன்; நல்ல மனைவியும் மக்களும் தான் ஒருவனுக்கு இன்பம் தருவர்:

இன்பம் எங்கே இன்பம் எங்கே – (திரைப்படம்: மனமுள்ள மறுதாரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்)

 

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (2 முறை)
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை – இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை (2 முறை)
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் (2 முறை)
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் (2 முறை)

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் – உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

 

நக்கீரன்

நன்றி. தேச சுதந்திரம், ஆன்ம சுதந்திரம், தமிழ் மொழி, நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், முருகன் திருவடி, சிவபெருமான், ஐந்தெழுத்து, விஷ்ணு, இறை வழிபாடு, தருமம் என்பன எல்லாம் இன்பம் பயக்கும் என்று அருமையான கருத்துக்களை முன் வைத்தீர்கள். ஆயினும் 29 குறட் பாக்களில் இன்பம் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவனுக்கு எல்லோரும் ஒரு ‘’அப்ளாஸ்’’ கொடுக்கும் படி வேண்டுகிறேன். நமது அடுத்த வார தலைப்பு ‘’வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’’ (பலே பாண்டியா திரைப் படம்) நன்றி, வணக்கம்.

 contact swami_48@yahoo.com