ஜெர்மானிய நாடக ஆசிரியர் பிரெடெரிக் ஷில்லர் (Post No.9636)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9636

Date uploaded in London – –23 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெடெரிக் ஷில்லர்

FRIEDRICK SCHILLER

(1759 – 1805)

பிரெடெரிக் ஷில்லர் FRIEDRICK SCHILLER ஒரு ஜெர்மானிய நாடக ஆசிரியர். ஏழாண்டுப் போர் (SEVEN YEARS WAR) காலத்தில் அவர் WüRTTEMBERG-இல் பிறந்தார்.

      அவருடைய தந்தை ராணுவத்தில் மருத்துவராக (SURGEON) பணிபுரிந்ததால் படைகள் செல்லுமிடத்திற்கு அவரும் செல்ல வேண்டியிருந்தது. இதனால் பிரெடெரிக் ஷில்லர் அவர்களுக்கு நிரந்தர வீடு என்று எதுவுமில்லை.

      அவர் பெரியவராகியவுடன் சமய பரப்புரையாளராக வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவருடைய நகரில் வாழ்ந்த இளைஞர்கள் அனைவரைப் போலவே இவரையும் ராணுவத்தில் சேரக் கட்டாயப்படுத்தினர். ராணுவக் கழகத்தில் சேர்ந்த அவர் சட்டம் பயில அனுப்பப்பட்டார். ஆனால் சட்டக்கல்வி அவருக்குப் பிடிக்கவில்லை. பின்னர் வேறொரு ராணுவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார்.

அவர் 22 வயதில் முதல் நாடகத்தை வெளியிட்டார். ஜெர்மனியில் இதுவரை தோன்றாத புதுப்பாணியில் நாடகம் இருந்ததால் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் வூர்ட்டன்பர்க் (WüRTTEMBERG) ஆட்சியாளருக்கு அது பிடிக்காததால் இனி நாடகம் எழுதக்கூடாதென்று பிரெடெரிக் ஷில்லர்க்கு தடைவிதிக்கப்பட்டது.

உடனே அவர் ஊரைக்காலி செய்து பல நகரங்களுக்குச் சென்றுவந்தார். பின்னர் ஜெர்மனியின் கலைக்கேந்திரமான WEIMARக்குச் சென்றார். அங்கு புகழ் பெற்ற கவிஞர் கெதே (GOETHE)யைச் சந்தித்து அவரது நட்பைப் பெற்றார். அவர் மூலமாக அருகிலுள்ள JENA பல்கலைகழகத்தில் பேராசிரியர் வேலை கிடைத்தது.

வெய்மார் (WEIMAR) அரசவையில் பணிபுரிந்த ஒரு பெண்ணை மணம் முடித்தார். இதற்கு ஓராண்டுக்குப் பிறகு கடும் நோய்வாய்பட்டதால் பேராசிரியர் பணியை துறக்க நேரிட்டது. டேனிஷ் ஆதரவாளர் (DANISH ADMIRERS) அவருக்கு ஓய்வூதியம் அளிக்கவே முப்பதாண்டுப் போர் (THIRTY YEARS WAR) என்ற நூலை எழுதி முடித்தார்.

      அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவரது சிறந்த நாடகங்கள் வெளிவரத் துவங்கின. அதில் முதல் நாடகம் WALLEN STEIN இதனைத் தொடர்ந்து எழுதப்பட்டது MARIA STUART. இது ஸ்காட்லாந்து மஹாராணி மேரியை பற்றிய நாடகம். அவர் கடைசியாக எழுதிய WILHELM TELL அவருடைய மிகச்சிறந்த நாடகமாகும்.

xxxxxxxx subham xxxx

 tags – ஜெர்மனி, நாடக ஆசிரியர், பிரெடெரிக் ஷில்லர் , schiller