பிரம்மசர்யம் பற்றி சங்க இலக்கியத்தில் வியப்பான தகவல் !!

ramana's pose
Sri Ramana Mharishi

ஆய்வுக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:—1135; தேதி:— 28th June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று 18 நூல்கள் உள்ளன. இவைகளை மேல் கணக்கு நூல்கள் என்பர். திருக்குறள், நாலடியார், பழமொழி முதலிய 18 நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர். இவை அனைத்தையும் படிப்பவர்களுக்கு பல அதிசயச் செய்திகள் கிடைக்கும். பாரதீய கலாசாரம் ஒன்றே, பல அல்ல என்ற உண்மையும் விளங்கும். பத்துப்பாட்டில் முதலில் வைக்கப்பட்டுள்ள திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் ஒரு அதிசயத் தகவலை அளிக்கிறார்:–

இருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
யறுநான் கிரட்டி யிளமை நல்லியாள்
டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை (முருகு 177-180)

பொருள்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல் ஈதல், ஏற்றல் என்னும் (பிராமணர்களின் ஆறு தொழில்கள்) ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல், தாயும் தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்றென்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த (இருபிறப்பாளர்) இருபத்துநான்கின் இரட்டியாகிய (6x4x2=48) நாற்பத்தெட்டு ஆண்டு நல்லிளமையை வேதம் போக்கிய நெறியிலே போக்கிய இருபிறப்பாளர் (பிராமணர்) – என்று டாக்டர் உ.வே.சாமிநாதையர் வெளியிட்ட உரை கூறும்.

அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் 48 ஆண்டுக்கு சொல், செயல், சிந்தனை ஆகியவற்றில் பெண்கள் பற்றிய பாலியல் உணர்வு இன்றி திரிகரண சுத்தியுடன் — (மனோ, வாக், காயம்= சிந்தனை, சொல், செயல்) —- பலர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தது தெரிகிறது.

Sri_Ramakrishna
Sri Ramakrishna Paramahamsar

இதற்கு விளக்கம் நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தில் கிடைக்கிறது:–
பிரம்மசாரிகள் கடவுளின் நண்பர்கள் என்னும் சாமவேதம்
24 ஆண்டு பிரம்மசர்யம் அனுஷ்டிப்போர் ‘வசு’ என்றும்
36 ஆண்டு பிரம்மசர்யம் அனுஷ்டிப்போர் ‘ருத்ரர்’ என்றும்
48 ஆண்டு பிரம்மசர்யம் அனுஷ்டிப்போர் ‘ஆதித்யர்’ என்றும் – கூறும்.

மேலும் பிரம்மசாரிகளை ‘ஊர்த்வரேதஸ்’ ((சக்தியை மேல்நோக்கி செலுத்துவோர்) என்றும் புகழும்.

சுவாமி விவேகாநந்தர்

பிரம்மசாரிகள் அடையும் அபூர்வ சக்திகள் பற்றி சுவாமி விவேகாநந்தர் பல அரிய செய்திகளைக் கூறுகிறார். அபார நினைவாற்றல், பிறர் மனதில் ஓடும் எண்ணங்களைக் கண்டுபிடித்தல் முதலிய சக்திகள் கிடைக்கும். அவரது வாழ்வில் நடந்த சில அற்புதச் செயல்களே இதற்கு ஆதாரம். நூல் நிலயத்துக்குச் சென்று இவர் புத்தகம் புத்தகமாகக் கேட்டுப் பெற்றது நூலகருக்கே எரிச்சல் ஊட்டியது. ‘’ஐயா, நீங்கள் புத்தகத்தைப் பார்க்க வாங்குகிறீர்களா அல்லது படிக்க வாங்குகிறீர்களா என்று கேட்டும் விட்டார். உடனே எந்தப் பக்கத்தில் உள்ள எந்த விஷயத்தையும் கேளுங்கள் என்று சுவாமிஜி சொன்னார். நூலகர் கேட்ட கேள்விகளுக்கு பக்கம் மாறாமல் விடையும் பகன்றார். இதனால்தான் அந்தக் காலத்தில் மாணவர்கள் குருவின் வீட்டிற்குச் சென்று வேறு எதிலும் சிந்தனையைச் செலுத்தாமல் குறைந்தது 12 ஆண்டு பிரம்மச்சர்யம் அனுஷ்டித்து பின்னர் கிருஹஸ்தன் (குடும்ப வாழ்வு) ஆக வேண்டும் என்று விதிக்கப்பட்டது.

பிரம்மசாரி, கிருஹஸ்தன், வானப்ப்ரஸ்தன், சந்யாசி என்ற நால்வகை வாழ்க்கை அமைப்பும் விதிக்கப்பட்டது.

ஒருமுறை வெளிநாட்டுக்காரர் ஒருவர் நீங்கள் என் மனதில் உள்ளவற்றைச் சொல்ல முடியுமா? என்று சுவாமி விவேகாநந்தரைக் கேட்டார். ‘நான் என்ன? இதோ என் சிஷ்யன் கூடச் சொல்லுவான்’– என்று பக்கத்தில் அமர்ந்திருந்த சீடனைக் காட்டினார். அவன் பயந்து நடுநடுங்கிப் போனான். ஏனெனில் அவனுக்கு அந்தச் சக்தி கிடையாது. சீடனை நோக்கி சுவாமி விவேகாநந்தர், ‘எங்கே இவர் மனதில் உள்ளதைச் சொல்’ என்ற வுடன் அவன் கட கட வென்று சொன்னான். இது எல்லாம் பிரம்மசர் யத்தினால் செய்ய முடியும்— மேதா நாடியின் – அபூர்வ சக்தி இது என்றார்.

இளமைக் காலத்தில் ஒருவர் 12 ஆண்டு பிரம்மசர்யம் பின்பற்றினால் அபூர்வசக்திகள் கிடைக்கும்— (பிற தீய பழக்கங்களும் கூடாது என்பது சொல்லாமலே விளங்கும்)— காமினி, காஞ்சனா ( பெண், பொன் ஆசை) பற்றில்லாதோருக்கு ‘மேதா நாடி’ என்று உடம்பில் தோன்றும் என்றும் இது தோன்றினால் கடவுள் பற்றிய பேருண்மைகள் புலப்படும் என்றும் சுவாமிஜியின் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூறுகிறார். அவர் மேலும் பல கதைகள் மூலம் பிரம்மசர்யத்தின் பெருமையை விளக்குகிறார். ( காண்க:– ஸ்ரீ ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி, கிடைக்குமிடம், சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்).

kanchi japam
Sri Kanchi Paramacharya Swamikal

பகவத் கீதையில் பிரம்மசர்யம்

கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் (6—14) பிரம்மசர்யமத்தின் பெருமையைப் பேசும் இடத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் –(முன்னாள் ஜனாதிபதி, தத்துவப் பேராசிரியர்) —அழகிய உரை எழுதி இருக்கிறார். பிரஸ்ன உபநிஷதத்தில் பிப்பலாடன் என்பவர், மேலும் ஓராண்டு பிரம்மசர்யம் அனுஷ்டிப்போருக்கு அரிய பெரிய ஞானத்தை அளிப்பதாக உறுதி கூறுகிறார். சாந்தோய உபநிஷதத்தில் 101 ஆண்டுக் காலம் பிரம்மசர்யம் அனுஷ்டித்த இந்திரனுக்கு பிரம்ம தேவன், ஞானத்தை அளித்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அதுமட்டுமல்ல தேவர்கள் பிரம்மசர்யம் அனுஷ்டித்து மரணத்தை வென்றனர் என்ற அதர்வ வேத வரிகளையும் எடுத்தாளுகிறார்.

தமிழில் சித்தர் பாடல்கள் திருமூலரரின் திருமந்திரத்திலும் பல விஷயங்கள் உள்ளன. ஆக வேத காலம் முதம் சங்க காலம் வரையும் அதற்குப் பின்னரும் பாரதம் முழுதும் பிரம்மசர்யத்தின் பெருமை கொடிகட்டிப் பறந்தது.

valluvar_big

Sri Tiruvalluvar

இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு!
By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013.

திருவள்ளுவர் யார்? என்ற தலைப்பில் நான் முன்னரே எழுதிய கட்டுரையில் இந்திரனை அதர்வவேதம், புத்தர், வள்ளுவன் ஆகியோர் புகழ்ந்தது ஏன் என்றும் காட்டினேன். இதுவரை படிக்காதோருக்கு இதோ அந்தக் கட்டுரையில் ஒரு பகுதி:_-

தமிழ் வேதமான திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் பரிமேலழகர் எழுதிய உரையே மேலானது என்பது அறிஞர் உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட முடிவு. ஆயினும் ‘’யானைக்கும் கூட அடி சறுக்கும்’’ — என்பது போல அவரும் சில தவறுகளைச் செய்திருக்கிறார். இன்று ஒரு குறளை மட்டும் காண்போம்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி (குறள் 25)

‘ஐம்புல ஆசைகளை அறவே ஒழித்த ஒருவனுடைய ஆற்றலுக்கு தேவர் கோமான் இந்திரனே சான்று பகர்வான்’ என்பது இதன் பொருள்.

இந்தப் பொருளை எழுதி அதற்குப் பின் ஒரு ஆச்சர்யக் குறியையோ கேள்விக்குறியையோ போட்டுவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். பரிமேலழகர் இது இந்திரனைக் ‘கிண்டல்’ செய்து எழுதிய இகழ்ச்சிக் குறிப்பு என்று கொண்டுவிட்டார். அவன் அகல்யை இடத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தை வைத்துப் பலரும் இந்திரனை தவறாக எடை போட்டுவிட்டனர்.

இந்துமத நூல்களிலும் புத்தமத வேதப் புத்தகமான தம்மபதத்திலும் இந்திரனை உயர்வாகவே கூறியுள்ளனர். பதின்மர் உரையில் மணக்குடவர் எழுதிய உரையில் இதை இகழ்ச்சிக் குறிப்பாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாகவே எழுதியுள்ளார். இதை டாக்டர் எஸ்.எம்.டயஸ் அவர்கள் எழுதியுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டு மணக்குடவர் உரையே திருவள்ளுவரின் மொத்த அணுகுமுறைக்கு இசைவாக இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறார்.

எனது கருத்து:

“இந்திரன் அவனுடைய பிரம்மசர்யத்தால் தேவர்களுக்கு தேஜஸை (ஒளியை) உண்டாக்கினான்”- என்று அதர்வ வேதம் கூறுகிறது ( அதர்வணம் 11-5-19).

“இந்திரன் மிகவும் கவனமாக/விழிப்பாக இருந்ததால் தேவர்களுக்கு எல்லாம் இறைவன் ஆனான்” – என்று புத்தர் தம்மபதத்தில் (2—10) கூறுகிறார்.

பூமியில் யாராவது தவம் செய்தாலோ, நூறு அஸ்வமேத யாகம் செய்தாலோ, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று இந்திரன் நடுங்கத் துவங்கி மண், பெண், பொன் ஆசைகளால் துறவிகளைக் கவிழ்த்து விடுவான். ஆகையால் மணக்குடவரும் மற்றவர்களின் தவ வலிமை இந்திரனை நடுங்கச் செய்வதே “ இந்திரனே சான்று பகர்வான்” என்பதன் பொருள் என்கிறார். பரிமேலழகர் சொல்லுவது போல இந்திரனை வள்ளுவர் ‘’பகடி’’ செய்யவில்லை.

மணக்குடவர் உரை: ஐந்து= நுகர்ச்சியாகிய ஐந்து. இந்திரன் சான்று என்றது இவ்வுலகின் கண் மிகத் தவம் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு.

பரிமேலழகர் உரை: ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றர்க்கு என்னும் நான்கனுருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தானது ஆற்றல் உணர்த்தினானாகலின் ‘இந்திரனே சாலுங் கரி’ என்றார்.

பிரம்மசர்யத்தின் பெருமைதனை மாணவர்ளுக்குச் சொல்லிக் கொடுத்தால் நாடு நலம் பெறும்!

–சுபம் —