யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை! (Post.9070)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9070

Date uploaded in London – – 24 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை!

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டம் 54 மற்றும் 55வது ஸர்க்கம் மிக முக்கியமான கட்டத்தை விவரிக்கின்றன!

ராமர், சீதை, லக்ஷ்மணன் ஆகிய மூவரும் அழகிய வனாந்தர பிரதேசத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அங்கே ப்ரயாகை க்ஷேத்திரத்திற்கு அருகில் அக்னி பகவானது புகை உயரக் கிளம்பி இருப்பதைப் பார்த்த ராமர் லக்ஷ்மணரிடம் அதைச் சுட்டிக் காட்டி, “இங்கு ஏதோ ஒரு முனிவர் சமீபத்தில் இருக்கிறார் என எண்ணுகிறேன்” என்றார்.

கங்கை யமுனை சங்கமத்துறைக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்று ராமர் சொல்லி அங்குள்ள பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார்.

அவர்களைக் கண்ட பரத்வாஜ மஹரிஷிக்கு மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று, அவர்களை வரவேற்று தக்கபடி உபசரித்து விருந்தளித்தார்.

ராமர், பரத்வாஜரை நோக்கி, “நகரவாசிகள் இங்கு வந்து எங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். சீதா தேவி எங்கு பிறரால் தரிசிக்கப்படாதவளாக, தியானம் ஒன்றையே அனுஷ்டிக்கின்றவளாக நிம்மதியாக காலம் கழிக்கும் இடம் ஒன்றை தேவரீர் ஆலோசித்துச் சொல்வீர்களாக” என்றார்.

உடனே பரத்வாஜர், தரிசித்த மாத்திரத்தில் பாக்கியங்களைத் தரவல்லை சித்ரகூட சிகரத்தைச் சொல்லி அதன் மஹிமையையும் சொல்லி அங்கு வஸிக்கலாம் என தனது ஆலோசனையைக் கூறினார்.

ஒரு நாள் இரவை பரத்வாஜாஸ்ரமத்தில் கழித்த ராமர் மறு நாள் கிளம்ப ஆயத்தமானார்.

யமுனை நோக்கிச் சென்ற அவர்கள் நதிக்கரையை அடைந்தனர். காய்ந்து உலர்ந்த கட்டைகளாலும் மூங்கில்களாலும் அழகிய தெப்பத்தை ராமரும் லக்ஷ்மணரும் அமைத்தனர்.

அதில் பிரம்புக்கொடிகளாலும் நாவல் மரக்கிளகளாலும் ஆன அற்புதமான ஆசனம் ஒன்றைச் செய்து அமைத்தார் லக்ஷ்மணர் – சீதா தேவி அமர்வதற்காக!

சீதை தெப்பத்தில் ஏற, இருவரும் தெப்பத்தைச் செலுத்தலாயினர்.

தெப்பம் யமுனை நதியின் நடுவை அடைந்தது.

உடனே சீதா தேவி யமுனையை நோக்கி இப்படிப் பிரார்த்தித்தாள்:

“தேவி! திருவுளமுவந்து பிரார்த்தனைகளை அருளிச் செய்வாயாக! உன்னைக் கடந்து தாண்டுகின்றேன். எனது பர்த்தா பிரதிக்கினையை கை கூடப் பெறட்டும்.”

ஸ்வஸ்தி தேவி தராமி த்வாம் பாரயேன்மே ப்ரதிர்ஷிதம் |

“ஸ்ரீராமர் குறையின்றி இக்ஷ்வாகு மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட நகருக்குத் திரும்பிய பின்னர் அநேக கோதானங்களாலும் அநேக தீர்த்தம் நிறைந்த பூர்ண கல்சங்களாலும் உன்னை பூஜிக்கிறேன்.”

யக்ஷயே த்வாம் கோ சஹஸ்ரேண சுராகடஷதேன ச |
ஸ்வஸ்தி ப்ரத்யாகதே ராமே புரிமிக்ஷ்வாகுபாலிதம் ||

யமுனை நதியைக் கடந்து கரையில் இறங்கிய மூவரும் யமுனை நதியை ஒட்டிய வனத்தின் வழியே சென்று பச்சிலைகளை உடைய ச்யாமம் என்னும்  பெயரை உடைய ஆலமரத்தைக் கண்டனர்.

உடனே சீதா தேவி பின் வரும் வார்த்தைகளை அருளிச் செய்தாள்:

“புண்யம் அளிக்க வல்ல விருக்ஷமே! உன்னை நான் முடி தாழ்த்தி

நமஸ்கரிக்கிறேன். எனது கணவனார் பிரதிக்கினையை கை கூடப் பெறட்டும்”

நமஸ்தேஸ்து மஹா வ்ருக்ஷ பாரயேன்மே பதிர் வ்ரதம் |

கோஸலா தேவியாரையும், புகழ் பெற்ற சுமித்திரா தேவியாரையும் நேரில் நான் ஸேவிக்க வேண்டும்.”

கௌஸல்யாம் சைவ பஷ்யேயம் சுமித்ராம் ச யஷஸ்வினீம்|

இந்த கட்டம் அற்புதமான ஒரு வழிகாட்டுதலைக் குறிக்கிறது. பரத்வாஜ மஹரிஷி அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை வழி காட்டி அருள்கிறார்.

ஒரு பெரும் அவதாரம் உதிக்கும் போது இப்படி பல மஹரிஷிகளும் தேவர்களும் உரிய இடத்தில் உரிய சமயத்தில் வந்திருந்து அவர்களை உபசரித்து அடுத்து செய்ய வேண்டியதைச் சுட்டிக் காட்டி மகிழ்கின்றனர்.

சீதா தேவி, யமுனை நதியையும், ச்யாமம் என்று பெயர் பெற்ற ஆலமரத்தையும் நோக்கிச் செய்யும் பிரார்த்தனையும் அற்புதமான ஒன்று.

பதியின் பிரதிக்கினை நிறைவேற வேண்டும்!

மாமியார்மார் இருவரையும் நேரில் கண்ணாரக் காண வேண்டும்!

இப்படிப்பட்ட புனிதமான நதியும், புனிதமான வ்ருக்ஷமும் கை கூட வைத்து அருள் பாலிக்கின்றன!

பாரதப் பெண்மையின் சிகரமாக அமையும் சீதா பிராட்டியாரின் பிரார்த்தனை ஒரு குடும்பம் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தெளிவுற எடுத்துக் காட்டுகிறது.

அதனால் தான் சீதையை பெண்மையின் முடிவான லக்ஷியம் என நமது அறநூல்கள் ஆணித்தரமாக இயம்புகின்றன!

ஜெய் ஸ்ரீராம்!

tags – Ram, Sita images, யமுனை, சீதை, பிரார்த்தனை

***

பிரார்த்தனையின் மூலம் கிடைத்த இனிய குரல்! (Post No.8715)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8715

Date uploaded in London – – 21 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பிரார்த்தனையின் மூலம் கிடைத்த இனிய குரல்! (PostNo.8715)

ச.நாகராஜன்

புத்த பிக்ஷு போ ஃபா சியாவோ (Mong Po Fa-chiao) சிறந்த பக்தர். சுங் ஷான் (Chung-Shan) என்ற இடத்தைச் சேர்ந்தவர் அவர். இன்று இது ஹோபெய் (Hopei) என்ற இடத்தில் உள்ள டிங் என்ற ஊராகும்.

புத்த மதத்தைச் சேர்ந்த சூத்திரங்களைச் சொல்ல அவருக்குப் பெரிதும் ஆசை. ஆனால் அவரிடம் குரல் வளம் இல்லை. அவரது குரல் கர்ண கடூரமாக இருந்தது. இதனால் அவர் வேதனைப் பட்டார்.

அவர் தன் சக பிக்ஷுக்களிடம், “குவாங் ஷியின் (Kuang-Shih-yin) எனது ஆசையை இந்த ஜென்மத்திலேயே பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் ஒரு முனைப்பட்ட மனதுடன் பிரார்த்தித்தால் அவர் அருள் புரிவார். என் பிரார்த்தனை உண்மையானதாக இருந்தால் நான் நல்ல குரலைப் பெற்று சூத்திரங்களைச் சொல்வேன். ஆனால் எனது பிரார்த்தனை உள்ளார்ந்த ஒன்றாக இருக்கவில்லை என்றால் போதிசத்வர் எனக்கு அருள் புரிய மாட்டார். சென்ற ஜென்மங்களின் பாவம், கெட்ட கர்மா என்று நினைக்க வேண்டியது தான்! நல்ல குரல் இல்லாமல், சூத்திரங்களைச் சொல்லாமல் இருப்பதை விட சாவதே மேல்” என்றார்.

சொல்லி விட்டு அவர் சும்மா இருக்கவில்லை. பிரார்த்திக்க ஆரம்பித்தார். சாப்பிடவும் மறுத்து விட்டார். ஒருமுனைப்பட்ட மனதுடன் அவர் பிரார்த்தனை தொடர்ந்தது.

மூன்று நாட்கள் கழிந்தன. அவர் உடல் மெலிந்தது. சக்தியில்லாமல் அவர் இருப்பதைக் கண்ட அவரது சீடர்கள் அவரிடம் சென்று, “இப்படி பிரார்த்தனை புரிவதை விட்டு விடுங்கள். இந்த ஜென்மத்தில் இப்படி குரலை மாற்றி நல்ல குரல் வளம் பெறுவது என்பது முடியாத காரியம். உண்ணாமல் இருந்தால் இருக்கும் ஆரோக்கியமும் கெட்டு விடும். சற்றேனும் உணவைச் சாப்பிடுங்கள்” என்றனர்.

ஆனால் போ ஃபா சியாவோ மறுத்து விட்டார். “என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்று அவர் சொல்லி விட்டார்.

தன் உறுதியிலிருந்து அவர் தவறவில்லை. இன்னும் ஆறு நாட்கள் கழிந்தன. அவரால் நகரவே முடியவில்லை. சுவாசம் மட்டும் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது.

சீடர்கள் பயந்து போனார்கள். பெரிதும் வருத்தமடைந்த அவர்கள் அவரிடம் கெஞ்சிப் பார்த்தார்கள் – அப்படி பிரார்த்தனை புரிவதை விட்டு விடுமாறு.

அவர் இறக்கப்போவது நிச்சயம் என்று அவர்களுக்குத் தோன்றி விட்டது.

ஏழாவது நாள் காலை நேரம். திடீரென்று போ கண் விழித்தார். மிகவும் சந்தோஷமாக அவர் காணப்பட்டார்.

தன் சீடர்களை அழைத்த அவர், தன் பிரார்த்தனைக்கு நல்ல பலன் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

கொஞ்சம் நீர் கொண்டு வரச் சொன்னார்.  குளித்தார்.

பின்னர் மூன்று கதைகளை இனிய குரலில் கூற ஆரம்பித்தார்.

அவரது குரல் மிக ஓங்கி ஒலித்தது. கிராமத்திலிருந்த மக்கள் இந்த உரத்த இனிய குரலைக் கேட்டு ஓடி வந்தனர்.

அவர்களுக்கு ஒரே அதிசயம். யாருடைய குரல் இது என்று கண்டுபிடிக்க மடாலயம் நோக்கி ஓடி வந்த அவர்கள் தங்கள் கண்களை நம்ப முடியாமல் திகைத்தனர். சகிக்க முடியாத பிக்ஷு போவின் குரலா இப்படி இனிமையாக மாறி உள்ளது? திகைப்புடன் பிரமித்தனர் அனைவரும்.

இதற்குப் பின்னர் சுமார் ஐந்து லட்சம் வார்த்தைகளை அவர் பேசினார்.

இனிய மணி ஒலிக்கும் நாதம் போல அவர் குரல் அனைவரையும் காந்தம் போல ஈர்த்தது. எவ்வளவு நேரம் பேசினாலும் அவருக்கு களைப்பே ஏற்படவில்லை.

உண்மையான பிரார்த்தனை மூலம் என்ன பெற முடியும் என்பதை நேரடியாக விளக்கிக் காட்டிய அவரை மக்கள் பெரிதும் பக்தியுடன் நேசிக்க ஆரம்பித்தனர்.

அவர் மூன்றாம் சக்ரவர்த்தியான ஷி ஹு (Shih hu 334 – 349) ஆண்ட காலம் முழுவதும் இருந்தார். அவருக்கு அப்போது 90 வயதுக்கு மேல் ஆகி இருந்தது!

பிரார்த்தனையின் பலனை விளக்கும் போவின் இந்தச் சம்பவம் அனைவரையும் உத்வேகப்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது.

tags- பிரார்த்தனை,  இனிய குரல்

***

பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட முஸ்லிம் பெண்கள (Post No 2719)

jatari to muslim

WRITTEN BY S NAGARAJAN

Date: 13 April 2016

 

Post No. 2719

 

Time uploaded in London :–  8-29  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

ச.நாகராஜன்

ganesh muslim

எப்போதுமே மதக் கலவரம் என்ற செய்திகளைக் கேட்டு மனம் நொந்து போனவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தியைப் படிக்கும் போது மனம் மிக மகிழும்.

 

அனைவரின் மனம் மகிழும் ஒரு செய்தி இதோ: –

 

 10th April 2016: Today in Cuddapah, Muslims come to Sri Lakshmi venkateswara perumal Temple and take Ugadi pachadi as prasadam. They treat perumal as son-in-law (bibi nachiar’s husband).

 

This Temple is the first door of bhooloka vaikuntam Tirumala

 

கடப்பா:

சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கு, யுகாதி தினத்தன்று, முஸ்லிம்கள் கணிசமானோர் வந்து வழிபட்டு செல்வது பாரம்பரியாக உள்ளதாம்.

 

 

இந்த கோயில், தேவுனி கடப்பா என்ற பெயரால் பிரபலமாக உள்ளது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினமான நேற்று, பெருவாரியான முஸ்லிம் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது.

 

பர்தா அணிந்தபடி பல முஸ்லிம் பெண்கள் வந்திருந்தனர். கணிசமான முஸ்லிம் ஆண்களும் வந்திருந்தனர். பக்தர்கள் வரிசையில் நான்கில் ஒரு பங்கினர் முஸ்லிம்கள்தான் என்று கூறும் அளவுக்கு அவர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.

முஸ்லிம் பெண்கள் கைகளில் பூக்கள், வெல்லம், கரும்பு துண்டுகள், மஞ்சள் மற்றும் வேப்பம்பழம் போன்றவற்றை எடுத்து வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுத்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் முஸ்லிம் பெண்களும், ஆண்களும், சுவாமி தரிசனத்திற்காக காத்து நின்றிருந்ததை பார்க்க முடிந்தது.

muslim worship in AP

 

 

ஆந்திராவின் ராயலசீமா மண்டலத்தில் இருந்து அதிகப்படியான சிறுபான்மை மதத்தினர் இக்கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்.

லட்சுமி நாராயணா என்ற சமூக ஆர்வலர் இதுபற்றி கூறுகையில், ‘சகிப்பின்மை குறித்த விவாதங்கள் நாட்டில் எதிரொலிக்கும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற சமய நல்லிணக்க செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இதே கடப்பா நகரிலுள்ள ‘பெத்த’ (பெரிய) தர்க்காவுக்கு, முஸ்லிம்கள் மட்டுமின்றி, இந்துக்களும் பெரும்பான்மையாக சென்று வழிபாடு செய்கிறார்கள்’ என்றார்.

கடப்பா லட்சுமி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதை தொடர்ந்து, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று தங்களது ஆன்மீக பயணத்தை நிறைவு செய்வது வழக்கமாம். முஸ்லிம்கள் அதிக அளவில் கடப்பா கோயிலுக்கு வர நீண்ட நெடிய வரலாற்று காரணங்கள் இருப்பதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள்.

 

muslim in temple 2

subham

*******

 

பிரார்த்தனையின் சிறப்பு

Indian devotees touches the foot while praying and seek blessings at a 52 foot tall idol of the elephant-headed Hindu god Lord Ganesh during the 'Ganesh Chaturthi' Hindu festival in Hyderabad on September 2, 2011. Hindu devotees bring home idols of Lord Ganesha during the 'Ganesh Chaturthi' in order to invoke his blessings for wisdom and prosperity, during the eleven day long festival which culminates with the immersion of the idols in the Arabian Sea.   AFP PHOTO / Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)

 AFP PHOTO / Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)

Compiled by S NAGARAJAN

Article No.1929

Date :13th June 2015

Time uploaded in London: 20-34

 

By ச.நாகராஜன்

பிரார்த்தனையின் சிறப்பு

பிரார்த்தனை மனிதனுக்கே உள்ள தனி உரிமை. தனிச் சிறப்பு. ஈ, எறும்பு, சிலந்தி, யானை போன்றவை இறைவனை அழைத்து உயர்ந்ததை புராண வாயிலாகப் படிக்கிறோம். என்றாலும் நூலறிவாலும் பட்டறிவாலும் இறைவனின் பெருமையை அறிந்து அவனைத் துதித்துப் போற்றுவது மனிதனுக்கே உரியதாகும்.

ஆகவே தான் அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என ஔவையாரும் ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபம் என ஆதி சங்கரரும் மனிதப் பிறப்பைச் சிறப்பித்தனர்.

மனிதர்களில் நாத்திகரைத் தவிர அனைவரும் பிரார்த்தனை புரிகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக. சி.ல பலிக்கின்றன. சில பலிப்பதில்லை.

அரவிந்தரின் அருளுரை

மஹரிஷி அரவிந்தர் இது பற்றிக் கூறியுள்ளதைப் பார்ப்போம். அவரது சீடராக இருந்தவர் இசை விற்பன்னர் திலிப் குமார் ராய்

“Sri Aurobindo came to me” என்ற நூலில் அரவிந்தருடனான தனது அனுபவங்களைச் சுவைபடத் தெரிவித்துள்ளார். அதில் ஒரு இடத்தில் பிரார்த்தனையின் பலிதம் பற்றி அரவிந்தரின் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

அரவிந்தரின் தாய்வழி மாமன் ஶ்ரீ கிருஷ்ண குமார் மித்ராவின் மூத்த பெண் டாக்டர்களால் கை விடப்பட்டு விட்ட நிலை. அவர் தந்தை கூறினார்: “கடவுள் ஒருவர் தான் இனி துணை; பிரார்த்தனை செய்வோம்” அவர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தவுடன் குணம் தெரிய ஆரம்பித்தது. டைபாய்ட் ஜூரம் போயே போனது. நோயாளி பிழைத்தார். சில பிரார்த்தனை பலிக்கும். சில பலிக்காது. அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்று பலிக்க வைத்தால் கடவுள் மிக மோசமான நிலையில் தள்ளப்படுவார்.

அரவிந்தரின் எழுத்துக்களில் இவை சொல்லப்படுகிறது இப்படி:-

“As for prayer, no hard and fast rule can be laid down. Some prayers are answered, all are not. The eldest daughter of my maternal uncle, Sri Krishna Kumar Mitra (the editor of Sanjivani – not by any means a romantic, occult, supra-physical or even an imaginative person) was abandoned by the doctors after using every resource, all medicines stopped as useless. The father said: ‘There is only God now, let us pray.’

He did and from that moment the girl began to recover, the typhoid fever and all symptoms fled, death also.

I know any number of cases like that. Well? You may ask why should not then all prayers be answered. But why should they? It is not a machinery; put a prayer in the slot and get your asking. Besides, considering all the contradictory things mankind is praying for at the same moment, God would be in a rather awkward hole if he had to grant all of them; it would not do.”

 

மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் இருவர் இரு வேறான நிலைகளில் எதிரும் புதிருமாக பிரார்த்தித்தால் கடவுள் யாருக்கு அருள்வார்?

இறைவனின் வழிகள் தனி. விளக்கத்திற்கு அப்பாற்பட்டவை. (ஏடிஎம் மெஷினில் கார்டை செருகி வேண்டியதை எடுப்பது போல அல்ல பிரார்த்தனை!)

THF_Memorial02

லண்டனிலொரு நிகழ்ச்சியில் திருமதி சீதா வெங்கட்ராமன், திரு.கல்யாண குருக்கள் பிரார்த்தனை

வள்ளுவர், மணிவாசகர், தாயுமானவர் ஆகியோரின் அருளுரைகள்

“வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” என்ற வள்ளுவர் குறளில் (குறள் 4) இறைவன் இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது.

வேண்டத்தக்கது அறிவோய் நீ;

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன் மாற்கு அரியோய்

வேண்டி என்னைப் பணி கொண்டாய்

வேண்டி நீ யாது அருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன்று உண்டென்னில்

அதுவும் உன்தன் விருப்பன்றே” என்கிறார் மாணிக்கவாசகர்.

எனக்கு நல்லது எது என்பது உனக்கே தெரியும்; அதை அருள்வது உனது பொறுப்பு என்ற அவரது அருளுரை மனித குலத்திற்கே ஒரு வழி காட்டுதலாக அமைகிறது.

தாயமானவரின்,

எனக்கெனச் செயல் வேறிலை யாவும் இங்கு ஒரு நின்                          தனக்கெனத் தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன்                         மனத்தகத்து உள அழுக்கெலாம் மாற்றி                                     எம்பிரான் நீ நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம்

(நீதம் – முறை)

என்ற பிரார்த்தனை அருமையான பிரார்த்தனை. என் மன அழுக்கை மாற்றி, நீ நினைத்ததை எனக்கு அருள் என்று இறைவனிடம் பொறுப்பை அவர் ஒப்படைக்கிறார்.

பிரார்த்தனை பற்றிய தெளிவு மகான்களின் வாக்கால் பிறக்கிறது.

***************