பிராமணர்களுக்கு தமிழர்கள் வாரி வழங்கியது ஏன்? (Post No.10,481)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,481

Date uploaded in London – –   24 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேத பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை-2

உலகம் முழுதுமுள்ள மாணவர்களுக்கு அதர்வண வேத பூமி சூக்த துதியை கட்டாய பாடமாக வைக்கவேண்டும் ; இதில் மதத்தை விட பொதுவான (More secular than religious) இயற்கை விஷயங்களே அதிகம் உள்ளன. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் இந்த பூமி பற்றி எவ்வளவு சிந்தித்துள்ளனர் என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது !

இதோ இரண்டாவது மந்திரம்

அஸம்பாதம்  பத்யதோ மானவானாம்   யஸ்யா உத்வதஹ  பிரவதஹ ஸமம் பஹு

நானாவீர்யா  ஓஷதீர்யா பிபர்த்திம் ப்ருதிவீ நஹ  ப்ரததாம் ராத்யதாம்  நஹ

பொருள்

மலை உச்சியும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது இந்த பூமி; மக்களை ஒன்றிணைக்கும் சமவெளிகளை உடையது. பல்வேறு குணப்படுத்தும் மூலிகைகளை உடையது இந்த பூமி. அவள் நமக்காக பல்கிப் பெருகி விசாலம் அடைவாளாக

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது எங்களுக்கு என்ற சொல்லாகும். வேத மந்திரங்கள் பெரும்பாலும் கூட்டுப் பிரார்த்தனை மந்திரங்கள். உலகப் புகழ் பெற்ற, நாலு வேதங்களிலும் உள்ள, காயத்ரீ மந்திரம் கூட எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக என்றே வேண்டுகிறது . இதனால்தான் இமயம் முதல் குமரி வரை உள்ள மன்னர்களும் பிரபுக்களும் பிராமணர்களுக்கு வாரி வழங்கினார்கள் .

மங்கலம் என்ற பெயரில் பல தமிழ்நாட்டு ஊர்கள் உள்ளன. இவை எல்லாம் பிரம்மதேயம்; அதாவது பிராமணர்களுக்கு மன்னர்கள் அளித்த ஊர்கள். இதுதவிர வேள்விக்குடி போன்ற பெயர்களிலும் யக்ஞ பூமி என்பதைக் காணலாம். பார்ப்பனர்கள் தண்டச் சோறு தின்னவில்லை. எப்போது பார்த்தாலும் பாசிட்டிவ் எண்ணங்களைப் positive thoughts  பரப்பி ‘எல்லோரும் வாழ்க’ என்று பிரார்த்தித்தனர். இந்த பூமி சூக்தமும் எல்லோருக்கும் வேண்டுவதை 63 மந்திரங்களிலும் காணலாம்.

ந: (நஹ )= எங்களுக்கு என்பது காயத்ரீ மந்திரம் மற்றும் இந்த இராண்டாவது மந்திரத்தில் வருவதைக் காண்க

மற்றொரு சொல் மனு; மனுவின் வழி  வந்தவர்கள் மானவர்கள் . இன்றும் நாம் மனிதன் என்கிறோம் (மனுஷ= மனித; ஷ =த MAN )

மனுவின் பெயர் ரிக் வேதத்திலும் வருவதால் பிரளயம் ஏற்பட்ட காலம் அதற்கும் முன்னதாக இருக்க வேண்டும் . ஆங்கிலத்திலும் ஐரோப்பிய மொழிகளிலும் மேன் MAN  என்று மனுவை தினமும் நினைவு கூறுகிறார்கள். இதனால் ஒன்று தெளிவாகியறது . வேத கால சொற்களை இன்று வரை புழங்குகிறோம். நாகரீகம் உடைய எவரும் சம்ஸ்க்ருதம் இல்லாமல் பேச முடியாது; தமிழர்களும் சம்ஸ்க்ருதம் இல்லாமல் ஐந்து நிமிடம் கூடப் பேச முடியாது.

ஸம்ஸ்க்ருதச் சொற்களை நீக்கினால் திருக்குறள் செத்துவிடும்; மூன்றில் ஒரு திருக்குறள் அவுட்!

ஆங்கில உலகில் இயற்கையை முன்வைத்துப் பாடிய வோர்ட்ஸ்வொர்த்தும் William Wordsworth மலை பள்ளத்தாக்குகளுடன் தன்  டாபோடில்ஸ் Daffodils கவிதையைத் துவக்குகிறார்

I wandered lonely as a cloud

That floats on high o’er vales and hills

ஆயுர்வேதத்தின் துவக்கம்,  உலகின் பழைய நூலான ரிக் வேதத்தில் உள்ளதை பல துதிகளில் காண முடிகிறது. ஆயுர்வேத மூலிகைகளை பகிரங்கமாகப் பயன்படுத்தியதை அனுமன் சஞ்சீவி பர்வத சம்பவத்தில் காண முடிகிறது. இங்கும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மூலிகை வளரும் பூமி என்று முனிவர்- புலவர் புகழ்கிறார்

HANUMAN FLYING WITH SANJEEVINI PARVATHA  IN YAGA FIRE

ஓஷதி என்ற சொல்லைக் கவனிக்கவும் ; அதிலிருந்து வருவதே நம் தமிழ் நூல்களிலும் காணும் அவுடதம்= ஒளஷதம் (ஷ=  ட )

Xxx

இதோ மூன்றாவது மந்திரம்

யஸ்யாம் ஸமுத்ர உத ஸிந்துராபோ  யஸ்யாமன்னம்  க்ருஷ்டயஹ  ஸம்ப பூவுஹு 

யஸ்யாமிதம் ஜின்வதி ப்ராண தேஜத்  ஸா நோ பூமிஹி பூர்வபேயே ததாது

பொருள்

“ஆழி  சூழ்  உலகமும்  நதிகளும் நீர்நிலைகளும் நிறைந்த பூமி,

எவளிடத்தில்   உணவும் தானிய நிலங்களும்    உள்ளதோ

எவளிடத்தில் உயிர்விடும் (சுவாசிக்கும்), நகரும் ஜீவன்கள் உள்ளனவோ

அவள் எங்களுக்கு விளைச்சளைப் பெருகி விசாலம் ஆகட்டும்”

இதிலுள்ள ‘அன்னம்’, ‘பூமி’= புவி (ம=வ), ப்ராண (பிராணன் உள்ளது பிராணி) போன்றசொற்களை நம் இன்றும் எல்லா இந்திய மொழிகளிலும் பயன்படுத்தி வருகிறோம்.

நகர கூடிய, சுவாசிக்கக்கூடிய என்ற அ ழகான சொற்களால் எல்லா உயிரினங்களையும் முனிவர் குறிப்பிடுகிறார். சென்ற மந்திரத்தில் நகராத தாவரங்களை மட்டும் கண்டோம். இந்த மந்திரத்தில் ஒரு நாட்டின் செல்வமான தாவரங்களும் பிராணிகளும் வந்துவிடுகின்றன. வேத கால இந்துக்கள் நாடோடிகள் அல்ல; விவசாயிகள்; தா னிய உழவு நிலங்களைக் குறிப்பிட்டு அமோக அறுவடைக்கும் வேண்டுவதால் பக்கா விவசாயிகள் என்பதும் தெளிவாகிறது

இதை எழுதும் போது பாரதியார் சொன்ன கடல், மலை, ஜீவராசிகள் அனைத்தும் நினைவுக்கு வரும்:-

காக்கை குருவி எங்கள் ஜாதி

நீள் கடலும்  மலையும் எங்கள் கூட்டம் —

இந்த அருமையான கருத்தை 3-ஆவது மந்திரத்தில் காணலாம்.

–தொடரும்

TAGS– பூமி சூக்த ஆராய்ச்சி-2, மலை, கடல், ஓஷதி , பிராமணர்கள்

தஞ்சையிலும் பஞ்சாபிலும் கபிஸ்தலம்!! (Post No.8782)

KAPISTHALA IS IN FAR LEFT IN GREEN COLOUR
KAITHAL= KAPISTHALA IS UNDER KURUKSHETRA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8782

Date uploaded in London – –6 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வடக்கில் கிருஷ்ண ஜன்ம பூமியான மதுரா உளது. அதனால் கடல்கொண்ட தமிழ்ச் சங்க மதுராவை ‘தென் மதுரை’ என்று அழைத்தனர் . வடக்கில் இந்துக்களின் மிகப் பழைய புனித ஸ்தலமான காசி உளது. அதனால் தமிழ் நாட்டிலுள்ள காசியை ‘தென் காசி’ என்று அழைக்கிறோம்.. அதே போல வடக்கில் பாடலிபுரம் உளது, தெற்கில் திருப்பாதிரிப்புலியூர் என்று மாற்றிக்கொண்டோம்.  இது போல நிறைய ஊர்கள் தமிழ் நாடு மட்டிலும் இன்றி பல்வேறு இடங்களில் ‘தக்ஷிண கைலாசம்’ முதலியவற்றைக் காண்கிறோம். ஆனால் பாணினி சொல்லும் ஒரு விஷயம் வியப்பானது.

பஞ்சாபிலும் ஒரு  கபிஸ்தலம் இருந்தது. இப்பொழுது அது ஹரியானா மாநில எல்லைக்குள் கைதால் என்ற பெயருடன் விளங்குகிறது!

கும்பகோணத்தின் அருகில் ஒரு கபிஸ்தலம் இருக்கிறது. அங்குள்ள கஜேந்திர வரதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது ; கஜேந்திர மோட்சம் கதையும் மிகவும் பிரபலமானதே. தமிழ் நாட்டில் திருமோகூர் உள்பட பல வைணவத் தலங்களுடன் இக்கதை தொடர்பு படுத்தப்படுகிறது. அதற்கெல்லாம் முன்னதாக குப்தர்கால சிற்பங்கள் 2000 ஆண்டுகளாக நமக்கு இதைக் காட்டி வருகின்றன.

பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் என்பதை கோல்ட்ஸ்டக்கர்  (Goldstucker) ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறார். ‘பாணினி கால இந்தியா’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய வி.எஸ்.அக்ரவாலா கி.மு.நாலாம் நூற்றாண்டு என்று சொன்னபோதிலும் அவர் எழுதிய ஒவ்வொரு அத்தியாயமும் அவர் சொல்லும் ஆண்டு ‘தப்பு’ என்று காட்டுகிறது. ஏனெனில்  நாணயம், நடை உடை  பாவனை , அளவுமுறைகள், இலக்கண வழக்குகள் ஆகிய அனைத்திலும் காத்யாயனர், கெளடில்யர் காலத்துக்கும் பாணினி காலத்துக்கும் மிகப்பல வேறுபாடுகளைக் காண்கிறோம். புத்தர், மஹாவீரர் போன்ற பெயர்களையே பாணினியத்தில் காணமுடியாது ஆக 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கபிஸ்தலம் இருந்தது உறுதியாகிறது.

கபிஸ்தலம் என்பது ஸம்ஸ்க்ருதப் பெயர் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது . அது மட்டுமல்ல ‘கபி’ என்றால் குரங்கு என்பதும் தெரிந்ததே.

முந்தைய பஞ்சாபில் , தற்போதைய ஹரியானா எல்லைக்குள் இருக்கும் கபிஸ்தலம் 2700 ஆண்டுக்கும் முந்தையது என்பதற்கு பாணினி நூலில் சான்றுள்ளது. ஆனால் கும்பகோணம் அருகிலுள்ள கபிஸ்தலம் அவ்வளவு பழமையுடையது அல்ல. அதற்கு கபிஸ்தலம் என்ற பெயர் வந்ததற்கான காரணங்களும் வலுவாக இல்லை. உ’ப்புக்குச் சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை’ என்று ஏனோ தானோ என்று அனுமனையும், வாலியையும் சுக்ரீவனையும் வலிய இழுத்து வந்து தொடர்புபடுத்துகின்றனர் . ஆகையால் வாலி- சுக்ரீவன்- அனுமன் தொடர்புக்கு நல்ல ஆதாரம் கிடைக்கும் வரை பஞசாபுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்தல் நலம் பயக்கும்.

இரண்டு கபிஸ்தலம் பற்றியும் காண்போம்; ஒப்பிட்டு ஆராய்வோம்.

கைதால்(Kaithal=Kapisthal)  என்பது இப்பொழுது பஞ்சாப் எல்லையில் ஹரியானா மாநிலத்துக்குள் இருக்கிறது. ஆனால் இதன் பழைய பெயர் கபிஸ்தலம் என்பதை எல்லோரும் எழுதுகின்றனர் யுதிஷ்டிரர் இந்த நகரை ஸ்தாபித்தார். அங்கே ஆஞ்சனேயரின் தாயாரான அஞ்சனி தேவிக்கு ஒரு கோவிலும் உளது. இந்த இடத்தில் மட்டுமே சிவனுக்கு 108 கோவில்கள் உண்டு என்றும் அதில் ஒன்று ஏகாதச லிங்கக்கோவில் என்றும் ஊர் மக்கள் பெருமையாகக் கூறுகின்றனர். குருக்ஷேத்திரத்தைச் சுற்றியுள்ள 48 புண்ய ஸ்தலங்களில் கபிஸ்தலம் முக்கியமானது. 48 கோவில்களையும் வல ம் வருவோர் — பரிக்ரமம் செய்வோர்- இங்கு வருவார்கள் . இதையெல்லாம்  பார்க்கும்போது இது மஹாபாரத காலம் முதல் புகழ் பெற்ற ஊர் என்பது தெளிவாகிறது. மேலும் அனுமனின் தாயார் கோவில் இருப்பதால் கபி (குரங்கு) என்ற பெயரையும் தொடர்புபடுத்துகிறது.

இதை கும்பகோணம் அருகிலுள்ள கபிஸ்தலத்துடன் ஒப்பிட்டால் இதில் எந்த ஒரு விஷயத்தையும் காணமுடியவில்லை. கஜேந்திர மோட்சக் கதைக்கு அடுத்தபடியாக, அதற்குச் சம்பந்தமில்லாத வாலி- சுக்ரீவன் – அனுமன் கதையைத்தான் வலுக் கட்டாயமாகச் சேர்க்கின்றனர். ஆகையால் பஞ்சாப்-ஹரியானா கபிஸ்தலம் பெயர், இங்கே எப்படி வந்தது என்பதை  ஆராய்தல் அவசியம். வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பதை துருவி ஆராய்வோம்.

கபிஸ்தலம் பற்றி  பாணினி  மற்றும் கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ்  கூறும் வியப்பான செய்திகள் இதோ :–

கபிஸ்தல என்பதை கோத்திரங்களில் ஒன்றாக பாணினி குறிப்பிடுகிறார்.சூத்திரம் 8-3-91

பொதுவாக ரிஷிகளின் பெயரிலேயே கோத்திரங்கள் பெயர்கள்  அமையும். ஆகையால் கபிஸ்தல என்பதும் ரிஷியின் பெயரே. மெகஸ்தனீஸ் பஞ்சாபிலுள்ள ஒரு மக்கள் குழுவை ‘கம்பிஸ்தலோய்’ என்று அழைக்கிறார். இது கபிஸ்தல என்பதன் மருவு. அலெக்சாண்டரின் படையெடுப்பை எதிர்த்த காடக இனத்தினரோடு அவர்கள் இருந்திருக்கலாம். ஊர்ப்பெயரான கபிஸ்தலத்துடன் தொடர்பில்லாமலும்  இருந்திருக்கலாம்..

பாணினி அலெக்ஸ்சாண்டருக்கும் அசோகருக்கும் பல நுறு ஆண்டுகள் முன்னால் வாழ்ந்தவர். ஒரு இனமோ, குழுவோ நகர்ந்து முன்னேற முன்னேற அவர்கள் வாழும் நாடோ , ஊரோ , பிரதேசமோ விரிவடைவதைக் காண்கிறோம்.

தமிழ் நாட்டின் கபிஸ்தலத்தோடு ரிஷி பெயரோ இனப் பெயரோ சம்பந்தப்படவில்லை .இரண்டு கபிஸ்தலங்களும் ஆராய்ச்சியாளருக்கு சவால் விடுகின்றன .

XXXX

பாணினியில் பிராமண அதிசயம்!

பிராமணர்கள் உலக மஹா அதிசயம் என்றும் அவர்கள் வாழும் படிம அச்சுக்கள் (Living Fossils) என்றும் பழமையைக் காக்கும் இனம் என்ற வரிசையில் கின்னஸ் புஸ்தகத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் நான் நீண்ட கட்டுரைத் தொடர் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நீண்ட காலம் பழமையான விஞ்ஞான விஷயங்களைக் கடைப்பிடிக்கும் இனம் என்பதைக் காட்டி இருந்தேன் .

சப்த ரிஷி மண்டலம் எனப்படும் பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்தில் (Ursa Major= Great Bear)  7 நட்சத்திரங்கள் இருப்பதும் அதிலுள்ள அருந்ததி/வசிஷ்ட நட்சத்திரத்தை முதலிரவு அறைக்குள் நுழைவதற்கு முன்பாக புதுமணத் தம்பதிகள் ‘அருந்ததி காட்டல்’ என்ற சடங்கில் அருந்ததி நட்சத்திரத்தைக் காண்பது பற்றியும் அனைவரும் அறிவர். சங்க இலக்கிய நூல்களில் அருந்ததி வழிபாடு , சப்த ரிஷி வழிபாடு இரண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராமணர்கள், தினசரி மூன்று முறை சூரிய வணக்கம் செய்வர். இதை ‘சந்தியா வந்தனம்’ என்பர். இதன் இரண்டாவது பகுதியில் நான்கு வேதங்கள் புகழும் காயத்ரி மந்திரம் உளது. அந்த காயத்ரீ தேவதையை இதயத்துக்குள் எழுந்தருளச் செய்ய ஒரு மந்திரம் சொல்லுவார்கள் .

அப்பொழுது தலையின் முன் பகுதியில் கையை வைத்துத் தொட்டு, ஏழு ரிஷிகளின் பெயர்களைச் சொல்லுவர். (இதை நானும் லண்டனில் தினமும்  செய்து வருகிறேன்.) அதில் நாங்கள் சொல்லும் ரிஷிகளின் பெயர்கள் ஏழும் அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய பாணினியின்  வியா கரணத்தில் வரிசை மாறாமல்  உளது.

இதோ அந்த சூத்திரம்—

சூத்திரம் 2-4-65-ல் அவர் சில இலக்கண விதிகளை விளக்குகிறார்.

‘அத்ரி ப்ருகு குத்ஸ வசிஷ்ட  கோ த்தமாரங்கிரேப் ய ஸ் ச’

என்கிறார். அவர் விளக்கும் இலக்கண விதிகளை நாம் இப்போது அலச வேண்டியதில்லை.

இதே வரிசையில் தான் பிராமணர்கள் தினசரி மூன்று முறை 7 ரிஷிகளின் பெயர்களைச் சொல்கிறா ர்கள் —

அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்ட, கெளதம, காஸ்யப, ஆங்கிரஸ என்பன அந்த 7 ரிஷிக்கள். சில பகுதிகளில் பெயர்கள் ஒன்றிரண்டு மாறுபட்டிருக்கும் . அதே கோத்திரத்தைச் சேர்ந்த ரிஷி என்பதால் பெயர் வரிசையில் மாறுதல் இல்லை.

ஆக 2700 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர்கள் சப்த ரிஷிக்களின் பெயர்களை ஒரே மாதிரியாகச் சொல்லி  வணங்கி வருகின்றனர்.

–சுபம்–

TAGS – பிராமணர்கள், அத்ரி ப்ருகு குத்ஸ, கபிஸ்தலம்,

பிராமணர்கள் ஜாக்கிரதை! தமிழ் கவிஞர் எச்சரிக்கை! (Post No.4599)

Written by London Swaminathan 

 

Date: 9 JANUARY 2018

 

Time uploaded in London 11-13 AM

 

 

 

Post No. 4599

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))

 

பிராமணர்கள் தீ போன்றவர்கள்; மிகவும் பக்கத்தில் போனால் சுடும்; மிகவும் விலகிச் சென்றால் குளிரும்; நீங்கள் கஷ்டப்படுவீர்கள்- என்று ஒரு தமிழ்க் கவிஞர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தார்.

உலக மஹா புத்திமான், பேரறிவாளன், உலகின் முகல் பொருளாதார நூல் எழுதிய நிபுணன், சாணக்கிய நீதி, அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களை யாத்த பெரு மகன், மகத சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னரும் குடிசையில் வாழ்ந்த உத்தமன், ஏழைப் ப்ராஹ்மணன் ஆகிய சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராஹ்மணாள் பற்றி இதை விட ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறான்.

 

இரண்டு பிராமணர்கள் நின்று கொண்டிருந்தால் குறுக்கே போகாதே!

 

பிராமணன் இருந்தால் அவனுக்கு எதிரே கால் நீட்டாதே.

 

இதோ தமிழ், ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!!

 

விப்ரயோர்விப்ரவஹ்ன்யோஸ்ச தம்பத்யோஹோ ஸ்வாமிப்ருத்யர்யோஹோ

அந்தரேண ந கந்தவ்யம் ஹலஸ்ய வ்ருஷபஸ்ய ச

சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 5

 

பொருள்—“இரண்டு பிராமணர்களுக்குக் குறுக்கே போகாதே; ப்ராஹ்மணனுக்கும்   அக்னிக்கும் (தீ) குறுக்கே போகாதே போகாதே; அவ்வாறே கணவன்– மனைவி, எஜமானன்–சேவகன் (முதலாளி- தொழிலாளி), உழுகலன் (ஏர்)- காளை மாடு இவர்களுக்கு இடையிலும் செல்லாதே.

 

பாதாப்யாம் ந ஸ்ப்ருசேதக்னிம் குரும் ப்ராஹ்மணமேவ ச

நைவ காம் ந குமாரீம் ச ந வ்ருத்தம் ந சிசும் ததா

சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 6

 

பொருள்

அக்னி, ஆசிரியர், ப்ராஹ்மணன், பசு மாடு, இளம் பெண், முதியவர், குழந்தை ஆகியோருக்கு முன்னால் காலை நீட்டி உட்காராதே, படுக்காதே.

சாணக்கியன் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்து பார்க்கில் பல விஷயங்கள் நமக்கே புரியும்; உதாரணங்கள் மனக் கண் முன் சித்திரம் போலச் செல்லும்.

 

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு!

 

அந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் தூய ஒழுக்கத்தின் சின்னமாக விளங்கினர்; அந்தக் காலத்தில் மூவேந்தர்களும் கூட ப்ராஹ்மணர்களைக் கண்டு அஞ்சினர். சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலரையும் பரணரையும் கண்டு சேர சோழ பாண்டியர்கள் மரியாதையுடன் கூடிய பயம் கொண்டனர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று தமிழ்ப் பார்ப்பான் கபிலனை சங்கப் புலவர்கள் புகழ்ந்து, தலைமேல் வைத்துக் கூத்தாடினர்.

 

‘’குணம் என்னும் குன்று ஏறி நிற்கும் பார்ப்பனர்கள் வெகுளி கணம் ஏயும் காத்தல் அரிது’’ என்பதால் பயந்தனர். அந்தக் காலத்தில், அவர்கள் வாயில் நல்ல சொற்கள் வந்தால் அது பலிக்கும்; சுடு சொற்கள் வந்தால் அது ஒருவனுடைய குலத்தையே வேர் அறுக்கும் என்பது உண்மையாக இருந்தது.

 

இதனால் வேளாண் குடி மக்களுக்கு திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், ஒரு நல்ல புத்திமதி செப்பினார்:

சூதாட்டத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்று காத்திராதே; விரும்பாதே; பார்ப்பனர்களை தீ என்று கருது;

அகலாது அணுகாது குளிர் காய்பவர் போல இரு;

உழவுத் தொழிலை கடனே என்று செய்யாமல், விரும்பிச் செய்.

 

வேளான்குடிக்கு அழகாவன

 

 

கழகத்தால் வந்த பொருள் காமுறாமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்- ஒழுகல்

உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்

அழகென்ப வேளாண் குடிக்கு

–திரிகடுகம், நல்லாதனார்

 

முற்காலத்தில் இதே தீ உவமையை வள்ளுவர், அரசர் பெருமக்களுக்கு உவமித்தார். தமிழ் வேதமாகிய திருக்குறள் சொல்லும்:–

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்– குறள் 691

 

அரசர் கூட வேலை செய்வோர், ராஜாவை மிகவும் நெருங்காமலும், விலகிப் போகாமலும், குளிர் காய்பவன் போல, தம் கடமையைச் செய்ய வேண்டும்.

 

பிற்காலத்தில் நன்னூல் எழுதிய பவணந்தி போன்றோரும் இதைப் பயன் படுத்தினர்.

 

 

உண்மையில் இந்த தீக்காயும் உவமையை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் எழுதிய பாஷ்யங்களில் இந்த உவமை வருகிறது.

 

பகவத் கீதை 9-29 ம் ஸ்லோகத்துக்கு அண்ணா எழுதிய உரையில் இதை மேற்கோள் காட்டுவார்:

அக்னியைப் போல் நான் உளேன்; எட்டி நிற்பவர் குளிரை அக்னி போக்குவதில்லை; ஸமீபித்து வருவோர் குளிரைப் போக்குகிறது. இது அக்னியின் பாரபக்‌ஷமன்று. அது போலவே பக்தர்கள் என் அருள் பெறுவதும். மற்றவர் பெறாததும்- சங்கரர்

விஷ்ணுஸர்மன் எழுதிய பஞ்ச தந்திரத்திலும் இந்த தீ உவமையைக் காணலாம்.

 

–Subham–

பிராமணர்கள் பற்றி 31 பொன் மொழிகள் (Post No.2929)

brahmin vaishnava

Compiled by london swaminathan

Date: 30 June 2016

Post No. 2929

Time uploaded in London :–  5-46 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஜூலை மாத (துன்முகி ஆனி-ஆடி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– 6-ரம்ஜான், 10-ஆனித் திருமஞ்சனம், 19-வியாச பூஜை/குரு பூஜா ( சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்)

 

அமாவாசை – 4

பௌர்ணமி – 19

ஏகாதசி – 15

முகூர்த்த நாட்கள் – 6, 10, 11

brahmins, mylai

ஜூலை 1 வெள்ளிக்கிழமை

மனிதகுலத்தின் உதாரண புருஷன் பிராமணன். ஆகையால் எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்துவதே திட்டம். இந்திய வரலாற்றைப் படித்தால், இதற்கு முன்னரே இப்படிப் பலர் செய்திருப்பது புரியும்- சுவாமி விவேகாநந்தர்

 

ஜூலை 2 சனிக்கிழமை

பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- புத்தர் கூறியது, தம்மபதம், 389

 

ஜூலை 3 ஞாயிற்றுக்கிழமை

நீண்ட முடி (குடுமி) வைப்பதாலோ, பிறப்பினாலோ ஒருவன் பிராமணன் ஆவதில்லை; சத்தியமும், புனிதமான தூய்மையும் கொண்டவனே பிராமணன்; அவன் மகிழ்ச்சிக்கடலில் இருப்பான்.புத்தர் கூறியது, தம்மபதம், 393

 

 

ஜூலை 4 திங்கட்கிழமை

யார் சமய சம்பந்தமில்லாத வேலைகளை எடுக்கவில்லையோ அவன் மட்டுமே பிராமணன். சமய சம்பந்தமற்ற வேலைகள் மற்ற ஜாதிகளுக்கானது. பிராமணத்துவம் என்பது என்ன என்பதை அவர்கள் உணர்வது அவசியம். நற்குணங்களின் உறைவிடமாகப் பிராமணன் திகழ்வதாலேயே அவனுக்கு இவ்வளவு சலுகைகளும், கௌரவங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று மனு கூறுகிறார் — சுவாமி விவேகாநந்தர்

 

ஜூலை 5 செவ்வாய்க்கிழமை

காலையில் சூரியனும், மாலையில் சந்திரனும் பிரகாசிக்கின்றன; க்ஷத்ரியன், ஆயுதம்தரிப்பதால் பிரகசிக்கிறான்; பிராமணன் தவ வலிமையால் பிரகாசிக்கிறான். புத்தனோ இரவிலும் பகலிலும் பிரகாசிக்கிறான். விழிப்புணர்வுடையவன் பிரகாசிப்பான் -புத்தர் கூறியது, தம்மபதம், 387

 

 

ஜூலை 6 புதன்கிழமை

பிராமண, க்ஷத்ரிய, வைச்யர்களுக்கு உபநயன கருமம் இருப்பதால், அவர்கள் இருபிறப்பாளர் என்று அழைக்கப்படுவர். அது இல்லாதவன் சூத்திரன். ஐந்தாவது ஜாதி/பஞ்சமன் என்று எதுவும் இல்லை- மனு 10-4

 

ஜூலை 7 வியாழக்கிழமை

பிராமணனுக்கு ஞானத்தினாலும், க்ஷத்ரியர்களுக்கு வீரத்தினாலும், வைசியர்களுக்கு செல்வத்தினாலும், சூத்திரர்களுக்கு வயதினாலும் மதிப்பு தர வேண்டும் (Sanskrit Sloka)

brahmins vaishnavite

ஜூலை 8 வெள்ளிக்கிழமை

பிராமணனுக்கு பிழைப்புக்கே வழியில்லை என்றால் கெட்டவர்களிடம் தானம் வாங்கக்கூடாது; கீழே சிந்திய தனியக்கதிர்களையோ, தானிய மணிகளையோ சேகரித்து உண்ணலாம் –மனு 10-112

 

 

ஜூலை 9 சனிக்கிழமை

புன்மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை

முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளரோடு பெருமலை அரசன் – சிலப்பதிகாரம், காட்சிக்காதை (இமயமலையில் அந்தணர்கள் குடுமியுடன், ஈரத்துணியுடன், மூன்று வகையான யாகத் தீயை வளர்த்துக்கொண்டு, முப்புரி நூலுடன் இருப்பர்)

 

ஜூலை 10 ஞாயிற்றுக்கிழமை

மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை

நறைகெழு மாலையின் நல்லகம் வருத்த

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினந் சிலப்பதிகாரம், கால்கோட்காதை (பிராமணர்களின் யாகப் புகை சேரன் செங்குட்டுவனின் மாலையின் நறுமணத்தையும் மிஞ்சிவிட்டது)

 

 

ஜூலை 11 திங்கட்கிழமை

முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே!

இறைஞ்சுக, பெரும! நின் சென்னி – சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! (புறநானூறு, 6) (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழிதியின் தலை இரண்டு இடத்தில் மட்டுமே வணங்கும்; சிவபெருமான் கோவிலிலும், ஆசீர்வாதம் செய்யும் அந்தணர் முன்னிலையிலும் மட்டும் தலை தாழ்த்துவான்)

 

 

ஜூலை 12 செவ்வாய்க்கிழமை

ஆவும், ஆன் இயற்  பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறாதீரும்

என்அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின் (புறம். 9)

 

 

ஜூலை 13 புதன்கிழமை

பார்ப்பனர் வீட்டுக்குப் போனால், அருந்ததி போன்ற கற்பு வாய்ந்த பெண்மணி உனக்கு மாதுளங்காயைப் பசு வெண்ணையில் பொறித்து, ராஜ அன்னம் என்ற உயர்ந்த அரிசியில் சமைத்த சோற்றை படைப்பாள். பார்ப்பனப் பெண்கள், விருந்தாளிகளுக்கு மாவடு ஊறுகாயோடு உணவு பரிமாறுவர். – பெரும்பாணாற்றுப்படை (சங்க இலக்கியம்)

 

 

ஜூலை 14  வியாழக்கிழமை

 

பார்ப்பனர் மனைகளில் நாயும் கோழியும் நுழைய முடியாது. கிளிகள் மட்டும், அந்தணர் ஓதும் வேதங்களைத் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருக்கும் – சங்க இலக்கியம், பெரும்பாணாற்றுபடை

 

vedagama exam

ஜூலை 15 வெள்ளிக்கிழமை

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான் -திருக்குறள் 30 (எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாதவர் அந்தணர்)

 

ஜூலை 16 சனிக்கிழமை

மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் -திருக்குறள் 134 (பார்ப்பான், வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை; ஆனால் ஒழுக்கம்போனால், அவனுக்கு விமோசனம் இல்லை)

 

 

ஜூலை 17 ஞாயிற்றுக்கிழமை

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்-திருக்குறள் 543 (அந்தணர்கள் முறையாக வேதம் ஓதுவதற்கும், முறையான அரசாட்சியே அடிப்படை ஆகும்.)

 

 

ஜூலை 18 திங்கட்கிழமை

பிராமணர்கள் சாப்பாட்டுப் பிரியர்கள் – துஷ்யந்தி போஜனே விப்ராஹா – சாணக்கிய நீதி 6-18

 

 

ஜூலை 19 செவ்வாய்க்கிழமை

க்ஷத்ரியர்களின் பலம்  எல்லாம் பலமே அல்ல; பிராமணர்களின்ம் தேஜஸ்தான் பெரும் பலம்; திக் பலம்  க்ஷத்ரிய பலம், பிரம்மதேஜோ பலம் பலம் – வால்மீகி ராமாயணம் 5-6-23

 

ஜூலை 20 புதன்கிழமை

அந்தணர் கருமங்குன்றில்  யாவரே வாழ்வர் மண்ணில்

–விவேகசிந்தாமணி

 

ஜூலை 21  வியாழக்கிழமை

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் –சைவத் திருமுறை

கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம்

லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து

vedic brahmins

ஜூலை 22 வெள்ளிக்கிழமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுக – திரிகடுகம்

 

ஜூலை 23 சனிக்கிழமை

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே! –விவேகசிந்தாமணி

 

 

ஜூலை 24 ஞாயிற்றுக்கிழமை

பிரம்மத்தையே உணர்ந்த பிராமணன் மிகவும் பலம் பொருந்தியவன் – சாணக்கிய நீதி 8-10

 

 

ஜூலை 25 திங்கட்கிழமை

வேதமறிந்தவன் பார்ப்பான், பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான் – பாரதியார்

 

ஜூலை 26 செவ்வாய்க்கிழமை

ஒரு பிராமணனும், சந்யாசியும் பூர்வ ஜன்ம  பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்

-தம்ம பதத்தில் புத்தர் – பாடல் 294

 

 

ஜூலை 27 புதன்கிழமை

 

பொருநர்க்காயினும் புலவர்க்காயினும்

அருமறை நாவின் அந்தணர்க்காயினும்

அடையா வாயில் — சிறுபாணாற்றுப் படை

 

 

ஜூலை 28  வியாழக்கிழமை

செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை

அறுதொழிலாளர் அறம்புரித்தெடுத்த

தீயோடு விளங்கும் நாடன் (புறநானூறு  397)

school tree

 

ஜூலை 29 வெள்ளிக்கிழமை

 

ஏ பிராமணனே! ஆசையை விடுத்து, சம்சார சாகரத்தைக் கடந்து செல்; நிர்வாண நிலையை அடைவாய் – தம்மபதம் 383

 

 

ஜூலை 30 சனிக்கிழமை

எதைக் கொடுத்தாலும்ச் திருப்தியடையாத பிராமணன் அழிந்துபோகிறான்.  அசந்துஷ்டா த்விஜா நஷ்டா: – சாணக்ய நீதி 3-42

 

 

ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை

யாத்திரை செல்லும் பிராமணன் வணக்கத்துக்குரியவன் – சாணக்கிய நீதி 6-43

 

–SUBHAM-

 

 

 

 

 

 

 

 

ராமாயணத்தில் அந்தணர்கள்

21-gurukulam-tv-serial-2-600

எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1005 தேதி—-27th April 2014.

கம்பன் காலத்தில் பிராமணர்கள் புகழ் ஓங்கியிருந்தது என்பதை அவன் பாடல்களில் இருந்து அறிய முடிகிறது. வால்மீகி, போதாயனர், வஷிஷ்டர் ஆகிய மூவர் எழுதிய ராமாயணங்களில் தேவபாஷையில் எழுதப்பட்ட வால்மீகி முனிவரின் கவிதைகளையே—காவியத்தையே அடிப்படையாகக் கொண்டு எழுதியதாக அவனே ஒரு பாடலில் கூறிகிறான். ஆக வால்மீகி முனிவன் பிராமணர்கள் பற்றிச் சொன்னதைத் தானே அவனும் சொல்லியிருப்பான் என்று சிலர் எண்ணலாம். அது சரியல்ல. எவ்வளவோ இடங்களில் அவன் வால்மீகி ராமாயணத்தில் சொன்னதை எழுதாமல் விட்டிருக்கிறான். இன்னும் பல இடங்களிலும் மாற்றியும் எழுதி இருக்கிறான். ஆக கம்பன் கூறுவதை அவன் நம்பிய ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. கம்பன் என்ன சொன்னான்?

வசிட்ட முனிவன் இராமனுக்குக் கூறிய உறுதிப்பொருள்

அயோத்தியா காண்டம்—மந்தரை சூழ்ச்சிப் படலம்

பாடல் 99
என்று பின்னும் இராமனை நோக்கிநான்
ஒன்று கூறுவது உண்டு உறுதிப்பொருள்
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான்

பொருள்: நான் உனக்குச் சொல்ல வேண்டிய உறுதிப்பொருள்
ஒன்று இருக்கிறது. அதை நீ நன்றாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாலை அணிந்த ராமனுக்குச் சொல்லத் தொடங்கினான்

பாடல் 100
கரிய மாலினும் கண்ணுதலானினும்
உரிய தாமரைமேல் உறைவானினும்
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யினும்
பெரிய அந்தணர் பேணுதி உள்ளத்தால்

அந்தணர்களை மனமார ஆதரிக்கவேண்டும். ஏன் தெரியுமா? அவர்கள்
பிரம்மா (தாமரைமேல் உறைவான்), விஷ்ணு (கரிய மால்), சிவன் (கண்ணுதலான்) ஆகிய மூவரைக் காட்டிலும், ஐந்து பூதங்களையும், சத்தியத்தைக் காட்டிலும் பெரியவர்கள்.

பாடல் 101
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள்
நொந்து உளாரையும் நொய்து உயர்ந்தாரையும்
மைந்த எண்ண வரம்பும் உண்டாம் கொலோ

மகனே! அந்தணர்கள் கோபித்தபோது எத்தனை தேவர்கள் கஷ்டப் பட்டார்கள் என்று சொல்லி மாளாது; கணக்கே இல்லை. அது போல அவர்கள் மகிழ்ந்தபோது எத்தனை தேவர்கள் இன்பம் அடைந்தார்கள் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்க இயலாது. இல்லையா?

GURUKULAM Water color 10x13in

பாடல் 102
அனையர் ஆதலின் ஐய இவ் வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்

மகனே! அந்தணர்கள் இப்படிப்பட்டவர்கள் என்பது புரிகிறதல்லவா? கொடிய பாவங்களில் இருந்து விலகி நிற்கும் மேன்மை உடையவர்கள் அந்தணர்கள் .ஆகவே அவர்கள் திருவடிகளை உன் முடிமேல் தாங்கி, இனிய சொற்களைக் கூறி அவர்களை வாழ்த்து. அவர்கள் ஏவும் செயல்களை உடனே முடிப்பாயாக.

பாடல் 103
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவநிற்கும் விதியும் என்றால் இனி
ஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்
தேவரைப் பரவும் துணை சீர்த்தே

ஒருவனை உச்சாணிக் கொம்பில் வைப்பதும், அதள பாதாளத்தில் வீழ்த்துவதும் ஒருவனுடைய தலைவிதி ஆகும். அந்த விதிகூட, அந்தணர் ஏவலின் படி நடக்கும் என்றால் பார். அவர்களைக் காட்டிலும் சிறந்தவர் உண்டா? எதுவுமே இல்லை. ஆகவே இப்பிறவியிலும் மறு பிறவியிலும் பூலோக தேவர்களாகத் திகழும் அவர்களைப் போற்றுவதே சிறப்புடைய செயல்.

இதைத் தொடர்ந்து நல்லாட்சி, அமைச்சர் சொல் கேட்டல், அன்புடன் இருத்தல் ஆகியவற்றையும் வசிஷ்டர் உபதேசிக்கிறார்.

இங்கு ஒரு கேள்வி எழும். அந்தணர்கள் என்பது பிராமணர்களா? அல்லது முனிவர்களா என்று. புறநானூற்றிலும் ஏனைய சங்க நூல்களிலும், அதற்குப்பின் வந்த சிலப்பதிககரத்திலும் ‘நான்மறை அந்தணர்கள்’, ‘முத்தீ வழிபடும் அந்தணர்கள்’ என்று வருவதை நோக்குங்கால் இது பிராமணர்களையே குறிக்கும் என்பது வெள்ளிடை மலையென விளங்கும். வள்ளுவனும் (543) குறளில் அந்தணர் என்பவரை வேதத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவதைக் கண்கிறோம்.

பிராமணர்களை பூவுலக தேவர்கள் (பூசுரர்) என்றும் அழைப்பர். பாடல் 103–ல் பூலோக தேவர்கள் என்ற சொல்லைக் குறிக்கும் விளக்கம் வருகிறது. உரைகாரர்களும் பூலோக தேவர் என்றே உரை செய்கின்றனர். ஆக இந்தப் பாடல்களில் கம்பன் குறிப்பது பிராமணர்களைத் தான் என்பதில் ஐயமில்லை.
பாலகாண்டத்தில்

“அருந்தவ முனிவரும் அந்தணாளரும்” (பாடல் 183) என்று பிராமணர்களையும் முனிவர்களையும் கம்பன் வேறுபடுத்திப் பாடி இருப்பதையும் காண்கிறோம்.

மற்றொரு பாடலில்
மாதவத்து ஒழுகலம்; மறைகள் யாவையும்
ஓதலம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலம்;
மூதெரி வளர்க்கிலம்; முறையும் நீங்கினேம்;
ஆதலின் அந்தணரேயும் அல்லாமால் (பாடல் 2644)

மா தவம் செய்தல், வேதங்களை ஓதுதல், ஓதுவித்தல், முத் தீ வளர்த்து யாகம் செய்தல் ஆகியன் அந்தணர் பணியாக மேல் கூறிய பாடலும் கூறுகிறது.

ஒரு காலத்தில் பிராமணர்களும் துறவியரும் சத்தியம், ஒழுக்கம் என்பனவற்றில் சம நிலையில் இருந்தனர். ஆகவே இரண்டு பொருள்களிலும் சில நூல்களில், இச் சொல் பயன்படுதப்பட்டது என்பதும் உண்மையே.

contact swami_48@yahoo.com

திராவிடர்கள் யார்?

brahmins 2

எழுதியவர்: சந்தானம் (லண்டன்) சுவாமிநாதன்

(இதுவரை எனது பிளாக்குகளுக்கு வருவோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டிவிட்டது. நாள் தோறும் 1200 ‘’ஹிட்ஸ்’’ வருகின்றன. உங்கள் ஆதரவுக்கு நன்றி).

‘’ அன்பென்று கொட்டு முரசே — மக்கள்

அத்தனை பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு

யாவரும் ஒன்று என்று கொண்டால் ’’ (பாரதி)

‘’யாதும் ஊரே, யாவரும் கேளிர்‘’ (உறவினர்) என்ற கொள்கையை உடையவன் நான். ஆயினும் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’(?!?!), உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன். ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்தபின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

திராவிடர்கள் பிராமணர்களே ! பிராமணர்கள் திராவிடர்களே !!

திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!

ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?

சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!

நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே!

Rahul_Dravid

கிரிக்கெட் ஆடும் திராவிடன்

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராஹுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது? ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர். கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிராமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.

இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.

உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்!.

இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்துள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்!  அது சரியல்ல. உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை, அவர் தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.

veda[atasala

திராவிடாசாரியா

அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்.:

பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு  சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.

(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன்”கர்நாடக” என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)

அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ:

திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.

திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.

திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்

திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.

தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை — திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.

தென் இந்தியாவில் இருந்து வடக்கே போன எல்லோரையும் ”மதறாசி” ( மெட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்!!இதுபோலத்தான் திராவிடன் என்பதும்.

3_veddahs

Picture of Veddahs (classified as Dravidas)

தமிழ் நாடு — திராவிடம் அல்ல!!!!!

இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை!!!.இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை. இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது (தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் ‘’இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்!!

தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.இதே போல தெற்கிலிருந்து சென்ற பிராமணர்களுக்கு திராவிட் — என்று பெயர்.

திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை. பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிக்கும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லவே இவ்வளவும் எழுதினேன்.

irula_snake_catching_thehindu_6-9-2009

Picture of Irulas (classified as Dravidas)

வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ மேலும் பல வியப்பான விஷயங்களைச் சொல்லி குழப்பத்தை உண்டக்கிப் ,பிளவை உண்டாக்கப் பார்க்கின்றனர். தமிழன் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்தவன். அவனுடைய மொழிக்கும் துருக்கிய மொழிக்கும், பின்லாந்துகாரர் மொழிக்கும் தொடர்பு உண்டு என்றும் வாதிக்கின்றனர். ஒருபக்கம் சிந்து வெளியில் இருந்து ஆரியர்கள் அடிக்குப் பயந்து ஓடிவந்தவன் என்றும் மறுபக்கம் எங்கோ உள்ள பின்லாந்துகாரனுடன் உறவு கொண்டவன் என்றும் சொல்லிக் குழப்புகின்றனர். தமிழர்களோ,  ”நாங்கள் குமரிக்கண்டவாசிகள்” — என்று எந்த ஆதாரமும் இல்லாமல் பேசிவருகின்றனர். இவை சரியில்லை என்பதையும் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையேதான் நெருங்கிய தொடர்பு என்றும் என்னுடைய 575 ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதியுள்ளேன். சில கட்டுரைகளின் பெயர்களை மட்டும் கீழே காண்க:

விரிவஞ்சி இப்போதைக்கு இத்தோடு முடிக்கிறேன்.

சந்தானம் சுவாமிநாதனின் முந்தைய கட்டுரைகள்:

1.முதல் திராவிட ராணி கி.மு 1320, (2).Dravidian Queen (1320 BC) in North India (3).The Biggest Brainwash in the World (4). ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் 5.தமிழன் காதுல பூ!!!! (6).மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா? கட்டுக்கதையா? (7) 3 Tamil Sangams: Myth and Reality 8. தமிழ் இனத்தின் வயது என்ன? 9. தமிழ் ஒரு கடல் 10.தமிழ்-கிரேக்க தொடர்பு

11..Indra festival in the Vedas and Tamil Epics 12.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 13.Karikal Choza and Eagle shaped Fire A tar 14.Why do British judges follow a Tamil king? 15.Flags : Indus Valley- Egypt Similarity 16.தமிழ் முனிவர் அகஸ்தியர் 17.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 18.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 19.வீரத் தாயும் வீர மாதாவும் 20.Veera Matha in the Vedas and Tamil Literature

21.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 22.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 23.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா?  24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 25. தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்)+ 550 கட்டுரைகள்.

Pictures are taken from various websites;thanks.

swami_48@yahoo.com