அயோக்கியன் யார்? (Post No.5204)

Written by London swaminathan

 

Date: 16 JULY 2018

 

Time uploaded in London – 8-41 am  (British Summer Time)

 

Post No. 5224

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அமெரிக்காவில் இரண்டு செனட்டர்களுக்கு (SENATE MEMBERS) இடையே கடும் விரோதம்; ஒருவர் பெயர் ஹென்றி க்ளே; மற்றொருவர் பெயர் ஜான் ராண்டால்ப் (HENRY CLAY AND JOHN RANDOLPH).

 

இருவரும் எலியும் பூனையும் போல; கீரியும் பாம்பும் போல! ஒருவரை ஒருவர் குதறி, கடித்துத் தின்ன தயாராக இருப்பர்; எங்கு சந்தித்தாலும் பேசுவதில்லை; முகத்தைத் திருப்பிக்கொள்வர்.

ஒரு நாள் ஓரிடத்தில் சாலைகளைச் செப்பனிடும் பணிகள் நடந்தன. ஒத்தையடிப் பாதை. ஒருவர்தான் சகதி படாமல் நடக்க முடியும்.

 

கடவுளின் சித்தம்; அன்று இருவரும் எதிர் எதிர் திசையில் வர நேரிட்டது. ராண்டால்ப் நினைத்தார்–அருமையான வாய்ப்பு, நழுவவிடக்கூடாது என்று கொக்கரித்தார்.

“நான் அயோக்கியர்களுக்கு வழிவிடுவத்தில்லை!” என்றார்

 

க்ளே மஹா புத்திசாலி! அப்படியா!

“நான் (அயோக்கியர்களுக்கு) வழி விடுவதுண்டு” என்று சொல்லி சகதியில் இறங்கி நின்றார்.

 

ராண்டால்ப் பேசவா முடியும்? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்!

XXXX

 

இசை ஞானி ப்ராஹ்ம்ஸ் செய்த குசும்பு!

 

ஜெர்மனியின் மாபெரும் இசை மேதைகளில் ஒருவர் ஜொஹன்னஸ் பிராம்ஸ் (1833-1897). இவரையும் பாக் (JOHAN BACH) என்பவரையும் பீதோவனையும் (BEETHOVEN) சேர்த்து மும்மூர்த்திகள் என்று அழைப்பர்; மூன்று பெயர்களிலும் முதல் ஆங்கில எழுத்து பி B என்பதால் மூன்று பெரிய பி (THREE BIG ‘B’s ) என்று சங்கீத உலகில் பிரஸித்தமானவர்கள்.

 

ஒரு நாள் ப்ராஹ்ம்ஸ் குசும்பு எல்லை மீறிப்போனது; அவர், பீதோவன் விஷயத்தில் மிகப்பெரிய அறிஞரான குஸ்டாவ் நாட்டிபாமுடன் (GUSTAV NOTTEBHOM) நடந்து சென்றார்; குஸ்டாவோ மஹா ஏழை; ரோட்டில் வண்டி தள்ளூவோனிடம் தள்ளிப்போன, ஆறிப்போன ரொட்டித் துண்டுகளை சீஸ் CHEESE SANDWICH உடன் வாங்கிச் சாப்பிடுவார்.

 

ஒரு நாள் வண்டிக்காரனை ப்ராஹ்ம்ஸ் அணுகி ‘இந்தா, நான் கொடுக்கும் பேப்பரில் இந்த ரொட்டித் துண்டைப் பொட்டலம் கட்டி அந்த குஸ்டாவிடம் விற்க வேண்டும்’ என்றார். பாவம் குஸ்டாவ்; வழக்கம்போல ரொட்டித் துண்டை வாங்கிப் பிரித்தார்: ஒரே வியப்பு; முகம் எல்லாம் சஹஸ்ர கோடி சூர்யப் பிரகாசம்! ஏனெனில் அது பீதோவனின் பாடல்; அவர் கையெழுத்தில்! யாருக்கும் தெரியாமல் ரொட்டித் துண்டை பெரும் பசியுள்ளவன் போல அவசரம் அவரசமாகக் கடித்து குதறிவிட்டு பிரம்மானந்தத்தில் திளைத்தார்.

பெரிய புதையலைக் கண்டுபிடித்தவன் சும்மா இருக்க முடியுமா? மெதுவாக ஸப்ஜெக்டுக்கு வந்தார்; ‘எனக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்து இருக்கிறது’. பீதோவன் எழுதிய பாடல் கிடைத்து இருக்கிறது! என்று சொல்லி சட்டைப் பைக்குள் இருந்த சீஸ் CHEESE கறை படிந்த காகிதத்தைப் பிரித்தார். அது ப்ராஹ்ம்ஸ், பீதோவன் போல எழுதிய பாடல்! அவர் பலர் முன்னிலையில் குட்டைப் போட்டு உடைத்தார். பாவம் குஸ்டாவ்!

 

பெரியவர்களுக்கும் குசும்பு உண்டு! நெருங்கிய நண்பன் இளிச்சவாயனாக இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

 

பழமொழி- இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.

 

XXX-சுபம்-XXXX

நட்பின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்!

lincoln india

Article No.2015

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 24  July 2014

Time uploaded in London : காலை 8-53

அமெரிக்காவின் 16-ஆவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் ஆப்ரஹாம் லிங்கன். அடிமைத்தனத்தை ஒழித்து, அமெரிக்க உள்நாட்டுப் போரில் வென்று, அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றியவர். அவரது பதவிக்காலத்தில் கடமையிலிருந்து தவறிய படைவீரர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். ஆயினும் ஒவ்வொரு சிப்பாயும், செல்வாக்குமிக்க ஒரு ஆளிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று வரவேண்டும்.

ஒரு படைவீரனின் கடிதம் மொட்டையாக, தனிக் கடிதமாக இருந்தது. “அட! என்ன இது? இதனுடனிருந்த சிபாரிசுக் கடிதம் எங்கே?” — என்று இதைக் கவனித்த ராணுவ அதிகாரியிடம் கேட்டார்.

அவரும், அந்த வீரன் எந்தக் கடிதமும் இணைக்கவில்லை – என்றார்.

அட! முக்கிய ஆள் சிபாரிசுதான் வேண்டுமென்பதில்லை. யாராவது நண்பர், ஒரு ஆதரவுக் கடிதம் கொடுத்தால் போதுமே! – என்றார் லிங்கன்.

அதையும் நான் கேட்டுவிட்டேன்; அவருக்கு நண்பர் எவருமே இல்லை என்று சொல்கிறார் – என்றார் அதிகாரி.

அப்படியா? நானே அவருடைய நண்பன்! – என்று சொல்லி அந்தப் படைவீரனுக்கு மன்னிப்பு அளித்தார்!

குகன் என்னு வேடனையே தம்பி என்று உறவு முறை கொண்டாடினான் இராமன். ஒன்றும் தெரியாத, முன்னைப்பின் அறியாத, ஒரு படைவீரனை ஒரு நொடியில் நண்பனாக்கி உயிர்ப் பிச்சை அளித்தார் லிங்கன்!

Brahms (1)

அன்பின் சின்னம் யொவன்னாஸ் பிராம்ஸ்

ஜெர்மானிய இசை அறிஞர் யொவன்னஸ் பிராம்ஸ். அவரை அறியாத மேல்நாட்டு இசைப் பித்தர் யாரும் இருக்கமுடியாது. ஆஸ்திரியாவில் தனது வாழ்நாள் முழுதும் இருந்தவர். இரக்க உள்ளம் படைத்த மாமேதை.

ஒருநாள் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். பிளாட்பாரத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த சாலைக் கலைஞனைக் கண்டு வியந்தார். அவ்வளவு தத்ரூபமான படங்கள்! இத்தகைய சாலையோரக் கலைஞர்கள், எல்லோரும் காசு போடுவதற்காக ஒரு தட்டு வைத்திருப்பார்கள். அப்படி ஒரு தட்டைப் பார்த்த பிராம்ஸ் மனமுருகி, ஒரு பெரிய நாணயத்தை அதில் போட்டார். அது பாறை மீது பட்ட நாணயம் போல ‘டங்’ என்ற ஒலியுடன் எகிரிக் குதித்தது. அவருக்கு மஹா வியப்பு! பின்னர்தான் அறிந்தார்: அது தட்டு அல்ல; உண்மையில் தட்டு போல தத்ரூபமாக வரையப்பட்ட படம் என்று!

அவரே ஒரு இசைக் கலைஞர். இதனால் கலையின் பெருமையை உணர்ந்து அதைப் போற்றினார். ஆனால் அவருடைய அந்தஸ்துக்கு ரோட்டில் போகும், வரும் கலைஞரை நின்று பார்க்க வேண்டிய தேவையே இல்லை. இது நடந்த இடம் பொலொஞா என்னும் இத்தாலிய நகரம் ஆகும். இவ்வளவுக்கும் அந்த சாலையோர ஓவியன் ஒரு ஊமை!

பிராம்ஸ், எங்கு திறமை இருந்தாலும் அதைப் போற்றிப் புகழ்வார். தன்னைவிட இளம் கவிஞர்களை ஊக்குவித்தார். பிரபல இசை மேதைகளின் படைப்புகளை வெளியிட உதவினார். ஒரு முறை ஒரு பிரபல இசைமேதைக்குப் பணம் உதவியும் அவரது நூலை வெளியிட அவருக்கு ‘ப்ரூப்’ பார்க்கத் தெரியவில்லை. பெரிய இசைமேதையாக இருந்த போதும் அவருக்காக பிராம்ஸே படி திருத்தும் பணியை மேற்கொண்டார்.

brahms

இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

உலகில் எவ்வளவோ நல்லவர்கள் உளர். அவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆட்களும் உண்டு. ஆகையால், உதவி செய்வதிலும்கூட கவனம் தேவை.

ஒரு சிறு பையன் மிக கனமான சாமானை ஏற்றிக் கொண்டு மேட்டில் ஏற முடியாதபடி தவித்தான். அதைப் பார்த்த  ஒரு வயதான நபர் அவனுக்கு மிகவும் கஷ்டப் பட்டு உதவினார்.

இருவரும் வெற்றிகரமாக,  மேட்டுக்கு வண்டியைக் கொண்டு சேர்த்தனர். பையன் நன்றி சொன்னான்.

யாரப்பா உன் முதலாளி? பெரிய கல் நெஞ்சக்கரானாக இருப்பான் போல இருக்கிறதே? ஒரு சின்னப் பையனிடம் இவ்வளவு பாரத்தைக் கொடுத்தால் அது தாங்காது என்று அவர்க்குத் தெரியாதா? – என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார் வயதான அந்த நபர்.

அதைக் கேட்ட அந்தப் பையன் சொன்னான்: “என் முதலாளிக்கு இது என்னால் செய்ய முடியாத காரியம் என்று நன்றாகவே தெரியும். ஆனால் அவர் சொன்னார்:

“இப்படியே போ, எவனாவது ஒரு இளிச்சவாயன், வழியில் கிடைப்பான்; அவனே உன் வண்டியை மேலே தள்ளிக் கொண்டுவந்து கொடுப்பான்” – என்று முதலாளி சொன்னார் என்றான்.

சும்மாவா சொன்னான் தமிழன்: “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்று!!

உத்தமனாக வாழ வேண்டும்தான்; ஆனால் அதற்காக “ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோவில் ஆண்டி”யாக இருத்தல் கூடா.

Abraham_Lincoln_1923_Issue-3c

உதவும் குணம், உதார குணம் பற்றிய சுவையான சம்பவங்கள், பொன்மொழிகள்

Brahms (1)

Article No. 2003

Compiled  by London swaminathan

Date 19 July 2015

Time uploaded in London: 10-19

அரிஸ்டாடில்

கிரேக்க நாட்டு தத்துவவித்தகர் அரிஸ்டாடில், ஒரு கெட்ட மனிதனுக்குப் பிச்சை போட்டார்.

“அரிஸ்டாடில்! அவன் ஒரு அயோக்கியன், அவனுக்கு ஏன் பிச்சை போட்டீர்கள்?” என்று நண்பர்கள் கேட்டனர்.

அரிஸ்டாடில் சொன்னார்,

அட! நான் அவனுக்காகவா போட்டேன்? மனிதகுலத்துக்காகப் போட்டேன்” – என்றார்.

(தமிழில் ஒரு பழமொழி உண்டு: சித்தம் போக்கு சிவன் போக்கு, ஆண்டி போக்கு, அதே போக்கு! அறிஞர்களின் உதார குணம் ஆழமானது; பொருளுடைத்து!)

haystack

நிலத்தை எரித்த சீன விவசாயி!

ஒரு சீன விவசாயி மலைப் பகுதியில், நெல் வயலில், வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பூமி அதிர்சி ஏற்பட்டு, கடல் உள்வாங்கி, திடீரென்று பின்னுக்குச் செல்வதைக் கண்டார். மாபெரும் சுனாமி பேரலைகள் வந்து, தாழ்வான இடம் முழுதும் வெள்ளக்காடாகப் போகிறது என்று உணர்ந்தார்.

தாழ்வான பகுதியில் தனது சொந்த கிராம மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று துடியாய்த் துடித்தார். என்ன செய்வது? உரக்க கூக்குரல் போட்டாலும் காதில் விழாது; தான் கீழே போனால் எல்லோரும் “கூண்டோடு கைலாசம் போவோம்” — என்பது அவருக்குத் தெரியும்.

அவருடைய சமயோஜித புத்தி அவருக்கு உதவியது; பக்கத்தில் தனக்குச் சொந்தமான பெரிய வைக்கல்போர் (குவியல்) இருந்தது. அதற்குத் தீ வைத்தார். அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று கோவில் மணியைத் தொடர்ந்து அடித்தார். கோவில் மணியால் ஈர்க்கப்பட்ட கிராம மக்கள் மலை உச்சியைப் பார்த்தனர். அங்கே வயலில் எரியும் தீயைக் கண்ணால் கண்டனர். ஒஹோ! வயல் எரிகிறது. அதற்கு உதவி கோரி கோவில் மணியை அடித்து இருக்கிறார்கள் என்று எண்ணி கிராம மக்கள் அனைவரும் மலை உச்சிக்கு ஏறினர்.

சுனாமிப் பேரலைகள் வந்து அவர்கள் இதுவரை வேலை செய்த்த தாழ்வான பகுதிகளை மூழ்கடித்ததைக் கண்டனர்.

மலைக்கு மேலிருந்த விவசாயியின் சமயோசித புத்தி தங்கள் உயிர்களை எப்படிக் காப்பாற்றியது என்று எண்ணி அவருக்கு நன்றி கூறினர். அதுமட்டுமல்ல அவரை எந்த ஒரு சக்தி இப்படிச் செய்ய ஊக்குவித்ததோ அதை வணங்குவோம் என்று கருதி ஆண்டுதோறும் அந்த சக்தி தேவதையை இன்றும் வழிபட்டு வருகின்றனர்! அதாவது அவர் உயிருடனிருக்கும்போதே, அந்த தனி மனிதனை வழிபாடாமல், அவனுடைய நற்குணத்தை வழிபடத் துவங்கிவிட்டனர்.

(நம் நாட்டில் தனிமனிதனுக்குச் சிலைகளை வைத்துவிட்டு, அவர்கள் சொன்ன தத்துவங்களை மறந்து விடுகிறோம். காந்திஜியின் தத்துவங்களைக் காங்கிரஸ் கட்சி கொன்றது; திருவள்ளுவர் தத்துவங்களைத் திராவிடக் கட்சிகள் குழிதோண்டிப் புதைத்தன!)

தமிழர் நடுகற்கள்

சீனர்களைப் போல, தமிழ் நாட்டில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கொடிய காட்டு மிருகங்களுடனோ, கொள்ளையர்களுடனுடனோ சண்டையிட்டு ஊரைக் காத்து உயிர்நீத்த வீரர்களுக்கு நடுகல் நட்டு இன்றும் அவரது சக்திக்கு படைப்புகள் கொடுப்பதைக் காண்கிறோம். சில வீரர்கள் காலப் போக்கில் கிராம தேவதைகளாக்கப்பட்டு கோவில்களும் கட்டப்பட்டுவிட்டன!

WALNUT

மரம் நட்ட மாமனிதன்!

அமெரிக்காவில் டெக்ஸாஸ் என்னும் ஒரு மாநிலம் உள்ளது. அதன் புகழ்மிகு கவர்னர் ஹாக். அவர் இறக்கும் தருவாயில் சொன்னார். “நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னம் எழுப்பி காசு, பணத்தை வீணடிக்காதீர்கள்; என் கல்லறையின் தலை மாட்டில் பெக்கன் கொட்டை மரத்தை நடுங்கள்; என் கால் மாட்டில் வால்நட் மரக் கொட்டைகளை நடுங்கள்; இரண்டும் மரமாகி விதைகளைத் தள்ளும் போது என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய டெக்ஸாஸ் மக்களிடையே அவைகளை விநியோகிங்கள். அவர்கள் அதைப் பயிர் செய்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் செழிக்கட்டும்” — என்றார்.

அதுபோலவே 1926 ஆம் ஆண்டுமுதல் அந்த மரங்களிலிருந்து கிடைத்த விதைகளை அருகிலேயே வரிசையாக நட்டு பெரிய மரச் சோலையை வளர்த்தனர். அவை பெரிதாகி விலையுயர்ந்த வால்நட், பெக்கன் பருப்பு விதைகளைக் கொடுக்கின்றன. அவைகளை நட்டு, மரக் கன்று வந்தவுடன் அவைகளைப் பக்கத்து ஊர்ப் பள்ளிக்கூடங்களுக்கு விநியோகிக்கின்றனர்.

என்ன அருமையான யோஜனை பாருங்கள்! தன்னுடைய நினைவையும் தக்க வைத்தார்: தன் நாட்டையும் செழிக்கச் செய்தார்!!

செத்தும் கொடுத்தான் சீதக்காதி

இதே போல தமிழ் நாட்டிலும் சீதக்காதி என்னும் பெருந்தகையின் புகழ் இன்றும் இருக்கிறது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி ! என்னும் கதையை முன்னரே எழுதிவிட்டேன். படித்தறிக!

pope, book

போப்பும் ஸ்விFப்டும்

ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு அலெக்ஸாண்டர் போப் என்ற கவிஞரையும் ‘கல்லிவர்ஸ் ட்ராவல்’ முதலிய படைப்புகளைப் படைத்த ஜோனதன் ஸ்விப்ட் என்ற எழுத்தாளரையும் நன்கு தெரியும். கல்லிவரின் லில்லிபுட் யாத்திரை தமிழிலும் இருக்கிறது. இதுபற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். நமது ‘விரலான்’ கதையை அவர் அரசியல் அங்கதமாக எழுதினார் என்பதை விளக்கி இருக்கிறேன் முன்னொரு கட்டுரையில்.

ஸ்விப்டிடம் போப் என்ன சொன்னார் தெரியுமா?

“என்னிடம் நிறைய பணம் இருக்கிறது; ஆண்டுக்கு நூறு பவுண்டுகள் வரை நன்கொடை கொடுக்க இயலும் (அந்தக் கலத்தில் 100 பவுண்ட் என்பது இப்பொழுது மில்லியன் போல); இந்தப் பூவுலகில் ஏதேனும் நல்லது செய்வேன்; புழுப்போல நெளிய மாட்டேன். உயிருடன் இருக்கும் போதே மற்றவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து நான் பேரானந்தம் அடைவேன். நான் இறந்த பிறகு என்னிடம் எனக்கு கல்லறை எழுப்பக்கூட பணம் மிச்சம் இருக்கக் கூடாது. என் கல்லறைக்கு வெளியே யாராவது ஒருவன் காசு வேண்டி நிற்பானாகில் நான் நாணித் தலை குனிவேன்!”

(எவ்வளவு உயரிய சிந்தனை! ‘தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’, ‘இல்லை என்பதை இல்லை ஆக்குவேன்” – என்று முழக்கமிட்ட புரட்சிக் கவிஞன் பாரதியை இது நினைவுபடுத்தும்).

1967Swift

இசைமேதை பிராம்ஸ்

இசைமேதை பிராம்ஸ் அவர்களுக்கு ஒரு ஆங்கிலேயர் 1000 பவுண்ட் (இப்போது கோடி பணத்துக்குச் சமம்) உயில் எழுதிவிட்டு இறந்து விட்டார். இந்தச் செய்தியை பிராம்ஸிடம் சொன்னார்கள். அவர் சொன்னார்: “இதைவிட பேரானந்தம் தரும் அனுபவம் உண்டா? இதைவிட நல்ல செய்தி என்ன இருக்க முடியும். என்னை அறியாத ஒருவன் – எனக்கு கடிதமே எழுதாத ஒருவன் – இப்படி என்னை நினைவிற் வைத்துக் கொண்டது என் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுவிட்டது. முன்னைப் போல, மீண்டும் ஒரு முறை அளவிட முடியாத ஆனந்தம் பெற்றேன். வெளியே எனக்குக் கிடைத்த பெரிய விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் எல்லாம் மேலானது இது! எனக்கு இந்தப் பணத்தை ‘முதலீடு’ செய்து எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.அவரைப் போலவே நானும் இதை மற்றவர்களுக்குக் கொடுத்து பெரு மகிழ்ச்சி அடைவேனாக”

இந்த சம்பவங்களைப் படித்துவிட்டு கீழேயுள்ள மேற்கோள்களைப் படியுங்கள். பொருள் தெள்ளிதின் விளங்கும்!

brahms

“கைம்மாறு வேண்டா கடப்பாடு” – குறள் 211

பலனை எதிர்பாராமல் உதவி செய்

“ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும்” – குறள் 214

மற்றவனுக்கு உதவுபனே உயிர் வாழ்பவன்; மற்றவர்கள் நடமாடும் பிணங்கள்!

“ஊருணி நீர் நிறைந்தற்றே பேரறிவாளன் திரு” -215

நல்லோரிடமுள்ள செல்வம் ஊற்றுத் தண்ணீர் போல எல்லோருக்கும் பயன்படும்.

வறியார்க்கொன்று ஈவதே ஈகை – 221

தேவைப்பட்டவருக்கு காசு கொடுப்பதே தானம்.

மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று 222

தானம் செய்தால் மறு ஜன்மத்தில் பலன் என்று நினைக்காதீர்கள்! சொர்க்கம் என்று ஒன்று இல்லாவிடினும் கொடுப்போம்!

“ஈத்துவக்கும் இன்பம் அறியார் வறியார்” – 228

கொடுக்கும் போது ஏற்படும் ஆனந்தத்தை அறியாதோர்தான் ஏழைகள்!

சம்ஸ்கிருதப் பொன் மொழிகள்

“பெருந்தன்மை கொண்டோருக்கு உலகமே ஒரே குடும்பம்” – பஞ்சதந்திரக் கதைகள்

உதார குணம் படைத்தவன் கொடுப்பான்; கொடுத்துக் கொண்டே இருப்பான். கருமியோ கொடான்,கொடான்; கூனிக் குறுகி குமுறுவான்! –கஹாவத் ரத்னாகர்

தனக்கே உடையில்லாத பிச்சைக்காரன் கூட, தானம் செய்து மகிழ்வான்  — கஹாவத் ரத்னாகர்

-சுபம்-