மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36 (Post No.4144)

Written BY S NAGARAJAN

 

Date: 10 August 2017

 

Time uploaded in London:- 5-22 am

 

 

Post No.4144

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36

பாரதிதாசன் கவிதைகள்!

 

ச.நாகராஜன்

 

பாரதியாருடன் நெருங்கிப் பழகி அவரது கவிதா சந்நிதானத்தில் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்ந்தவர்; பாரதியின் புகழை இடைவிடாது பரப்பியவர்; பாரதியாருக்குத் தன் அருமையான கவிதைகளினால் புகழாரம் சூட்டியவர் – இத்தனை பெருமைக்கும் உரியவர் பாரதிதாசன்.

 

புதுவையில் வாழ்ந்த காலத்தில் பாரதியார் பற்றி அதிகாரபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் பாங்கும் வன்மையும் தொடர்பையும் பெற்றவர் பாரதி தாசன் என்பதால் பாரதியார் பற்றிய அவரது எழுத்துக்களும் கவிதைகளும் மிக முக்கியமானவை.

 

பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகளில் அவர் பாரதிக்குச் சூட்டிய கவிதை முத்தாரங்களைப் படித்து மகிழலாம்.

அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட கவிதை ‘புதுநெறி காட்டிய புலவன்” என்ற கவிதையாகும்.

அதில் வரும் வரிகள் வைர வரிகள்:

 

பைந்தமிழ்த் தேர்ப்பாகன். அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா;

காடு கமழும் கற்பூரச் சொற்கோ;

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன்; புதிய

அறம் பாட வந்த அறிஞன்; நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்;

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்’                   தமிழால், பாரதி தகுதி பெற்றதும்

தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்

எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்

 

இப்படி இனிய கம்பீரமான அழகிய சொற்களால் பாரதியைப் போற்றி மகிழ்ந்தார் பாரதிதாசன்; இந்தப் பாடலைப் பாடி மகிழ்கிறோம் நாம்!

“பாரதி உள்ளம்” என்ற கவிதையில்,

மேலவர் கீழவர் இல்லைஇதை

மேலுக்குச் சொல்லிட வில்லை

 

என்று கூறும் கவிஞர் பாரதியார் ‘நாலாயிரத்தவர் காண, தோலினில் தாழ்ந்தவ்ர் என்று சொல்லும் தோழர் சமைத்ததை உண்பார்’ என்று கூறுகிறார்.

 

கல்கி ஆரம்ப காலத்தில் பாரதியாரை உலக மகாகவி என்று சொல்ல முடியாது என்று ஆனந்தவிகடனில் எழுதிய போது வெகுண்டெழுந்தார் பாரதிதாசன்.

 

ஞானரதம் போலொரு நூல் எழுதுதற்கு

    நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்

போல் நவிலக் கற்பனைக்குப் போவதெங்கே?

    புதிய நெறிப் பாஞ்சாலி சபதம் போலே

தேனினிப்பில் தருபவர் யார்? மற்றும் இந் நாள்

  ஜெய பேரிகை கொட்டடா என் றோதிக்

கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்

  கொட்டி வைத்த கவிதை திசை எட்டும் காணோம்

 

என்று முழங்கி அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி வீசி மஹாகவி சாதாரண கவிஞர் அல்ல; உலக மகா கவி என்று சான்று காட்டி நிறுவினார்.

 

பின்னால் கல்கி மனம் மாறி பாரதிக்கு மணி மண்டபம் அமைத்ததை நாம் அறிவோம். அதற்குக் காரணமாய் அமைந்த பாரதி தாசர்களில் முத்ல் தாசனாக பெயரில் மட்டுமல்லாமல் செயலிலும் அமைந்தார் பாரதி தாசன்.

 

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதையில் இந்தத் தலைப்பில் பாரதியார் பாடிய கவிதை எப்படி எதனால் பிறந்தது என்ற கதையைச் சொல்கிறார் பாரதிதாசன்.

 

மதுரைத் தமிழ்ச்சங்கம் “தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால் அமைவான பாட்டுக்களிப்போம் பரிசு” என்று அறிவிப்பை வெளியிட அதனால் அன்பர்கள் பாரதியாரை வேண்ட அவர் எழுதிய கவிதை தான் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதை!

 

 

திருப்பள்ளியெழுச்சி என்ற பாடலை பாரதியார் ஏன் பாடினார்? அதற்கான விடையைத் தருகிறார் தன் கவிதையில் பாரதிதாசன்.

ஒரு நாள், “பொற்பு மிகும் மடு நீரினில் ஆடிடப் போகும் வழியினில்” நண்பர் ஒருவரைப் பெற்ற முதுவயதன்னையார் அவரை வேண்டிக்கொள்ள, அவர் திருப்பள்ளி எழுச்சி பாடலைப் பாடினார்.

 

 

நாடக விமர்சனம் என்ற கவிதையில் பாரதியார் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றைக் கவிஞர் தருகிறார்.

ஒரு நாள் அனைவருடனும் ஒரு நாடகம் பார்க்கச் சென்றார் பாரதியார். அதில் விஷமருந்திய மன்னன் ஒருவன், “என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே வருகுதையோ” என்று பாடத் தொடங்கினான். இதைக் கேட்ட பாரதியார், மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ள வேண்டியது தானே! வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா?” என்றார்.

 

 

அனைவரும் சிரித்தனர். இயல்புக்கு அல்லாததை ஒரு நாளும் ஏற்றவர் இல்லை கவிஞர் பிரான்.

 

பாரதியாரைப் பற்றி தெள்ளு தமிழ் வார்த்தைகளில் பாரதி தாசன் எழுதிய கவிதைகள் காலத்தால் அழியாதவை.

 

பாரதி இயலில் ஆர்வம் கொண்டோர் பாரதியாரைப் போற்றி பாரதிதாசன் இயற்றிய கவிதைகளைப் படித்தால் களியுவகை கொள்வது நிச்சயம்!

***

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 33-3 (Post No.3990)

Written by S NAGARAJAN

 

Date: 11 June 2017

 

Time uploaded in London:-  4-58  am

 

 

Post No.3990

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 33-3

 

புதுவை வாழ்க்கை – 3 ( பால் ரிச்சர்ட் முதன் முதலில் ஸ்ரீ அரவிந்தரை சந்திக்க கருவியாக இருந்தவர் பாரதியார் – கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் பாரதியாரின் உதவி கொண்டே ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார் – இரகசியமாக பாரதியார் 1918இல் கொடியாலம் சகோதரர்களைச் சந்திக்க நாகை கிராமம் சென்றார் ஆகியவை உள்ளிட்ட விவரங்கள்)

 

http://www.sriaurobindoashram.org/research/show.php?set=doclife&id=26

Documents in the Life of Sri Aurobindo

LIFE IN PONDICHERRY 1910 AND AFTER

மேலும் சில சுவையான தகவல்களை இந்தத் தொகுப்பு தருகிறது. முழு விவரங்களையும் படிக்க விரும்புவோர் இணைய தளத்திலிருந்து இதை தரவிறக்கம்  செய்து (டவுன்லோட்) படித்து மகிழலாம்.

 

 

மிகவும் சுவையான தகவல் பால் ரிச்சர்ட் முதன் முதலில்  ஸ்ரீஅரவிந்தரைப் பார்க்க வந்த போது அவரை அரவிந்தர் சந்திக்க விருப்பமில்லை என்று கூறி விட்டார். பாரதியாரும்  ஸ்ரீநிவாஸாசாரியாரும் சிபாரிசு செய்யவே சந்திப்பு நிகழ்ந்தது.

இந்தச் சந்திப்பு எவ்வளவு பெரிய எதிர்காலத்தை உருவாக்கியது என்பதை பாரதி அன்பர்கள் கூர்ந்து கவனிக்கலாம்.

 

 

கீழே ஆங்கில மூலத்தின் சில பகுதிகள் மட்டுமே இடம் கருதி இங்கு தரப்படுகிறது

7

From Srinivasachari MS.

 

At first Sri Aurobindo flatly refused to grant [not just] an interview but even a distant look at him. He said, I am not here to satisfy the curiosity of [a] political worker who is come from France on an electioneering campaign here and who may have some academic interest in these matters….

So Bharati and myself did our best to induce him to reconsider his decision as a fine opportunity is offering itself without our seeking. After some more consideration he consented to receive Paul Richard provided the interview is short and ends with the first one. We thanked him and came downstairs to Sankara Chettyar and communicated the glad news. …..

 

 

Bharati and myself went in the evening to Sri Aurobindo and communicated my morning conversation and my impressions. At about 7 o’clock Paul Richard came and was received by Sri Aurobindo and after the usual introductions and preliminary talks they both began to exchange their ideas about Mysticism and I acted as their interpreter as Richard could not understand English very well. Their conversation was very interesting then but now they are very vague to me as I had forgotten the interesting links. In the course of their conversation Sri Aurobindo seemed to get more and more interested in Richard, for when the latter asked for a few minutes of private talk with him he readily consented and both went into a separate room taking me with them and their conversation went on for nearly an hour.

13

கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் அரவிந்தரைச் சந்திக்க உதவியது பாரதியாரே. இப்படியாக .ரா., கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார், பால் ரிச்சர்ட், கபாலி சாஸ்திரி உள்ளிட்ட பலரை அரவிந்தர் சந்திக்க பாரதியாரே கருவியாக இருந்தது சரித்திரத்தின் பிரமிக்க வைக்கும் ஒரு அம்சமாக இருக்கிறது!

From Srinivasachari MS.

Kodyalam Rangaswami Iyengar who later became a member of the Central Legislative Council in Delhi sent his man Va Ra who had made a name as a good Tamil writer in his later days, secretly to arrange for an interview with Sri Aurobindo. He went to Bharati and told the purpose he had come for. Bharati mentioned it to me and in the evening when we met him as usual Bharati told him what all he knew about Kodyalam Rangaswami Iyengar and his family and after getting his consent the interview was arranged. 

 

கொடியாலம் சகோதரர்களைப் பற்றிய குறிப்பு இது. இதில் பாரதியார் 1918இல் ரகசியமாக நாகை கிராமம் சென்ற செய்தி தெரிவிக்கப்படுகிறது.

A brief history of the Kodiyalam brothers:

Practically all the visits of the brothers to Pondicherry to meet both Sri Aurobindo or Subrahmanya Bharathi were kept well guarded secrets that no proper records or even casual mentions are made in the history. That is why most of the details of their assistance or other forms of help were entirely shrouded in mystery. Even a brief visit and stay of Poet Subrahmanya Bharathi in 1918 to Nagai village as the guest of the Kodiyalam brothers (escaping the shrewd British intelligence) was mentioned in the biography of Poet Bharathi by V. Ramaswami (Va. Ra.). It is of interest to observe here that Va. Ra. himself was brought up through the munificence of K.V. Rangaswami Iyengar who was responsible to educate him beyond his school days in S.P.G. College, Trichy. This early association with Kodiyalam family, paved an easy way for the Kodiyalam brothers to contact and convey messages to Sri Aurobindo through Va. Ra. Since K.V.R. was a member of the British Council of State in Delhi he was unable to frequently visit Pondicherry; however the early visit and meeting with Sri Aurobindo is clearly mentioned in the biography and his efforts to undertake the publication of the very first work of Sri Aurobindo christened YOGIC SADHAN was also mentioned. It is of particular interest to note here that the above work was authored by Sri Aurobindo as UTHARA YOGI. A letter written by Sri Aurobindo in April, 1916 to Sri K.R. Appadurai (brother-in-law of Poet Bharathi) show clearly that KVR continued to help Sri Aurobindo during times of need.

 

****

பல முக்கிய விஷயங்களை குறிப்பாக பாரதியார் சம்பந்தப்பட்டவற்றை மிகச் சுருக்கமாகவே இங்கு சுட்டிக்காட்ட முடியும் என்பதால், இந்த நூலை முழுதுமாகப் படிக்க விரும்பும் அன்பர்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணையதளத் தொடுப்பிற்குச் செல்லவும்.

 

நன்றி: அருமையான ஆவணங்களை அப்படியே பாதுகாத்து உலகிற்கு வழங்கி அரிய சேவையைச் செய்து வரும் அரவிந்த ஆசிரமத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.

***********

இனி அடுத்த பாரதியார் பற்றிய நூல் ஒன்றைப் பார்ப்போம்! தொடரும்

பாரதியார் பற்றிய நூல்கள் – 33-2 (Post No.3984)

Written by S NAGARAJAN

 

Date: 9 June 2017

 

Time uploaded in London:-  6-57  am

 

 

Post No.3984

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 33-2

 

புதுவை வாழ்க்கை – 2 ( பிரிட்டிஷார் ஆண்ட போது இந்திய அரசாங்கத்தின் உள்துறை அரசியல் பிரிவில் இருந்த சில ஆவணங்கள்)

 

மஹாகவி பாரதியார், அரவிந்தர், .வே.சு ஐயர் உள்ளிட்டோர்  புதுவையில் வாழ்ந்த காலத்தில் ஆங்கில அரசு அவர்களைத் தொடர்ந்ர்து கண்காணித்து வந்தது. பல தொல்லைகளையும் கொடுத்தது. கீழே ஆங்கிலத்தில் அப்படியே அரசு ஆவணங்கள் தரப்பட்டுள்ளன

 

 

முதல் ஆவணம் பிப்ரவரி 1911, மற்றும் செப்டம்பர் 1912 ஆகிய கால கட்டத்துடன் சம்பந்தப்பட்டவை. இதில் பாரதியாரின் மைத்துனரான நாகஸ்வாமி ஐயருக்கு  சவர்க்கார் எழுதிய Mutiny புத்தகத்தின் ஐந்து பிரதிகள் வந்தது குறிப்பிடப்படுகிறது.

 

http://www.sriaurobindoashram.org/research/show.php?set=doclife&id=26

Documents in the Life of Sri Aurobindo

LIFE IN PONDICHERRY 1910 AND AFTER

 

LIFE IN PONDICHERRY – 3

Extracts from Government of India, Home Political-B Proceedings, February 1911, Nos. 1-5, and September 1912, Nos. 21-24. [National Archives of India]

MADRAS.

 1. Pondicherry.— It has been ascertained that amongst the companions of Arabindo Ghose is A.B. Kolhatkar, B.A., of Nagpur, who was convicted of sedition as editor of the Desha Sewak. He has been in communication with Madame Cama with a view to leaving India, and the latter has sent him Rs. 300 to pay for his passage to England or to a place in the West Indies where there is said to be a colony of two or three thousand Indians working as factory hands.

Seditious literature is still coming in large quantities: five copies of Savarkar’s book on the Mutiny addressed to Nagaswami Aiyer, brother-in-law of Subramania Bharati, were recently intercepted, in addition to copies of the Free Hindustan, Talwar and Bande Mataram. In spite of these interceptions S. Srinivasa Chari recently had a considerable amount of this kind of literature in his house.

Weekly reports of the Director of Criminal Intelligence on the political situation during January 1911, p. 5.

****

இரண்டாம் ஆவணம் புதுவை 9 என்ற தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் அரசு ஆவணம்.

அடுத்த ஆவணம் அரவிந்தரின் பிறந்த தேதியான ஆகஸ்டு 15ஆம் தேதி அவரது 40வது பிறந்த தின விழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது.

இதில் பாரதியார் மீது ஆஷ் கொலை வழக்கு சம்பந்தமான வாரண்டு பிறப்பிக்கப்பட்டிருப்பதையும் அவர் பிரிவினை குற்றச்சாட்டிற்கு உட்பட்டவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. பாரதியார்,.வே.சு. ஐயர் ஆகியோர் இந்த பிறந்த தின விழாவில் கலந்து கொண்டதைக் குறிப்பிடுகிறது ஆவணம். காளி, பாரத மாத, திலகர், குதிராம் போஸ் பிரபுல்ல சகி ஆகிய ஐவரின் படங்களுக்கு மாலை அணிவித்ததையும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

அதை அப்படியே ஆங்கிலத்தில்  கீழே காண்போம்.

 

MADRAS.

 1. Pondicherry. — On 15th August a meeting was held at the house of Arabindo Ghose, in celebration, it is believed, of his 40th birthday. The meeting was attended by V.V.S. Aiyar, who was V.D. Savarkar’s right-hand man in the anarchist conspiracy in London and Paris, C. Subramania Bharati, a well-known writer of sedition against whom a warrant is out for complicity in the murder of Mr. Ashe, and a few other well-known revolutionaries. During the proceedings five pictures were garlanded with flowers, namely those of (1) the goddess Kali,the patron saint of the Bengali revolutionary movement, (2) Bharat Mata,the personification of Mother India, (3) Tilak, and (4) and (5) Khudiram Bose and Profulla Chaki, the two young Bengalis who threw the bomb which killed Mrs. and Miss Kennedy at Muzaffarpur in April 1908. Arabindo Ghose, who at first kept to himself a great deal in Pondicherry, is now in much closer touch with V.V.S. Aiyar and his dangerous gang.

Ibid., August 1912, p. 13.

 

1

இந்த நூலை முழுதுமாகப் படிக்க விரும்பும் அன்பர்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணையதளத் தொடுப்பிற்குச் செல்லவும்.

நன்றி: அருமையான ஆவணங்களை அப்படியே பாதுகாத்து உலகிற்கு வழங்கி அரிய சேவையைச் செய்து வரும் அரவிந்த ஆசிரமத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.

***********

-தொடரும்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 30 (Post No.3897)

Written by S NAGARAJAN

 

Date: 11 May 2017

 

Time uploaded in London:-  6-26 am

 

 

Post No.3897

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 30

 

சென்று போன சில நாட்கள் : எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடுவின் நூல்

 

ச.நாகராஜன்

 

    மஹாகவி பாரதியாரின் நண்பர்களில் ஒருவர் எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு. புதுச்சேரியில் அவருடன் நெருங்கிப் பழகியவர். அவர் அமிர்த குணபோதினி என்ற மாதப் பத்திரிகையில் பாரதியாரைப் பற்றிய பல குறிப்புகளை சென்று போன சில நாட்கள் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தார்.

1928ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் 1929ஆம் ஆண்டு ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய ஆறு  மாதங்களில் வெளி வந்த அவரது கட்டுரைகள் பல சுவையான செய்திகளைத் தெரிவிக்கின்றன.

அவற்றில் ஒரு சில பகுதிகளை மட்டும் இங்கு காண்லாம்.

*

    அந்தக் காலத்தில் பாரதியார் தீவிர தேசபக்தராயிருந்தார். எதிலும் நிதானத்தையே யனுசரித்து நின்ற ஸ்ரீமான் ஜி.சுப்பிரமண்ய ஐயரின் கொள்கைகளில் பாரதியார் வேறுபட்டுப் பிரிந்து இந்தியா என்ற தமிழ் வாரப் பத்திரிகையைத் தொடங்கி அதற்கு ஆசிரியராக அமர்ந்தார்.அப்பத்திரிகையின் சொந்தக்காரர் வேறொருவராவார். பாரதியாரின் தமிழ் நடை அது  முதற்கொண்டு ஒரு புதுவழியில் மாறியது. அதற்கு முன்னர் எவரும் அவ்வழியில் பத்திரிகையை நடத்தவில்லையென்று சொல்லும்வாறாக வெகு சிறப்புடனும் திறமையுடனும் எழுதி வரத் தொடங்கினார். சிறுசிறு பதங்களுடன் கூடிய ஒரு நவீன கம்பீர நடை. இந்தியா பத்திரிகை சனிக்கிழமை தோறும் வெளியாகி வந்தது. நாலாயிரம் பிரதிகள் வரைப் போய்க்கொண்டிருந்தது.

*

 

1907ஆம் வருஷத்தில் பரிமளா என்ற நாவலை அச்சிட நாம் சென்னை சென்றிருந்த சமயம் ஒரு கொடிய முறை ஜ்வரத்தினால் வருந்தும்படியாக, பாரதியாரே பரிமளா ‘புரூப்;கள் முக்காற் பாகத்தையும் திருத்தி முடிவு செய்து, அந்த நாவலைப் பற்றி இந்தியா பத்திரிகையின் தலையங்கத்தில் ஆறு கலங்கள் வரை மதிப்புரை வரைந்தார். அதிலே மொழி பெயர்க்குந் தொழிலைக் குறித்தும் தமிழின் இயற்கை இனிமையைக் குறிக்கும்  ‘அங்கனாமணி’ என்பதிலும் ‘பெண்மணி’ என்ற தமிழ்ச் சொல் மிக்க இனிமையுடையது என்றும் விஸ்தாரமாக வரைந்தார்.

*

பாரதியாரைப் பிடித்துத் தருவோருக்கு நூறு ரூபாய் பரிசு தரப்படுமென்று ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதிலே அவரது உயரம் இத்தனை அடியென்றும், கஞ்சா, புகையிலை உபயோகிப்பவரென்றும், பூணூலை எடுத்துவிட்டவரென்றும் இன்னும் பல குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

*

புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலையில் ‘தமிழ்நாட்டைப் பற்றி நல்ல கருத்துகள் அமையப் பெற்றதும் அதன் பெருமையை விளக்கக்கூடியதுமான பாடல்களை புனைந்து அனுப்புவோருக்கு இன்ன வெகுமதி தரப்படும்’ என்று ஒரு விளம்பரம் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது….

 

   பாரதியாரின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்ரமணிய ஐயரவர்களும் மற்றும் சில நண்பர்களும் அந்த விளம்பரத்தின் படி ஒரு பாடல் செய்ய வேண்டுமென்று பாரதியாரை நிர்ப்பந்தப் படுத்தினர். அவர்கள் அதிகாரம் செய்யப் பாத்தியதை பெற்றவர்கள். பாரதியார் இவர்களின் விருப்பத்தைக் கேட்டு புன்னகை கொண்டார். வேறு பதில் சொல்லவில்லை. அதன் பின்பு வாத்தியார் ஐயரவர்கள், “வெகுமதிக்கு, நான் உங்களைப் பாடச் சொல்லவில்லை. சங்கத்துப் பண்டிதர் அநேகரின் முன்பு உங்கள் கவி ஜோடி கேட்கட்டுமே என்று தான் சொல்லுகிறேன். சங்கத்தார் கவி கேட்பது தமிழ் நாட்டைப் பற்றி செந்தமிழில் பாடிக் களிக்கட்டும் என்ற நோக்கத்துடன் தான்; ஆகையால் இந்த விஷயத்தில் நீங்கள் ஏன் லோபித்தனம் காட்ட வேண்டும்? என்று குத்திப் பேசிக் கேட்டார். “அதற்கு நான் சொல்லவில்லை” என்று இழுத்தார் பாரதியார். வாத்தியார், “அதெல்லாம் போகிறது, எங்களுக்குத் தேவை ஸ்வாமி” என்று ஒரே போடு போட்டு விட்டார்.

    பாரதியார் அதற்கு “நான் கட்டாயம் பாட்டு எழுதி விட்டு  மூச்சு விடுகிறேன். அது வேண்டுமென்கிற சங்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் அனைவரும் சர்க்காருக்கு நண்பர்கள். எனது கவியை ‘நல்லது’ என்று அவர்கள் உரத்துச் சொல்லக் கூடப் பயப்படுகிறவர்கள், அதனால் தான் தாமதித்தேன்” என்று சொல்லி ஒரு நிமிஷ நேரம் பூப்பூவாய் நகைத்தார். உடனே வரைவதற்கு எழுதுகோலைக் கொண்டார்.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

    தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

     சக்தி பிறக்குது மூச்சினிலே”

என்று பல்லவி எழுதி வாசித்துக் காண்பித்தார். வாத்தியார் மலைத்தார். எடுத்த விஷயங்கள் அத்தனையும் பல்லவியிலேயே சுருக்கமாக முடிந்து விட்டது.

*

பாரதியார் எவ்வளவோ காலம் வாழப் போவதாக எண்ணியிருந்தார். எவ்வளவோ வேலைகள் செய்ய நினைத்திருந்தார். ஒரு வாரப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்று நம்மிடம் தர்க்கித்தார். பழைய இந்தியாவின் காரமான நடை கூடாதென்று நாம் சொன்னதையும் ஒப்புக் கொண்டார். 1920ஆம் வருஷத்து சுதேசமித்திரன் அனுபந்தத்தில் நல்ல வேலை செய்தார். 1921ஆம் வருஷ ‘மித்திரன்’ அனுபந்தத்திற்கு இல்லாமல் போய்விட்டார். அவர் வாழ்த்திச் சென்ற தமிழ்நாட்டில் சமீபத்தில் அவரது கீதங்களை அரசாங்கத்தினர் தடுத்து விட்ட ‘திருவிழாவும்’ நடந்தது. நற்காலமாய் அந்தத் தடை நிவர்த்திக்கப்பட்டது தமிழகத்தின் பாக்கியமே. பாரதியார் 1907ஆம் வருஷத்தில் தமது நண்பரொருவர் மரித்ததற்காக இரங்கிச் சில பாடல்கள் புனைந்தார். அச்சமயம் நாமும் அருகிலிருந்தோம். அவற்றின் இரண்டு அடிகளை இப்பொழுது பாரதியாருக்கே உபயோகித்து இவ்வியாசத்தை முடிக்கின்றோம்.

“அந்தோ மறலி நம் அமுதினைக் கவர்ந்தான்

நொந்தோ பயனில்லை; நுவலயாதுளதே!”

 

*

பாரதியாரைப் பற்றி இப்படி ஆறு இதழ்களில் ராமானுஜலு நாயுடு அவர்கள் அருமையாக எழுதியுள்ள இந்தக் கட்டுரைகள் அவர் இறந்த ஏழு ஆண்டுகளிலேயே வந்திருப்பது குறிப்பிடத் தகுந்தது.

 

 பாரதியார் அன்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் ‘சென்று போன சில நாட்கள்’

****

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 27 (Post No.3780)

Written by S NAGARAJAN

 

Date: 2 April 2017

 

Time uploaded in London:-  11-23 am

 

 

Post No.3780

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 27

 

பாரதியார் பற்றி நினைவு மஞ்சரியில் உ.வே.சாமிநாதையர்!

 

by ச.நாகராஜன்

 

 

    தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின்.நினைவு  மஞ்சரி ஒரு அற்புதமான தொகுப்பு. அதில் முதல் பாகத்தில் பத்தாம் கட்டுரையில் வி.கிருஷ்ணசாமி ஐயர் பற்றி தனது குறிப்புகளை எழுதியுள்ளார். அதில் மஹாகவி பாரதியார் பற்றி வ்ரும் பகுதி சுவாரசியமானது. அதை கீழே காணலாம்..

 

ஒருநாள் சென்னை இராசதானிக் கலாசாலைத் தமிழ் மாணவர் சங்கக் கூட்டத்திற்கு அவர் தலைமை வகித்தார். காலஞ்சென்ற ஜி. ஏ. வைத்திய ராமையர் அன்று ‘தமிழின் பெருமை’ என்னும் விஷயத்தைப்பற்றிப் பேசினார். கிருஷ்ணசாமி ஐயர் தலைமை வகிப்பது தெரிந்து பலர் கூட்டத் திற்கு வந்திருந்தனர். ஸ்ரீ சுப்பிமணிய பாரதி யாரும் வந்திருந்தார்.

கிருஷ்ணசாமி ஐயர் என்ன பேசுவாரோ என்று யாவரும் ஆவலோடு எதிர்நோக்கி யிருந்தனர். சிலர், ‘இவர் மிழைப்பற்றி என்ன  பேசப் போகிறார்? ஸம்ஸ்கிருதத்தைப் பற்றி வேண்டு மானாற் பேசுவார்’ என்று நினைத்தார்கள். உபந்நியாசகர் பேசியபின்பு கிருஷ்ணசாமி ஐயர் பேசத்தொடங்கியபோது எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர் பேசலானார்:

தமிழில் எத்தனை நூல்கள் இருக்கின்றன! திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது; கம்பன் இராமாயணம் இயற்றியது இந்தப் பாஷை யிலே; நாயன்மார் தேவாரம் பாடிய பாஷை; மாணிக்கவாசகர் திருவாசகம் அருளிய பாஷை, ஆழ் வார்கள் திவ்யப்பிரபந்தம் பாடியதும் இதிலேதான். இந்தப் பாஷையின் பெருமைக்கு அளவேயில்லை” என்று தொடங்கி வரிசையாகக் கூறிக்கொண்டே சென்றார். அவருடைய பேச்சில் ஒரு பெருமிதமும் கம்பீரமும் இருந்தன. யாவரும் பிரமித்தனர். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அன்று அந்தப் பிரசங்கத் தைக் கேட்டுக் குதூகலத்தை அடைந்தார். அந்தப் பேச்சு அவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது; அதிலிருந்து ஒரு பாட்டுக்குரிய பொருளைக் கிரகித்துக் கொண்டார். தமிழ்நாட்டைப் பற்றி அந்த முறையிலே பாடவேண்டுமென்று அவ ருக்கு அன்று ஒரு கருத்து உண்டாயிற்றென்றே தோற்றுகின்றது.

கிருஷ்ணசாமி ஐயர் நம்முடைய நாட்டின் பெருமையை அமைத்து எளிய நடையில் ஆண் குழந்தை களும் பெண் குழந்தைகளும் பாடும் வண்ணம் சில பாட்டுக்கள் இயற்ற வேண்டுமென்று விரும்பினார். பலரிடம் தம் கருத்தை உரைத்து வந்தார்.

அந்தக் காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் அவருடைய பழக்கத்தைப் பெற்றிருந்தார். கிருஷ்ண சாமி ஐயர் பாரதியாரிடம் தம் கருத்தைத் தெரிவித் தார். பாரதியாருடைய காதில் கிருஷ்ணசாமி ஐயருடைய பழைய பிரசங்கம் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவர் தமிழ்ப் பாஷையைப்பற்றிச் சொன்னதைத் தழுவிப் பாரதியார் நாட்டைப்பற்றிப் பாடத் தொடங்கினார்.

 


செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே”


என்பது ஒரு செய்யுள்.

கம்பன் இராமயணம் செய்த பாஷை; திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை’ என்று அன்று கூறியதைப் பாரதியார் சிறிது மாற்றி,

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல பல்வித மாயின சாத்திரத் தின்மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு”


என்றும்,


வள்ளுவன் றன்னை யுலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளுஞ் சிலப்பதிகாரமென் றோமணி யாரம் படைத்த தமிழ்நாடு”


என்றும் பாடினார்.

இந்தப் பாட்டைக் கேட்டு இதில் தம்முடைய கருத்து அமைந்திருப்பதை அறிந்து கிருஷ்ணசாமி ஐயர் பெருமகிழ்ச்சியை அடைந்தார். பாரதி யாரைப் பின்னும் பல பாடல்களைப் பாடச்செய்து அவற்றைச்சேர்த்து ஆயிரக்கணக்கில் அச்சிடுவித்து இலவசமாக வழங்கச் செய்தார். சுப்பிரமணிய பாரதியாரை அக்காலத்திலே அறிந்து அவருடைய கவித்துவத்தைப் பாராட்டி ஆதரித்தவர்களுள் கிருஷ்ணசாமி ஐயர் முக்கியமானவர், பாரதியாருடைய கொள்கைகளிற் பலவற்றைக் கிருஷ்ணசாமி ஐயர் விரும்பாவிடினும் அவருடைய கவித்துவத்தில் ஈடுபட்டார்.

இவ்வாறே பலவேறு கொள்கைகளையும் பல வேறு பழ்க்கங்களையும் உடையவர்களாக இருப்பினும் தமிழ் முதலியவற்றில் அறிவுடையவரென்பது தெரிந்தால் மற்றவற்றையெல்லாம் மறந்து பாராட்டு வது கிருஷ்ணசாமி ஐயரது இயல்பு.

 

நினைவு மஞ்சரி நூலை முழுதுமாகப் படிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட தொடுப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0432.html

 

அதில் பத்தாம் கட்டுரையையும் முழுதுமாகப் படிக்கலாம்.

 

 

இந்த நினைவு  மஞ்சரி உள்ளிட்ட ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ள ப்ராஜக்ட் மதுரை என்ற தளம் அருமையான தளம். அதில் சிறந்த தமிழ் நூல்களைப் படிக்கலாம்; தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

 

இங்கு, இந்த நல்ல பணியைச் செய்த தமிழ் அன்பர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்ல வேண்டியது கடமை அல்லவா!

***

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 26 (Post No.3774)

Written by S NAGARAJAN

 

Date: 31 March 2017

 

Time uploaded in London:-  5-30 am

 

 

Post No.3774

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 26

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 11

 

by ச.நாகராஜன்

 

    ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்தக் கட்டுரையுடன் என்னிடம் இருக்கும் குமரிமலர் பத்திரிகை கட்டுரைகள் முடிவுறுகின்றன.

   அவரது பத்திரிகைத் தொகுப்பு ஒரு அரிய பொக்கிஷம். தேர்ந்தெடுத்த சமூக நல பிரக்ஞை கொண்ட ஒரு நல்ல  இலக்கியவாதியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். தன்னலமற்று லாப நோக்கற்று இந்தப் பணியை அவர் மேற்கொண்டு ஆற்றியதை எவ்வளவு சொல்லிப் புகழ்ந்தாலும் தகும்

   ஏ.கே. செட்டியாரின் இலக்கியப் பணியில் அடங்கிய குமரிமலர் உள்ளிட்ட அனைத்து நூல்களையும் தமிழக அரசு உரிய தொகையைக் கொடுத்து நாட்டுடமை ஆக்கினால் அது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு அரிய வரபிரசாதமாக அமையும்,

 

இன்னும் இரு கட்டுரைகளை மட்டுமே இங்கு என்னால் கொடுக்க முடிகிறது. மேலும் பல பாரதியார் சம்பந்தமான செய்திகளை அவர் வெளியிட்டிருக்கக் கூடும்.

 

 

 • ஜன்ம பூமி என்ற ஒரு கட்டுரையை குமரி மலர் வெளியிட்டிருக்கிறது.

ஜன்ம பூமி

சி.சுப்பிரமணிய பாரதி (1909)

முதலில் இதைப் பற்றிய குறிப்பைக் காண்கிறோம்.

ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் 1909-ஆம் ஆண்டில் “ஜன்ம பூமி”

(ஸ்வதேச கீதங்கள்-இரண்டாம் பாகம்) என்ற நூலை வெளியிட்டார்.32 பக்கம் உள்ள நூலின் விலை அணா மூன்று. புதுச்சேரியில் சைகோன் சின்னையா பிரசில் அச்சிடப் பெற்றது. அந் நூலில் உள்ள “சமர்ப்பணம்”, முகவுரை ஆகிய இரண்டையும் இங்கு வெளியிடுகிறோம்.

 

இந்தக் குறிப்பைத் தொடர்ந்து சமர்ப்பணம் மற்றும் முகவுரையைக் காணலாம்.

 

 

 • அடுத்து சாரல் என்ற கட்டுரையை குமரிமலரில் காண்கிறோம்.

சாரல்

சி.சுப்பிரமணிய பாரதியார் (1918-20)

இந்தக் கட்டுரை பற்றிய குறிப்பை முதலில் காண்கிறோம்.

 

    இதுவரை எங்கும் நூல் வடிவு பெறாத பாரதி கட்டுரை இது. பாரதி புதுவையை விட்டுத் தெற்கே வந்து, தனது மனைவி செல்லம்மாவின் ஊராகிய கடயத்தில் இருந்த சமயம் – 1918 – 20 – எழுதியது. முதலில் “சுதேசமித்திர”னில் பாரதி காலத்தில் வந்திருக்க வேண்டும். 1936-ல் பரலி சு.நெல்லையப்பரால் அவரது “லோகோபகாரி” வாரப் பதிப்பிலும், பிறகு 23-5-1936 அன்று “ஜெயபாரதி” நாளேட்டிலும் வெளியான இக்கட்டுரை கடயத்தின் இயற்கை அழகையும் அவ்வூரில் பாரதியார் வசித்த தனித்த இல்லத்தையும், தெருவில் காணக்கூடிய கழுதைகளையும், ஊரின் சிறுமை மனிதர்களையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. கடயம் தென்காசிக்கு முன்னதாக ஆறேழு மைலில் உள்ளது. குற்றாலத்துச் சாரல் இங்கும் பிரசித்தம்.

(புதுவை வேதபுரம்;  கடயம்  ஆலமரம்; பாரதியார்-சக்திதாசன்)  

 

(சிறப்பு மிக்க இக்கட்டுரையைக் குமரி மலர் மூலம் மீண்டும் – இந்த ‘பார்ரதி தின’ மாதத்தில் – இன்றைய தலைமுறையினர் கவனத்திற்குக் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் – ரா.அ.பத்மநாபன்)

இக்குறிப்பைத் தொடர்ந்து சாரல் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது அருமையான கட்டுரை இது.

 

இது வரை குமரி மலரில் வெளியாகியுள்ள பாரதியாரின் சில கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள் ஆகியவற்றோடு அவரைப் பற்றி அறிந்தோரின் கட்டுரைகள் பற்றிய சில குறிப்புகளையும் அவற்றின் சில பகுதிகளையும் பார்த்தோம்.

இன்று கடையில் பாரதியார் படைப்புகளாக வெளி வந்துள்ள நூல்களில் இவை அனைத்தும் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

பாரதியாரின் படைப்புகள் என்ற வரிசையில் அனைத்தும் தாங்கிய நூல்கள் அனைவரும் வாங்கக் கூடிய மலிவுப் பதிப்பு நூல்களாக வெளி வருதல் வேண்டும்.

ஒரு சில அரிய கட்டுரைகளைத் தாங்கி வரும் நூல்களின் விலை அவை நூலகங்களுக்கு மட்டுமே விற்கப்படும் விலையைக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது.

இனி அடுத்து வரும் கட்டுரைகளில் பாரதியார் பற்றிய இதர நூல்களைப் பற்றிப் பார்ப்போம்.

குமரிமலருக்கும் அதன் ஆசிரியர் திரு ஏ.கே.செட்டியார் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து விட்டு மேலும் பாரதியார் பாதையில் செல்வோம்.

                            – தொடரும்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 25 (Post No.3767)

 

Written by S NAGARAJAN

 

Date: 29 March 2017

 

Time uploaded in London:-  5-31 am

 

 

Post No.3767

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 25

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 10

 

by ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்/

 

52) அடுத்து 1973ஆம் ஆண்டு மே மாத குமரி மலர் இதழில் (பிரமாதீச – வைகாசி இதழ்) வீர்யம்  என்ற தலைப்பில் உள்ள  பாரதியார் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

 

அருமையான இந்தக் கட்டுரையானது “ஜெயபாரதி” சென்னை 1936  வருஷ அனுபந்தம் – இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன் மறுபதிப்பை குமரிமலர் இதழில் காண்கிறோம்.

கட்டுரையின் முதல் நான்கு பாராக்களைக் கீழே காணலாம்:

  “வீர்யமாவது வீரனுடைய குணம். வீரன் எவன் என்பதை லட்சண ரூபமாகக் காட்டுவதைக் காட்டிலும், திருஷ்டாந்த ரூபமாகக் காட்டினால் நன்கு விளங்கும்.

 

 

    அர்ஜுனன் வீரன்; கர்ணன் வீரன்; இந்திரஜித் வீரன்; ராவணன் வீரன்; ராமன் வீரன்; லட்சுமணன் வீரன்; ஹனுமான் வீரன்; சிவாஜி வீரன்; காந்திஜி வீரன்;

     வீரர்களில் தர்மவீரர் என்றும், அதர்ம வீரர் என்றும் இருபாற் படுவர்.

      ராமன், பார்த்தன் போன்றோர் தர்ம வீரர்; ராவணன் முதலியோர் அதர்ம வீரர்.

 

 

    ஜெய பாரதி பத்திரிகை பாரதியாரின் கட்டுரைகளை தேடிப் பிடித்து வெளியிடுவதை தனது முக்கிய குறிக்கோள்களின் ஒன்றாகக் கொண்டிருந்தது.

 

இந்தப் பத்திரிகையில் எனது தந்தையார் திரு வெ.சந்தானம் பணியாற்றி வந்தார். பின்னரே தினமணி இதழில் சேர்ந்தார்.ஜெயபாரதி பத்திரிகை முனைந்து பாரதியாரின் கட்டுரைகளைத் தேடிப் பிடித்து வெளியிட்டதையும் என் தந்தையாரைப் பற்றியும் பாரதி ஆர்வலர் ரா.அ.பத்மநாபன் பாரதி புதையல் திரட்டு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

53) அடுத்து குமரி மலர் வெளியிட்டுள்ள கட்டுரை அன்பே தீர்ப்பு.

 

 

அன்பே தீர்ப்பு

 

சி.சுப்பிரமணிய பாரதியார்.

 

இந்தக் கட்டுரையும் “ஜெயபாரதி”, சென்னை  வருஷ அனுபந்தம் 1936 – இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையாகும்.

இதில் அன்பின் வலிமையை அழகுற மஹாகவி விளக்குகிறார்.

 கட்டுரையின் இறுதி ஐந்து பாராக்களை இங்கே காணலாம்:

 

      “அன்பு கொள்கையில் இருந்தால் போதாது. செய்கையில் இருக்க வேண்டும்.

 

        உன்னிடம் ஒரு கொடி ரூபாய் இருந்தால், அந்த ஒரு கோடி ரூபாயையும் தேச நன்மைக்காகக் கொடுத்து விட்டு நீ ஏழையாகி விடத் துணிவாயானால் நீ தேசத்தின் மீது அன்புடையவ்னாகக் கருதப்படுவாய்.

 

         உன்னுடைய குழந்தையின் உயிரைக் காக்கும் பொருட்டாகப் புலியின் வாயில் நீ போய் முதாலவ்து கையிடத் துணிவாயானால், நீ குழந்தையிடன் அன்புடையவ்னாகக் கருதப்படுவாய்..

 

         பறையனுக்கு ஸ்நானம் செய்வித்துப் பக்கத்தில் வைத்துக்  கொண்டு சாப்பிட்டால் நீ மனித ஜாதியினிடம் அன்புடையவனாக விளங்குவாய்.

 

       எல்லா ஜந்துக்களிடத்திலும் ஆரம்பப் பழக்கத்துக்கு, எல்லா மனித உயிர்களிடத்திலும் தெய்வபக்தி காண்பித்தால் உலகத்தின் துயரங்கள் தீர, நியாயமான ஜனவகுப்பு ஆரம்பமாக ஹேது உண்டாகும்.

 

54) அடுத்து பாரதியார் கடிதம் (1919) என்ற தலைப்பில் பாரதியார் எழுதிய கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுரையின் முற்பகுதியை இங்கே காணலாம்:-

                                    க்டையம்

                              15, நவம்பர் 1919

 

ஸ்ரீமான் வயி. சு. ஷண்முகம் செட்டியாருக்கு ஆசீர்வாதம்.

 • ……
 • பகவத் கீதையை அச்சுக்கு விரைவில் கொடுங்கள். தங்களுக்கு இஷ்டமானால் அதற்கு நீண்ட விளக்கம் எழுதி யனுப்புகிறேன்.. நீண்ட முகவுரையும் எழுதுகிறேன்.

தங்களன்புள்ள சி.சுப்பிரமணிய பாரதி என்று கடிதம் முடிவுறுகிறது.

     மஹாகவியின் புத்தகப் பதிப்பு ஆர்வத்தைத் தெளிவாக இக்கடிதத்தில் காண்கிறோம்.

 

                                -தொடரும்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 24 (Post No.3761)

Written by S NAGARAJAN

 

Date: 27 March 2017

 

Time uploaded in London:-  6-31 am

 

 

Post No.3761

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 24

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 9

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம் :

 

49) பால பாரதி என்ற பத்திரிகையை வ.வே.சு ஐயர் அவர்கள் 1924ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அதன் முதல் தலையங்கத்தில் அவர் மகாகவி பாரதியாரைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:

 

 

“எம்பிராட்டிக்கு ஆயிரம் நாமங்கள் இருக்கையில் ‘பாரதி’ என்ற பெயரை ஏன் தெரிந்து கொண்டோமென்றால், அத் திருநாமம் எமது நண்பரும், இன்றைக்கு இருபது வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் அளிக்க முயன்ற புண்யாத்மாக்களில் ஓர் பிரமுகருமான காலம் சென்ற சி.ஸுப்ரஹ்மண்ய பாரதியின் ஞாபகம் இம்மாஸிகையைப் படிக்கும் அனைவர் மனதிலும் என்றும் அழியாமல் பசுமையாக இருந்து வரவேண்டுமென்றேயாகும்.

            -பாலபாரதி  1924  அக்டோபர்- நவம்பர்

 

 

இப்படி அருமை நண்பரின் நினைவைப் போற்றும் விதமாகத் தனது பத்திரிகைக்கு பெயர் வைத்த செய்தியை பால பாரதியின் முதல் தலையங்கம் தெரிவிக்கிறது.

 

 

50) இதே குமரி மலர் இதழில் க்ஷத்திரிய தர்மம்  என்ற கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

 

க்ஷத்திரிய தர்மம்

சி.சுப்பிரமணிய பாரதி  (1910)

 

நீண்ட கட்டுரையில் அரவிந்தரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அது வருமாறு:-

“அரவிந்தர் முதலிய ரிஷிகள் நம்போலியர்க்குத் தெரியாத எதிர்காலச் செய்திகள் பலவற்றை அதி சுலபமாகத் தெரிந்து சொல்கிறார்கள்.

அவர்களுக்குப் புலப்படும் செய்திகளில் “பாரத நாட்டில் இனி அடுத்து நடைபெறப் போகும் தர்மம் க்ஷத்திரிய தர்மம்” என்ற செய்தியொன்றாகும்.

 

அரவிந்தர் மீது பாரதியார் எத்தகைய மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதை இந்த வரிகள் புலப்படுத்துகின்றன.

 

51) அடுத்து இவ்வுலக இன்பங்கள் என்ற பாரதியாரின் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. கட்டுரையின்  பிற்பகுதி கிடைக்கவில்லை என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இவ்வுலக இன்பங்கள்

சி.சுப்பிரமணிய பாரதி (1910)

 

 கட்டுரையின் முதல் ஐந்து பாராக்கள் காணக் கிடைக்கின்றன. முதல் மூன்று பாராக்களைப் பார்ப்போம்:-

    “நமது தேசத்தில் இப்போது சில நூற்றாண்டுகளாகத் துறவைப் பற்றிய பேச்சு அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டது.

     கண்டவனெல்லாம் ஞானம் பேசுகிறான்.

     ஒன்றரைக் காசின் பொருட்டாக உடலையும், ஆவியையும், தர்மத்தையும் விலைப்படுத்தக் கூசாத மனிதர்கள் கூட “எல்லாம் மாயை, இவ்வுலகமே பொய், க்ஷணத்தில் அழிவது இவ்வாழ்க்கை” என்று கிளிப் பிள்ளைகள் போலத் தமக்குத் தெரியாத விஷயத்தை எளிதாகச் சொல்லி விடுகின்றனர்.”

                              -‘கர்மயோகி’ புதுச்சேரி

                          புத்தகம் 1, இலக்கம் 2

                          1910, பிப்ரவரி, பக்கம் 58

இன்னும் சில கட்டுரைகளை அடுத்துக் காண்போம்

 

                           -தொடரும்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 23 (Post No.3755)

Written by S NAGARAJAN

 

Date: 24 March 2017

 

Time uploaded in London:-  7-09 am

 

 

Post No.3755

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 23

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 8

 

by ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்/

 

 • மாதர்களைப் பற்றி ஸ்வாமி விவேகாநந்தரின் அபிப்பிராயம் – 1

       ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி (1920)

 

மேலே கண்ட தலைப்பில் சுதேசமித்திரன் 1920 வருஷ அனுபந்தம் வெளியிட்டுள்ள கட்டுரை இது.

நீண்ட கட்டுரையில் சுவையான செய்திகள் பலவற்றை பாரதியார் தொகுத்து வழங்குகிறார்.

1898 ஜூலை 9ஆம் தேதியன்று ஸ்வாமிஜி எழுதிய ஆங்கிலக் கடிதத்தைத் தமிழ்ப்படுத்தி இதில் பாரதியார் தந்துள்ளார். 1893 ஆகஸ்ட் 20ஆம் தேதி கடிதத்தையும் காண்கிறோம்.

ஸ்வாமிஜியின் கருத்துக்களை வெகுவாக பாரதியார் ஆதரிக்கிறார்.

 

 

கட்டுரையின் இறுதியில் அவர் கூறுவது:

 

“மேற்கூறப்பட்ட வசனங்களிலிருந்து ஸ்வாமி விவேகானந்தர், நம்முடைய தேசத்துக்கு விமோசனம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு மூலாதாரமாக, நம்முடைய ஸ்தீரிகளுக்கும் பரிபூரண ஸ்வதந்திரம் கொடுக்க வேண்டுமென்றும், அவர்கள் வானத்துப் பறவைகள் போல் விடுதலை கொண்டு திரிய இடங்கொடுக்க வேண்டுமென்றும், அவர்கள் பாடசாலைகளிலும் கலாசலைகளிலும் நிறைந்து கிடக்க வேண்டுமென்றும், தமக்கு வேண்டிய பொருளைத் தாமே உத்யோகங்கள் பண்ணித் தேடிக்கொள்ள் இடங்கொடுக்க வேண்டுமென்றும், ஆண்மக்கள் தொழில் புரியும் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தொழில் புரிய இடந்தர வேண்டுமென்றும், ஸ்தீரிகளைப் பொதுவாக நாம் பராசக்தியின் அவதாரங்களெனக் கருத வேண்டுமென்றும் (ஸ்வாமி விவேகானந்தர்) கருதினாரென்பது தெளிவாகப் புலப்படுகிறது.

 

 ஸ்வாமி விவேகாநந்தரின் கல்விப் பெருமையும், அறிவுத் தெளிவும், தெய்வீகமான அன்பும், அவருடைய தைர்யமும் மேருவைப் போன்ற மனோபலமும், அவர் செய்திருக்கும் உபந்யாசங்களிலும் நூல்களிலும் விளங்குவதைக் காட்டிலும் அவருடைய கடிதங்களில் ஒருவாறு அதிகமாகவே விளங்குகின்றன என்று கூறுதல் தவறாகாது.

 

 • மாதர் நிலை பற்றி ஸ்வாமி விவேகாநந்தரின்

   அபிப்பிராயம் – 2

       ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி (1920)

 

கட்டுரையின் முதற் பகுதியைத் தொடர்ந்து இரண்டாம் பகுதியையும் சுதேசமித்திரன்  1920 வருஷ அனுபந்தம் வெளியிட்டிருப்பதைக் காண்கிறோம்.

இதிலும் ஸ்வாமிஜியின் கடிதங்களைக் காண்கிறோம்.

மிகப் பிரமாதமாக ஸ்வாமிஜிக்கு பாரதியார் இப்படிப் புக்ழாரம் சூட்டுகிறார்:

 

 

ஸந்யாசத் துறையில் இறங்காமல் ஸ்வாமி விவேகாநந்தர் இல்லற வாழ்க்கையைக் கைக் கொண்டிருப்பாராயின், மானுஷ்ய ஜாதியின் கலியை ஒரேயடியாக வேரறுத்துத் தள்ளியிருப்பாரென்று தோன்றுகிறது. அவர் யோசனை பண்ணாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்ய சாஸ்திரம் கிடையாது. அவருடைய அறிவின் வேகத்துக்குத் தடையே கிடையாது. அவருடைய தைர்யத்துக்கோ எல்லை கிடையாது. கண்ணபிரான கீதை உபதேசம் புரிந்து ஸகலவித ம்னுஷ்ய ஸம்சயங்களையும் அறுத்து வேதஞானத்தை நிலை நிறுத்திய காலத்துக்குப் பின்பு, ஹிந்து மதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுதும் மிகத்தெளிவாக, ஸர்வ ஜனங்களுக்கும் புலப்படும்படி வெளியிட்டுரைத்த ஞானி விவேகாநந்தரே யாவரென்று தோன்றுகிறது.

 

 

 • பாரதியார்

மேலே கண்ட தலைப்பில் இதே குமரி மலர் இதழில் ஒரு குட்டிச் சமபவத்தையும் காண்கிறோம்.

சம்பவம் இது தான்:

 

 

ஒரு சமயம் புதுச்சேரியில் பாரதியாரும் நானும் காலை வேளையிலே சீனிவாஸாச்சாரியாரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம். வழியிலே, பிரஞ்சு இலக்கியத்தின் பெருமையையும், விக்டர் ஹூகோ அவர்களின் மேதையையும் பற்றி, வெகு நேர்த்தியாக எனக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு போனார்.

 

 

   திடீரென்று திண்ணையிலிருந்து, ஒரு பையன் “இளமையில் கல்” என்று படித்த குரல் கேட்டது. உடனே பாரதியார் “முதுமையில் மண்” என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மேதையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று எண்ணித் திகைத்துப் போனேன்.

 • வ.ரா.
 • ‘காந்தி’ 25-3-1934

 

காந்தி இதழில் இப்படி வ.ரா. எழுதியுள்ள அழகிய சம்பவத்தைப் படிக்க முடிகிறது.

 

48) மாதர் நிலை பற்றி ஸ்வாமி விவேகாநந்தரின்  

   அபிப்பிராயம் – 3

பாரதியார் எழுதியுள்ள கட்டுரையின் மூன்றாம் பகுதியுடன் இந்தக் கட்டுரை முடிகிறது.

 

 

கட்டுரையை இப்படி முடிக்கிறார் மஹாகவி:-

 

இங்ஙனம் இந்த அற்புதமான ஸம்பாஷணை முற்றுப் பெற்றது. இங்கு ஸ்வாமி செய்திருக்கும் உபதேசத்தையும், இதனைச் செய்யும்படி தூண்டிய அவரது பேரன்பையும் கைக்கொள்வோமாயின் பாரத தேசத்து ஸ்த்ரீகளுக்குப் பரிபூர்ணமான விடுதலை கிடைத்து விடும்! அதினின்றும் பூ மண்டலத்துக்கு நன்மையுண்டாகும்.

 • சுதேசமித்திரன் 1920 வருஷ அனுபந்தம்

 

– தொடரும்

பாரதியார் பற்றிய நூல்கள் – 22 (Post No.3688)

Written by S NAGARAJAN

 

Date: 4 March 2017

 

Time uploaded in London:-  5-26 am

 

 

Post No.3688

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 22

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 7

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 • ஸ்ரீ மண்டயம் அழகிய சிங்கப் பெருமாளைப் பற்றிய அற்புதமான கட்டுரை ஒன்றை குமரி மலர் வெளியிட்டுள்ளது. கட்டுரையைக் கீழே காணலாம் :

ஸ்ரீ மண்டயம் அழகிய சிங்கப் பெருமாள்

சி.சுப்பிரமணிய பாரதி (1909)

 

     சென்னப் பட்டணம் திருவல்லிக்கேணியில், சென்ற செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீமண்டயம் அழகிய சிங்கப் பெருமாள் காலஞ்சென்று விட்டாரென்ற மஹா துக்ககரமான செய்தி மறுநாள் நமக்கெட்டிற்று.

 

 

     தேச பக்தர்கள் இருவகைப் படுவர். ஒருவகை அரங்கத்திலாடுவது. மற்றொரு வகை திரைக்குப் பின்னேயிருந்து புகழறியாமல் பாடுபடுவது. இவற்றுள் முன்னதினும் பின்னது சிறந்ததாகக் கூறலாமேயல்லது குறைந்ததாகக் கருதத் தக்கதன்று.

 

 

     காலஞ்சென்ற ஸ்ரீஅழகியசிங்கப் பெருமாள் பின் வகுப்பைச் சேர்ந்திருந்தவர். சென்னை பச்சையப்பன் காலேஜில் இவர் பல வருஷம் ‘ஹெட்மாஸ்டர்’ வேலை பார்த்துக் கொண்டு வந்தார். இன்னும் பலவிதமான கடமைகளுடையவர்.

 

 

    ஆனால் இவ்வளவு தொழிலுக்குமிடையே, தேசபக்தி தீபத்தை இவர் தமது நெஞ்சில் எப்போதும் அவியாமல் பாதுகாத்து வந்தார். இக்குறிப்பெழுதுபவருக்கு அழகிய சிங்கப் பெருமாள் தமது அனுபவ முதிர்ச்சி கொண்ட தற்போதனைகளாலும், நட்பினாலும் அப்போதப்போது செய்து வந்த உதவி கொஞ்சநஞ்சமன்று.

 

 

    நமது ‘இந்தியா’ பத்திரிகை ஆரம்பம் செய்வதற்கு மூலகாரணங்களா யிருந்தவர்களிலே பெருமாளொருவர். கல்கத்தாவில் நிவேதிதா தேவியிடம் ‘வாலிபராகிய எங்களை எல்லாம் மேலிருந்து நடத்துவதற்குத் தக்க முதுமை கொண்ட தேசபக்தித் தலைவர்கள் சென்னப்பட்டணத்திலில்லையே, என்ன செய்யலாம்’ என்று நாம் கேட்டதற்கு, அந்த அம்மை, ‘அழகிய சிங்கப் பெருமாளிருக்கிறார். பொது விஷயங்களில் தமக்கு சம்சயங்களேற்படுமானால், அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.

 

 

     நமது தேசபக்தி  முயற்சிக்குத் தாய் முயற்சியாகிய ஸ்வாமி விவேகானந்தரது வேதாந்தப் பிரசாரத்தினால் அழகிய சிங்கப் பெருமாள் அளவிறந்த சிரத்தை பாராட்டியவர்.

 

    1898-ம் வருஷத்தில் விவேகானந்தர் யரோ ஒரு சாதாரண ஸந்யாசியாக வந்து தென்னிந்தியாவில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடிய ம்கிமையைக் கண்டுபிடித்து, நாட்டிற்கெல்லாம் பெருமை தேடித் தந்தவர் ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாளே.

 

 

    இவருடைய முயற்சிகளினாலேயே ஸ்வாமி அமெரிக்காவுக்குப் போய், ஆரிய தர்மத்தை அந்நாட்டில் பிரகாசப் படுத்தும்படி ஏற்பட்டது. அப்பால் ஸ்வாமியுடைய ஆக்கினைப்படி, இவர் ‘பிரம்மவாதின்’ என்றொரு வேதாந்த மாதப் பத்திரிகை ஏற்படுத்தி மிகத் திறமையுடன் சென்ற பதினைந்து வருஷங்களாக நடத்தி வந்தார்.

 

    இவரை இழந்தது தேசமுழுமைக்கும் பெரு நஷ்டமாகும். மரிக்கும் பொழுது இவருக்கு வயது நாற்பத்து நான்கு. இப்படி அகாலத்தில் இவரைப் பிரிந்து வருந்தும் இவருடைய குடும்பத்தார்களுக்கு நாம் மனப்பூர்வமான அநுதாபம் தெரிவிக்கின்றோம்.

 • ‘இந்தியா’
 • 15-5-1909 தலையங்கம்
 • அடுத்து குமரி மலரில் ஸ்ரீவிவேகான்ந்தரைப் பற்றி மஹாகவி எழுதிய நீண்ட வரலாறு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

 

சக்கரவர்த்தினி இதழில் (ஆசிரியர் சி.சுப்பிரமணிய பாரதி) சென்னை 1906 மார்ச் தொகுதி 1, பகுதி 8 –இல் இக்கட்டுரை பிரசுரமாகியுள்ளது.

கட்டுரையின் தலைப்பு:-

ஸ்ரீமத் ஸ்வாமி விவேகானந்த பரமஹம்ஸர்

சுப்பிரமணிய பாரதி (1906)

 

மிக நீண்ட இந்தக் கட்டுரையில் ஸ்வாமிஜியின் பிறப்பு, குழந்தைப் பருவம்,இளமை, குரு தரிச்னம் ஆகிய தலைப்புகளில் வாழ்க்கை வரலாற்றைத் தந்துள்ளார் மஹாகவி.

கட்டுரையின் பிற்பகுதி கிடைக்கவில்லை என்ற குறிப்பும் குமரிமலரில் காணப்படுகிறது.                                        

 • அடுத்து ‘பவுத்த மார்க்கத்திலே மாதர்களின் நிலை’ சி.சுப்பிரமணிய பாரதி (1906) என்ற தலைப்பில் உள்ள கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுரையின் கீழ் உள்ள குறிப்பு இது:-

சக்ரவர்த்தினி சென்னை

1906 பிப்ரவரி, தொகுதி 1, பகுதி, 7

(ஆசிரியர் சி.சுப்பிரமணிய பாரதி)

இன்னும் சில கட்டுரைகளை அடுத்துப் பார்க்கலாம்.

                      -தொடரும்