DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
WRIITEN BY london swaminathan
Date : 11 September 2015
Post No. 2147
Time uploaded in London: – 10-35 am
(Thanks to face book friends and others for the pictures)
“உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” – பாரதி
“மந்திரம் போல வேண்டுமடா சொல்லின்பம்” – பாரதி
கவிஞர்கள் வாக்கு பொய்க்காது.பாரதி வாக்குகள் பொய்த்ததில்லை. அதுவும் வேதம் படித்த பிராமணனான பாரதி வாக்கு பொய்த்ததே இல்லை. அவன் சொன்ன மூன்று விஷயங்கள் – ஆரூடங்கள் பலிக்குமா?
முதல் ஆரூடம்
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
இரண்டாம் ஆரூடம்
எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்
ஆம், ஆம், இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க.
மூன்றாம் ஆரூடம்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
இன்னும் பல விஷயங்களை அவன் சொல்லியிருக்கிறான். அவன் இந்தியாவின் நாத்ரதாமஸ் — மறைபொருளில் அவன் சொன்ன விஷயங்களை நாம்தான் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும்!
ஏன் “சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம்” என்று சொன்னான்? வந்தே மாதரம் என்ற சொல், அல்லாவைத் தவிர மற்றவர்களை வணங்குவதாகும் என்று சொல்லி, காந்திஜிக்கு எதிராக, அல்லாஹு அக்பர் என்று குரல் கொடுத்து இந்தியாவைத் துண்டாடினான் முகமது அலி ஜின்னா. இதன் காரணமாக பாகிஸ்தான் என்னும் குறைப் பிரசவ, அல்பாயுஸ் குழந்தை உருவானது. பின்னர் பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எண்ணி நாமே 1971-ல் அதை உடைத்து பங்களாதேஷை உருவாக்கினோம். “உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி” என்ற பழமொழிக்கிணங்க நமக்கு இப்போது இருபுறமும் எதிரிகள். ஆனால் பாரதி வாக்கு பொய்க்காது. பாகிஸ்தானும் பங்களாதேஷும் (வங்க தேசம்) உலக வரைபடத்திலிருந்து மறைந்து “சேதமில்லாத” ஹிந்துஸ்தானம் உருவாகும். அகண்ட பாரதம் உருவாகும். இது நித்திய சத்தியம்.
இந்தியா வல்லரசாகும்
எல்லோரும் அமர நிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்று பாரதி மும்முறை கூறுகிறான். இந்தியா வல்லரசாகும் என்பது மட்டும் இதன் பொருளல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இருந்தது போல இனி, இந்தியா எப்போதும் தலைமைப் பீடத்திலேயே இருக்கும். எல்லோரும் உலக நாடுகளின் பெயரைச் சொல் என்றால் இன்று அமெரிக்கா, ரஷ்யா ……… என்று வரிசைப் படுத்துவர். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா……. என்று துவங்கி அடுத்த நாடுகளின் பெயர்களைச் சொல்லுவர். இது மூன்றாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் நிகழும். மூன்றாம் உலகப் போர் இந்திய மண்ணில் நடைபெறும் என்று இந்திய யோகி ஒருவர் சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு ஸ்தாபனமும் இப்படியே கணித்திருப்பதை லண்டன் டைம்ஸ் வெளியிட்டிருந்தது கண்டு வியப்படைந்தேன்.
இலங்கைக்குப் பாலம்
இலங்கையின் பெயரை சிங்களத் தீவு என்று பாரதி குறித்ததால், தனி நாடு வராது என்று நான் முன்னரே சொல்லி வந்தேன். அது போலவே விடுதலை இயக்கத்தினரும் வேருடன் சாய்ந்தனர். ஆனால் பாரதி சொல்லுவது புதுமையான விஷயம். இரண்டு நாட்டுக்கும் இடையே ஒரு பாலம் அமையப் போகிறது. அது சேதுவை மேடாக்கி அமைக்கப்படும் என்று. இதுவும் 50 ஆண்டுகளுக்குள் நிகழும் என்றே தோன்றுகிறது
இதுவரை சொன்னது பலித்ததா?
கவய: கின்ன பஸ்யந்தி – சாணக்ய நீதி தர்ப்பண:
கவிகள் எதைப் பார்ப்பதில்லை? கவிகள் கண்களில் தென்படாதது ஏதேனும் உளதோ?
ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹான் பஹுஞ்சே கவி = சூரியன் புக முடியாத இடத்திலும் கவிஞன் நுழைந்து பார்க்க வல்லவன் என்று சம்ஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பழமொழிகள் உள்ளன. பாரதியும் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகிவிட்டால் அவன் சொல்வதெல்லாம் மந்திரமாகும் என்கிறான். பாரதி ஒரு சித்தன்; பாரதி ஒரு ரிஷி; பாரதி ஒரு மந்த்ர த்ருஷ்டன்!
பாரதி சொன்னதெல்லாம் பலிக்கும் எனபதற்கு உரைகல் எது?
ஆடுவோமே, பள்ளுபாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று நம் நாடு சுதந்திரமடைவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்னரே சொல்லிவிட்டு 1921 ஆம் ஆண்டிலேயே இறந்தும் போனான். அவன் சொன்னது பலித்தது.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றான். இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்து பி.பி.சி. தமிழோசை அந்தப் பணியைச் செய்கிறது. நானும் பிரிட்டிஷாரின் அழைப்பின் பேரில் 1987 முதல் 1992 வரை பி.பி.சி. தமிழோசை மூலம் இப்படி உலகம் முழுதும் தமிழ் முழக்கம் ஒலிக்கச்செய்தேன்.
இதன் பிறகு சிங்களவர் தயவில் (அவர்களடித்த அடியில்) இலங்கைத் தமிழினம் நார்வே முதல் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா வரை (வடதுருவம் முதல் – தென் துருவம் வரை) பரவியது. உலக கம்ப்யூட்டர் தலைநகர் பங்களூராக மாறியதால் சென்னைத் தமிழர் உலகெங்கும் பரவி தமிழ் வளர்த்தும் வருகின்றனர். இன்று தமிழ்ப் பள்ளி, தமிழ்க் கோவில் இல்லாத நாடுகள் வெகு சிலவே. தொல்காப்பியப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் இன்று இருந்திருப்பாரானால் “வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” — என்று பாடியதை சிறிது மாற்றி “வடதுருவம் முதல் தென் துருவம் ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” என்று பாடியிருப்பார். பாரதி சொன்னது உண்மையானது!
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று கவிபாடினான் பாரதி. இன்று நம் தமிழ் – நற்றமிழ்—செம்மொழி உயர்வு பெற்றுவிட்டது. இப்படிப் பாரதி பாடிய எத்தனையோ விஷயங்கள் பலித்ததால், நான் சொன்ன மூன்றும் பலித்தே தீரும்.
1.இந்தியா வல்லரசாகும்
2.பாகிஸ்தானும் பங்களாதேஷும் அழிந்து அகண்ட பாரதம் உருவாகும்.
3.சிங்களத் தீவான இலங்கைக்கு சாலைப் பாலமும், ரயில் பாலமும் அமைக்கப்படும்.
வாழ்க தமிழ்! வளர்க பாரதி புகழ்!!
-சுபம்-
You must be logged in to post a comment.