
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9145
Date uploaded in London – –15 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள்! – 1 வெளியான தேதி 2-12-2020 கட்டுரை எண் 8989
நடந்தவை தான் நம்புங்கள்! – 2 வெளியான தேதி 3-12-2020 கட்டுரை எண் 8992
ச.நாகராஜன்
1

இடி அமீன் உகாண்டாவின் ஜனாதிபதியாக இருந்த சமயம் அவரது அலுவலகம் உலக வங்கியை அணுகியது. இடி அமீனுக்காக பணி செய்ய ஒரு தக்க அதிகாரியைத் தருமாறு அது கேட்டது. அந்த அதிகாரியின் பணிப் பொறுப்பு என்ன என்பதையும் அது விளக்கவில்லை.
உலக வங்கியும் அப்படிப் பணியாற்ற தக்க ஒரு ஆங்கிலேயரை இனம் கண்டது.
“நீங்கள் 24 எழுத்துக்களில் தந்தி மூலம் பதில் அளிக்க முன் கட்டணம் செலுத்தப்பட்டிருக்கிறது. உடனே பதில் அளிக்கவும்” என்று ஒரு தந்தியை அவருக்கு அனுப்பியது.
24 எழுத்துக்கள் அடங்கிய அவரது பதிலும் ஆங்கிலத்தில் உடனேயே வந்தது. பதில் இது தான் ! :-
HA HA HA HA HA HA HA HA HA HA HA HA
2
மிகப் பெரிய பாடகரும் இசை அமைப்பாளருமான ஸ்டீவ் வொண்டர் (Stevie Wonder) கண் பார்வையற்றவர். ஆனால் அவர் ஒரு போதும் தனது கண்பார்வையற்ற தன்மையை ஒரு குறையாக நினைத்ததே கிடையாது.

அவரது ஆசிரியர்களுள் ஒருவர் அவரிடம், “உனக்கு மூன்று குறைகள் இருக்கின்றன, நீ ஒரு ஏழை, கண்பார்வை இல்லாதவன், ஒரு கறுப்பன். கல்வி அறிவில்லாத ஒரு குருடன் பானையைத் தான் செய்ய முடியும்” என்று அவரிடம் ஒரு முறை கூறினார். ஆனால் அவர் இதைப் பொருட்படுத்தவே இல்லை.
இரண்டே வருடங்களில் அவரது ரிகார்ட் கம்பெனி ‘12 வயது கண்பார்வையற்ற மேதை’ என்று அவரைப் பற்றி பெரிய விளம்பரங்களைச் செய்தது.
“குருடாக இருப்பதால் நீங்கள் புத்தகத்தை அதன் மேலட்டையைப் பார்த்து எடை போடுவதில்லை” என்று கூறிய அவர், “தேவையற்ற விஷயங்களைப் பார்த்தாலும் அவற்றை ஒதுக்கி விட்டு மிக முக்கியமானவற்றையே எடுத்துக் கொள்வீர்கள். கண் பார்வை இருந்தும் பார்க்காமல் இருக்கிறார்களே அவர்களுக்காகத் தான் நான் வருத்தப்படுகிறேன்” என்றார்.
3
பிரபல ஓவியரான பிகாஸோ, போலியாகத் தனது ஓவியங்களைப் போலவே போட்டு விற்பவர்களைப் பற்றி அலட்டிக் கொண்டதே இல்லை. பெரும்பாலும் அவர் சட்டப்படியான நடவடிக்கையை அவர்கள் மீது எடுப்பதே இல்லை. மிகக் கடுமையான அவரது நடவடிக்கை அப்படிப்பட்ட போலி சித்திரங்களில் தன்னைப் போலவே கையெழுத்துப் போட்டிருப்பதை அடித்து அழிப்பது தான்!


“இதை ஏன் நான் பெரிது படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
“ஒன்று அப்படிப் போலி ஓவியங்களை வரைவோர் மிகவும் ஏழைகளாக இருக்க வேண்டும்; அவர்களுக்காக நான் வருத்தம் தான் பட வேண்டும்; இல்லையேல் அவர்கள் எனது பழைய நண்பர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்காக நான் இன்னும் அதிகம் வருத்தப்பட வேண்டும். அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத அளவு நான் ஒரு உண்மையான ஸ்பானிஷ்காரன். அதை விட அது உண்மையா இல்லையா என்று கூறும் நிபுணர்களும் தங்கள் வயிறை நிரப்ப வேண்டும் இல்லையா?!” என்றார் அவர்!
ஆகவே பிகாஸோ ஓவியங்கள் போல போலி பிகாஸோ ஓவியங்களை வரைந்து ஏராளமானோர் பிழைத்தனர்; அவர்களுக்குத் தான் எந்த வித ஆபத்தும் வரப் போவதில்லையே!
*
குறிப்பு : – ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்களில் படித்தவை இவை!

tags- இடி அமீன், பிகாஸோ, ஸ்டீவ் வொண்டர் (Stevie Wonder)