பதிமூன்றாம் நூற்றாண்டு- பல்லவர்
தலைவன் சோழ மன்னனைச் சிறைப்பிடித்தான். இவனே புலவர் என்று சொல்லும்படி இவனது
பெயரில் சம்ஸ்க்ருதப் பகுதி அமைந்துள்ளது -வயலூர் (Vailur Inscription) கல்வெட்டு.
கங்காதர என்ற புலவர் தன்னுடைய
குடும்பத்தின் புகழைப்பாடும் கல்வெட்டு ஆறு புலவர்களின் பெயரையும் அவர்கள் பணி
செய்த மன்னர்களின் பெயர்களையும் கூறுகிறது.
கங்காதரன் மனைவி பெயர் தாசலாதேவி. அவள் ஜெயபாணியின் மகள்.
அவரோ கௌட மன்னனின் அதிகாரி. ஜெயபாணியின் மனைவி பெயர் சுபகா. கங்காதரன் ருத்ராமான
என்னும் மன்னனின் ஆலோசகர்- நண்பரும்கூட. கோவிந்தபூர் கல்வெட்டுக் கவிதையை யாத்தவர்
(கி.பி.1137). அவர் ஒரு குளம் வெட்டியது பற்றிய 39 செய்யுட்கள் இதில் உள.
சகத்வீபத்திலிருந்து (ஈரான் –
மெசபொடோமியா பகுதி) சம்பா கொண்டுவந்த சூரிய தேவனிடம் தோன்றியதாகப் புகழ்ந்து
கொள்ளுகிறார். அத்வைத சத என்னும் நூலை இயற்றியவர் இவராக இருக்கலாம். இப்படித்
தன்னையும் தன் குடும்பத்தையும் புகழ்ந்து தள்ளுவதால் ஆறு புலவர்களின் பெயர்களும்
அவர்களுடன் தொடர்புடைய மகத மன்னார் பெயர்களையும் அறிய முடிகிறது. இதோ அவர்
வம்சாவளி
பாரத்வாஜ கோத்ரத்தில் உதித்த தாமோதரன்;
அவர் வழி வந்தவர் சக்ரபாணி
(வால்மீகிக்கு நிகரானவராம்);
அவர் மகன் மனோரதன் (வியாசனுக்கு
நிகரானவராம்).;
அவரது மகன்கள் கங்காதரன் , மஹிதரன்;
அவ ருத்ரமானன் மன்னுடன் இருந்தவர்.
சக்ரபாணிக்கு மனோரதனுடன் பிறந்த
சகோதரர் தசரதன்;
அவர் வரனமான என்னும் மன்னனிடம்
பணியாற்றினார்;
தசரதனின் இரண்டு மகன்கள் ஹரிஹரன், புருஷோத்தமன்;
புருஷோத்தமன் வழி வந்தவ்Aர்கள் – ஆசாவரன் , அவர் மகன்
அபிநந்தன் அவர் மகன் ஹரிஹரன் – அவர் மகன்
புருஷோத்தமன்
1205ம் ஆண்டில் ஸ்ரீதரதேவ தொகுத்த கவிதைத் தொகுப்பில் கங்காதரன் என்ற
புலவர் பெயர் ஆறு இடங்களில் வருகிறது. அவர் இந்த கங்காதரனாக இருக்கலாம்.
இந்தக் கல்வெட்டில் காணப்படும் அத்தனை
பேரிலும் கவிதைகளோ கல்வெட்டுகளோ இருப்பதாலும் அவர்கள் சம காலத்தவர் என்பதாலும்
கங்காதரன் புகழ் பாடியது நியாயமே. நமக்கும் வரலாறும் கிடைத்தது. வம்சாவளியும்
கிடைத்தது; மன்னர்களையும் நாம் அறிய முடிகிறது.
குணபத்ர
அவர் ஒரு சமண மஹாமுனி; ம்துரா சங்கத்தை
சேர்ந்தவர்; சாகமான அரசன் சோமேஸ்வரனின் பிஜ்னோலி (ராஜஸ்தான்) கல்வெட்டுக் கவிதையை
யாத்தவர். (கி.பி.1169).
சமண முனி பார்ஸ்வநாதருக்குக் கோவில்
எழுப்பிய செய்தியைக் காணலாம். சிலேடைச் சொற்களுடன் கவிதை புனைந்திருப்பதால் இவர்
சிறந்த புலவர் என்பது தெரிகிறது. சாகம்பரியின் சாகமான வம்சத்தின் 28 இளவரசர்களின்
பெயர்களை அவர் பட்டியலிடுகிறார். அவருடைய பட்டம் கவி கந்த விபூஷண. இது மிகவும்
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வெட்டு.28 வரலாற்று நாயகர்களின் பெயர்கள்
வெளிச்சத்துக்கு வருகிறது!