4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் ஆண்டு! (Post No.9492)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9492

Date uploaded in London – –14  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

படகு /ப்லவ/ பிலவ வருஷ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அறுபது வருட வரிசையில் முப்பத்தைந்தாவதாக இடம்பெறுவது படகு. இதற்கான ஸம்ஸ்க்ருத்ச் சொல்  ‘ப்லவ’ (Float/Boat in English) .

இந்த ஆண்டு எல்லோருக்கும் எல்லா நலன்களையுயும் அளிக்கட்டும்!

படகு /ப்லவ என்று சொன்னவுடன் சில படகு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.

அப்பர் பெருமான் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் படகு பற்றிப் பாடினார் :–

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி

சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது

மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது

உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே

–அப்பர் தேவாரம் 4-46

அழகான உருவக அணி!

மனம் = படகு/தோணி

மதி /அறிவு = துடுப்பு

சினம் = சரக்கு

கடல் = சம்சார சாகரம்/ பிறவிப் பெருங்கடல் (குறள் )

மனன் = மன்மதன்/காமம்

மறியும்போது = இறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால்

உன்னை நினைக்கும் உணர்வு = ஓற்றியூரில் கோவில்கொண்ட

சிவபெருமானே  உன்னை நினைந்தால் போதும் ; உய்வு உண்டு.

மனம் என்பது ஒரு படகு என்பதையும், அது காற்று அடிக்கும் திசைக்கு ஏற்பச் சென்றால் என்ன நடக்கும் என்பதையும் அழகாக எடுத்துரைக்கிறார் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் நாலாம் திருமுறையில்.

XXX

ஆக ப்லவ வருஷ அறிவுரை:

படகை ஜாக்கிரதையாக, கவனமாக செலுத்துங்கள் !

அடுத்தபடியாக என் நினைவுக்கு வரும் கவிதை பாரதியாரின் கவிதையே!

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்

தோணிகளோட்டி விளையாடி வருவோம்

நல்ல சுவையான அருமையான கற்பனை : மலையாள அழகிகள்; நதி- பஞ்சாப் பில் ஓடும் சிந்து நதி ; அதில் தோணி/படகுப் பயணம். பின்னணியில் தெலுங்கு மொழியின் தேனிசை !

இப்படி வாழ்நாள் முழுதும் கழிக்க முடிந்தால் எப்போதும் தோணி/ படகு/ கப்பல்/ ப்லவ நீடிக்கட்டும்! .

XXX

அப்பருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் புத்தர். அவர் கடலைக் கண்டதில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர் வலம் வந்த இடங்கள் பீஹார் , உத்தரப்பிரதேச மாநில  நகரங்களே . அவர் படகு பற்றிப் படுகிறார். அது கங்கை நதி அல்லது ஏரிப்  படகாக இருக்கவேண்டும்

தம்மபதத்தில் புத்தரும் அப்பர் போல எச்சரிக்கிறார் –

வாழ்க்கை என்னும் படகிலுள்ள சரக்கை தூக்கி எறியுங்கள் ; அப்போது அது வேகமாகச் செல்லும்  தீய ஆசைகளையும் புலன் இன்பத்தையும் (சரக்கு) களைந்து விட்டால் வாழ்க்கைப்படகு ‘நிர்வாணம்’ (முக்தி) என்னும் இடத்தை விரைவில் அடைந்து விடும் – தம்மபதம் 369.

வாழ்க்கை = படகு

சரக்கு = ஆசைகள்

XXX

4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் பிலவ ஆண்டு.

இறுதியாக இந்த பிலவ ஆண்டின் அதிர்ஷ்ட சாலிகள் யார் என்று பார்ப்போம் :-

தனுர், மீனம், ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ; அதைவிட கூடுதல் அதிர்ஷ்டம் மகர ,கும்ப ராசிக்கார்களுக்கு இருந்தாலும் அதே அளவுக்கு நஷ்டமும் உண்டு ; அதாவது லாபமும் நஷ்டமும் சமம்

அதிக நஷ்டம் உடைய  ராசிகள் –

கடக , சிம்மம்

ஏனைய ராசிக்காரர்களுக்கு லாப- நஷ்டம் சமம்

XXX

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்

ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட

மன்று உளார் அடியார் அவர் வான்புகழ்

நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

பெரியபுராணம்சேக்கிழார்

லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து!

–subham–

Tags – ராசி, அதிர்ஷ்டம், மனம், படகு, தோணி , ப்லவ, பிலவ