பாம்பு நீர் குடித்தால் விஷமாகும்; பசு நீர் குடித்தால் பால் ஆகும்! (Post No.5848)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 December 2018
GMT Time uploaded in London –20-40
Post No. 5848


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலுள்ள நூறு பாடல்களில் இது வரை 44 பாடல்களைக் கண்டோம். மேலும் சில பாடல்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

இதோ பாடல் 45

கெட்டவனுக்கு இயல்பாகவே கொடுஞ்செயல்கள் வரும்.

காரணம் இல்லாமலேயே சண்டைக்கு வருவான்.

மற்றவர் செல்வத்துக்கும் மனைவியர்க்கும் ஆசைப்படுவான்.

நல்லோரைக் கண்டால் சீறி விழுவான்.

தனது குடும்பத்தினரையே நிந்திப்பான்.

ராவணன் இந்த எல்லா கெட்ட குணங்களையும் உடையவன்.

குபேரனின் புஷ்பக விமானத்தைப் பறித்தான்;

சிவ பெருமானின் கயிலை மலையை அசைத்தான்;

ராமனின் மனைவியைக் கவர்ந்தான்.

தேவர்களைத் துன்புறுத்தினான்.

எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.

திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079

பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.

ஈசாப்   கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில்  பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.

பிறன் மனை நோக்காத பேராண்மை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146

பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–

பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.

இதை பர்த்ருஹரி அழகாகஒரே ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.

அகருணத்வமகாரணவிக்ரஹக பரதனே பரயோஷிதி ச ஸ்ப்ருஹா

ஸுஜன பந்துஜனேஸ்ஹ்வஸஹிஷ்ணுதா ப்ரக்ருதி ஸித்தமிதம்  ஹி துராத்மனாம்-45

xxxxxx

பாடல் 46

கற்றவர்களாயினும் தீய குணம் இருந்தால் அவர்களைத் தவிர்க்க வேண்டும். பாம்பின் தலையில் மாணிக்கம் இருந்தாலும் அது ஆபத்தானதல்லவா?

துர்ஜனஹ பரிஹர்தவ்யோ வித்யயாஅலக்ருதோ அபிஸன்

மணினா பூஷிதஹ ஸர்பஹகிம் அஸௌ ந பயங்கரஹ- 1-46

தீயவர்பால் கல்வி சிறந்தாலு மற்றவரைத்

தூயவரென்றெண்ணியே துன்னற்க– சேயிழையே!

தண்ணொளிய மாணிக்க சர்ப்பந் தரித்தாலும்

நண்ணுவரோ மற்றதனை நாடு- நீதிவெண்பா

பொருள்

பாம்பிடம் ஒளிமிக்க மாணிக்கக் கல் இர்ந்தாலும் யாராவது அதை நெருங்குவார்களா? அதே போல கெட்டவர்களிடம் கல்வி அறிவு இருந்தாலும் நாடக் கூடாது.

 பசுவுக்கு நீர்பால்; பாம்புக்கு நீர் – விஷம்

பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு ஹெண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளிஆய்ம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்

களியாம் கடையாயார் மாட்டு- அறநெறிச்சாரம்

பொருள்

பாம்புகள் குடிக்கும் நீர் எல்லாம் விஷமாக மாறுகிறது;

கயவர்கள் கற்கும் ஞன நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்;

பசு மாடுகள் குடிக்கும் தண்ணீர் இனிய பாலாக மாறும்;

உயர்ந்தோர் கற்கும் ஞான நூல்கள் அவர்கள் மாட்டு அறிவினை வளர்க்கும்.

தீயோர்கள் கற்றாலும் கற்றதையெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்வர்.

अकरुणत्वम् अकारणविग्रहः
परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता
प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥

दुर्जनः परिहर्तव्यो
विद्यया‌உलकृतो‌உपि सन् ।
मणिना भूषितः सर्पः
किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥

tags– நல்லோர்,தீயோர், பாம்பு, பசு, விஷம், பால்

Xxxxxxxxxxxxxx  subham xxxxxxxxxxxxxxxxxxxx

பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும்… (Post No.3904)

Written by London Swaminathan

 

Date: 13 May 2017

 

Time uploaded in London: 6-34 am

 

Post No. 3904

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

தமிழில் அழகான, ஆழமான பொருள் பொதிந்த பழமொழிகள் உள. ஒருவன் செய்யும் காரியம் எவ்வளவுதான் நல்லதானாலும் இடமும் நேரமும் சூழ்நிலையும் சரியாக இல்லாவிடில் நல்ல பெயர் கிடைக்காது

 

பாம்புப் புற்றுக்கு அருகில் ஒரு கயிறு கிடந்தாலும் அதைப் பாம்பென்றே மக்கள் கருதுவர்; சஹவாச தோஷம்!

பனைமரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும், அதன் வெண்மை நிறமும், இடமும் அதைக் கள் என்று நினக்கச் செய்யும்.

 

நிந்தையிலாத் தூயவரும் நிந்தையைச் சேரில் அவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே – நிந்தைமிகு

தாலநிழல் கீழிருந்தான் றன்பால் அருந்திடினும்

பாலதனச் சொல்லுவரோ பார்.

-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்:-

பனை மரத்தின் அடியின் உடகார்ந்துகொண்டு பசுவின் பாலைக் குடித்தாலும், பிறர் அதைப் பால் என்று சொல்லுவரோ? நீ அதனை நினைத்துப் பார். அதுபோல நல்ல பெயருடைய மேலோர், கெட்டவர்களுடன் சேர்ந்தால் அவர்களுடைய கெட்ட பெயர் இவர்களையும் ஒட்டிக்கொள்ளும்.

பழுதும் பாம்பும்

 

இதே கருத்தை வலியுறுத்த இன்னொரு பாடலையும் பாடி வைத்தார் அந்தப் புலவர்!

 

நல்லொழுக்கம் இல்லாரிடம் சேர்ந்த நல்லோர்க்கு

நல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும் விடப்

பாம்பென உன்னாரோ பழுதையே ஆனாலும்

தூம்பு அமரும் புற்று அடுத்தாற் சொல்

-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

ஓட்டைகள் மிக்க புற்றுக்குப் பக்கத்தில் கயிறே கிடந்தாலும், அதை கொல்லக் கூடிய விஷப் பாம்பு என்று சொல்லுவார்கள் அல்லவா? நீயே சொல்! அது போல நல்ல ஒழுக்கம் இல்லாதவர்களுடன் சேர்ந்த நல்லோரையும் பழிச் சொல் வந்து சேரும்.

 

அழகான இரண்டு உவமைகள் மூலம் நமக்கு உயரிய கருத்துக்களைச் சொல்வர் தமிழ்ப் புலவர். இளம் வயதிலேயே இந்தச் செய்யுட்களை மனப்பாடம் செய்தால், அவை நம் மனதில் பசு மரத்தாணி போலப் பதியும்.

 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப் புலவர்தம் பெருமை!

 

–சுபம்–

 

 

ஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை! கொக்கும் வெள்ளை! என்ன வேறுபாடு?

swan1

ஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை! கொக்கும் வெள்ளை! என்ன வேறுபாடு?

Written  by London swaminathan

Date: 2 November 2015.

Post No:2294

Time uploaded in London :–  7-41 (காலை)

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

1).சர்வாரம்பா தண்டுலப்ரஸ்த மூலா:

எல்லாவற்றிற்கும் மூல காரணம் (அரிசிச்) சோறு!

ஒப்பிடுக:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் -ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது— அவ்வையார்.

xxxx

2).சா சபா யத்ர சப்யோஸ்தி (கதா சரித்சாகரம்)

எங்கு அவை ஒழுக்கமுடையோர்

இருக்கிறார்களோ அதுவே சபை!

ஒப்பிடுக: மாநில சட்டசபைகள், லோக் சபை உறுப்பினர்களின் நடத்தை!!

xxx

3).ஸா சேவா யா ப்ரபுஹிதா– (பஞ்ச தந்திரம்)

முதலாளிக்கு (தலைவருக்கு/ எஜமானனுக்கு) இதம் தருவதே சேவை

xxx

4).சூர்ய ஏகாகி சரதி (யஜூர் வேதம்)

சூரியன் தன்னதனியனாகச் சொல்கிறான்

xxx

5).ஸ்வஜாதிர் துரதிக்ரமா (பஞ்ச தந்திரம்)

எங்கும் தனது இனத்தை (ஜாதியை) விட்டுக்கொடுக்க முடியாது

xxx

6).ஸ்வதேச ஜாதஸ்ய நரஸ்ய நூனம் குணாதிகஸ்யாபி பவேதவக்ஞா

சொந்த நாட்டுக்காரர்களுக்கு எவ்வளவு பெருமை/திறமை இருந்தாலும் அவனுக்கு அவமதிப்பே மிஞ்சுகிறது (இக்கரைக்கு அக்கரை பச்சை)

ஹிந்தி: கர் கா ஜோகீ ஜோக்டா ஆன் காவ்ன் கா சித்த

xxx

7).ஸ்வாத்யாய  ப்ரவசனாப்யாம் ந ப்ரமதிதவ்யம் (தைத்ரீய உபநிஷத்)

வேதங்களைக் கற்பதையும், கற்பிப்பதையும் புறக்கணிக்காதீர்கள்

xxx

swan2

8).ஹம்சோ ஹி க்ஷீரமாதத்தே தன்மிஸ்ரா வர்ஜயத்யப:  – (சாகுந்தலம் நாடகம்)

அன்னப் பறவையானது பாலை மட்டும் எடுத்துக் கொண்டு தண்ணீரை விட்டுவிடும்

Xxxx

9).ஹம்ச: ஸ்வேதோ பக: ஸ்வேத: கோ பேதோ பக ஹம்சயோ:

நீரக்ஷீர விபாகே து ஹம்ஸோ ஹம்ஸோ பகோ பக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அன்னப் பறவையும் வெள்ளை; கொக்கும் வெள்ளை! பின்னர் என்ன வேறுபாடு?

தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் அன்னம், பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் நீரை விட்டுவிடும். கொக்கு, கொக்குதான்! அன்னம், அன்னப் பறவைதான்!

xxx

crane

10).ஹிமவதி திவ்ய ஔஷதய: சீர்ஷே சர்ப: சமாவிஷ்ட: (முத்ராராக்ஷசம் நாடகம்)

தலைக்கு மேலே பாம்பு! இமய மலையில் மூலிகைகள்!

(தொலைவில் தீர்வு/ மருந்து இருந்தால் என்ன பயன்?)

ஹிந்தி: ஜப் தக் ஹிமாலய் சே சஞ்சீவனீ ஆயே, பீமார் மர் ஜாயே.

சாம்ப் தோ சிர் பர், பூடி பஹாட் பர்

–சுபம்–

காலையில் நீர், பகலில் மோர், இரவில் பால்!

0-2neermor

Article No.1970

Date: 3 July 2015

Written by London swaminathan

Uploaded from London at காலை 9-20

1.போஜனாந்தே பிபேத் தக்ரம் வாசராந்தரே பிபேத் பய:

நிசாந்தே ச பிபேத் வாரி த்ரிபி: ரோகோ ந ஜாயதே

சாப்பிட்ட பின்னர் மோர் குடிக்க வேண்டும், இரவில் பால் குடிக்க வேண்டும், காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த மூன்றும் செய்தால் நோயே அணுகாது.

2.பிப்பலீ மரீச ஸ்ருங்கவேராணி இதி த்ரிகடுகம்—சுஸ்ருத சம்ஹிதா-38-58

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் உணவில் சேர்ப்போருக்கு நோய்கள் வாரா.

Dairy products

Dairy products

3.ஹரிதக்யாமலகபிபீதகானிதி த்ரிபலா — சுஸ்ருத சம்ஹிதா- 38-56

ஹரிதகி (கடுக்காய்) ஆமலக (நெல்லிக்காய்), பிபீடகா (தான்றிக்காய்) ஆகிய மூன்றையும் காயவைத்து சூரணமாக சாப்பிடுவோரை நோய் அண்டா.

4.த்ரிமது

க்ருதம் குடம் மாக்ஷிகம் ச விக்ஞேயம் மதுரத்ரயம்

க்ருதம் (நெய்) குடம் (வெல்லம்) மாக்ஷிகம் (தேன்) ஆகிய மூன்றும் மதுரம் (இனியவை) எனப்படும். இவை மூன்றும் மருந்துடன் கலந்து சாப்பிட உதவும்.

த்ரிபலா

படங்களுக்கு நன்றி.