எகிப்தில் பேய் விரட்டல்: எகிப்திய அதிசயங்கள் -22 (Post No.3740)

Picture:– டென்டெராவிலுள்ள ஹதோர் (சவிதுர்) கோவிலின் வாசல்

 

Written by London swaminathan

 

Date: 20 March 2017

 

Time uploaded in London:- 8-41 am

 

Post No. 3740

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பிடிக்காத அரசியல் தலைவர்களின் கொடும்பாவிகளை கொளுத்துவதைப் பார்க்கிறோம். கந்த சஷ்டிக் கவசம் போன்றவற்றில் பில்லி சூனியம், பூமியில் புதைத்து வைக்கும் பாவைகள் (பொம்மைகள் பற்றிப் படிக்கிறோம். இந்த நம்பிக்கைகளுக்கெல்லாம் முன் உதாரணங்கள் அல்லது ஆதாரம் எகிப்தில் உள்ளது. பிடிக்காதவர்களின் ஆவியை ‘ஒழிக்க’ அவர்கள் என்ன என்ன செய்தனர் என்பது எழுத்து வடிவில் உள்ளது.

 

கந்த சஷ்டிக் கவசத்தில் வரும் வரிகளை முதலில் படியுங்கள்:

பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்

…………………………………………………..

 

பேய்கள், பில்லி, சூன்யம், ஒருவர் வீட்டிற்கு அடியில் தீமை தரும் விஷயங்களைப் புதைத்து வைத்தல் முதலியவற்றில் இந்துக்களுக்கு இருந்த நம்பிக்கையை இந்த வரிகள் நிரூபிக்கின்றன., அவைகளை அகற்ற கந்த சஷ்டிக் கவசம் போன்ற கவசங்கள் உதவும் என்பதில் ஐயமில்லை.

 

எகிப்திலும் இது போன்ற பல நம்பிக்கைகள் இருந்தன.

இறந்த கெட்ட மனிதர்களின் ஆவிகள் கோபமடைவதால், வாழும் உறவினர்களுக்குப் பலவித நோய்கள் வருவதாக பழங்கால எகிப்தியர் நம்பினர். நல்ல ஆவிகளும்கூடக் கோபம் அடைந்தால், தீங்கு விளைவிக்கும் என்று இறந்தோருக்கு எழுதிய கடிதங்களிலிருந்து (Letters to the Dead) தெரிகிறது.

இத்தகைய கெட்ட ஆவிகளை அடக்கிவைக்க பலவகையான சடங்குகளும், மந்திரங்களும் கையாளப்பட்டன.

நாம் கொடும்பாவி செய்து அவைகளை எரித்து நம் கோபத்தைக் காட்டுவதுபோல, கெட்ட ஆவிகளின் உருவங்களைச் செய்து அவர்களைத் தாக்கினர். அல்லது கல்லறைகளை உடைத்தனர். அவர்களுடைய பெயர்களை அழித்தனர்.

Picture: -இந்தப் பொம்மையில் பல ஆசிய நாட்டு எதிரிகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன

எகிப்தில் பெரிய கலாசாரப் புரட்சி அல்லது சமயப் புரட்சி செய்தவன் அக்நதன் (ஏகநாதன்) என்ற மன்னன் ஆவான். இவன் எகிப்தில் இருந்த நூற்றுக் கணக்கான கடவுளரை “ஒழித்து” ஏக நாதன் = கடவுள் ஒன்றே என்று ஒரே கடவுள் கொள்கையைப் பரப்பினான். இவனது காலம் கி.மு.1352-1336.

இவன் ஆதன் (SUN) ஒருவரே கடவுள் என்றான். ஏக நாதன் என்ற சம்ஸ்கிருதப் பெயர்தான் இப்படி மருவியதோ என்று எண்ணி நான் வியப்பேன்.

இதை ஏக நாதன் என்றோ ஏகன் ஆதவன் (சூரியன்) என்றோ படிக்கலாம். ஏனெனில் அவன்  சூரியக் கடவுள் ஒருவனே கடவுள் என்றான்.

ஏகநாதனின் கல்லறைகள் பிற்காலத்தில் அழிப்பட்டன; அவனுடைய கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டன.

கெட்ட ஆவிகள் மீது சாபம் போடும் ஆயிரம் சாபங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் எழுதிய  ஆயிரம் பானைகள் அல்லது பாவைகள் (உருவங்கள் ) கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அதை உடைப்பர் அல்லது பானைகளில் பெயர் எழுதி உடைப்பர்.

பைபிளில் ஜெர்மியா 19/ 1-11 பகுதியில் இந்த பானை உடைக்கு,,, சடங்கு விவரிக்கப்பட்டுளது.

எகிப்தில் டென்டெரா (Dendera) என்னுமிடத்தில் ஹதோருக்கு எழுப்பிய கோவிலுக்கு முன் கிறிஸ்தவர் காலத்தில் ஒரு வளைவு எழுப்பப்பட்டுள்ளது. அதில் எகிப்திய மன்னர்களின் உருவங்களும் கடவுளரின் உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கும் முறை அவர்களை அழிக்க கொடுக்கப்பட்ட சாபம் என்றுதெரிகிறது. அதாவது பழைய கடவுளரை ஒழிக்க கிறிஸ்தவர் செய்த வேலை இது.

 

இந்த பேய் ஓட்டும் வழக்கம் பழைய சாம்ராஜ்ய காலத்திலிருந்து கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு இருந்துள்ளது. பலவகையான வழிகளில் கெட்ட ஆவிகளை ஒழித்தாலும் பெரும்பாலான இடங்களில் சிவப்பு பானையின் மீதோ ஒரு உருவத்தின் மீதோ அவைகளின் பெயரை எழுதி அதை உடைப்பதே வழக்கமாக இருந்திருக்கிறது; அல்லது எரிப்பர் அல்லது பூமிக்கடியில் புதைப்பர்.

 

இது பெரும்பாலும் ஒரு அரசாங்க சடங்காகவே (State Ritual) இருந்தது. அதாவது அருகாமை நாடுகளின் எதிரி மன்னர்களின் பெயர்களை எழுதி உடைத்தனர். அதோடு கெட்ட (இறந்த) ஆவிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. மிகவும் அபூர்வமாக, உள்ளூரிலுள்ள பிடிக்காத ஆட்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்தகையோர் உள்ளூர் குற்றவாளிகள் அல்லது அரசுக்கு எதிராகச் சதிசெய்தவர்களாக இருப்பர்.

Picture: –ஆய் என்ற எகிப்திய மன்னரின் கல்லறயில், அவருடைய முகம், உடல் முதலியவற்றை அழித்து விட்டனர் (தமிழில் கடையெழு வள்ளல்களில் ஒருவன் ஆய். இந்தப் பெயர் உள்பட பல தமிழ் , சம்ஸ்கிருதப் பெயர்கள் எகிப்த்தில் இருப்பது பற்றி முன்னரே எழுதியுள்ளேன்)

சில இடங்களில் இறந்துபோன ஒருவரின் பெயரை எழுதி அவரது குடும்பத்தையும் சேர்த்து சபிக்கும் எழுத்துகளுடன் பாவைகள் காணப்படுகின்றன. இவைகள் பெரும்பாலும் பழைய கல்லறைகளில் புதைக்கப்பட்டன. கெட்ட ஆவிகளை அடக்க, ஏற்கனவே இருந்த நல்ல ஆவிகளின் உதவியும் கோரப்பட்டன.

 

மொத்தத்தில் எகிப்தியர்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு இந்த ஆவி பிஸினஸில் நேரத்தைச் செலுத்தியது தெரிகிறது. பழைய சாம்ராஜ்ய காலத் திலிருந்து, எகிப்தை கிரேக்கர்கள், ரோமானியர் ஆண்டவரை இந்த நம்பிக்கை நீடித்திருக்கிறது!

 

நம் நாட்டில் அதர்வண வேதத்தில் காணப்படும் மந்திரங்களை இன்றும் கேரளத்தில் பயன்படுத்துவதைக் காணும்போது இதில் வியப்பில்லை. அதர்வண வேத மந்திரங்கள் எகிப்திய நாகரீகத்துக்கும் முந்தையதாக இருக்கலாம்.

 

–Subham–