பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ! – கம்பன் (Post No.8907)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8907

Date uploaded in London – –9 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘கண்டதும் காதல்’, ‘கண்கள் பேசின’, ‘ஈருடல் ஓருயிர்’ — என்றெல்லாம் சினிமா வசனங்களிலும் தற்கால கதைகளிலும் காண்கிறோம். இவர்களுக்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தவன் கம்பன்தான் போலும்.

கம்ப ராமாயணத்தில் பால காண்டத்தில்  மிதிலைக் காட் சிப் படலத்தில் வரு ம் இரண்டு பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை.

ஒரு பாடல்

“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” –

என்று முடியும்.

இன்னும் ஒரு பாடல்

“பிரிந்தவர் கூடினால் பேசல்  வேண்டுமோ “-

என்று முடியும்..

சில பாடல்களுக்கு முன்னர் ராமனையும் சீதையையும் முதலில் அழகாக வருணித்துவிட்டு, பின்னர் சில பாடல்கள் தள்ளி, பிரிந்த ராமனும் சீதையும் மீண்டும் இணைந்தனர் என்று  சொல்லுவது பொருந்துமா?

பொருந்தும்; ஏனெனில்…………………………….

இங்கே வால்மீகி முனிவரைப் போலன்றி , ராமனையும் சீதையையும் அவதார நிலைக்கு கம்பன் உயர்த்திவிட்டான்

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி  முயங்கப் பெறின் – குறள் 1330

என்ற கடைசி குறள் கம்பனுக்கு நினைவுக்கு வந்தது போலும்.

கணவன்- மனைவி இடையே கோப தாபங்கள் ஏற்படுவது அவசியமே. ஏனெனில் அதற்குப் பின்னர் அவர்கள் இருவரும் கூடி இணைவது தோசைக்கு தேங்காய் சட்னியுடன் வெங்காய சட்னியும் சேர்த்துக் கொடுத்தது போல சுவையாக இருக்கும் என்பது வள்ளுவனின் கருத்து. அதைச் சொல்லிவிட்டு அவரும் குறள் புஸ்தகத்தையே முடித்ததை பார்த்தால் நேரே படுக்கை அறைக்குச் சென்றிருப்பார் என்று தோன்றுகிறது!!

கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.

தேவலோகத்தில் நாராயணனும் லெட்சுமியும் ‘ஜாலி’யாக இருந்த போது கருத்து மோதல் வெடித்ததாம் ; உன்னால்தான் இது நடந்தது என்று ஒருவரை ஒருவர் ஏசினர் . இன்று ‘பெட் ரூமு’ BED ROOM க்கு வராதே என்று சொல்லிவிட்டு லெட்சுமி அம்மா போய்விட்டாள்; பிறகு ஊடல் தீர்ந்து  இருவரும் சந்தித்தனராம்.

எங்கே?

மிதிலாபுரியில்.

எவ்வாறு ?

ராமனும் சீதையாக அவதாரம் எடுத்து!

இதோ கம்பன் பாடல் –

மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும்

ஒருங்கிய இரண்டு  உடற்கு  உயிர் ஒன்று ஆயினார்

கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்

பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ

பொருள்

இடையில்லை என்று சொல்லும்படி நுண்ணிய இடை சீதைக்கு.

இழிவு இல்லை என்று சொல்லும்படி உலகிலுள்ள எல்லா குணங்களும் உடையவன் ராம பிரான்.

இந்த இரண்டு உடல்களும் ஓருயிர் என்று சொல்லும்படி ஆயினர்.

திருப்பாற் கடலின் பள்ளியிலே கூடியிருந்து புணர்ச்சி நீங்கிப் பிரிந்து போனவர்கள் , மீண்டும்

இங்கே சந்தித்ததால் அவர்களது காதல் சிறப்பை வெளியிட வாய்ப் பேச்சும் தேவையோ?

தேவையில்லை.

TAGS — பிரிந்தவர் கூடினால், கம்பன்

–SUBHAM—