ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்? (Post No.4954)
Research Article Written by London Swaminathan
Date: 27 April 2018
Time uploaded in London – 15-33
Post No. 4954
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
உலகப் புகழ்பெற்ற காஷ்மீரப் புலவன் கல்ஹணனன் செப்புகிறான்
“The reputation of the great does not by any means conform to their birth place”. Rajatarangini 4-41
“ஒருவர் பிறந்த இடத்தினால் பெரியோரின் புகழ் குறையாது; மங்காது.:
இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் சாது சந்யாசிகளும் மஹான்களும் பிறக்கும் இடத்தைப் பட்டியலிட்டுப் பார்த்தால் விளங்கிவிடும்.
அவர்கள் எந்த இனத்திலும் எந்த நாட்டிலும், எந்த இ டத்திலும், எவருக்கும் பிறப்பார்கள். உலகப் புகழ்பெற்ற இந்திய ஞானிகளில் பெரும்பாலோர் எவருக்கும் தெரியாத தொலைதூர கிராமங்களில் பிறக்கிறார்கள். கீழேயுள்ள சுவையான பட்டியலைப் பாருங்கள்; நேரம், காலம், இடம் என்று தேர்ந்தெடுக்காமல் பிறப்பது தெரியும். அவர்களை யாரும் தனிச் சொத்தாகக் கருதுவதில்லை
அவர்கள் உலகிற்கே சொந்தம்; கல்ஹணர் சொல்லுவது சரியே
கீழேயுள்ள பட்டியல் விரிவானது அல்ல. ஊருக்கு ஒரு ஞானி இருப்பதால் சேர்த்துக் கொண்டே போகலாம் இதோ ஒரு சின்னப்பட்டியல்:-
A
அருணகிரிநாதர்- திருவண்ணாமலை
ஆதிசங்கரர்- காலடி, கேரளம்
அன்னமாசார்யா- தல்லபாக, ஆந்திரம்
அரவிந்தர்- கல்கத்தா
ஆனந்தமயீ மா- கியோரா, வங்கதேசம்
ஆழ்வார்கள் 12
ஆண்டாள் – திருவில்லிப்புத்தூர்
பெரியாழ்வார்-திருவில்லிப்புத்தூர்
நம்மாழ்வார்- திருக்குருகூர்
பொய்கை ஆழ்வார்- திருவெஃகா
பேயாழ்வார்- மயிலை
பூதத்தாழ்வார்- மஹாபலிபுரம்
திருமழிசை ஆழ்வார்- திருமழிசை
தொண்டரடிப்பொடி ஆழ்வார்- மண்டன்குடி
மதுரகவி- திருக்கோளூர்
திருப்பாணாழ்வார்- உறையூர்
குலசேகராழ்வார்- திரு வஞ்சிக்களம்
திருமங் கை ஆழ்வார்- குறையலூர்
B
பாஸ்கராச்சார்யா- பீஜப்பூர்
பக்தி வேதந்த ப்ரபுபாத (ISKCON)- டாலிகஞ்ச்
புத்தர்- கபிலவஸ்து
E
ஏகநாத்- பைதான்,மஹாராஷ்டிரம்
G
குருநானக்- நான்கானா சாஹிப் (பாகிஸ்தான்)
கேசவ பலிராம் ஹெட்கேவார் (RSS)- நாகபுரி
J
ஞானதேவ்- அபேகான் , மஹாராஷ்டிரம்
K
காஞ்சி மஹா ஸ்வாமிகள்- விழுப்புரம்
கபீர்தாஸ்- காசி
குழந்தையானந்த சுவாமிகள்- சமயபுரம், மதுரை
கனகதாசர்- பாட கிராமம், கர்நாடகம்
கம்பன் – தேரழுந்தூர்
M
மஹா வீரர்- குண்டக்ராம- பீஹார்
மாதவ ஸதாசிவ கோல்வல்கர் (RSS)- ராம்டெக்
மஹாத்மா காந்தி- போர்பந்தர்- குஜராத்
மத்வர்- பாஜக ,உடுப்பி
முத்து ஸ்வாமி தீக்ஷிதர்- திருவாரூர்
மாணிக்கவாசகர்- திருவாதவூர்
மீராபாய்- சௌகரி, ராஜஸ்தான்
முக்தாபாய்- அபேகாவ்ன்
N
நாராயணகுரு – செம்பழந்தை, கேரளம்
நரசிம்ம மேதா- டாலஜ , குஜராத்
நாயன்மார் 63- பெரும்பாலோர் தமிழ்நாட்டு கிராமங்கள்
நிவ்ருத்தி- அபேகாவ்ன்
நாம்தேவ்- தண்ணீரில் மிதந்துவந்தார்
P
புரந்தரதாஸர்- தீர்த்தஹல்லி,கர்நாடகம்
பரமஹம்ச யோகானந்தர்- கோரக்பூர், உ.பி
R
ராமகிருஷ்ண பரமஹம்சர்- கமார்புகூர், மேற்கு வங்கம்
ரமண மஹரிஷி – திருச்சுழி
ராமனுஜர்- ஸ்ரீ பெரும்புதூர்
ராகவேந்திரர்- புவனகிரி, தமிழ்நாடு
சமர்த்த ராமதாஸர்- ஜாம்ப்
பத்ராஜலம் ராமதாஸர்- நலகொண்டபள்ளி
ராமதீர்த்தர்- முரளிவாலா, பஞ்சாப்
வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள் – மருதூர்
ராம்தாஸ் சுவாமி- காஞ்சன்காடு, கேரளம்
ரவிதாஸர்- கோவத்தன்பூர், உ.பி.
S
சாரதாதேவி- ஜய்ராம்பாடி, மேற்கு வங்கம்
சத்ய சாய்பாபா- புட்டபர்த்தி, ஆந்திரம்
ஷீர்டி சாய்பாபா- சீர்டிக்கு அருகில்
சேஷாத்ரி ஸ்மாமிகள் – திருவண்ணாமலை, ஊஞ்சலூர் தொடர்பு
ஷியாமா சாஸ்திரி- திருவாரூர்
சோபான- அபேகாவ்ன்
சுப்ரமண்ய பாரதி- எட்டயபுரம்
சுவாமி சிவானந்தர்- பத்தமடை, தமிழ்நாடு
சுந்தரர்- திருநாவலூர்
ஸ்வாமிநாராயண்- சாபைய- உ.பி
சூர்தாஸ்- சிரி, டில்லிக்கு அருகில்
சித்தர் 18 – சமாதிகள் மட்டுமே பிரஸித்தம்
திருஞான சம்பந்தர்- சீர்காழி
திருமூலர்- காஷ்மீர்
திருவள்ளுவர்- மயிலை-சென்னை
துளசிதாசர்-சூகர் க்ஷேத்ர சோரன்
திருநாவுக்கரசர்–திருவாமூர்
தியாகராஜர்- திருவாரூர்
துக்காராம்- டேஹு
வல்லபாசார்யா- வாரணாசி/காசி
ஸ்ரீவல்லப- பீதாபுரம், ஆந்திரம்
ஸ்வாமி விவேகாநந்தர்- கல்கத்தா
வியாசர்- கங்கை நதித் தீவு
வால்மீகி- காட்டின் நடுவில்
இந்தப் பட்டியல் முழுப் பட்டியல் அல்ல- நேரம் கிடைக்கும்போது இரண்டாம் பட்டியலும் வரும்; மூன்றாம் பட்டியலும் வரலாம்!
–சுபம்–