
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9206
Date uploaded in London – –30 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமேரியாவும் பிராமணர்களும் – Z IGGURAT ஜிக்குராட் மர்மம் !
சுமேரியா என்றால் என்ன?
இராக் நாட்டின் ஒரு பகுதி. டைக்ரிஸ் – யூப்ரடீஸ் என்ற நதிகளின் சமவெளிப் பகுதி.
ஜிக்குராட் ZIGGURAT என்றால் என்ன?
படிப்படியாக அமைந்த சதுர கோபுரம். இந்துக் கோவில் போல இருக்கும்; ஆனால் படிப்படியாக – அதாவது கட்டம் கட்டம் ஆக சிறுத்துக் கொண்டே போகும் . இந்துக் கோவில் முக்கோணம் போல உயரும். ZIGGURAT சிக்குராட் சதுரம், குட்டி சதுரம், குட்டி குட்டி சதுரம் என உயரும் .
இதற்கும் பிராமணர்களுக்கும் என்ன தொடர்பு?

பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை சூரியனை நோக்கி காயத்ரி மந்திரம் சொல்லுவார்கள். அந்த மந்திரம் நாலு வேதத்திலும் உள்ளது. உலகில் 8000 ஆண்டுகளாக பிராமணர்கள் சொல்லும், செய்யும் அற்புதம் இது. ஹெர்மன் ஜாகோபியும், பால கங்காதர திலகரும் ரிக் வேத காலத்தை ‘கி.மு. 6000 வரை’ என்று வான சாஸ்திர வழியில்- அடிப்படையில் நிரூபித்துள்ளனர். தள்ளிப்போன , தகிடுதத்தப் பேர்வழி மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக கி.மு 1200 என்று சொல்லிவிட்டு, பின்னர் வில்சன், விண்டர்நிட்ஸ் முதலிய அறிஞர்கள் கொடுத்த அடியில் அசந்து போய், ரிக்வேதம் கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்கலாம்; எவரும் அதன் காலத்தைக் கணிக்க முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.
அப்பேற்பட்ட பெருமை மிகு ரிக்வேத மந்திரத்தில் ZIGGURAT சிக்குராட் வருகிறது.
XXX
ZIGGURAT சிக்குராட் – சிகரம் ஏன் கட்டினார்கள்?
இந்த சதுர கோபுரம் பற்றி பைபிள் முதல் ஹெரோடோட்டஸ் (HERODOTUS) வரை பலரும் பல சுவையான விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றனர். பைபிளின் முதல்(GENESIS) அதிகாரத்தில் பேபல் கோபுரக் (TOWER OF BABEL) கதை வருகிறது. சொர்கத்துக்குப் போக மக்கள் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கோபுரம் அமைக்க முயன்றதால், கடவுளுக்கு கோபம் வந்தது. அவர்கள் நீங்கள் எல்லோரும் பல மொழிகளைப்ப பேசுவோராகி உலகெங்கும் ஓடிப்போங்கள் என்று சபித்துவிட்டார். இந்தக் கதையில் வரும் கோபுரம் சதுர சிக்குராட் கோபுரம். அது அழிந்து போகவே பின்னர் நெபொ போலசார் மகன் நெபுகட்னேஸார் ஒரு கோபுரம் கட்டினார்.
இதுதவிர சிக்குராட் பல கட்டப்பட்டு அவற்றினுச்சசியில் — சிகரத்தில் இறைவன் சிலைகள் வைக்கப்பட்டன. நாம் குன்றுதோறும் ஆடிவரும் குமரனை வழிபடுவது போல, பக்தர்கள் படி ஏறிச் சென்று கடவுளை வழிபட்டனர் .
இந்த ஜிக்குராட் ZIGGURAT= SIKHARA என்பது சிகரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் சிதைவு ஆகும். ஐயர் தலையிலுள்ள சிகா – சிகை — என்னும் குடுமியும் இதே பொருளுடைத்தே !
ஹெரோடோட்டஸ் (HERODOTUS) என்னும் அறிஞர் சொன்ன விஷயத்துக்கு முன்னர், சுவையான பிராமண விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன் . பிராமணர்கள் தினமும் ‘காணாமல், கோணாமல், கண்டு’ — என்ற வகையில் மூன்று முறை சூரியனைத் தொழுவர். சூரியனைக் ‘காணாமல்’ – அதாவது சூர்யோதயத்துக்கு முன்னால் – நடுப்பகலில் – நிழல் ‘கோணாத’ நேரத்தில் – ‘கோணாமல்’ ஒரு முறை தொழுகை நடத்துவர். மாலையில் ‘கண்டு’- அதாவது சூரியன் மலைவாயில் விழுந்து மறைவதற்கு முன்னர் அவனைக் ‘கண்டு’ ஒரு முறை தொழுகை நடத்துவர். இது தவிர சமிதா தானம் (பிரம்மச்சாரிகளுக்கு), ஒளபாசனம் முதலிய தீ / அக்னீ சடங்குகள் தனி.
பிராமணர்கள் உலக மஹா அதிசயங்கள்! ஏனெனில் இன்றும் 8000 வருஷமாக ஒரு சடங்கைச் செய்யும் அதிசயங்கள். அது மட்டுமல்ல; அதை வாய் மொழியாகவே பரப்பிவரும் மஹா அதிசயங்கள்!!! அவர்கள் மூன்று முறையும் சூரிய வெளிச்சத்தில் நின்று கொண்டு காயத்ரியை – தேவியை — இருதயத்துக்குள் அமர்த்துவர்- அதாவது ‘ஆவாஹனம்’ செய்வார்கள் . அது எப்படி?
கைகளை மூன்று முறை உடப்பக்கமாக காட்டி (INVOKING) வருக, வருக , வருக என்று மூன்று முறை அழைப்பர். நாம் சினிமா வசனங்களில் கேட்கும் ‘அலை மகள், கலை மகள் , மலை மகளை’ காயத்ரீம் ஆவாஹயாமி , ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி என்று அழைப்பர்.
இதில் சுவையான விஷயம் என்ன தெரியுமா?


அவள் Z ஜிக்குராட்டில் இருந்து — மேரு மலை ‘சிகரத்’தின் உச்சசியில் இருந்து வந்து பிராமணர் இதயத்துக்குள் அமர்வாள் ; பிராமணர்கள் தொழுகை முடித்தவுடன் அவளை திருப்பி அனுப்பும் மந்திரத்தில் ‘Z ஜிக்குராட்’ வருகிறது
தாயே! ரொம்ப THANKS தாங்க்ஸ் . திருப்பியும் சிகர உச்சிக்கே போய் விடு என்று GOOD BYE ‘குட் பை’ சொல்லுவார்கள்.
“உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி
பிராம்மணோ ஹ்யணுக்ஞானம்
கச்ச தேவி யதா சுகம்”
என்ற மந்திரத்தைச் சொல்லி வழி அனுப்புவார்கள்.
மந்திரத்தின் பொருள்
“பிரகாசிக்கின்ற காயத்ரீ தேவியே, பூமியில் பிரம்மோபாசனம் செய்கின்ற எங்களுக்கு அனுக்கிரகத்தைச் செய்து , ‘மேரு மலை உச்சியில் உத்தமமான சிகர’த்திலுள்ள உனது ஆலயத்தில் ஆனந்தமாய் எழுந்தருள்வாய் “.
அவள் கடவுள் தானே !
பில்லியன் பிராமணர்கள் ட்ரில்லியன் தடவை கூப்பிட்டாலும் அலுப்பு சலிப்பில்லாமல் ஜிக்குராட் / சிகரத்தில் இருந்து இறங்கி வந்து இதயத்துள் அமர்ந்து அருள் புரியும் அற்புதமே அற்புதம் !!
ஹெரோடோடஸ் என்ற கிரேக்க அறிஞர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் பல விஷயங்களை எழுதியதில் Z க்குராட் விஷயமும் வருகிறது எட்டு அடுக்கு கோபுரம் பற்றி வருணிக்கையில் போகப் போக சதுரங்கள் சிறுத்துக் கொண்டே போவதாக எழுதியுள்ளார்.
இந்த சதுர கோபுரம் வானவியல் ஆராய்ச்சிக்கும் பயன்பட்டதாம். இந்துக்களைப் போலவே சுமேரியர்களும் நாள், நட்சத்திரம் பார்த்து விழா க்களைக் கொண்டாடினர்.
என்னுடைய முந்தைய கட்டுரைகளில் சுமேரியாவில் நம்மவர்கள் குடியேறியதைக் காட்டும் 30 சிந்து – ஸரஸ்வதி நதி தீர முத்திரைகள், தேக்கு மரத்துண்டுகள், சம்ஸ்க்ருத மன்னர் பெயர்கள் பற்றி எழுதியுள் ளேன் . சுமேரிய மன்னர்கள் பட்டியல் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது
நரம் சின் NARAM SIN , அமர் சின் AMAR SIN முதலிய பெயர்கள் நமக்கு நர சிம்மன் / நர சந்திரன் , அமர சிம்மன்/ அமர சேனன், அமர சந்திரன் முதலிய பெயர்களை நினைவு படுத்தும் . மேல் விவரங்களை 20, 30 தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளில் தந்து விட்டேன் ; கண்டு கொள்க .
–SUBHAM —-


Tags – சுமேரியா , பிராமணர் , ஜிக்குராட் , சிகரம், காயத்ரீ
You must be logged in to post a comment.