

Post No. 9914
Date uploaded in London –31 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராதன கிரேக்க நாட்டின் புகழ்மிகு புலவர் பிண்டா (ர்) (PINDAR).
அவர் வாழ்ந்த காலத்திலேயே புகழப்பட்டார். அவர் மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பாராட்டப்பட்டார்.
பிண்டா (ர்), (THEBES) தீப்ஸ் என்னும் நகருக்கு அருகில் பிறந்தார். அவர் பிறந்த குடும்பம் பிரபுக்களின் குடும்பம். அவர்கள் பழங்கால புராணப் பெருமையுடைய குலத்தின் வழி வந்தவர்கள். நாம் பாண்டியர், சோழ மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று சொல்லிக்கொள்வது போல.
இளமைப் பருவத்தில் அவர் ஏதென்ஸ் மாநகரத்தில் சங்கீதம் பயின்றார்.ஒரு இசைப் போட்டியில் கோரின்னா (CORINNA) என்ற பெண்மணியிடம் அவர் தோற்றுப் போனார் . அவர், பிண்டாருடைய ஆசிரியர் என்றும் சொல்லுவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் தனி பாடகர் யாழ் ( LYRE) போன்ற இசைக்கருவியை வைத்துக் கொண்டு வாசிப்பார்கள். அல்லது ஒரு அணியாக நின்று கூட்டாகவும் (கோரஸ் CHORUS ) இசைப்பார்கள். பிண்டார், கோரஸ் பாடுவோருக்கு பாடல்களை எழுதினார். 20 வயது முதலே அவர் இவ்வாறு கீர்த்தனைகளை எழுதத் துவங்கினார் இவைகளை ஓட்ஸ் (Odes) என்று அழைப்பர். கிரேக்க மொழியில் (Ode= to sing) ‘பாடு’ என்று பொருள். இசையுடன் கூடிய உணர்ச்சிமிகு பாடல்கள் (Lyrics) அவை.
புராதன கிரேக்க நாட்டில் நான்கு விளையாட்டுப் போட்டிகள் பிரபலம் அடைந்தன. ஒலிம்பியன், நேமியன், பிதியன் , இஷ்த்மியன் என்பன அவை. கிரேக்க நாட்டின் எப்பகுதியில் வசித்தாலும் பங்கேற்கக்கூடியது ஒலிம்பிக் (Olympian) விளையாட்டுகள். இன்று நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளும் அதே பெயரைக் கொண்டனவாகும் பழங்கால ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பிண்டார் பாடினார். அவற்றுக்கு ட்ரயம்பல் ஓட்ஸ் / வெற்றி கீதங்கள்(Triumphal Odes) என்று பெயர்.
புலவரின் புகழ் கிரேக்க நாடு முழுதும் பரவவே, பல மன்னர்களும் பணக்கார குடும்பங்களும் எங்களையும் வாழ்த்திப் பாடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்காக அவர் நீண்ட தொலைவு பயணம் செய்து நாட்டை வலம் வந்தார். சென்ற இடமெல்லாம் புகழ் மொண்டுவந்தார். அவருடைய பாடல்களைக் கேட்க ஆங்காங்கே மக்கள் காத்து நின்றனர்.
2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவருடைய 44 பாடல்கள் நமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளன.

பிறந்த ஆண்டு- கி.மு.518
இறந்த ஆண்டு – கி.மு.438
வாழ்ந்த ஆண்டுகள் – 80
அவர் எழுதிய பாடல்கள்:-
FIFTH CENTURY BCE
TRIUMPHAL ODES – 44 IN TOTAL
xxx
SURVIVING FRAGMENTS
பல பாடல்கள் முழுமையாக இல்லை.
HYMNS
PAENS
CHORAL DITHYRAMBS
PROCESSIONAL SONGS
CHORAL SONGS FOR MAIDENS
CHORAL DANCE SONGS
LAUDATORY ODES
பிற்காலப் புலவர்களும் எழுத்தாளர்களும் இவருடைய கவிதைகளை மேற்கோள் காட்டியதால் நமக்குத் துண்டுக் கவிதைகள் கிடைத்தன. இன்னும் சில துண்டுகள், எகிப்தில் பேபைரஸ் (Papyrus) காகிதத் துண்டுகளில் கிடைத்தன.
xxxxx
தமிழர்கள், அவர்களுக்கும் முன்னால் , கவிதைகள் எழுதிப் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத, கிரேக்க, எபிரேய (ஹீப்ரு), லத்தீன், சீன மொழிப் புலவர்கள் பற்றியும் அவர்களுடைய இலக்கியப்படைப்புகள் பற்றியும் அறிதல் வேண்டும் . பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்த்தல் வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் சொன்னார். இதுவரை நாம் மொழிபெயர்த்தது எள் அளவுக்கே உளது. அதுவும் பழைய கால மொழிபெயர்ப்புகள்; படிப்பதற்கு இனியனவாக இல்லை .
ஜம்புநாதன் , ரிக்வேதம் முதலிய 4 வேதங்களை தமிழில் மொழிபெயர்த்து அற்புதமான பணியைச் செய்தார். ஆனால் அது செம்மையான தமிழில் அமையவில்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை இன்னும் நாம் வரிக்கு வரி (Verbatim) அதே வேகத்தில் மொழிபெயர்க்கவில்லை. ஹோமரின் இலியட், ஆடிசி (ஒடிஸி ) ஆங்கியவற்றின் மொழிபெயர்ப்புகளும் கடனுக்குச் செய்த மொழிபெயர்ப்புகளாகவே உள .
பழங் காலத்தை விட்டு, 100, 200 ஆண்டுகளுக்கு முன் பார்த்தால் பல்லாயிரம் பல்லாயிரம் நூல்கள் மொழி பெயர்க்கப்படாமல் உள்ளன . இவற்றுக்காக தனித்துறை அமைத்து மொழிபெயர்க்கும் தனியார்களை அரசு ஊக்குவிக்கவேண்டும் ; இதைப் பல்கலைக்கழகங்களிடையே விடக் கூடாது. அவர்கள் மெத்த காசு வாங்கிக்கொண்டு, ஒரு நாளைக்கு பத்து வரிகள் மொழிபெயர்ப்பார்கள். அதுவும் ‘எழவுத் தமிழில்’ இருக்கும். படிக்கும் நடையில் இராது. தனியார் செய்த மொழி பெயர்ப்புக்களுக்கு அரசு உதவி அளித்தல் நல்லது .
புகழ்பெற்ற பிரெஞ்சு , லத்தீன் , ஜெர்மானிய, ஆங்கில நூல்களை முதலில் மொழிபெயர்த்தல் வேண்டும். அம் மொழி ஆசிரியர்கள் எழுதிய கடிதங்களையும், சொன்ன பொன்மொழிகளையும் மொழிபெயர்த்தாலே பல்லாயிரம் பக்கங்களுக்கு வரும். கதைகளையும், நாடகங்களையும் மொழிபெயர்த்தால் கோடிக் கணக்கான பக்கங்களுக்கு வந்துவிடும்!!!
tags- கிரேக்க , புலவர், பிண்டார் ,




–ssubham-