
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8362
Date uploaded in London – 18 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜிந்தாபாத் 3
குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை மீது பெருங்குன்றுர் கிழார் பாடிய ஒன்பதாம் பத்தில் கபிலர் பற்றி குறிப்பிடுகிறார். அவர் பாடிப் பரிசாகப் பெற்ற ஊர்கள் எண்ணிலாதவை என்பதை அழகாக எடுத்துரைக்கிறார் —
“மறம்புரி கொள்கை வயங்கு செந்நாவின்
உவலை கூராக் கவலையில் நெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே
–பதிற்றுப் பத்து, 9-ம் பத்து
பொருள்
சோழன் மீது சேரன் படையெடுத்தான். சோழ வீரர்கள் பயந்து போய் வேல்களைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அந்த வீரர்களின் வேல்களின் எண்ணிக்கை கபிலர் பெற்ற ஊர்களையும் விட அதிகமானவை .
இங்கு புலவர் ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துவிட்டார்.சேரனையும் கபிலனையும் புகழ வேல்களைப் பயன்படுத்துகிறார்.
xxx

அகநானுற்றுப் பாடல் 78–ல் நக்கீரர் புகழ்வதைப் பார்ப்போம்
“உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன் சூழ , சேய் நின்று
செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டு பல கழிய , வேண்டுவயிற் பிழையாது
தாள் இடூஉக்கடந்து வாள் அமர் உழக்கி
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய
கடும் பரிப் புரவிக் கைவண் பாரி
தீம் பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் – இவள் நுதலே”
இந்தப் பாட்டில் நக்கீரர் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார்
இது அகத்துறைப் பாடல் ; தலைவியின் அழகை நினைவுபடுத்த வந்த பாடல்
பொருள் என்ன ?
பாரி என்ற மன்னனின் பறம்பு மலையில் பூ த்த தேன் மணம் கமழும் தலைவியின் முகத்தை/ நினைத்தாவது பார்த்தாயா என்று தோழி வினவுகிறாள் .
யார் அந்தப் பாரி ?
மூவேந்தர்களும் பல ஆண்டுகள் போட்ட முற்றுகையைத் தகர்த்து தக்க சமயத்தில் அவர்களைத் தோற்றோடச் செய்தவன் குறு நில மன்னன் பாரி ; அதை எப்படி செய்தான்? .
கபிலர் என்ற புலவர் ஒரு உலக அதிசயம் புரிந்தார் !
கிளிகளைப் பழக்கி, முற்றுகையினையும் தாண்டிச் சென்று, நெல் கதிர்களைக் கொண்டுவரச் செய்தார் . அதை ஆம்பல் மலர்த் தண்டுகளாலான கூட்டு, கறியுடன் பல ஆண்டுகள் சாப்பிட ‘ஐடியா’idea) சொல்லிக் கொடுத்தார்.
யார் அந்தக் கபிலன்?
உலகுள்ளவரையும் பலரும் புகழும் நல்ல புகழினையும் சத்தியத்தையும் உடைய கபிலர் என்னும் புலவர் பெருமான் !
xxxx

ஜிந்தாபாத் 5
கபிலரே பாடிய புறநானூற்றுப் பாடலில் — 337– ஒரு புதிர் உள்ளது ; இதுவரை விடை கிடைக்கவில்லை.
“அகிலார் நறு ம்புகை ஐது சென்று அடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு”
பொருள் என்ன ?
சோழ நாட்டில் கபிலர் ஒரு வீட்டுக்குப் போனார்; அங்கே ஒரு பேரழகி இருந்தாள் . அவள் சோழ நாட்டின் வி.ஐ.பி.யின் (V I P = very important person) மகள் ; ஆகையால் அதி பயங்கர செக்யூரிட்டி (securityY. பாரியின் பறம்பு மலை பனிச் சுனை போல பார்ப்பதற்கு அரியள் ; அதாவது பறம்பு மலை போலப் பாதுகாப்பு. அந்த வீட்டில் பெண்களின் கூந்தலுக்கு மணம் வீச போடப்பட்ட அகில் புகை, வீட்டைக் கருப்பு நிற துணி போலக் காட்டியது .
இதில் புதிரான சொல் கபில நெடுநகர் .
கபில நிறம் என்பதை யானையின் நிறம் எனலாம் இந்தப் பிராமணனும் –புலவரும் — கபில நிறம் போலும்!! கரும்புகை சூழ்ந்த வீடு என்பதால் ‘கபில நெடுநகர்’ என்று சொல்லியிருக்கலாம் . அது சரியானால், தன்னுடைய பெயரையே சிலேடையாக பயன்படுத்திய ஒரே சங்கப் பாட்டு இதுதான். அப்படியில்லாமல் பாரியின் தலைநகருக்கு பாரியே கபில நெடுநகர் என்று பெயர்வைத்தனோ என்று எண்ணத் தோன்றுகிறது . ஏனெனில் பெண்ணின் அழகை நகரத்துக்கு ஒப்பிடுவது சங்க இலக்கியம் முழுதும், சம்ஸ்கிருத இலக்கியம் முழுதும், பைபிளிலும் கூட உளது.
கடைசியில் இவளைக் கட்டித் தழுவும் பாக்கியம் எவனுக்கோ என்று முடிக்கிறார் . அதிலும் ஒரு அங்கதம் உளது ; அடப் பாவி! இவ்வளவு செக்யூரிட்டி போட்டால் இவளை யார் பார்க்க முடியும்? இவளுக்கு எப்படிக் கல்யாணம் நடக்கப்போகிறதோ என்று கிண்டல் அடிக்கிறாரோ!! அல்லது இவ்வளவு பேரழகுடைய பிணை மணக்கும் ‘லக்கி பாய்’ யார் ( Who is that lucky boy? )என்று வியக்கிறாரோ என்று தெரியவில்லை . எது எப்படியாகிலும் நமக்கு வேண்டிய ‘பாயிண்ட்’ point கபில நெடுநகர்தான் . நகர் என்பது பெரிய வீடு , நகரம் , கோவில் என்ற பல பொருள்களில் வரும்.
xxx

ஜிந்தாபாத் 6
புறநானூற்றுப் பாடல் 126 மாறோக்கத்து நப்பசலையார் பாடிய பாடல் . இதில் அவர் கபிலருக்குக் கொடுத்த அடைமொழிதான் அவரை இப்படி எல்லாப் புலவர்களையும் பாபட வைத்தது . அது என்ன விஷயம் ?
“புலன் அழுக்கற்ற அந்தணாளன்”
அந்தணர் என்பது அய்யரா அல்லது துறவியா என்று ஐயப்படுவோருக்கும் இப்பாடல் பதில் தருகிறது. இதோ முக்கிய வரிகள் —
“நிலமிசை பரந்த மக்கட்கு எல்லாம்
புலன் அழுக்கற்ற அந்தணாளன்
இரந்து சென் மாக்கட்கு இனி இதன் இன்றிப்
பரந்து இசை நிற்கப் பாடினன்2 .
பாடல் 126, புறநானூறு
பாடியவர் – நப்பசலை
பாடப்பட்டோன் மலையமான் திருமுடிக்காரி.
பொருள்
பேரறிவும் தூய்மையும் உடைய கபிலன் உன்னையும் உன் சுற்றத்தாரையும் , இனிப் புகழ்வதற்கு இடமில்லை என்ற அளவுக்குப் பாடிவிட்டான் (கபிலனினும் அறிவு குறைந்தாலும் நாமும் பாடுவோம் )
இதில் ‘புலன் அழுக்கற்ற அந்தணன்’ என்பது அவர் மனம், மொழி, மெய் மூன்றிலும் சுத்தமானவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.இந்த திரிகரண சுத்திதான் கபிலருக்கு இவ்வளவு புகழ் ஈ ட்டித் தந்தது என்றால் மிகையில்லை.
xxx

பரிபாடல் (3-7) 11 ருத்திரர்களையும் கூட கபிலர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது ஏனைய பொருள்களிலும் கபில வருவது ஆராய்ச்சிக்குரியது .
கபிலை அம்பதி– மனிமேகலை 26-44, 28-143
கபில புரம் – –சிலப்பதிகாரம் – 23-141
கபிலை – தோல்.3-87-6; பதிற்று . பதிகம் 6-5; மணி 26-17
அகராதி அர்த்தம் – 20 அர்த்தம் முதல் 25 அர்த்தம் வரை உளது.
–SUBHAM–
tags — பிராமணாள் ஜிந்தாபாத்-2
